ஓரெர்வுழவன்

எனது படம்
வாரியங்காவல்,தமிழகம், சோழவள நாடு, India
அரசியல் நமக்கு பிறப்புரிமை.ஆனால்,வாழ்வார் தோழிகள் விளக்கு பிடித்தெனும் எம்மை உறிஞ்சி அழித்தொழிக்க வருபவர்க்கெல்லாம் யாம் அறிவிப்பதெல்லாம். "அரசில் பிழைத்தோர்க்கு அறம் கூற்றமாகும்"

வியாழன், 13 ஆகஸ்ட், 2009

'புவன்' எர்த் 3டி மேப் : இஸ்ரோ தொடங்கியது

முப்பரிமாண செய்மதி நோக்கு புவி காட்சி (வரைபடம்)


கூகிள் எர்த்-ன் ஒரு பகுதியாக 'புவன்' என்ற பெயரில் இந்தியாவின் எந்தவொரு சிறு பகுதியையும் கணினியில் அமர்ந்து கொண்டே தெளிவாகப் பார்க்கக்கூடிய வகையிலான முப்பரிமாண (3D) வரைபடத்தை உள்ளடக்கிய இணைய தளத்தை இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் - இஸ்ரோ தொடங்கியுள்ளது.

இந்த இணைய தளம் மூலம் செயற்கைக்கோளில் இருந்து சம்பந்தப்பட்ட பகுதியின் வரைபடத்தை கண்டுணர முடியும்.

இதற்கான இணையதளமான http://bhuvan.nrsc.gov.in -ன் பீட்டா வடிவத்தை பிரதமர் அலுவலக இணையமைச்சர் பிரிதிவிராஜ் சவான் இன்று புதுடெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் தொடங்கி வைத்தார்.

இந்திய வானவியல் சங்கம் சார்பில், 21ஆம் நூற்றாண்டில் இந்திய விண்வெளித் துறை எதிர்கொள்ளும் சவால் என்ற தலைப்பில் கருத்தரங்கும் நடைபெற்றது.

ராணுவப் பகுதி மற்றும் அணு சக்தி நிலையம் நீங்கலாக இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் இந்த இணைய தளம் மூலம் துல்லியமாக காணலாம் என்று இஸ்ரோ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நன்றி : வெப்துனியா
Source : http://tamil.webdunia.com/newsworld/news/national/0908/12/1090812088_1.htm

புதன், 12 ஆகஸ்ட், 2009

பன்றி காய்ச்சல் - ஒரு தடுப்பு நடவடிக்கை

வெளி நாடுகளில் மட்டுமே பரவி வந்த பன்றி காய்ச்சல் நோய் தற்போது இந்தியாவிலும் அதிலும் சென்னையிலும் வேகமாக பரவத் துவங்கி உள்ளது. பன்றி காய்ச்சல் நோய் பற்றி மக்கள் அதிகம் பீதி அடைய தேவை இல்லை.



பன்றி காய்ச்சல் என்றல் என்ன ?

பன்றி காய்ச்சல் எனபது “சுவைன் புளூ” என்ற வைரசால் பரவுகிறது இது ஒரு “ஆர் தோமைசோ வெரிடேட்” என்கின்ற வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது. “சுவைன் புளூ” வைரசிலேயே ஐந்து வகை உள்ளன. அதில் இப்போது பரவியுள்ள வைரசை “எச்-1, என்-1” என்று பட்டியலிட்டு உள்ளனர்.


பன்றி காய்ச்சலின் நோயின் அறிகுறிகள் என்ன ?

தொண்டையில் வலி ஏற்படுதல், மூக்கில் நீர்வடிதல், இடைவிடாத காய்ச்சல், மயக்கம், பசியின்மை, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை இக்காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும் இம்மாதிரியான நோய்களால் பாதிக்கப்பட்டால் அதற்கான மருந்து முறைகளை மேற்கொண்டும் குணமாகவில்லை என்றல் அதற்கு காரணம் பன்றி காய்ச்சல்தான் என்று தெரிந்துக்கொள்ளலாம்.




பன்றி காய்ச்சல்
நோய் பரவாமல் தடுப்பது எப்படி ?

1. மருத்துவமனைகளுக்கு சென்று வந்தால் ஒரு முறை குளித்து விடுவது நல்லது.

2. பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு இருக்கும் நாடுகளுக்கு செல்வதைத் சிறிது காலங்களுக்கு தவிர்க்க வேண்டும்.

3. இந்நோய் பாதிக்கப்பட்டவர்களிடம் நேருக்கு நேர் உட்கார்ந்து பேச வேண்டாம். (அதே நேரத்தில் அவர்களிடம் வெறுப்பை காட்டாமல் அவர்களிடம் அன்பாக நடந்துக்கொள்ள வேண்டும்.)

4. வீட்டை சுற்றி தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் வசிக்கும் பகுதியில் பன்றிகள் நடமாற்றம் இருந்தால் மாநகராட்சியிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்க சொல்லவும்.

5. இந்நோயால் பாதிக்கப்பட்டது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பன்றி காய்ச்சல் தடுப்பு மருத்துவமனைக்கு செல்லவும்.


ஜீன் 11 அன்று உலக சுகாதார நிறுவனம் பன்றிக் காய்ச்சலை கொள்ளை நோயாக அறிவித்துள்ளது

ஆனால் ,வேப்பிலை காப்பு,தோரணம் முலமாக வைரஸ் பரவலை தடுக்கலாம் .நிலவேம்பு குடிநீர் ,ஆமுக்கிராசூரணம் ,பிரமானந்த பைரவம் ,மற்றும் துளசி செடி அதன் ரசம் நல்ல பலனைக்கொடுக்கும்.


இதுவும் ,காமாலை ,அம்மை மற்றும் சிக்கன் குன்னியா போன்ற ஒரு வைரஸ் கிருமி தொற்று அனுபவம் உள்ளவர்கள் எளிதில் மீளலாம் தன்னபிக்கையுடன் எதிர் கொள்ளுங்கள்



சனி, 1 ஆகஸ்ட், 2009

ஆஸ்கார் இசை விருதும் ,தங்க தமிழ் மகனின் இன உணர்வும் !!!

அவன் பாரறிந்த இசைவாணன் ,தமிழ்ப்பாணன் .
உலகறியா தங்கதமிழிசை மூலம் முடிதரித்தவன்
மானிடர் மனந்துள்ளும் மட்சியரிந்தவன் !!!
ஓர் முடி அது என் தமிழ்க்கொடி (புலிக்கொடி)
தீவினை (ஊழ்வினை) காலமாடும்போது
ஒருசொல்லில் பாருக்கு சொல்லவான் என்றிருந்தேன் ?
சொன்னானா? இல்லையே ?
புலையன் எனக்கு புத்தி பேதலித்து
பித்தனாகி வெதும்பும்,முடியா கோடையில் ,
மறந்திலேன் மறந்திலேன் என மார்தட்டி நிற்கின்றான் !!!

வீழ்ந்த ஈழக் கதை ,
கதை இல்லை , விதை
பட்டம் பார்த்து விதைக்க
மறந்திலேன் மறந்திலேன் என மார்தட்டி நிற்கின்றான் !!!

ஈழவிதை ஆழ்மனதில் வை
ஆடிப்பட்டம் தேடி விதை ,,,,,,,,,,,,,,


இலங்கையில் போர் நடந்து கொண்டு இருந்ததால் பாராட்டு விழாக்களை தவிர்த்தேன்: ஏ.ஆர்.ரகுமான்

இலங்கையில் போர் நடந்து கொண்டு இருந்ததால் தமிழ்நாட்டில் தமக்கு பல்வேறு அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாக்களை தவிர்த்துவிட்டதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உருக்கமுடன் கூறினார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோருக்கு நேற்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஏற்புரையாற்றிப் பேசும்போது கூறியதாவது:

2 மாதங்கள் அமெரிக்காவில் இசை அமைத்துவிட்டு இந்தியா திரும்பி வந்து நான் கலந்துகொள்ளும் 2 வது விழா இது. இங்கு தமிழ்த்தாய் வாழ்த்தை கேட்டபோது முத்துமழை பெய்தது போல் இருந்தது. ஆஸ்கார் விருதுக்கு பிறகு ஏராளமான பாராட்டுகள் இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் மற்றும் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வருகின்றன.

ஆனால், அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் இருந்த சூழ்நிலை, தமிழ் நெஞ்சங்களுக்கு இலங்கையில் நடந்த போர் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், தமிழகத்தில் பாராட்டு விழாக்களை தவிர்த்துக்கொண்டேன். இதனால் யாருக்கும் மனக்கஷ்டம் இருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் என்றார்.

புதன், 15 ஜூலை, 2009

வேலைவாய்ப்புக்கு உதவும் வெளிநாட்டு மொழிகள் - 34 ஹைதராபாத்திலுள்ள வெளிநாட்டு மொழிகள் பயிற்சி நிறுவனம் Central Institute of English and Foreign Lang

ஹைதராபாத்திலுள்ள வெளிநாட்டு மொழிகள் பயிற்சி நிறுவனம்

வேலைவாய்ப்புக்கு உதவும் வெளிநாட்டு மொழிகள் - 34

ஹைதராபாத்திலுள்ள வெளிநாட்டு மொழிகள் பயிற்சி நிறுவனம்

Central Institute of English and Foreign Languages
Hyderabad - 500 007,
Andhra Pradesh.
INDIA.

ஹைதராபாத்தில் அமைந்துள்ள சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆப் இங்கிலீஷ் அண்ட் பாரின் லாங்கேவேஜ்சசைச் சேர்ந்த தி ஸ்கூல் ஆப் பாரின் லாங்வேஜ்சில் அரபிக், பிரெஞ்சு, ஜெர்மென், ஜப்பானிஸ், ரஷ்யன் மற்றும் ஸ்பானிஸ் மொழிகளை ஆரம்ப கட்டத்தில் இருந்து பி.எச்.டி., முனைவர் பட்டம் வரையிலான வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இதன் முக்கிய நோக்கம், இந்த ஐந்து மொழிகளின் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது, ஆராய்ச்சி, பாடத்திட்டத்தை தயாரிப்பது, இந்த மொழிகளை கற்றுத் தரும் பல்கலைக்கழகங்கள் மற்றும் மற்ற நிறுவனங்கள் பாடத் திட்டத்தை தயாரிப்பதற்கு உதவுவது மற்றும் மொழி தொடர்பான ஆய்வரங்கம், பயிற்சி பட்டறை நடத்துவது ஆகியனவாகும். இந்த மொழிகளில் உயர்நிலை தேர்ச்சி மற்றும் திறன் பெறுவதற்கான பல பாடத்திட்டங்களின் கீழ் வகுப்புகளை நடத்துகிறது.

இதன் துணை நிறுவனம், மேகாலயா மாநிலத்தின் தலைநகரான சில்லாங்கில் அமைந்துள்ளது. இங்கு தற்போது ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மென் ஆகிய மொழிகள் கற்றுத் தரப்படுகின்றன.

ரஷ்ய மொழி

லெவல் 1.1 முதல் லெவல் 1.6 வரை.

லெவல் 1.1 - புதிதாக ரஷ்ய மொழியை படிப்பவர்களுக்காக நடத்தப்படுகிறது. லெவல் 1.6 - ரஷ்ய மொழியை ஏற்கனவே கற்றவர்களுக்காக நடத்தப்படுகிறது. ரஷ்ய மொழியை படிக்க விரும்புபவர்கள், அவர்கள் ஏற்கனவே அம்மொழி படித்திருக்கும் தகுதியைப் பொறுத்து எந்த லெவலிலும் சேரலாம்.
கல்வித் தகுதி - பத்தாம் வகுப்பு தேர்ச்சி
இதில் முழு நேரமாகவும் அல்லது பகுதி நேரமாகவும் படிக்கும் வசதி உள்ளது.

***

Diploma in Scientific and Technical Translation in Russian (Part-Time)

ரஷ்ய மொழியில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப மொழிபெயர்ப்பு பட்டயம் (பகுதி நேரம்)
சேர்வதற்கான தகுதி - இந்த இன்ஸ்டிட்யூட்டால் நடத்தப்படும் லெவல் 1.3 சி கிரேடில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அல்லது, அதற்கு சமமான தகுதி.

***

Master of Arts (M.A) in Russian (Distance Mode)

எம்.ஏ. ரஷியன் (தொலைதூரக் கல்வி)
தகுதி - ரஷ்ய மொழியை விருப்பப் பாடமாகவோ அல்லது இரண்டாவது மொழியாகவோ படித்த பட்டப்படிப்பு அல்லது ஏதாவது பட்டப்படிப்புடன் ரஷ்ய மொழியில் இரண்டு வருட பட்டய வகுப்பிற்கு சமமானது.
கால அளவு - மூன்று வருடம்

***

Master of Arts (M.A) in Russian ( Full Time )

எம்.ஏ., ரஷியன் (முழு நேரம்)
தகுதி - ரஷ்ய மொழியை விருப்பப் பாடமாகவோ அல்லது இரண்டாவது மொழியாகவோ படித்த பட்டப்படிப்பு அல்லது ஏதாவது பட்டப்படிப்புடன் ரஷ்ய மொழியில் இரண்டு வருட பட்டய வகுப்பிற்கு சமமானது.

கால அளவு - நான்கு செமஸ்டர்கள்.

***

Post-Graduate Certificate in the Teaching of Russian (PGCTR)

ரஷ்ய மொழி ஆசிரியருக்கான பட்டமேற்படிப்பு சான்றிதழ்
சேர்வதற்கான தகுதி - ரஷ்ய மொழியில் எம்.ஏ. பட்டம்.
கால அளவு - ஒரு செமஸ்டர்.

***

Post-Graduate Diploma in the Teaching of Russian (PGDTR)

ரஷ்ய மொழி ஆசிரியருக்கான பட்டமேற்படிப்பு பட்டயம்

சேர்வதற்கான தகுதி:
முதல் செமஸ்டர் - ரஷ்ய மொழியில் எம். ஏ.
இரண்டாவது செமஸ்டர் - ரஷ்ய மொழி ஆசிரியருக்கான பட்டமேற்படிப்பு சான்றிதழ்.
கால அளவு - இரண்டு செமஸ்டர்.

***

Master of Philosophy (M.Phil.) in Russian (Distance Mode)

ரஷ்ய மொழியில் மாஸ்டர் ஆப் ப்ளாசபி (தொலைதூர கல்வி)
சேர்வதற்கான தகுதி - ரஷ்ய மொழியில் எம்.ஏ., முதல் வகுப்பில் தேர்ச்சி. அல்லது, ரஷ்ய மொழியில் எம்.ஏ., இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி, அத்துடன் ரஷ்ய மொழி ஆசிரியருக்கான சான்றிதழ் அல்லது பட்டயம். அல்லது, ரஷ்ய மொழியில் எம்.ஏ., பட்டம் பெற்று, ஏழு ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரிந்திருக்க வேண்டும்.
கால அளவு - இருபது மாதங்கள்.

***

Doctor of Philosophy (Ph.D) in Russian (Distance Mode)

ரஷ்ய மொழியில் பிஹெச்.டி., (முனைவர் பட்டம்) (தொலைதூர கல்வி)
கால அளவு - நான்கு வருடங்கள்

***

Doctor of Philosophy (Ph.D) in Russian

ரஷ்ய மொழியில் பிஹெச்.டி., (முனைவர் பட்டம்)
கால அளவு - மூன்று வருடங்கள்

இரண்டிற்கும் சேர்வதற்கான தகுதி : ரஷ்ய மொழியில் எம்.ஏ., முதல் வகுப்பில் தேர்ச்சி. அல்லது, ரஷ்ய மொழியில் எம்.ஏ இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி, அத்துடன் ரஷ்ய மொழி ஆசிரியருக்கான சான்றிதழ் அல்லது பட்டயம். அல்லது, ரஷ்ய மொழியில் எம்.லிட்/ எம்.பில் அல்லது ரஷ்ய மொழியில் எம்.ஏ., பட்டம் பெற்று, ஏழு ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரிந்திருக்க வேண்டும்.

*******

Diploma in Translation

மொழிபெயர்ப்பில் டிப்ளமோ
கால அளவு - ஒரு செமஸ்டர்.

சேர்க்கைக்கான தகுதி.

1. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் / முதுகலை பட்டம்.
2. வெளிநாட்டு மொழி கற்றவர்களாக இருந்தால், சென்ட்ரல் இன்ஸ்டியூட் ஆப் இங்கிலிஷ் அண்ட் பாரின் லாங்வேஜ்-ல் இருந்து குறிப்பிட்ட வெளிநாட்டு மொழியில் அட்வான்ஸ்ட் டிப்ளமோ (லெவல் 1.6) அல்லது அங்கீரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / இன்ஸ்டியூட்டில் இருந்து இதற்கு சமமான தகுதி. அத்துடன், ஆங்கிலத்தில் தேவையான தேர்ச்சி.
3. இந்திய மொழி கற்றவர்களாக இருந்தால், குறிப்பிட்ட இந்திய மொழியில் மேற்கண்ட சமமான தகுதி மற்றும் அத்துடன் ஆங்கிலத்தில் தேவையான தேர்ச்சி.

***

Advanced Diploma in Professional Translation

தொழில் ரீதியான மொழிபெயர்ப்பில் அட்வான்ஸ்ட் டிப்ளமோ

கால அளவு - 2 செமஸ்டர்கள்.

சேர்க்கைக்கான தகுதி:

1. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் / முதுகலை பட்டம்.
2. வெளிநாட்டு மொழி கற்றவர்களாக இருந்தால், சென்ட்ரல் இன்ஸ்டியூட் ஆப் இங்கிலிஷ் அன்ட் பாரின் லாங்வேஜ்-ல் இருந்து குறிப்பிட்ட வெளிநாட்டு மொழியில் அட்வான்ஸ்ட் டிப்ளமோ (லெவல் 1.6) அல்லது அங்கீரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / இன்ஸ்டியூட்டில் இருந்து இதற்கு சமமான தகுதி. அத்துடன், ஆங்கிலத்தில் தேவையான தேர்ச்சி.
3. இந்திய மொழி கற்றவர்களாக இருந்தால், குறிப்பிட்ட இந்திய மொழியில் மேற்கண்ட சமமான தகுதி மற்றும் அத்துடன், ஆங்கிலத்தில் தேவையான தேர்ச்சி.

***

Post-Graduate Diploma in Translation Studies (PGDTS)

போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் டிரான்ஸ்லேசன் ஸ்டடிஸ்.

கால அளவு- 2 செமஸ்டர்கள்

சேர்க்கைக்கான தகுதி:
1. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் / முதுகலை பட்டம்.
2. வெளிநாட்டு மொழி கற்றவர்களாக இருந்தால், சென்ட்ரல் இன்ஸ்டியூட் ஆப் இங்கிலிஷ் அன்ட் பாரின் லாங்வேஜ்-ல் இருந்து குறிப்பிட்ட வெளிநாட்டு மொழியில் அட்வான்ஸ்ட் டிப்ளமோ (லெவல் 1.6) அல்லது அங்கீரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / இன்ஸ்டியூட்டில் இருந்து இதற்கு சமமான தகுதி. அத்துடன், ஆங்கிலத்தில் தேவையான தேர்ச்சி.
3. இந்திய மொழி கற்றவர்களாக இருந்தால், குறிப்பிட்ட இந்திய மொழியில் மேற்கண்ட சமமான தகுதி மற்றும் அத்துடன் ஆங்கிலத்தில் தேவையான தேர்ச்சி.

******

அரபி மொழி

Part-Time Language Proficiency Programme in Arabic

அரபி மொழியில் தேர்ச்சி பெறுவதற்கான பகுதி நேர வகுப்பு

கால அளவு - 100 மணி நேரம்
சேர்க்கைக்கான தகுதி - பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமானது.
இதன் பாடத்திட்டம் லெவல் 1.0 முதல் 1.6 வரை உள்ளது. இதில் லெவல் 1.5 முடித்தவர்கள் எம்.ஏ. வகுப்பில் சேர தகுதி படைத்தவர்களாவர்கள். இதில் சேர விரும்புபவர்கள் அரபி மொழியில், அவர்களுக்குள்ள தேர்ச்சியை/ தகுதியைப் பொறுத்து எந்த நிலையிலும் சேரலாம்.

***

Part-Time Diploma in Translation (Arabic/English, English/Arabic)

பகுதி நேர மொழிபெயர்ப்பு டிப்ளமோ (அரபி மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு, ஆங்கிலத்தில் இருந்து அரபி மொழிக்கு)

கால அளவு - 100 மணி நேரம்

சேர்க்கைக்கான தகுதி - பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமானது.

இது பல நிலைகளிலானது. இதில் சேர விரும்புபவர்கள் அரபி மொழியில், அவர்களுக்குள்ள தேர்ச்சியை/ தகுதியைப் பொறுத்து எந்த நிலையிலும் சேரலாம். இந்த மொழிபெயர்ப்பு டிப்ளமோ முடித்தவர்கள், ஏதாவது ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருந்தால், அரபு மொழி எம்.ஏ படிப்பில் சேரலாம்.

***

M.A. in Arabic (Distance Mode)

அரபியில் எம்.ஏ., (தொலைதூர கல்வி)
கால அளவு - 3 வருடங்கள்
சேர்க்கைக்கான தகுதி - அரபியில் பட்டப்படிப்பு. அல்லது அரபியை விருப்ப பாடமாகக் கொண்ட பட்டப்படிப்பு அல்லது
ஏதேனும் பட்டப்படிப்பு, அத்துடன், அரபி மொழியில் இரண்டு வருட பட்டய படிப்பிற்கு சமமான படிப்பு.

***

M.A. in Arabic (Full Time)

அரபியில் எம்.ஏ., ( முழு நேரம் )
கால அளவு - 4 செமஸ்டர்கள்.
சேர்க்கைக்கான தகுதி - அரபியில் பட்டப்படிப்பு. அல்லது அரபியை விருப்ப பாடமாகக் கொண்ட பட்டப்படிப்பு அல்லது
ஏதேனும் பட்டப் படிப்பு, அத்துடன் அரபிக் மொழியில் இரண்டு வருட பட்டய படிப்பிற்கு சமமான படிப்பு.

***

Post-Graduate Diploma in the Teaching of Arabic (PGDTA)

அரபி மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ
கால அளவு - 2 செமஸ்டர்கள்.
சேர்க்கைக்கான தகுதி - அரபியில் எம்.ஏ., குறைந்தபட்சம் இரண்டாவது நிலையில் தேர்ச்சி.

***

M.Phil. in Arabic

அரபியில் எம்,பிஎல்.,
கால அளவு - 2 செமஸ்டர்கள்.

சேர்க்கைக்கான தகுதி - அரபியில் எம்.ஏ., அல்லது எம்.ஓ.எல். குறைந்தபட்சம் இரண்டாவது நிலையில் தேர்ச்சி.
அல்லது அரபியில் எம்.ஏ பட்டம் பெற்று, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 5 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி இருக்க வேண்டும்.

***

Ph.D. in Arabic

அரபியில் பிஎச்.டி.,
கால அளவு - 6 செமஸ்டர்கள்.
சேர்க்கைக்கான தகுதி - அரபியில் எம்.ஏ., முதல்நிலை தேர்ச்சி அல்லது அரபியில் எம்.ஏ., அல்லது எம்.ஓ.எல். குறைந்தபட்சம் இரண்டாவது நிலையில் தேர்ச்சி மற்றும் அரபி மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ அல்லது அரபியில் எம்.லிட்/ எம்.பில்., அல்லது சமமான தகுதி. அல்லது அரபியில் எம்.ஏ., அல்லது எம்.ஓ.எல். பட்டம் பெற்று, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 7 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி இருக்க வேண்டும்.

***

Certificate of Proficiency in French

பிரெஞ்சு மொழியில் சான்றிதழ்
சேர்க்கைக்கான தகுதி - பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமம்.
காலம் அளவு :
நான் இன்டென்ஸிவ் - 2 செமஸ்டரில் 160 மணிநேரம்
இன்டென்ஸிவ் - 1 செமஸ்டரில் 160 மணிநேரம்

***

Diploma in French

பிரெஞ்சு மொழியில் பட்டயம் (டிப்ளமோ)
இன்ஸ்டியூட் ஆப் இங்கிலீஷ் அண்ட் பாரின் லாங்கேவேஜ் நிறுவனத்தில் சான்றிதழ் படிப்பில் குறைந்தபட்சம் 'சி' கிரேடில் தேர்ச்சி மற்றவர்கள் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
கால அளவு :
நான் இன்டென்ஸிவ் - 2 செமஸ்டரில் 160 மணிநேரம்
இன்டென்ஸிவ் - 1 செமஸ்டரில் 160 மணிநேரம்

***

Advanced Diploma in French

அட்வான்ஸ்ட் டிப்ளமோ இன் பிரெஞ்சு.
இன்ஸ்டியூட் ஆப் இங்கிலீஷ் அண்ட் பாரின் லாங்கேவேஜ் நிறுவனத்தில் பட்டயப் படிப்பில் குறைந்தபட்சம் 'சி' கிரேடில் தேர்ச்சி. மற்றவர்கள் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
கால அளவு :
நான் இன்டென்ஸிவ் - 2 செமஸ்டரில் 160 மணிநேரம்
இன்டென்ஸிவ் - 1 செமஸ்டரில் 160 மணிநேரம்

(இந்தியன் கவுன்சில் ஆப் கல்ச்சுரல் ரிலேஷன் உதவித் திட்டத்தின் கீழ் பிரெஞ்சு மொழி பயிலும் வெளிநாட்டவர்களுக்கு கட்டணச் சலுகை உண்டு.)

***

M.A. in French (Distance Mode)

பிரஞ்சு மொழியில் எம்.ஏ., (அஞ்சல் வழி )
கால அளவு - 3 வருடங்கள்
சேர்க்கைக்கான தகுதி -
பிரெஞ்சு மொழியில் பட்டப்படிப்பு அல்லது பிரெஞ்சு மொழியை விருப்ப பாடமாகக் கொண்டு பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் பட்டப்படிப்புடன், பிரெஞ்சு மொழியில் இரண்டு வருட பட்டயப் (டிப்ளமோ) படிப்பிற்கு இணையான படிப்பில் தேர்ச்சி.

***

M.A. in French (Full Time)

பிரெஞ்சு மொழியில் எம்.ஏ., (முழு நேரம்)
காலம் - 4 செமஸ்டர்கள்
சேர்க்கைக்கான தகுதி -
பிரெஞ்சு மொழியில் பட்டப்படிப்பு அல்லது பிரெஞ்சு மொழியை விருப்ப பாடமாகக் கொண்ட பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் பட்டப்படிப்புடன், பிரெஞ்சு மொழியில் இரண்டு வருட பட்டயப் (டிப்ளமோ) படிப்பிற்கு இணையான படிப்பில் தேர்ச்சி.

***

Post Graduate Certificate in the Teaching of French (PGCTF)

பிரெஞ்சு மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜிவேட் சான்றிதழ்.
கால அளவு - 4 மாதங்கள் மற்றும் 1 வருடம்
சேர்க்கைக்கான தகுதி -
பிரெஞ்சு மொழியில் குறைந்த பட்சம் எம்.ஏ.,வில் தேர்ச்சி.

****

Post Graduate Diploma in the Teaching of French (PGCTF)

பிரெஞ்சு மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ
கால அளவு - 1 வருடம்.
பிரெஞ்சு மொழியில் குறைந்த பட்சம் எம்.ஏ.,வில் தேர்ச்சி.
கல்வி நிறுவனங்களால் அனுப்பபடுபவர்களைத் தவிர மற்றவர்கள் நுழைவுத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

***

M. Phil

பிரஞ்சு மொழியில் எம்.பில்.,
கால அளவு - 1 வருடம்.
சேர்க்கைக்கான தகுதி - பிரெஞ்சு மொழியில் எம்.ஏ., உயர் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது பி கிரேட் தேர்ச்சி. அல்லது பிரெஞ்சு மொழியில் எம்.ஏ., சி கிரேடில் தேர்ச்சி அத்துடன் பிரெஞ்சு மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜிவேட் சான்றிதழ்./ டிப்ளமோ அல்லது பிரெஞ்சு மொழியில் எம்.ஏ., அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பிரெஞ்சு மொழி ஆசிரியராக இருந்த அனுபவம்.

***

Ph.D.

பி.எச்.டி
கால அளவு - 3 வருடங்கள்.
சேர்க்கைக்கான தகுதி - பிரெஞ்சு மொழியில் எம்.ஏ., முதல் வகுப்பில் தேர்ச்சி அல்லது பிரெஞ்சு மொழியில் எம்.ஏ., இரண்டம் வகுப்பில் தேர்ச்சி அத்துடன் பிரெஞ்சு மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜிவேட் சான்றிதழ்./ டிப்ளமோ அல்லது பிரெஞ்சு மொழியில் எம்.பிஎல்., எம்.லிட் அல்லது சமமான தகுதி அல்லது பிரெஞ்சு மொழியில் எம்.ஏ., அத்துடன் அங்கிகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 7 ஆண்டுகள் பிரெஞ்சு மொழி ஆசிரியராக இருந்த அனுபவம்.

***

e-Master in French (online, MA plus MPhil)

பிரஞ்சு மொழியில் இ-மாஸ்டர் (ஆன்லைன், எம்,ஏ மற்றும் எம்.பில்.)
கால அளவு - 6 செமஸ்டர்கள்
சேர்க்கைக்கான தகுதி - பட்டப்படிப்பில் பிரெஞ்சு மொழியை விருப்பப் பாடமாக அல்லது இரண்டாவது மொழியாக கொண்டு தேர்ச்சி. அல்லது ஏதேனும் பட்டப்படிப்பு அத்துடன் பிரெஞ்சு மொழியில் டிப்ளமோ. (இரண்டு வருட மொழிப் பாடம் )

******

Part-Time Language Proficiency Programmes in German

ஜெர்மென் மொழியில் திறன் பாடத்திட்டம் பகுதி-நேரம்.
கால அளவு - 100 மணி நேரங்கள்
சேர்க்கைக்கான தகுதி - பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமம்.
பாடத்திட்ட நிலை - 1.0 முதல் 1.6 வரை
நிலை - 1.0 நவீன ஜெர்மென் மொழியில் ஆரம்ப கட்டம்.
நிலை- 1.1 ஜெர்மென் மொழியில் முன் தேர்ச்சி இல்லாதவர்களுக்கானது.
நிலை- 1.6 ஜெர்மென் மொழியில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கானது.
இதில் சேருபவர்கள் ஜெர்மென் மொழியில் உள்ள தகுதி, திறனை பொருத்து எந்த நிலையிலும் சேரலாம்.
நிலை- 1.5 இல் தேர்ச்சி பெற்றவர்கள் ஜெர்மென் மொழியில் எம்.ஏ.,வில் சேர விண்ணப்பிக்கலாம்.
நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

***

Part-Time Diploma in Translation

ஜெர்மென் மொழி பெயர்ப்பில் பட்டயம் (டிப்ளமோ)

இந்த இன்ஸ்டிட்யூட்டால் நடத்தப்படும் ஜெர்மென் மொழியில் 1.5 நிலையில் கிரேட் சி-யில் தேர்வு பெற்று இருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இதற்கு சமமான தகுதி.
இதில் நுழைவுத் தேர்வு மூலமே சேர்க்கப்படுவார்கள்.
இதில் ஆய்வு இதழ்கள், இலக்கியம், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப தகவல்களை ஆங்கிலத்தில் இருந்து ஜெர்மென் மொழிக்கும், ஜெர்மென் மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்க பயிற்சி அளிக்கப்படும்.

***

Diploma in Interpretation

இன்டர்பிரட்டேஷனில் பட்டயம் (டிப்ளமோ)
சேர்க்கைக்கான தகுதி - பி.ஏ பட்டப்படிப்பில் ஜெர்மென் மொழி முக்கிய பாடமாகவோ அல்லது விருப்பப் பாடமாகவோ இருக்க வேண்டும் அல்லது ஏதேனும் பட்டப்படிப்பு; அத்துடன், ஜெர்மென் மொழியில் 2-3 வருட படிப்பு.
இதில் நுழைவுத் தேர்வு மூலமே சேர்க்கப்படுவார்கள்.

***

M.A. in German (Distance Mode)

ஜெர்மென் மொழியில் எம்.ஏ., ( தொலைதூர கல்வி )
கால அளவு - 3 வருடங்கள்.
ஜெர்மென் மொழியை விருப்ப பாடமாகவோ அல்லது இரண்டாவது மொழி பாடமாகவோ கொண்டு படித்த பட்டப்படிப்பு.
அல்லது, ஏதேனும் பட்டப்படிப்பு அத்துடன் இரண்டு வருட ஜெர்மென் மொழி பட்டயப் படிப்பிற்கு சமமான படிப்பில் தேர்ச்சி.
இதில் நுழைவுத் தேர்வு மூலமே சேர்க்கப்படுவார்கள்.

***

M.A. in German (Full time)

ஜெர்மென் மொழியில் எம். ஏ., ( முழு நேரம் )
கால அளவு- 4 செமஸ்டர்கள்.
சேர்க்கைக்கான தகுதி - ஜெர்மென் மொழியை விருப்ப பாடமாகவோ அல்லது இரண்டாவது மொழி பாடமாகவோ கொண்டு படித்த பட்டப்படிப்பு. அல்லது ஏதேனும் பட்டப்படிப்பு; அத்துடன், இரண்டு வருட ஜெர்மென் மொழி பட்டயப் படிப்பிற்கு சமமான படிப்பில் தேர்ச்சி. இதில் நுழைவுத் தேர்வு மூலமே சேர்க்கப்படுவார்கள்.

***

Post-Graduate Certificate in the Teaching of German (PGCTG)

ஜெர்மென் மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜுவேட் சான்றிதழ்.
கால அளவு- 1 செமஸ்டர்.
சேர்க்கைக்கான தகுதி - ஜெர்மென் மொழி எம்.ஏ.,வில் குறைந்தபட்சம் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்களால் அனுப்பப்படுபவர்களைத் தவிர மற்றவர்கள் நுழைவுத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

***

Post-Graduate Diploma in the Teaching of German (PGDTG)

ஜெர்மென் மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ
கால அளவு- 2 செமஸ்டர்.
சேர்க்கைக்கான தகுதி - முதல் செமஸ்டரில் சேர ஜெர்மென் மொழி எம்.ஏ.,வில் குறைந்தபட்சம் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இரண்டாவது செமஸ்டரில் நேரடியாக சேர ஜெர்மென் மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜிவேட் சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்களால் அனுப்பப்படுபவர்களைத் தவிர மற்றவர்கள் நுழைவுத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

***

M.Phil. in German

ஜெர்மென் மொழியில் எம்.பில்.,

கால அளவு - 2 செமஸ்டர்
சேர்க்கைக்கான தகுதி - ஜெர்மென் மொழியில் எம்.ஏ., முதல் வகுப்பில் தேர்ச்சி அல்லது ஏ கிரேட் தேர்ச்சி.
அல்லது ஜெர்மென் மொழியில் எம்.ஏ., இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது பி கிரேட்டில் தேர்ச்சி; அத்துடன், ஜெர்மென் மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜிவேட் சான்றிதழ்/ டிப்ளமோ. அல்லது ஜெர்மென் மொழியில் எம்.ஏ., உடன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 7 ஆண்டுகள் ஜெர்மென் மொழி ஆசிரியராக பணியாற்றிய அனுபவம்.

***

Ph.D. in German

ஜெர்மென் மொழியில் பி.எச்.டி

கால அளவு - 6 செமஸ்டர்கள்
சேர்க்கைக்கான தகுதி- ஜெர்மென் மொழியில் எம்.ஏ., முதல் வகுப்பில் தேர்ச்சி அல்லது ஏ கிரேட் அல்லது ஜெர்மென் மொழியில் எம்.ஏ., இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி; அத்துடன், ஜெர்மென் மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜிவேட் சான்றிதழ்/ டிப்ளமோ
அல்லது ஜெர்மென் மொழியில் எம்.பிஎல்., எம்.லிட் அல்லது சமமான தகுதி அல்லது ஜெர்மென் மொழியில் எம்.ஏ., உடன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 7 ஆண்டுகள் ஜெர்மென் மொழி ஆசிரியராக இருந்த அனுபவம்.

******

Part-Time Language Proficiency Programmes in Spanish

ஸ்பானிஷ் மொழியில் திறன் பாடத்திட்டம் பகுதி-நேரம்
கால அளவு - 100 மணி நேரங்கள்
சேர்க்கைக்கான தகுதி - பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமம்.
பாடத்திட்ட நிலை - 1.0 முதல் 1.6 வரை.
நிலை - 1.0 நவீன ஸ்பானிஷ் மொழியில் ஆரம்ப கட்டம்.
நிலை- 1.1 ஸ்பானிஷ் மொழியில் முன் தேர்ச்சி இல்லாதவர்களுக்கானது.
நிலை- 1.6 ஸ்பானிஷ் மொழியில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கானது.
இதில் சேருபவர்கள், ஸ்பானிஷ் மொழியில் உள்ள தகுதி, திறனை பொருத்து எந்த நிலையிலும் சேரலாம்.
நிலை- 1.5ல் தேர்ச்சி பெற்றவர்கள் ஸ்பானிஷ் மொழியில் எம்.ஏ.,வில் சேர விண்ணப்பிக்கலாம்.
நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

***

Part-Time Diploma in Translation

ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பில் பட்டயம் (டிப்ளமோ) பகுதி நேரம்.

இந்த இன்ஸ்டிட்யூட்டால் நடத்தப்படும் ஸ்பானிஷ் மொழியில் 1.5 நிலையில், கிரேட் சி-யில் தேர்வு பெற்று இருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இதற்கு சமமான தகுதி.
இதில் நுழைவுத் தேர்வு மூலமே சேர்க்கப்படுவார்கள். இதில் ஆய்வு இதழ்கள், இலக்கியம், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப தகவல்களை ஆங்கிலத்தில் இருந்து ஸ்பானிஷ் மொழிக்கும், ஸ்பானிஷ் மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்க பயிற்சி அளிக்கப்படும்.

***

M.A. in Spanish (Distance Mode)

ஸ்பானிஷ் மொழியில் எம்.ஏ., ( தொலைதூர கல்வி )
கால அளவு - 3 வருடங்கள்.
ஸ்பானிஷ் மொழியை விருப்ப பாடமாகவோ அல்லது இரண்டாவது மொழி பாடமாகவோ கொண்டு படித்த பட்டப்படிப்பு.
அல்லது ஏதேனும் பட்டப்படிப்பு அத்துடன் இரண்டு வருட ஸ்பானிஷ் மொழி பட்டயப் படிப்பிற்கு சமமான படிப்பில் தேர்ச்சி.
இதில் நுழைவுத் தேர்வு மூலமே சேர்க்கப்படுவார்கள்.

***

M.A. in Spanish (Full Time)

ஸ்பானிஷ் மொழியில் எம். ஏ., ( முழு நேரம் )
கால அளவு - 4 செமஸ்டர்கள்.
சேர்க்கைக்கான தகுதி : ஸ்பானிஷ் மொழியை விருப்ப பாடமாகவோ அல்லது இரண்டாவது மொழி பாடமாகவோ கொண்டு படித்த பட்டப்படிப்பு. அல்லது ஏதேனும் பட்டப்படிப்பு அத்துடன் இரண்டு வருட ஸ்பானிஷ் மொழி பட்டயப் படிப்பிற்கு சமமான படிப்பில் தேர்ச்சி. இதில் நுழைவுத் தேர்வு மூலமே சேர்க்கப்படுவார்கள்.

***

Post-Graduate Certificate in the Teaching of Spanish (PGCTS)

ஸ்பானிஷ் மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜுவேட் சான்றிதழ்.
கால அளவு- 1 செமஸ்டர்.
சேர்க்கைக்கான தகுதி : ஸ்பானிஷ் மொழி எம்.ஏ., முதுநிலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்களால் அனுப்பப்படுபவர்களைத் தவிர மற்றவர்கள் நுழைவுத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

***

Post-Graduate Diploma in the Teaching of Spanish (PGDTS)

ஸ்பானிஷ் மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ
கால அளவு - 2 செமஸ்டர்.
சேர்க்கைக்கான தகுதி : முதல் செமஸ்டரில் சேர ஸ்பானிஷ் மொழி எம்.ஏ., முதுநிலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் இரண்டாம் வகுப்பு அல்லது சி கிரேடில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இரண்டாவது செமஸ்டரில் நேரடியாக சேர ஸ்பானிஷ் மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜிவேட் சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்களால் அனுப்பப்படுபவர்களைத் தவிர மற்றவர்கள் நுழைவுத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.

***

M.Phil. in Spanish (Distance Mode)

ஸ்பானிஷ் மொழியில் எம்.பில்., (தொலை நிலைக் கல்வி )
கால அளவு - 20 மாதங்கள்
சேர்க்கைக்கான தகுதி : ஸ்பானிஷ் மொழியில் எம்.ஏ., முதல் வகுப்பில் தேர்ச்சி அல்லது ஏ கிரேட் தேர்ச்சி. அல்லது
ஸ்பானிஷ் மொழியில் எம்.ஏ., இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது பி கிரேட்டில் தேர்ச்சி; அத்துடன், ஸ்பானிஷ் மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜிவேட் சான்றிதழ்/ டிப்ளமோ அல்லது ஸ்பானிஷ் மொழியில் எம்.ஏ., உடன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 7 ஆண்டுகள் ஸ்பானிஷ் மொழி ஆசிரியராக பணியாற்றிய அனுபவம்.

M.Phil. in Spanish

ஸ்பானிஷ் மொழியில் எம். பில்.,

கால அளவு - 2 செமஸ்டர்
சேர்க்கைக்கான தகுதி : ஸ்பானிஷ் மொழியில் எம்.ஏ., முதல் வகுப்பில் தேர்ச்சி அல்லது ஏ கிரேட் தேர்ச்சி. அல்லது, ஸ்பானிஷ் மொழியில் எம்.ஏ., இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது பி கிரேட்டில் தேர்ச்சி; அத்துடன், ஸ்பானிஷ் மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜிவேட் சான்றிதழ்./ டிப்ளமோ அல்லது ஸ்பானிஷ் மொழியில் எம்.ஏ., உடன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 7 ஆண்டுகள் ஸ்பானிஷ் மொழி ஆசிரியராக பணியாற்றிய அனுபவம்.

***

Ph.D. in Spanish

ஸ்பானிஷ் மொழியில் பி.எச்.டி

கால அளவு - 6 செமஸ்டர்கள்.
சேர்க்கைக்கான தகுதி : ஸ்பானிஷ் மொழியில் எம்.ஏ., முதல் வகுப்பில் தேர்ச்சி அல்லது ஏ கிரேட் தேர்ச்சி. அல்லது, ஸ்பானிஷ் மொழியில் எம்.ஏ., இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி; அத்துடன், ஸ்பானிஷ் மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜிவேட் சான்றிதழ்./ டிப்ளமோ அல்லது ஸ்பானிஷ் மொழியில் எம்.பிஎல்., எம்.லிட் அல்லது சமமான தகுதி அல்லது ஸ்பானிஷ் மொழியில் எம்.ஏ., உடன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 7 ஆண்டுகள் ஸ்பானிஷ் மொழி ஆசிரியராக இருந்த அனுபவம்.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

The Head,

Centre for Hispanic Studies,

Central Institute of English and Foreign Languages,

Hyderabad-500 007

******

Central Institute of English and Foreign Languages, Hyderabad குறித்து முழுமையாக அறிய...
http://www.efluniversity.ac.in/

செவ்வாய், 30 ஜூன், 2009

”கிரையப் பத்திரத்தின் மூலம் சொத்து சொந்தமாகிவிடுவதில்லை” - ‘சொத்து ஆலோசகர்' திரு. பீட்டருட‎ன் ஒரு நேர்காணல்

“வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்!” எ‎ன்று கூறுவார்கள். இரண்டும் சாதாரண விஷயமல்ல எ‎ன்பதே அதன் தொனி. வீடு, நிலம் போ‎‎ன்ற அசையா சொத்துக்கள் வாங்கும் போது, அதற்கு சட்ட ரீதியில், முறையான வழிமுறை எ‎ன்ன என்பதைப் பலரும் அறிந்திருப்பதில்லை. அரைகுறையாகக் கேள்விப்படும் விபரங்களை வைத்தும், பழக்கமானவர்கள் சொல்கிறார்களே எ‎ன்பதைக் கருத்தில் கொண்டும் சொத்துக்களை வாங்கி விடுகி‎‎ன்றனர். சொத்து சரியான முறையில் பதிவு செய்யப்படாதபோது உரிமையாளர்கள் பல ‏ இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது; சில சமயம் தமது சொத்துக்களைக் கூட இழக்கும்படி ஆகி விடுகிறது.

செ‎ன்னை தி.நகரில் இயங்கும் ட்ரைஸ்டார் ஹௌஸிங் பி லிட்(Tristar Housing Pvt Ltd) என்ற நிறுவனம் சொத்துக்கள் குறித்து ஆலோசனைகள் வழங்குவதோடு, அவற்றைப் பராமரிப்பதிலும் வாடிக்கையாளர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. இந்நிறுவனத்தி‎ன் நிர்வாக இயக்குனர் திரு. பீட்டர் அவர்களை சந்தித்தோம்.

George Peter“நாம் வாங்குகிற சொத்துக்களை உரிய வகையில் பதிவு செய்தல் மிகவும் அவசியம். பொதுமக்களில் பலருக்கு அந்த விழிப்புணர்வு இருப்பதில்லை. பல சொத்துப்பிரச்சினைகளுக்கு இது மூலகாரணமாக அமைந்துவிடுகிறது” எ‎ன்கிறார் பீட்டர்.

இது குறித்து பல நுணுக்கமான தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொ‎ண்டார். அவருட‎னான ஒரு பயனுள்ள நேர்காணல் இதோ:

சொத்து வாங்கும்போதோ அல்லது விற்கும்போதோ அரசாங்கத்தி‎ன் எந்தெந்தத் துறைகளை நா‎ம் அணுக வேண்டும்?

மாநில அரசி‎ன் பதிவுத் துறை (Registration Department)யும், வருவாய்த் துறை (Revenue Department)யும், சொத்துப் பரிமாற்றத்தில் சம்பந்தப்படும். சொத்து வாங்கியபி‎ன்‏ இவ்விரு துறைகளிலும் உரிமையாளரின் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

பதிவுத் துறையில் நாம் செய்ய வேண்டிய கடமைகள் எ‎ன்ன? சொத்து சம்பந்தமாக அந்தத் துறை பராமரிக்கும் விவரங்களைப் பற்றிக் கூறுங்களே‎ன்.

நாம் கிரையப் பத்திரம் (Sale Deed) செய்யும் சார்பதிவாளர் அலுவலகம் (Sub-Registration Office), பதிவுத் துறை (Registration Department)யின் கீழ் வருகிறது. இங்கு நாம் மற்றவரிடம் இருந்து இடம் வாங்கும்போது அதற்காக அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் 8% முத்திரை தீர்வையாகவும் மற்றும் 1% பதிவுக் கட்டணமாகவும் செலுத்துகிறோம். ஆகவே, நாம் இடம் வாங்குவதற்கு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தவும் மற்றும் நிலம் விற்பவரும் வாங்குபவரும் சார்பதிவாளர் முன்னிலையில் கிரையப் பத்திரத்தில் கையொப்பம் இடவும் சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டி இருக்கிறது.

இந்தத் துறையின் பதிவேட்டில் ஒருவரிடம் இருந்து மற்றவர் இந்த இடத்தை வாங்கி இருக்கிறார்; அதற்கான பத்திர எண் இது என்ற விபரம் மட்டுமே இருக்கும். நிலத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்பது பற்றி இந்தத் துறை அக்கறை கொள்வதில்லை எ‎ன்பது குறிப்பிடத்தகுந்த விஷயம். ‏ இ‏தை முக்கியமாக மனதில் கொள்ள வேண்டும்.

அப்படியானால் உரிமையாளர் பெயரை எங்கே மாற்றம் செய்ய வேண்டும்?

வருவாய்த் துறை (Revenue Department)யில்தான் நிலத்திற்கான விவரங்கள் அ‎னைத்தும் இருக்கும். பட்டா (Patta), சிட்டா (Chitta), அடங்கல் (Adangal), 'அ' பதிவேடு (‘A' Register), நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) என ஐந்து வகையான பதிவேடுகளை‏ இந்தத் துறை பராமரிக்கிறது.

நிலத்தின் உரிமை நமக்குத்தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம்தா‎ன் பட்டா என்பது. ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை முடிவு செய்வதே பட்டாவை வைத்துத்தான். அதில் மாவட்டத்தின் பெயர் மற்றும் ஊரின் பெயர், பட்டா எண், உரிமையாளர் பெயர் போ‎ன்ற விவரங்களுட‎ன், புல எண்ணும், உட்பிரிவும், (Survey Number and Subdivision), நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா எ‎ன்னும் விவரமும், நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வையி‎ன் விவரங்களும் இருக்கும்.

ஒரு தனி நபருக்கு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடுதான் சிட்டா என்பது. இதில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய் பயன்பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.

ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடுதா‎ன் ‘அடங்கல்' என்பது. இதில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்ன போன்ற விவரங்கள் இதில் இருக்கும்.

'அ' பதிவேட்டில் (‘A' Register) கீழ்க்கண்ட விபரங்கள் இருக்கும்:

1. பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
2. ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ),
3. நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு,
4. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,
5. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும்.

நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) இடம் எவ்வாறு பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. நிலங்கள் ஏதாவது ஒரு கிராமத்தின் கீழ் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு எ‎ண் கொடுக்கப்படும். அதுவே சர்வே எண் எ‎ன்பது. நம் கிரையப் பத்திரத்தில் சொத்து விவரம் (Schedule) பகுதியில் நம்முடைய இடம் எந்த சர்வே எண்ணில் வருகிறது என குறிக்கப்பட்டிருக்கும்.

இவை அனைத்திலுமே உரிமையாளர் பெயர் மாற்றப்பட வேண்டும் என்பது மனதில் கொள்வது மிகவும் அவசியம்.

இதில் இவ்வளவு விஷயங்கள் ‏இருக்கி‎ன்றனவா! சரி.. வருவாய்த் துறையில் நம்முடைய ஆவணங்களைப் பெயர் மாற்றம் செய்யத் தவறிவிட்டால் எ‎ன்னவாகும் எ‎ன்பதைப் பற்றியும் கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்களே‎ன்.

பட்டா பெயர் மாற்றம் செய்யாவிட்டால் வருவாய்த் துறையின் ஆவணங்களின் படி நீங்கள் உரிமையாளர் அல்ல. பட்டா யார் பெயரில் இருக்கிறதோ அவர்தான் உரிமையாளர். ஒரு வேளை அரசாங்கம் நம்முடைய நிலத்தை கையகப்படுத்தினால், அதற்கான இழப்பீட்டுத் தொகை பட்டா யார் பெயரில் இருக்கிறதோ அவர்களுக்கு வழங்கப்படும்.

நீங்கள் பட்டா பெயர் மாற்றம் செய்யவில்லை என்பதை உங்களுக்கு இடத்தை விற்றவர் தொரிந்து கொண்டால் அவர் பெயரில்
வரி செலுத்தி விடுவார். மேலும் அடங்கல் அவர் பெயருக்கு ஒவ்வொரு வருடமும் வாங்கி வைத்துக் கொள்வார். அடங்கல் அவர் பெயரில் இருந்தாலே அவர்தான் அதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது உறுதியாகி விடும். நாம் வேறொருவருக்கு விற்பனை செய்யும்போது இது பிரச்சினையைக் கொடுக்கும். எனவே, நம் இடத்தை கிரையப் பத்திர மூலம் பதிவு செய்து வாங்கி விட்டோம், எல்லாம் முடிந்துவிட்டது என இருக்கக் கூடாது. உடனே பட்டா பெயர் மாற்றம் செய்து வருவாய்த் துறையின் அனைத்து பதிவேடுகளையும் நமது பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும்.

பலரது கனவான சொத்துக்கள் வாங்குவது சம்பந்தமான பல உபயோகமான தகவல்களை மிக விளக்கமாகக் கூறினீர்கள். மிக்க ந‎ன்றி!

பீட்டர் அவர்களின் ஆலோசனை பெற விரும்புவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்:
0091 44 2431 243
நன்றி :நிலாச்சாரல்

திங்கள், 22 ஜூன், 2009

தினேஷ்குமார் IPS பேட்டி

தினேஷ்குமார் IPS பேட்டி

சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்திய அளவில் 345-வது ரேங்க் பெற்று ஐபிஎஸ் ஆனவர் தினேஷ்குமார். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகிலுள்ள சின்னதண்டா கிராமத்தை சேர்ந்தவர். இவர் பொது அறிவு உலகம் இதழுக்காக பேட்டியளித்தார்.

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிப் பெற்றதற்காக "பொது அறிவு உலகம் இதழ்' சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

""ரொம்ப நன்றிங்க. பொது அறிவு உலகம் இதழை நானும் வாங்கி படித்துள்ளேன். மிகவும் அருமையான இதழ். அனைத்து போட்டித் தேர்வுகளையும் எழுதுவோருக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது.

உங்களை பற்றி சொல்லுங்கள்?

நான் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவன். சின்னதண்ட என்ற கிராமம் தான் எனது சொந்த ஊர். விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவன். பள்ளி படிப்பை மேட்டூர் செயின்ட் மேரீஸ் பள்ளியில் படித்தேன். அதன் பின் கோவை வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பி.எஸ்.சி அக்ரி படித்து முடித் தேன். அப்போது கல்லூரி சீனியரான சங்கர் ஐ.ஏ.எஸ் அகா டமியை நடத்தி வரும் சங்கர் சார் தான் எனக்கு சிவில் சர்வீசஸ் தேர்வை எழுத சொல்லி பயிற்சியும், ஊக்க மும் கொடுத்தார். அவரால்தான் இத்தேர்வில் என் னால் வெற்றி பெற முடிந்தது.

என்னென்ன விருப்பப்பாடத்தை தேர்ந்தெடுத்தீர் கள்?

பிரிலிமனரி தேர்வில் புவியியல் பாடத்தை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்தேன். மெயின் தேர்வுக்கு புவியியல் பாடத்தை ஒரு விருப்பப்பாடமாகவும், வேளாண்மை பாடத்தை இன்னொரு விருப்பப் பாடமாகவும் தேர்ந்தெடுத்தேன்.

தேர்வுக்கு எப்படி தயார் செய்தீர்கள்?

பிரிலிமனரி, மெயின் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் உள்ளது. அவற்றை குறிப்பெடுத்து படிக்க மிகவும் உதவியாக இருந்தது. சங்கர் சார் சிலபஸில் வரும் அனைத்து பாடப் பிரிவு களுக்கும் தக்கவாறு நோட்டீஸ் கொடுப்பார். அவற்றை கவனமுடன் படித்தேன். வாரந் தோறும் தேர்வு நடத்தப்படும். அதனை சங்கர் சார் மதிப்பீடு செய்து உரிய ஆலோசனை கூறுவார். குழுவிவாதம் செய்து படித்தோம். இவையெல்லாம் இத்தேர்வை நல்லமுறையில் எழுத உதவி புரிந்தது.

நேர்முகத் தேர்வு எப்படி இருந்தது?

நான் ஆங்கிலத்திலேயே மெயின் தேர்வை எழுதியதால், நேர்முகத் தேர்வையும் ஆங்கிலத்திலேயே எதிர்கொண்டேன். எங்கள் பயிற்சி நிறுவனத்தில் மாதிரி இன்டர்வியூ நடத்தப்பட்டது. அதுதான் பெரும் உதவியாக இருந்தது. நேர்முகத்தேர்வில் சமீபத்தில் நடப்பு நிகழ்வுகள், தமிழகம் எதிர்நோக்கும் நதிநீர் பிரச்சினைகள் போன்றவற்றில் அதிகம் கேள்வி கேட்டனர். அவை அனைத்துக்கும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையாக பதில் தந்தேன். யுபிஎஸ்சி குழுவினரும் நல்ல அணுகுமுறையுடன் கேள்வி கேட்டதால் பதட்டப்படாமல் பதில் தர முடிந்தது.

"பொது அறிவு உலகம்' இதழைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

"பொது அறிவு உலகம் இதழ் மேட்டூரில் கிடைப்பதால் தவறாமல் வாங்கி படிப்பேன். அதில் வரும் கட்டுரைகள், நடப்பு நிகழ்வுகள் இந்த தேர்வுக்கான தயாரிப்பில் உதவியாக இருந்தது. இறையன்பு ஐஏஎஸ் சிவில் சர்வீசஸ் பற்றி கூறிய பதில்கள் தேர்வை பற்றி புரிந்துகொள்ள உதவியாக இருந்தது. நக்கீரன் பதிப்பகம் வெளியிட்ட டாக்டர் அகிலன் இராம்நாதன் அவர்கள் எழுதிய " ஐஏஎஸ் யாரும் ஆகலாம்!' என்ற நூல் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுவோருக்கு சிறப்பாக வழிகாட்டும் நூல். அது எனக்கு உதவிகரமாக இருந்தது.

ஆட்சிப்பணி தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை!

IAS தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை!



அயராத உழைப்பும், அசைக்க முடியாத நம்பிக்கையும் இருந்தால் யார் வேண்டுமானா லும் கலெக்டராக முடியும்! என்கிறார்கள் இந்த ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் சாதித்துக் காட்டிய சமகால இளைஞர்கள்.

சென்ற ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்திய காவல் பணி (IPS), வெளியுறவுப் பணி (IFS), இந்திய வருவாய் பணி (IRS) உள்ளிட்ட இந்திய அரசின் உயர் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தேர்வு நடத்தப் பட்டது. இத்தேர்விற்கு மூன்று இலட்சத்து 18 ஆயிரத்து 843 பேர் விண்ணப்பித்தனர். முதன்மை தேர்வெழுதிய (Preliminary Exam) ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 35 பேரில், 11 ஆயிரத்து 849 பேர் பிரதானத் தேர்வுக்கு (Main Exam) தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் அதிக ரேங்க் எடுத்தவர்களை கொண்டு நேர்முகத் தேர்வு நடத்தி 791 பேர் சிவில் சர்வீசஸ் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் 625 பேர் ஆண்கள், 166 பேர் பெண்கள். இதில் 364 பேர் பொதுப்பிரிவு (13 பேர் உடல் ஊனமுற்றோர்), 236 பேர் இதர பிற்படுத்தப் பட்டோர் (7 பேர் உடல் ஊனமுற்றோர்), 130 பேர் அட்டவணை வகுப்பினர், 61 பேர் அட்ட வணை பழங்குடியினர் ஆவர்.

வழக்கம் போல இந்த வருடமும் ஐஐடியில் படிக்கும் மாணவர்களே முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் ரூர்க்கி ஐஐடியில் பொறியியல் படித்த சுப்ரா சக்சேனா முதலிடத்தை பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற சரண்தீப் கவுர் பிரார் இரண் டாம் இடம் பெற்றார்.

அவ்வகையில் நம் தமிழக மாணவர்களும் எவ்வகையிலும் சளைத்தவர்கலல்ல என்பதை நிரூபித்துள்ளனர். 96 பேர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். அதில் அகில இந்திய அளவில் முதல் 25 இடங்களைப் பெற்றவர்களில் மூவர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கிராமப்புறங்களை சேர்ந்தவர்களும் முதல் முயற்சியிலேயே வென்றவர்களும் ஏராளம். மெட்ரி குலேஷன் பள்ளிதான் சிறந்த கல்வியை தருகிறது என ஆங்கில மோகத்துடன் உள்ள தமிழகத்தில், அரசு பள்ளிகளில் படித்த பலபேர் ஐஏஎஸ் தேர்வில் வென்றிருப்பது சாதனையிலும் சாதனை.

தமிழகத்தில் முதலிடம்

ஐஏஎஸ் தேர்வில் இந்தியா அளவில் ஓன்பதாவது ரேங்கையும், தமிழ்நாடு அளவில் முதலிடத்தையும் பெற்றவர் சசிகாந்த் செந்தில். சொந்த ஊர் செங்கல்பட்டு. தந்தை சண்முகம் ஓய்வுப் பெற்ற மாவட்ட நீதிபதி தாயார் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். தமது கடின உழைப்பின் மூலம் ஐஏஎஸ் ஆகியுள் ளார். இதைப்பற்றி சசிகாந்த் செந்தில் ""இந்த ரேங்க் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. கணேஷ் என்பவர் மூலமாகவும், தமிழ்நாடு அரசு கோச்சிங் சென்டரிலும் பயிற்சிப் பெற்றேன். இதன் மூலம் வெற்றிப் பெற்றேன். இந்தத் தேர்வை எதிர்கொள்ள

விரும்பும் மாணவர்கள், மனதளவில் முதலில் தயாராகிவிட வேண்டும். பின்னர் விரிவாக பயில வேண்டும'' என்றார்.

பரோட்டா கடையில் வேலை செய்து கொண்டு, படித்தேன் ஐஏஎஸ் ஆனேன்!

சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்தியா அளவில் 53-வது ரேங்க் பெற்றவர் வீரபாண்டியன். மதுரையில் உள்ள அருந்தமிழர் குடியிருப்பைச் சேர்ந்தவர். தந்தை கணேசன் தலையில் சுமந்து பித்தளை வியாபாரம் செய்து வருகிறார். தாயார் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் துப் புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்தாலும் தனது தளராத முயற்சியாளும் கடின உழைப்பினாலும் இத்தேர்வில் வெற்றிப்பெற்று ஐஏஎஸ் ஆகியுள்ளார். அதுப்பற்றி வீரபாண்டியன் குறிப்பிடும்போது

""நான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன். பொருளாதார வசதி கிடையாது. ஆனாலும் படிக்க வேண் டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தது. மதுரை மாநகராட்சி பள்ளியில் பனிரெண் டாம் வகுப்புவரை படித்தேன். படிப்பு செலவுக்கு பணமில்லாத தால் பரோட்டா கடையில் பகுதிநேர வேலை செய்துக் கொண்டே படித்தேன். பிளஸ் டூ தேர்வில் புவியியல் பாடத்தில் மாநில அளவில் முதல் இடம் பெற்றேன். இதற்காக முதல்வர் கருணாநிதியிடம் ஒரு இலட்சம் ரூபாய் பரிசு பெற்றேன். பின்னர் சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. சமூகவியல் சேர்ந்தேன். அங்கும் இலவசமாகத்தான் படித்தேன். இதையடுத்து சென்னை சட்டக்கல்லூரியில் சேர்ந்து இரண்டாமாண்டு பி.எல். படித்துக் கொண்டே சிவில் சர்வீசஸ் தேர்வெழுதி வெற்றிப் பெற்றேன். எனது முயற்சியும், உழைப்பும் வீண்போகவில்லை. அதன் பரிசாக ஐ.ஏ.எஸ் கிடைத்தள்ளது. இதன் மூலம் ஏழை மக்களுக்கு உண்மையாக பணிபுரிவேன்'' என்றார். எந்த இலட்சியத்தையும் அடைய பொருளாதாரம் ஒரு தடையாக இருக்க முடியாது என்பதை வீரப்பாண்டியன் நிரூபித்து உள்ளார்.

முதல் முயற்சியிலேயே வெற்றி!

அகில இந்திய அளவில் 95-வது இடத்தைப் பிடித்துள்ளார் சென்னையைச் சேர்ந்த சுப்ரஜா, என்ஜினியரிங் பட்டதாரியான இவர், தமது முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதைப் பற்றி இவர் கூறுகையில், ""கல்லூரி இறுதியாண்டு படித்தபோது ஐ.ஏ.எஸ் படிப்பு மீது ஆர்வம் ஏற்பட்டது. நான் புரபஷனல் கோர்ஸ் படித்திருந்தாலும் என் விருப்பத்திற்கு பெற்றோர் தடைவிதிக்கவில்லை. அதனால் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயார் செய்தேன். அதற்கு முதல்நிலைத் தேர்வில் புவியியல் விருப்பப்பாடமாகவும், பிரதானத் தேர்வில் புவியியல் மற்றும் உள வியல் பாடங்களை தேர்ந்தெடுத்து படித் தேன். சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி சங்கர் சார் எனக்கு வழிகாட்டினார். அதனால் எளிதாக வெற்றிப் பெற்றேன். ஐ.ஏ.எஸ் தான் முதல் விருப்பம். அது இல்லா விட்டால் ஐஆர்எஸ் கிடைக்குமென எதிர்பார்க்கிறேன். இந்த தேர்வு கடினமாக நடத்தப்பட்டாலும் தங்களுக்கு விருப்பமான பாடத்தைத் தேர்ந்தெடுத்து, மனதை ஒருநிலைப்படுத்தி படித்தால், யார் வேண்டுமா னாலும் வெற்றி பெறலாம்'' என்றார். முதல் முயற்சியில் வெற்றிப் பெற்றது மிகவும் பாராட்டுக்குரியது. சரியான திட்டமிடலும் கடின உழைப்பும் இருந்தால்தான் முதல் முயற்சியில் வெற்றிப் பெற முடியும்.

சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்திய அளவில் 345-வது ரேங்க் பெற்று ஐபிஎஸ் ஆனவர் தினேஷ்குமார். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகிலுள்ள சின்னதண்டா கிராமத்தை சேர்ந்தவர். இவர் பொது அறிவு உலகம் இதழுக்காக பேட்டியளித்தார்.

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிப் பெற்றதற்காக "பொது அறிவு உலகம் இதழ்' சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

""ரொம்ப நன்றிங்க. பொது அறிவு உலகம் இதழை நானும் வாங்கி படித்துள்ளேன். மிகவும் அருமையான இதழ். அனைத்து போட்டித் தேர்வுகளையும் எழுதுவோருக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது.

உங்களை பற்றி சொல்லுங்கள்?

நான் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவன். சின்னதண்ட என்ற கிராமம் தான் எனது சொந்த ஊர். விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவன். பள்ளி படிப்பை மேட்டூர் செயின்ட் மேரீஸ் பள்ளியில் படித்தேன். அதன் பின் கோவை வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பி.எஸ்.சி அக்ரி படித்து முடித் தேன். அப்போது கல்லூரி சீனியரான சங்கர் ஐ.ஏ.எஸ் அகா டமியை நடத்தி வரும் சங்கர் சார் தான் எனக்கு சிவில் சர்வீசஸ் தேர்வை எழுத சொல்லி பயிற்சியும், ஊக்க மும் கொடுத்தார். அவரால்தான் இத்தேர்வில் என் னால் வெற்றி பெற முடிந்தது.

என்னென்ன விருப்பப்பாடத்தை தேர்ந்தெடுத்தீர் கள்?

பிரிலிமனரி தேர்வில் புவியியல் பாடத்தை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்தேன். மெயின் தேர்வுக்கு புவியியல் பாடத்தை ஒரு விருப்பப்பாடமாகவும், வேளாண்மை பாடத்தை இன்னொரு விருப்பப் பாடமாகவும் தேர்ந்தெடுத்தேன்.

தேர்வுக்கு எப்படி தயார் செய்தீர்கள்?

பிரிலிமனரி, மெயின் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் உள்ளது. அவற்றை குறிப்பெடுத்து படிக்க மிகவும் உதவியாக இருந்தது. சங்கர் சார் சிலபஸில் வரும் அனைத்து பாடப் பிரிவு களுக்கும் தக்கவாறு நோட்டீஸ் கொடுப்பார். அவற்றை கவனமுடன் படித்தேன். வாரந் தோறும் தேர்வு நடத்தப்படும். அதனை சங்கர் சார் மதிப்பீடு செய்து உரிய ஆலோசனை கூறுவார். குழுவிவாதம் செய்து படித்தோம். இவையெல்லாம் இத்தேர்வை நல்லமுறையில் எழுத உதவி புரிந்தது.

நேர்முகத் தேர்வு எப்படி இருந்தது?

நான் ஆங்கிலத்திலேயே மெயின் தேர்வை எழுதியதால், நேர்முகத் தேர்வையும் ஆங்கிலத்திலேயே எதிர்கொண்டேன். எங்கள் பயிற்சி நிறுவனத்தில் மாதிரி இன்டர்வியூ நடத்தப்பட்டது. அதுதான் பெரும் உதவியாக இருந்தது. நேர்முகத்தேர்வில் சமீபத்தில் நடப்பு நிகழ்வுகள், தமிழகம் எதிர்நோக்கும் நதிநீர் பிரச்சினைகள் போன்றவற்றில் அதிகம் கேள்வி கேட்டனர். அவை அனைத்துக்கும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையாக பதில் தந்தேன். யுபிஎஸ்சி குழுவினரும் நல்ல அணுகுமுறையுடன் கேள்வி கேட்டதால் பதட்டப்படாமல் பதில் தர முடிந்தது.

"பொது அறிவு உலகம்' இதழைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

"பொது அறிவு உலகம் இதழ் மேட்டூரில் கிடைப்பதால் தவறாமல் வாங்கி படிப்பேன். அதில் வரும் கட்டுரைகள், நடப்பு நிகழ்வுகள் இந்த தேர்வுக்கான தயாரிப்பில் உதவியாக இருந்தது. இறையன்பு ஐஏஎஸ் சிவில் சர்வீசஸ் பற்றி கூறிய பதில்கள் தேர்வை பற்றி புரிந்துகொள்ள உதவியாக இருந்தது. நக்கீரன் பதிப்பகம் வெளியிட்ட டாக்டர் அகிலன் இராம்நாதன் அவர்கள் எழுதிய " ஐஏஎஸ் யாரும் ஆகலாம்!' என்ற நூல் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுவோருக்கு சிறப்பாக வழிகாட்டும் நூல். அது எனக்கு உதவிகரமாக இருந்தது.

சனி, 20 ஜூன், 2009

வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற வாய்ப்பு: அரியலூர் கலெக்டர் தகவல்

The image “http://www.omcmanpower.com/ani2.gif” cannot be displayed, because it contains errors.


அரியலூர்: வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற, தஞ்சாவூரில் பதிவு செய்யலாம். இதுபற்றி அரியலூர் மாவட்ட கலெக்டர் அனில்மேஷராம் விடுத்த அறிக்கை: தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தன் மனுதாரர்களை, பல்வேறு வெளிநாடுகளுக்கும் பெருமளவில் பணியமர்த்தி வருகிறது. தற்போது பல்வேறு வெளிநாட்டு வேலையளிப்போரிடமிருந்து பெறப்படும் வேலை வாய்ப்புகளுக்கு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன கம்ப்யூட்டர் பேங்க் மூலம், மனுதாரர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, வெளிநாட்டு வேலையளிப்போருக்கு, நேர்முக தேர்வுக்காக பரிந்துரைக்கப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. வருங்காலத்தில் வெளிநாட்டு வேலையளிப்போருக்கு பெரும் எண்ணிக்கையில் தேவைப்படும் பணியாளர்களை கருத்தில் கொண்டும், வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக, சென்னை சென்று பதிவு செய்வதன் மூலம், தங்களது பயண நேரம் மற்றும் செலவை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், நமது பக்கத்திலுள்ள தஞ்சை மாவட்டத்திலேயே, நேரிடியாக பதிவு செய்து கொள்ளும் முறையை நடைமுறைபடுத்த, தமிழக அரசு நிறுவனமான, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி அரியலூர் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், வருகிற 21ம் தேதி ஞாயிற்றுகிழமை, காலை 9 மணி முதல், மாலை 5மணி வரை, தஞ்சாவூர் மணிமண்டபம் அருகில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடக்கும், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பதிவு முகாமில், தங்களது கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் மூன்று நகல்கள் மற்றும் நான்கு பாஸ்போர்ட் ஃபோட்டோக்களுடன், கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

பாஸ்போர்ட் இல்லாதவர்களும் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு கட்டணமாக லேபர் முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ, தொழில் அனுபவம் பெற்றவர்கள், கேட்டரிங் பணியாளர்கள் உட்பட, கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு வரையிலான பணியிடங்களுக்கு, ரூ.422/-ம், இன்ஜினியரிங் பட்டபடிப்பு, முதுநிலை இன்ஜினியரிங், முதுநிலை கணக்காளர், கம்ப்யூட்டர் மற்றும் நர்ஸ் மேலும் பாராமெடிக்கல் வரை ரூ.722/-ம், டாக்டர்கள் ரூ.995/-ம், செலுத்தி, விண்ணப்ப படிவத்தை பெற்று பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு 9444690026, 9381800181, 044-24464268, 044-24464269 ஆகிய தொலைபேசி எண்கள் மற்றும்
இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
http://www.omcmanpower.com/services.htm

புதன், 20 மே, 2009

( பிரபாகரன்) தாய் தமிழனின் அலட்சிய மனோபாவம் ஒரு உளவியல் பார்வை...

பொதுவாக எல்லா இனத்துக்கும் சூடு சொரனை இருக்கின்றது அது சற்றே மங்கிபோய் பெருமளவு அலட்சியத்துடன் இருக்கும் ஒரே இனம் தமிழ் இனம்தான்.அதற்க்கு காரணம் என்ன என்பதை அலசுவோம்.

தாய் தமிழகத்தில் இருந்து பிழைப்புக்காக பல்வேறு இடங்களுக்கு இடப்பெயர்வு நடத்தியது போலதான் பல்வேறு சமுகத்து மக்களும் சென்றார்கள், ஆனால் தமிழன் வித்யாசமானவன். அவன் புத்திசாலி, கடுமையான உழைப்பாளி. பல சமுகத்தினர் புத்திசாலி மற்றும் உழைப்பு இல்லை என்றாலும் ஒற்றுமையானவர்கள். அதனால் மற்ற சமுதாய மக்கள் எந்த நாட்டில் பிரச்சனை என்றாலும் அவர்களின் ஒற்றுமையால் சேதாரம் குறைவாக இருக்கின்றது. ஒற்றுமையின்மையால் தமிழனுக்கு சேதாரம் அதிகமாக இருக்கின்றது.

தாய் தமிழர்களான நாம் இலங்கையில் நம் இனம் கொத்து கொத்தாக இறந்த போது நாம் என்ன செய்தோம். உலக அளவில் சர்வதேச சமுக மக்களை நம் பக்கம் பார்க்க ஏதாவது செய்தோமா? அல்லது வட இந்திய மக்களுக்காகவாவது நமது பிரச்சனைகளை புரிய வைத்தோமா? ஏதும் இல்லை....சொரனையற்ற சமுகமாகவே தாய் தமிழக மக்கள் இப்படி இருக்க என்ன காரணம், இந்த மனோபாவம் எப்படி வந்தது?.

பிரபாகரன் மற்றும் பல்லாயிரக்கணக்கான மக்கள் பாஸ்பரஸ் கு்ண்டு போட்டு கொண்று விட்டார்கள் என்று சொல்லியும், “எவ்வளவோ பாத்துட்டோம் இதை பார்க்க மாட்டோமா?” என்பதான மனநிலையில்தான் தாய் தமிழகத்தினர் இருக்கின்றார்கள் அதற்க்கு காரணம் கீழே....

1. கடந்த 300 வருடங்களாக தமிழகத்தில் வாழும் நம் மக்கள் சுபிட்சமான வாழ்க்கையை வாழ்ந்து வருகின்றார்கள், சற்றே யோசித்தால் சுதந்திர போராட்டத்தில்ஒரு சில போராட்டங்களை தவிர பெரிய உயிரிழப்புகள் வட இந்தியாவில் மட்டுமே. மொகலாய படையெடுப்பு உயிர் இழப்புகள்உட்பட.

2.தனுஷ்கோடி கடல் கோள் அழிவு மற்றும் சுனாமி அழிவை தவிர பெரிய பேரழிவுகளை தாய் தமிழன் சந்தித்தது இல்லை.

3. கொள்ளை நோய்கள் அவ்வப்போது எட்டிபார்த்தாலும் அது பெரிய அளவு இழப்புகளை தமிழகம் சந்தித்தது இல்லை.

4.பசி, பட்டினி என்று சோத்துக்காக சோமாலிய மக்கள் போல் குடும்ப்த்துடன் ஒடியது இல்லை.

5.வாடகைவீட்டில் காலி செய்வதையே அலுத்துக்கொண்டு மற்ற இடத்துக்கு குடும்பத்துடன் இடப்பெயர்வு செய்யும் போது கட்டிய துணியுடன் இலங்கை தமிழர்கள் ஆர்மிகாரர்களால் சொந்த வீட்டை விட்டு வெளியேற்றிய அனுபவங்களை தாய் தமிழன் அனுபவித்து இல்லை.

6. மற்ற தேசங்களை போன்று போரினால் ஏற்ப்பட்ட இடப்பெயர்வு அதனால் ஏற்ப்ட்ட வலிகள் திரைப்படம் மூலமே தாய் தமிழன் உணர்ந்து இருக்கிறான்.(உம்/ஜெர்மன்,ரஷ்யா போரினால் துன்புற்ற மக்கள்),8.நாஜீகளினால் யூதர்களுக்கு நடந்த கொடுமையை சத்தியம் தியேட்டர் லாபியில் இந்து பத்திரிக்கை படித்துக்கொண்டு ஸ்பீல் பெர்க்கின் ஷீன்டலர் லிஸ்ட் பார்த்தே போரினால் ஏற்படும் வலிகளை தாய் தமிழன் அறிந்து இருக்கிறான்.

9.ஒரு தீப்பெட்டி 250ரூபாய் கொடுத்து வாங்கிய அனுபவம் அவனக்கு கிடையாது.

10.சாலை விபத்துகளில் மட்டுமே தாய் தமிழன் முகம் சிதைந்த உடல்களை பார்த்து இருக்கிறான். ஆர்மிக்கரார்களால் பிடித்து செல்லப்பட்ட சகோதரன் சகோதரி முகம் சிதைந்து செத்து்ப்போன உடலை பார்த்த அனுபவம் அவனுக்கு இல்லவே இல்லை.

11.தன் கண் எதிரே ஆர்மீக்காரர்களால் தன் அக்கா தங்கையின் அடையில்லாத மார்பில் கை வைத்து பிறகு உடல் எங்கும் கைவைத்து விளையாடி கெடுத்து கற்பழிக்கும் கொடுமையை எந்த தாய் தமிழனாவது அனுபவித்து இருக்கின்றானா?

12.துப்பாக்கி முனையில் உடன் பிறந்த சகோதரியை உறவு கொண்ட அனுபவம் எந்த தாய் தமிழனுக்காகவாவது இருக்கின்றதா?

13.தமிழகத்தில் ஊரடங்கு உத்திரவை நாம் அனுபவித்தது எப்போது????

14. சாப்பிட்டு கொண்டு இருக்கும் போது ஷெல் அடிக்கும் சத்தம் கேட்டு , சாப்பிட்ட கையோடு பதுங்கு குழியில் போய் குடும்பத்துடன் மூச்சு முட்ட உயிர்பயத்துடன் வாழ்ந்த அனுபவம் நம் எவருக்கேனும் இருக்கின்றதா? நாம் நன்றாக சப்புக்கொட்டி சாப்பிட்டபடி மானாட மயிலாட பார்த்துக்கொண்டு இருப்போம், அல்லது ஜெயா டிவியில் கயவன் கருனாநிதி என்று அம்மா தொடுக்கும் அறிக்கை போரை பார்த்து ரசித்துக்கொண்டு இருப்போம்.

15.நம்மில் யாருக்காவது குடும்பத்துடன் காட்டில் வாழ்ந்த ஆனுபவம் இருக்கின்றதா?

16.பஸ்சில் பயணம் செய்யும் போது யாராவது பிள்ளைதாச்சி வந்தால் எழுந்து சீட் கொடுக்கும் நாம் அவள் வயிறு கிழிந்து ரத்த சகதியின் ஊடே இறந்து போன பிள்ளையை பார்த்து இருக்கின்றோமா?

17. பிள்ளைகள் வெவ்வேறு நாடுகளில் புலம் பெயர்ந்து, அப்பா அம்மாக்கள் போர் மேகச்சூழலில் சிக்கி தினம் தினம் இன்டெர்நெட்டில் இறந்தவர் பட்டியலில் தன் உறவு பெயர் இருக்கின்றதா? என்று திக் திக் இதயத்துடன் பார்த்து தினம் தினம் செத்து செத்து அனுபவிக்கும் கொடுமையை அனுபவித்தது உண்டா?

18 முளைத்து மூனு இலைவிடாத பிள்ளைகளின் எல் கே ஜீ சீட்டுக்கு 40,000 பணம்கட்ட இரவு முழுவதும் காத்து இருக்கும் தாய் தமிழன் போரினால் ஒரு தலைமுறையே கல்வி கற்றகாத ஒரு சூழலை நினைத்து பார்த்து இருப்பானா?

19. உங்கள் பிள்ளை அல்லது உங்கள் தகப்பன் தலையில் குண்டு காயத்துடன் இறந்த பினத்தையும் உறுப்புகள் சிதைக்கப்பட்டு கொடுரமாக கொண்று கொண்டு வந்த போட்ட உறவுகளை வாயில் அடித்து கதறி பார்த்து இருக்கின்றீர்களா?


20. மிக முக்கியமா நீங்கள் போற்றி பாதுகாத்து வந்த நூலகம் என்றாவது உங்கள் கண் எதிரில் தீக்கிரை ஆனதுன்டா???

21.நம்ம இனத்தில்தான் அதிகமான எட்டப்ப தேவிடியா பையன்கள் இருப்பார்கள்.

நான் எழுதியது ஒரு சிலதான் இன்னும் எழுதினால் வலைபக்கத்தில் இடம் போதாது. இது போன்ற எந்த பாரிய இழப்புகளையும் சந்திக்காத தாய்தமிழனிடம் ,இன உணர்வு சொரனை,விடுதலை, வேட்கை, இன்ன பிற நான்சென்ஸ் விஷயங்களை தயவு செய்து எதிர்பார்க்காதீர்கள், மிக முக்கியமாக தாய் தமிழனை நம்பாதீர்கள். மேலே நான் சொன்ன விஷயங்கள் தாய்தமிழனுக்கு நடக்க வேண்டும் என்று கங்கன்ம் கட்டிக்கொண்டு எழுதியது அல்ல. உதவி செய்யாவிட்டாலும் உபத்திரம் செய்யாமல் இரு் என்பதே. இந்த பதிவு பிரச்சனையின் வீரியம் தாய் தமிழனுக்கு புரியவில்லை என்பதே எவர் மீது தவறு என்று அலசுவது நம் நோக்கம் அல்ல...



இவ்வளவு நடந்தும் ஏதும் நடக்காதது போல வாழ தமிழனால் மட்டும்தான் முடியும்.

(“எவ்வளவோ பாத்துட்டோம் இதை பார்க்க மாட்டோமா?”)

we are great.


அன்புடன்/ஜாக்கிசேகர்

ஞாயிறு, 10 மே, 2009

எய்ம்ஸ், ஐஐடி, ஐஐஐடி டி & எம், ஏஐஈஈஈ, ஐஎஸ் எம் ஆகியவை இனி தமிழக சிறுநகர,கிராமப்புற மாணவர்களுக்கு எட்டாக்கனியா?






சமீபத்தில் எய்ம்ஸ் (அகில இந்திய மருத்துவ நுழைவுத் தேர்வு) , ஏ ஐ ஈஈஈ (அகில இந்திய பொறியியல் நுழைவுத்தேர்வு) நடந்த தேர்வு மையங்களுக்கு சென்றிருந்தேன். ஒன்று மதுரையிலும் மற்றொன்று திருச்சியிலும்.

இரண்டு மையங்களிலும் கிராமப்புற மாணவர்களின் சதவிகிதம், தன் வாழ்நாளில் பொய்யே பேசாதவர்களின் சதவிகிதத்திற்க்கு நிகராக இருந்தது. சிறுநகர மாணவர்களின் சதவிகிதம் உண்மை மட்டும் பேசும் அரசியல்வாதிகளின் சதவிகிதத்திற்க்கு நிகராக இருந்தது.

ஏன் அவர்கள் இந்த தேர்வுகளில்

பங்கெடுத்துக் கொள்வதில்லை?

1. இம்மாதிரி நுழைவுத் தேர்வுகள் இருக்கின்றன என்பது பற்றிய விழிப்புணர்வு பெற்றோருக்கு இல்லை.


2. இதைப் பற்றி சொல்லித்தர வேண்டிய ஆசிரியர்களுக்கு
போதுமான விழிப்புணர்வு இல்லை.

3. கிராமப்புற மாணவர்கள் பார்க்கும் தொலைக்காட்சி, படிக்கும் ஜனரஞ்சகப் பத்திரிக்கைகள் ஆகியவை இதைப் பற்றி பெரிய அளவில் அவர்களிடம் கொண்டு சேர்ப்பதில்லை. ஆனந்த விகடன், குமுதம் போன்றவை அரிதாக சில பக்கங்களை ஒதுக்குகின்றன (கேரியர் கைடன்ஸ் என்ற பெயரில்). ஆனாலும் அவை உற்சாகப் படுத்தும்படி எழுதுவதில்லை. தொடர்ச்சியாகவும் அவர்கள் இப்பணியைச் செய்வதில்லை. எனவே இதழ்களை தவறவிடுபவர்களுக்கு செய்திகள் சேர்வதில்லை.

4. நாளிதழ்கள் தேர்வு பற்றிய செய்திகளை வெளியிடுகின்றன. ஆனால் அதன் முக்கியத்துவம், வாய்ப்பு பற்றி அவை வாய் திறப்பதில்லை.

5. இம்மாதிரியான தேர்வுகள் அனைத்தும் கேந்திரிய வித்யாலயா மாதிரியான பள்ளிகளில் மட்டும் நடத்தப் படுகின்றன. எனவே அங்குள்ள ஆசிரியர்களுக்கும், மாணவர்களுக்கும் அதுபற்றிய விழிப்புணர்வு எளிதாக ஏற்படுகிறது. தமிழக அரசுப் பள்ளிகளையும் மையங்களாகக் கொண்டு இந்தத் தேர்வுகளை நடத்தினால் அங்குள்ளவர்களுக்கும் இது எதற்க்கு நடக்கிறது, படித்தால் என்னவாகலாம் போன்ற விழிப்புணர்வு ஏற்படும். இது மற்றவர்களுக்கும் பரவும்.

6. தமிழக அரசின் நுழைவுத் தேர்வு இருந்தபோது அதற்க்காக பலரும் படித்தார்கள். அண்ணனுக்கு பொண்ணு பார்த்த மாதிரியும் ஆச்சு, ஆடு மேச்ச மாதிரியும் ஆச்சு என்ற கணக்கில் அப்போது பலர் இந்த தேர்வுகளுக்கும் படித்தார்கள். ஆனால் இங்கே நுழைவுத் தேர்வு தளர்த்தப் பட்டதும் இதற்க்கு மட்டும் படிக்கும் ஆர்வம் மாணவர்களிடம் குறைந்து விட்டது.

7. மேலும் தமிழக அரசின் நுழைவுத் தேர்வு காரணமாக பல கோச்சிங் செண்டர்கள் இங்கே இருந்தன. தொழில் போட்டியின் காரணமாக அவர்கள் குறைந்த கட்டணம் வசூலித்தார்கள். ஆனால் இப்போது அவை அருகி விட்டன. மதுரை,திருச்சி ஆகியவற்றில் ஏ ஐ ஈ ஈ ஈ நுழைவுத் தேர்வு கோச்சிங்கிக்கு அதிக பணம் வசூலிக்கிறார்கள். இவற்றை கிராமப் புற மக்களால் செலுத்த முடிவதில்லை.

8. மேலும் அப்போது சிறு நகரங்களிலும் கோச்சிங் செண்டர்கள் இருந்தன. சுற்றியுள்ள கிராமப்புற மாணவர்கள் எளிதில் அங்கு சென்று படித்தார்கள். அவைகள் இப்போது மூடப்பட்டுள்ளதால் எல்லோரும் மாவட்டத் தலைநகருக்கே செல்லும் நிலை ஏற்பட்டுள்ளது. இதற்க்கு அவர்களின் பொருளாதாரம் சம்மதிப்பதில்லை.

ஏன் கோச்சிங் செண்டர்கள் பற்றி அதிக கவலை எனில்,

சமீபத்தில் ஐஐடி சென்னையின் டீன் அவர்கள் அளித்த பேட்டியில் “ இப்போது தேர்வாகிவரும் மாணவர்களிடம் ரா இண்டலிஜெண்ஸ் இல்லை, பயிற்றுவிக்கப்பட்ட திறமையே காணப்படுகிறது? என சொல்லியிருந்தார். எனவே நம் மாணவர்களும் முயற்ச்சி செய்தால் எளிதில் வெற்றி பெறலாம்.

அறியாமையின் காரணமாக மிகக் குறைந்த கட்டணத்தில் தரமான கல்வி கற்க்கும் வாய்ப்பு கிராமப்புற மாணவர்களுக்கு மறுக்கப்படுகிறது. இருக்கும் சூழ்நிலையில் நாம் என்ன செய்ய முடியும் என்று பார்த்தால்....


1) நமது எம் பிக்களிடம் கேந்திரிய வித்யாலயா போன்ற பள்ளிகளை பரவலாக கொண்டுவரச் சொல்லி வற்புறுத்தலாம். மக்கள் தொகைக்கு ஏற்பவும், மத்திய அரசு பணியாளர்களின் என்னிக்கைக்கு ஏற்பவும் தான் அப்பள்ளிகள் அமைக்கப்படும். ஆனால் அந்த விகிதத்திலாவது பள்ளிகள் இங்கு அமைக்கப் பட்டுள்ளனவா என்று சரிபார்க்கச் சொல்லலாம்.


2) ஏனெனில் இதுவரை அர்ஜூன் சிங், முரளி மனோகர் ஜோசி என வட மாநிலத்தவர்களே மனித வள மேம்பாட்டுத் துறை அமைச்சர்களாக இருந்து வருகிறார்கள். அதனால் அந்த துறையின் செயல்பாடுகள், அதன் பலம் ஆகியவை நம் எம் பிக் களுக்கு தெரிவதில்லை. அந்த துறையில் உள்ள ஓட்டைகள் மூலம் வட மாநில மக்கள் நமக்குச் சேரவேண்டியவற்றை அபகரிப்பது நடந்து வருகிறது.

3) பாராளுமன்ற நிலைக்குழுக்களுக்கு தேர்தல் நடைபெறும்போது நம் எம்பிக்கள் ரயில்வே,தொலைத் தொடர்பு போன்ற பசையுள்ள நிலை குழுக்களுக்கே முன்னுரிமை கொடுகிறார்கள். மக்களுக்கு நல்லது செய்யும் மனதுடையோர் மனித வள மேம்பாட்டு அமைச்சக நிலைக்குழுக்களுக்கு போட்டியிடலாம்.

4) எப்படியும் கூட்டணி ஆட்சி என்றே எல்லோரும் கணிக்கிறார்கள். எனவே தமிழக கட்சிகள் மந்திரி பதவி பெறும்போது மனித வள மேம்பாட்டு அமைச்சகத்தில் இணை அல்லது துணை மந்திரி பதவியைக் கேட்டு வாங்கினால் சர்வ சிக்‌ஷா அபியான் போன்ற திட்டங்களை இங்கு ஆக்க பூர்வமாக செயல்படுத்தலாம். புது திட்டங்களையும் நமக்கு கொண்டு வரலாம்.

5) சமீபத்தில் தென்மாவட்டங்களுக்கு சென்றிருந்தபோது எம் பிக்கள் சாதனைப் பட்டியலைப் பார்த்தேன். அவர்கள் சொல்லியிருப்பதெல்லாம் நிழற்குடை, பள்ளி கட்டடம், தெரு விளக்கு போன்ற உள்ளாட்சித் துறைப் பணிகளை. அவை மத்திய அரசின் எம் பி நிதியில் செய்யப் படும் கடமைகள். எப்படியும் செலவழித்துத்தான் ஆக வேண்டும். கமிசனும் கிடைக்கும். ஆனால் ஒரு எம் பி என்பவர் தொகுதிக்கு மத்திய அரசின் திட்டங்களைப் பெற்றுத் தருபவராகவே இருக்க வேண்டும். அம்மாதிரி எம்பிக்களை விரல் விட்டு எண்ணிவிடலாம்.

6) எனவே வெற்றி பெறும் எம்பிக்களை சந்தித்து, மத்திய அரசின் துணையுடன் இங்கு கல்வியை வளர்க்க ஆவண செய்யுமாறு கேட்டுக் கொள்ளலாம்.

7) தற்போது புதிதாக மூன்று ஐஐடிக்கள், ஐஐஐடி டி&எம் ஆகியவை அமைக்கப் படவுள்ளன. இதிலும் ஓபிசிக்கான 27% இட ஒதுக்கீட்டுக் கொள்கை அமல் படுத்தப்பட உள்ளது. எனவே மத்திய அரசின் ஓபிசி சான்றிதழை வாங்கி விண்ணப்பிக்கவும். நான் சந்தித்த பலர், தமிழக அரசின் பிசி, எம்பிசி சான்றிதழ்கள் போதுமென நினைத்து மத்திய அரசின் சான்றிதழ் இல்லாமல் விண்ணப்பித்துள்ளார்கள்.

8) உறவினர்கள், நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு பதின்ம வயதில் குழந்தைகள் இருந்தால் அவர்களிடம் இதைப் பற்றிப் பேசி விழிப்புணர்வு ஏற்படுத்தலாம்.

வேத்தியனின் பக்கம்: பிரேம்கோபால் நடனம் - இது தான் உண்மை !!!

வேத்தியனின் பக்கம்: பிரேம்கோபால் நடனம் - இது தான் உண்மை !!!


புதன், 6 மே, 2009

ஐஏஎஸ் தேர்வு-தமிழகத்தைச் சேர்ந்த 96 பேர் வெற்றி!!

சென்னை: இந்தாண்டு ஐ.ஏ.எஸ், ஐ.பி.எஸ். தேர்வில் தமிழகத்தைச் சேர்ந்த 96 பேர் வெற்றி பெற்று சாதனை படைத்துள்ளனர். இந்திய அளவில் 791 பேர் இந்தத் தேர்வில் வென்றுள்ள நிலையில், இதில் 8ல் ஒருவர் தமிழகத்தைச் சேர்ந்த மாணவர் என்பது குறிப்பிடத்தக்கது.

மத்திய அரசின் பணியாளர் தேர்வாணையமான யு.பி.எஸ்.சி. கடந்த 2008ம் ஆண்டு நடத்திய முதல்நிலைத் தேர்வில் 3,18,843 பேர் பங்கேற்றனர். இதில் 11,849 பேரே வெற்றி பெற்றனர்.

இவர்களில் 2,140 பேர் நேர்முகத் தேர்வுக்கு அழைக்கப்பட்டனர். இதில் இப்போது 791 பேர் தேர்ச்சி பெற்று ஐஏஎஸ், ஐபிஎஸ் உள்ளிட்ட மத்திய அரசு நிர்வாகப் பதவிகளை ஏற்க உள்ளனர். இதில் 625 ஆண்கள், 166 பெண்கள் ஆவர்.

இந்த 791 பேரில் 96 மாணவ, மாணவிகள் தமிழகத்தைச் சேர்ந்தவர்கள். மேலும் தேசிய அளவில் முதல் 25 இடங்களைப் பெற்ற மாணவர்களில் 3 பேர் சென்னையைச் சேர்ந்தவர்கள் ஆவர்.

இவர்களில் சென்னை அண்ணாநகரில் உள்ள கணேஷ் ஐஏஎஸ் அகாடெமியைச் சேர்ந்த சசிகாந்த் செந்தில் (29) தேசிய அளவில் 9வது ரேங்க்கைப் பிடித்துள்ளார்.

இதையடுத்து சென்னை மனித நேயம் அமைப்பு நடத்தும் இலவச ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் பயின்ற அருண்சுந்தர் தயாளன் 22வது ரேங்க்கையும், கணேஷ் பயிற்சி மையத்தைச் சேர்ந்த சௌம்யா, சுப்ரஜா, ஆனந்த் ஆகியோர் முதல் 100 இடங்களுக்குள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

மனித நேயம் அமைப்பை அதிமுக பிரமுகரான சைதை சா.துரைசாமி நடத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. இப்போது இவர் கட்சியிலிருந்து ஒதுக்கி வைக்கப்பட்டிருந்தாலும் பொதுத் தொண்டில் தீவிரமாக செயல்பட்டு வருபவர் ஆவார்.

மொத்தத்தில் தமிழத்தைப் பொறுத்தவரை கணேஷ் பயிற்சி மையத்தில் பயின்ற 30 பேரும், மனித நேயம் இலவச ஐஏஎஸ் பயிற்சி மையத்தில் பயின்ற 24 பேரும், சங்கர், சத்யா உள்ளிட்ட சில பயிற்சி மையங்களில் பயின்றவர்கள் உள்பட 96 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.

329வது ரேங்க் பிடித்த ஆசிரியை...

இந்தத் தேர்வில் நாகப்பட்டினம் மாவட்டம் செம்பனார் கோயிலைச் சேர்ந்த பிரேமி தேசிய அளவில் 329வது ரேங்க்கை பிடித்துள்ளார். இவர் மாத்தூர் பகுதியில் உள்ள நடுநிலைப் பள்ளியில் ஆசிரியையாகப் பணிபுரிந்து வந்தவர் ஆவார்.

இவர் சென்னை மனித நேய இலவச பயிற்சி மையத்தில் பயிற்சி பெற்றவர்.

விவசாயி மகன்...

அதே போல மேட்டூர் அணை அருகே உள்ள சின்னத்தண்டா கிராமத்தைச் சேர்ந்த தினேஷ் 345வது ரேங்க்கைப் பெற்றுள்ளார். இவர் கோவை உள்ள வேளாண்மை பல்கலைக்கழகத்தில் பிஎஸ்சி படித்தவர்.

இவர் சென்னை அண்ணாநகரில் உள்ள சங்கர் அகாடெமியில் பயிற்சி பெற்றவர் ஆவார்.

நன்றி :http://thatstamil.oneindia.in/news/2009/05/05/tn-96-students-from-tn-get-through-ias-exams.html

சனி, 25 ஏப்ரல், 2009

தமிழருவி மணியனுக்கு ஓர் அதிர்ச்சி கொடுத்த கொலைங்கன்


தமிழ் உணர்வாளர்களின் கூட்டங்களில் மட்டும் காங்கிரஸையும், கருணாநிதியையும் ஒரு பிடிபிடிக்கும் தமிழருவி மணியனுக்கு ஓர் அதிர்ச்சி. அவர் குடியிருந்த அரசாங்க வீட்டைக் காலி செய்யச் சொல்லி நோட்டீஸ் அனுப்பி விட்டது அரசு. பப்ளிக் கோட்டாவில் வீடு ஒதுக்கப்பட்டால் வாழ்நாள் முழுக்க இருக்கலாம் என்பதுதான் விதியாம். ''அதற்காக கருணாநிதிக்கு நான் லாலி பாட மாட்டேன்'' என்ற மணியன், அரசு உத்தரவுக்கு எதிராக வழக்குப் போடப் போகிறார்!

நன்றி :தினமலர்

ஏன் இப்படி மணியனார் கொலைங்கரால் பந்தாடப்படுகிறார்
http://www.alaikal.com/news/?p=14394

செவ்வாய், 21 ஏப்ரல், 2009

படுகொலைகளை மறைக்க பிரபாகரனை சுற்றிவளைத்துவிட்டதாக பொய்ப்பிரச்சாரம்:பழ.நெடுமாறன்

படுகொலைகளை மறைக்க பிரபாகரனை சுற்றிவளைத்துவிட்டதாக பொய்ப்பிரச்சாரம்:பழ.நெடுமாறன்

சிங்கள ராணுவத்தின் வெறித்தாக்குதலில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டதனைக் கண்டித்து தமிழ்நாட்டில் கறுப்புக்கொடி போராட்டத்துக்கு அழைப்பு விடுக்கப்பட்டிருக்கின்றது.

இது தொடர்பாக இலங்கை தமிழர் பாதுகாப்பு இயக்கத்தின் அமைப்பாளர் பழ.நெடுமாறன் அறிக்கை விடுத்துள்ளார்.

அவ்வறிக்கையில், ‘’இலங்கையில் வன்னியின் பாதுகாப்பு வலயப்பகுதியில் இருந்த வெளியேறிய ஆயிரக்கணக்கான தமிழர்களைப் பணயக் கைதிகளாக முன்னிறுத்தி சிங்கள இராணுவம் மேற்கொண்ட தாக்குதலில் 2 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.

3 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்கள் படுகாயமடைந்துள்ளனர். மக்கள் இருக்கும் பகுதிகளில் தொடர்ந்து கொத்துக்குண்டுகளை சிங்கள இராணுவம் வீசி வருகின்றது.

2 ஆம் உலகப் போருக்குப் பிறகு ஒரே நாளில் இவ்வளவு பெருந்தொகையான மக்கள் எந்த நாட்டிலும் படுகொலை செய்யப்பட்டதில்லை என்பதை வருத்தத்தோடு தெரிவித்துக்கொள்கின்றோம்.

ஐக்கிய நாடுகள் சபை உட்பட உலக நாடுகள் பலவும் போர் நிறுத்தம் செய்புமாறு விடுத்த வேண்டுகோளை கொஞ்சமும் மதிக்காமல் சிங்கள் அரசு தமிழர்களை அடியோடு அழிக்க முயல்கின்றது.

2 ஆயிரத்துக்கும் அதிகமான தமிழர்களைப் படுகொலை செய்ததை மறைக்கவும் திசை திருப்பவும் பிரபாகரன் இருப்பிடத்தை சுற்றி வளைத்து விட்டதாகப் பொய்ப் பிரச்சாரம் செய்கின்றது.

25 ஆண்டு காலத்திற்கு மேலாக மக்கள் துணையுடன் போராடி வரும் விடுதலைப் புலிகள் தங்கள் போராட்டத்தை வெற்றிகரமாக தொடர்வார்கள் என்பதில் ஐயம் இல்லை.

இந்த மனிதப் பேரழிவைத் தடுத்து நிறுத்த இந்திய அரசு முன்வராததைக் கண்டிக்கும் வகையிலும் கொல்லப்பட்ட தமிழர்களுக்கு வணக்கம் செலுத்துகின்ற வகையிலும் எதிர்வரும் ஏப்ரல் 24 ம் நாள் வெள்ளிக்கிழமை மாலை 4மணி முதல் 6 மணிவரை தமிழகம் எங்கும் கறுப்புக்கொடி ஊர்வலங்களை நடத்துமாறும் சரியாக 6 மணிக்கு அனைவரும் ஒன்று கூடி அமைதி வணக்கம் செலுத்துமாறும் வேண்டிக்கொள்கின்றேன்.

அமைதி வணக்கம் செலுத்தும் வேளையில் சகலப் போக்குவரத்தையும் நிறுத்தி அவரவர்கள் இருந்த இடத்தில் இருந்தும் வீடுகளில் இருப்போர் வீட்டுக்குள்ளேயும் ஐந்து நிமிட நேரம் வணக்கம் செலுத்துமாறு வேண்டிக்கொள்கின்றேன்’’ என்று குறிப்பிட்டுள்ளார்.

ஆஃப்லைனில் ஜிமெயில் மின்னஞ்சல் வசதி


மின்னஞ்சல்களை பெறவேண்டும் என்றாலோ, அனுப்ப வேண்டும் என்றாலோ அதற்கு இன்டர்நெட் இணைப்பு தேவை. இது விரைவில் அந்தக் காலம் ஆகப்போகிறது.

இன்டர்நெட் இணைப்பு இல்லாமலோ, ஜிமெயில் கணக்கை கொண்டு மின்னஞ்சல் அனுப்பவோ அல்லது பெறவோ முடியும் வசதி, பரிசோதனை அடிப்படையில் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது.

கூகுல் நிறுவனத்தின் ஜிமெயில் லேப்ஸ் இந்த வசதியை பரிசோதனை முயற்சியில்
ஜனவரி 27-ல் தொடங்கியிருப்பதாக ஜிமெயில் வலைதளத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜிமெயில் கணக்கில் உள்நுழைந்து அதில் உள்ள செட்டிங்ஸ் உள் சென்று லேப்ஸ்-ஐ கிளிக் செய்து அதில் கொடுக்கப்பட்டுள்ள ஆப்லைன் வசதியை தெரிவு செய்து கொள்ள வேண்டும்.

அவ்வாறு தெரிவு செய்த பின்னர் ஜிமெயில் உங்களது கணினியில் ஒரு கியர் மூலமாக ஜிமெயில் சர்வரில் இருந்து உங்களது மின்னஞ்சல் தகவல்களை உங்களது ஹார்ட் டிஸ்கில் பதிவு செய்து விடுகிறது.

இப்போது உங்களிடம் இன்டர்நெட் இணைப்பு இல்லாவிட்டாலும் நீங்கள் கவலைப்படாமல் வழக்கம் போல் உங்களுடைய மின்னஞ்சல்களை படிக்கலாம், பதிவிறக்கம் செய்து கொள்ளலாம், மின்னஞ்சல்களை அனுப்பலாம்.

ஆப்லைனில் நீங்கள் மின்னஞ்சல் அனுப்பும் போது அவை அவுட்பாக்சில் சேமிக்கப்பட்டு, ஜிமெயில் நெட்வொர்க் சர்வருடன் இணைப்பு கிடைக்கும்போது அவற்றை அனுப்பி விடுகிறது.

தற்போது கூகுல் நிறுவனத்தில் சிலர் பரிசோதனை அடிப்படையில் இந்த வசதியைப்
பயன்படுத்தி வருகின்றனர். ஆப்லைனில் நூற்றுக்கணக்கான மின்னஞ்சல்களை அனுப்பி, பெற்றுள்ளதாக ஊழியர்கள் தெரிவித்துள்ளனர்.

அடுத்த சில தினங்களில் யுஎஸ் அல்லது யுகே இங்கிலிஷ் பயன்படுத்தும் ஜிமெயில் கணக்கு வைத்திருப்பவர்கள் இந்த வசதியை பயன்படுத்தமுடியும்.

எனவே இன்டர்நெட் கனெக்ஷன் இல்லையே... எப்படி மெயில் செக் செய்வது இனி யாரும் கவலைப்படத் தேவையில்லை!

திங்கள், 20 ஏப்ரல், 2009

ஏழு தொகுதிகளிலும் பா.ம.க. தோற்கும்! - வியூகத்தை விவரிக்கும் சுபா.இளவரசன்(திமுக ஒட்டுக்குழு )

பாட்டாளி மக்கள் கட்சி அ.தி.மு.க. அணியில் சேர்ந்ததில் இருந்தே வட மாவட்டங்களை சேர்ந்த தமிழக அமைச்சர்கள் உள்ளடி வேலைகளை ஜரூராக தொடங்கி விட்ட நிலையில் தமிழர் நீதிக்கட்சியின் தலைவரான சுபா.இளவரசன் பா.ம.க.விற்கு பதிலடி கொடுக்க தயாராகி வருகிறார். இதற்காக தி.மு.க.வின் மூத்த நிர்வாகிகள் மூலம் பணப் பட்டுவாடா நடப்பதாகவும், இதனால் பா.ம.க. தரப்பு படு அப்செட்டில் இருப்பதாகவும் தகவல் வெளியாகி பரபரப்பை பற்ற வைத்துக்கொண்டிருக்கின்றன.

பா.ம.க.வை தோற்கடிக்க தீவிரமாக களமிறங்கி விட்டதாக பேச்சு அடிபடுகிறதே? என்றோம் சுபா.இளவரசனிடம்

பா.ம.க. தோல்வி எப்போதோ உறுதி செய்யப்பட்டு விட்டது. அ.தி.மு.க. அணியில் ஸ்ரீபெரும்புதூர் அரக்கோணம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சிதம்பரம் (தனி), தர்மபுரி, புதுச்சேரி ஆகிய ஏழு தொகுதிகளை ஒதுக்கும்போதே வடபகுதி மக்களுக்கு நன்றாக தெரியும். இதில் ஒரு தொகுதியில் கூட பா.ம.க. வெற்றி பெறபோவதில்லை என்பது அந்தளவுக்கு சாதிக்குளம், பொதுவானமக்கள் மத்தியிலும் பெரம் அதிருப்தியை சம்பாதித்திருக்கிறார்கள். குறிப்பாக திருவண்ணாமலையில் குரு மண்ணைக் கவ்வப்போவது நிஜம். தான் செய்த தவறை உணராதவன் மனிதனே கிடையாது. முன்னேறவும் முடியாது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸும் தனது தவறை உணரவில்லை. திருவண்ணாமலை மக்களே குருவின் வெற்றியை முறியடிப்பார்கள் என்பது தான் நிஜ நிலவரம்.

சுயமரியாதையை இழந்த இனம். இனத்தோடு சேருவது போலத்தான் அ.தி.மு.க.வோடு ராமதாஸ் கூட்டணி வைத்திருக்கிறார். அவரது கூட்டணியும் சரியில்லை. கூட்டணி தலைமையும் சரியில்லை. அரசு ஊழியர்களைவீட்டுக்கு அனுப்பியது, டெஸ்மா, எஸ்மா சட்டங்களை கொண்டு வந்தது, கோயில்களில் பலியிடத் தடை கொண்டு வந்தது என ஜெயலலிதாவின் பல காரியங்களுக்கு மக்கள் பதிலடி கொடுத்தார்கள். இந்ததவறுகளை தோல்விக்கு பின்னர் தான் ஜெயலலிதா உணர்ந்தார்.

ஐந்தாண்டுகள் மத்திய அரசில் பதவி சுகத்தை நன்றாக அனுபவித்து முடித்து விட்டு அடுத்த பதவி சுகத்திற்காக கூட்டணி மாறுவதை மக்கள் ரசிக்கவில்லை.

அ.தி.மு.க.வில் சேர்ந்ததன் மூலம் தன் தலையில் தானே மண் அள்ளிப்போட்டு கொண்டார் ராமதாஸ். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந்த சி.வி.சண்முகத்தின் உறவினர் படுகொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர்தான் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ஆகியோர். இவர்கள் எந்த கோர்ட்டுக்கும் போகாமல் கலைஞர் ஆட்சி வந்ததும், முதல் தகவல் அறிக்கையில் இருந்து பெயரை நீக்கி கொண்டார்கள். இந்த ஒரு காரியத்திற்காகவே அவர்கள் காலம் முழுவதும் கலைஞர் காலடியில் விழுந்துகிடக்க வேண்டும். தனது மகனுக்காக சுகாதாரத்துறையை கலைஞர் முயற்சியால் வாங்கினார். இந்த நன்றிக்கடனையும் வசதியாக மறந்து விட்டார். இவர்களுக்கு சுயமரியாதை என்ற ஒன்று இருந்தால் தனித்து போட்டியிட்டிருக்கலாம். ஆரம்பத்தில் வைகோ மீது மக்கள் மிகுந்த மரியாதை வைத்திருந்தார்கள். அதையும் வைகோ கெடுத்துக்கொண்டார். இப்போது அவரையும் ஜெயலலிதா தொங்கலில் விட்டு விட்டார். நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. யார் செய்வது சரி? தவறு? என்று தமிழக மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களே எல்லாவற்றையும் தீர்மானிப்பார்கள்.

பா.ம.க.விற்கு எதிராக அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடிஆகியோர் தீவிரமாக களமிறங்குவதாக தகவல் வருகிறது.அதே போல் நீங்கள் உங்கள் ஆட்களோடு பா.ம.க.விற்கு எதிராக தீவிர பிரசாரம் செய்ய போதிய உதவிகள் செய்யப்படுவதாக தகவல்கள் உலா வருகிறதே?

அப்படியெல்லாம் எதுவும் இல்லை. எங்கள் கட்சி குழந்தை பருவத்தில் இருக்கிறது. பொருளாதார நெருக்கடியில் இருக்கிறோம். ஆளுங்கட்சி பிரமுகர்கள் யாரையும் நாங்கள் சந்திக்கவில்லை. தமிழக மக்களுக்கான அர்ப்பணிப்பு உணர்வில் முதல்வர் அளவிற்கு யாராலும் ஈடுபட முடியாது. அதே நேரம் பா.ம.க.வின் போலி பிரசாரத்தை முறியடிக்க நாங்களும் தீவிரமாக களமிறங்குவோம். இதை பற்றி வரும் 7ம் தேதி கூடும் எங்கள் கட்சியின் பொதுக்குழுவில் கூடி அறிவிப்போம்.

தேர்தலில் பா.ம.க.விற்கு எதிராக என்ன மாதிரியான பிரசாரங்களை முன்னெடுக்க போகிறீர்கள்?

பா.ம.க.வின் குடும்ப அரசியல், சாதிக்கு தொடர்ந்து செய்துவரும் துரோகம், தமிழ் பற்றி பேசி பேசியே உண்மையான தமிழர் அமைப்புக்களை தடைசெய்ய நினைப்பது, எங்களை அழிக்க கூலிப்படையை ஏவிவிடுவது, பா.ம.க.வின் குற்றச்செயல்கள் குருவால் பாதிக்கப்பட்டவர்களின்நிலை ஆகியவை பிரசாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் குருவால் பாதிக்கப்பட்டவர்களும், பிரசாரத்தில் பங்கெடுக்கும் வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக எங்கள் இயக்கத்தின் வல்லம் அறிவழகன், குறிஞ்சிபாடிஅண்ணாத்துரை ஆகியோர் படுகொலை பற்றி மக்களிடம் விரிவாக எடுத்துரைப்போம். குருவின்குற்றப் பின்னணியை திருவண்ணாமலை மக்களும் நன்றாக உணர்ந்துவைத்திருக்கிறார்கள்.

மேலும், பா.ம.க.விற்கு பாதிப்பு வரும்போதெல்லாம் எங்கள் இயக்கத்தின் மீது குற்றம் சுமத்துவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். முன்பு ஆற்காடு வீராசாமியோடு சேர்ந்து குருவை கொல்ல நாங்கள் திட்டம் போடுவதாக புரளி கிளப்பினார்கள். இப்போதும், ரவுடிகளை அனுப்பி எங்களை படுகொலை செய்ய பா.ம.க.வினர் திட்டம் போட்டு வருகிறார்கள். இதையெல்லாம் மக்களின் பார்வைக்கு கொண்டு செல்வோம். ஈழத்தமிழர் விவகாரத்தில் பா.ம.க.வின் இரட்டை வேஷத்தையும்மக்கள் தெரிந்துவைத்திருக்கிறார்கள். ஏழு தொகுதிகளிலும் பா.ம.க.தோல்வியை தழுவப்போவது நிஜம்.

காவிரி பிரச்னைக்காக மறைந்த வாழப்பாடியார் தனதுஅமைச்சர் பதவியையே ராஜினாமா செய்தார். தமிழினப்போராளியாக தன்னை காட்டிக்கொள்ளும் ராமதாஸ் ஏன் இலங்கை தமிழர் பிரச்னைக்காக அன்புமணி ராஜினாமா என்ற முடிவ எடுக்கவில்லை? அதே போல் ஈழத்தமிழர்களுக்குவிரோதமாக இருக்கும் எந்த கட்சியையும் வரலாறு மன்னிக்காது. தமிழக மக்களும் மன்னிக்க மாட்டார்கள். 56ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது காங்கிரஸ் ஆட்சியையே மாற்றிகாட்டியது. காரணம் மக்கள் எதிர்ப்பு. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாளை நமதே, நாற்பதும் நமதே என்று கோஷம் போட்ட அ.தி.மு.வை மக்கள் தோற்கடித்தார்கள். ஏனென்றால் மக்கள் விரோத செயலில் ஈடுபட்டது தான். இந்த முறையும் அவர்களுக்கு அந்த கதி தான் ஏற்பட போகிறது என்பதை பார்க்கத்தான் போகிறீர்கள் என சீறலாய் சொல்லி முடித்தார் சுபா.இளவரசன்.

நன்றி -குமுதம் ரிப்‌போர்ட்டர் ( 09- 04- 2009)

வடமாவட்ட தமிழக மக்கள் மற்றும் வாழ்வார் தோழிகளின் விமர்சனம் அல்லது பட்டறிவு கேள்விகள் :

தமிழ் கூறும் நல்லுலகில் ,வாழும் வாக்காலப்பெருங்குடி மக்களே ,உங்களை இந்த பதிவில் பின்னுட்டம் மூலமாக உரமிட வேண்டுகிறோம் .