ஓரெர்வுழவன்

எனது படம்
வாரியங்காவல்,தமிழகம், சோழவள நாடு, India
அரசியல் நமக்கு பிறப்புரிமை.ஆனால்,வாழ்வார் தோழிகள் விளக்கு பிடித்தெனும் எம்மை உறிஞ்சி அழித்தொழிக்க வருபவர்க்கெல்லாம் யாம் அறிவிப்பதெல்லாம். "அரசில் பிழைத்தோர்க்கு அறம் கூற்றமாகும்"

வியாழன், 17 செப்டம்பர், 2009

தென்கச்சியார் நேர்காணல்:- இருப்பதை வைத்துக் கொண்டு இல்லாததைப் பயன்படுத்துங்கள்!

தென்கச்சியார் என்று வாசகர் களாலும், வானொலி நேயர்களாலும் வாஞ்சையுடன் அழைக்கப்படும் தென்கச்சி கோ. சுவாமிநாதன், தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கை யைத் தொடங்கி, பின்னர் 24 ஆண்டுகள் சென்னை வானொலியின் உதவி நிலைய இயக்குனராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தென்கச்சியார் தற்போது வசிப்பது சென்னை மடிப்பாக்கத்தில்.

விவசாய நிகழ்ச்சிகளை மக்கள் பேசும் பேச்சு வழக்கு மொழி யில், கொச்சை நீக்கி இவர் வழங்கி யதால், விவசாய நிகழ்ச்சிகள் மாபெரும் வெற்றி அடைந்த தோடு, கி. ராஜநாராயணனால் "இதுவே மக்கள் தமிழ்' என்று பாராட்டப் பெற்று, இன்று அரசு வானொலி, தனியார் பண்பலை வானொலி என அனைத்து வானொலி நிலையங்களுக்கும் இலக்கணமாகவும் அமைந்து விட்டது. விவசாய நிகழ்ச்சிகளுக்கு அப்பால், சமூக வாழ்வில் ஒழுக்கம், மனிதநேயம் போன்றவற்றைத் தனது வாழ்க்கை முறையாகக் கடைப் பிடித்துவரும் தென்கச்சியார், இத்தகைய நற்பண்புகளை வானொலி மூலம் மனித மனங்களில் நடவு செய்ய விரும்பியவர். இதனால் அறிவுரையாக வலியுறுத்தித் திணிக்காமல், எளிய குட்டிக்கதைகள் மூலம், சக மனிதனின் தோள்மீது கைபோட்டுப் பேசும் உரையாடல் தன்மையைத் துணையாக வைத்துக் கொண்டு இவர் தொடங்கிய வானொலி நிகழ்ச்சிதான் "இன்று ஒரு தகவல்'.

உலக வானொலி வரலாற்றில் மாபெரும் சாதனையாக மட்டுமின்றி, முன்னுதாரணமாகவும் அமைந்த இந்த நிகழ்ச்சியை பதினான்கு ஆண்டுகள் தொடர்ந்து வழங்கியவர். பிறகு தொலைக்காட்சிகளின் காலை நிகழ்ச்சிகளிலும் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த நிகழ்ச்சி.

இவர் 17 வயதில் எழுதிய முதல் கவிதை, பாவேந்தர் பாரதிதாசனின் "குயில்' இதழில் (14. 07. 1959) வெளிவந்தது. அப்போது தொடங்கிய எழுத்துப் பயணம் இன்றும் தொடர்கிறது இவரிடம். தமிழ் குட்டிக்கதை இலக்கியத்தின் தந்தையாக உயர்ந்து நிற்கும் இவரை "இனிய உதயம்' இதழுக்காகச் சந்தித்தோம்...

உங்கள் பெயரோடு ஒட்டிக் கொண்டிருக் கும் "தென்கச்சி'யின் தாத்பரியம் என்ன? உங்கள் சொந்த ஊர், பால்யம், நீங்கள் சென்னைக்கு வந்த காலம், அன்றைய சென்னையின் வாழ்க்கை பற்றிச் சொல்லுங்கள்?

""தென்கச்சி என்பது இன் றைய அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடக்கரை ஓரத்தில் இருக் கிற சிற்றூர். தென்காஞ்சிபுரம் என்பது பழைய பெயர். அது தான் காலப்போக்கில் தென்கச்சி ஆயிற்று. காஞ்சி என்பது கச்சி என்று ஆகும். "கச்சி ஏகம்பனே' என்பது காஞ்சிபுரம் ஏகாம்ப ரேஸ்வரரைக் குறிக்கும்.

எங்கள் முன்னோர்கள் காஞ்சிபுரத்திலிருந்து இங்கே வந்தவர்கள். காஞ்சியில் பல்லவ மன்னர்களின் படைவீரர்களாக இருந்தவர்கள் கொள்ளிடக்கரை யில் குடியேறி தென்காஞ்சிபுரம் என்று பெயர் சூட்டியிருக்கிறார் கள். அதுதான் இன்றைய தென்கச்சி.

எங்கள் முன்னோர்கள் பயன்படுத்திய கத்தி, கேடயங்கள் இப்போதும் எங்களிடம் உண்டு. ஆயுத பூஜை சமயத்தில் அதை யெல்லாம் எடுத்து வைத்து வழிபாடு செய்வது வழக்கம். குழந்தைப் பருவத்திலிருந்தே ஒவ்வோர் ஆண்டும் அந்த ஆயுதங்களைத் தொட்டு வணங்கச் சொல்வார்கள். அப்படியே செய்திருக்கி றேன்.

இப்போதெல்லாம் அந்தக் கத்திகளை எடுத்துக் கொண்டு யாரும் சண்டைக்குப் போவதில்லை. கொள்ளிடத்தில் மீன் வெட்டுவதற்குப் போவ துண்டு. வலை இல்லாமல் மீன் பிடிக்கிற கலையில் நாங்கள் வல்லவர்கள்.

இரவு பத்துமணிக்கு மேல் புறப்படுவார்கள். ஒருவர் கையில் கத்தி இருக்கும். ஒரு சிறுவன் தலையில் பெட்ரோமாக்ஸ் விளக்கு இருக்கும். ஆற்றில் இறங்கி நடக்க வேண்டும். விளக்கு வெளிச்சத்தில் எதிரே வருகிற மீன்கள் கண்கள் பூத்துப் போய் அப்படியே நின்றுவிடும். வாள் வைத்திருப்பவர் அதை வெட்டுவார். கூடை வைத்திருப் பவர் அதன்மேல் கவிழ்ப்பார். மேல்புறம் இருக்கிற வளையம் வழியாக கையை உள்ளேவிட்டு மீன் துண்டுகளை வெளியே எடுப்பார். தன் தோளில் இருக்கிற சாக்குப் பையில் போட்டுக் கொள்வார். அவ்வளவுதான்.

இதில் வாள் வைத்திருப்பவர் மிகவும் புத்திசாலியாக இருப் பார். குறிபார்த்து வெட்ட வேண்டியவர் அவர். கூடை வைத்திருப்பவர் அவ்வளவு புத்திசாலியாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. துண்டு மீனை எடுத்துத் தோளில் கிடக் கிற சாக்கில் போடத் தெரிந்தால் போதும். பெட்ரோமாக்ஸ் விளக்கைத் தலையில் சுமக்கிறவர் சுத்த மக்காக இருக்க வேண்டும். அவர் சுயமாகச் சிந்திக்கக்கூடாது. மற்றவர்கள் பின்னாடியே போகவேண்டும். அவ்வளவுதான். இதில் எனக்கு பெட்ரோமாக்ஸ் விளக்கு சுமக்கிற வேலைதான் கொடுப்பார்கள். அதில் புரமோ ஷன் கிடைப்பதற்குள் நான் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்து விட்டேன். இவையெல்லாம் பழைய ஞாபகங்கள்.

எங்கள் ஊர்ப்பக்கம் சுவாமி நாதன் என்கிற பெயர் அதிகம். அதனால் பள்ளியில் படிக்கிறபோதே ஆசிரியர் ஊர் பெயரை யும் சேர்த்து அழைப்பது வழக்கம். நீ கும்பகோணம் சுவாமிநாதன், நீ ஆடுதுறை சுவாமிநாதன், நீ தென்கச்சி சுவாமிநாதன் என்ப தாகக் குறிப்பிடுவார். என்னோடு தென்கச்சி ஒட்டிக் கொண்ட கதை இதுதான்.

ஆரம்பப்பள்ளி தென்கச்சியில். அப்புறம் ஆடுதுறை குமரகுருபர சுவாமிகள் உயர்நிலைப் பள்ளியில் 6, 7, 8-ஆம் வகுப்புகள். பிறகு கும்பகோணம் பாணாதுறை உயர்நிலைப்பள்ளி யில் 9, 10, 11-ஆம் வகுப்புகள். அதன் பிறகு கும்பகோணம் அரசினர் கல்லூரியில் புகுமுக வகுப்பு. அப்புறம் கோவை விவசாயக் கல்லூரியில் பி.எஸ்.சி. (விவசாயம்) பட்டப் படிப்பு.

1965-ல் படித்து முடித்து விட்டு வெளியே வந்தேன். பரீட்சை ரிசல்ட் வருவதற்குள் வேலைக்கான உத்தரவு வந்து விட்டது. பாளையங்கோட்டை பஞ்சாயத்து யூனியனில் விவசாய அதிகாரியாக வேலைக்குச் சேர்ந்தேன். அதற்குப் பிறகுதான் ரிசல்ட் வந்தது. இரண்டு பாடங் களில் நான் பெயில்! வேலைக்கு லீவு போட்டுவிட்டு கோவைக்கு வந்து மறுபடியும் அந்த இரண்டு பாடங்களையும் எழுதி "பாஸ்' ஆனேன்.

பாளையங்கோட்டையில் ஒருவருடம் வேலை. அங்கிருந்து கடையம் பஞ்சாயத்து யூனிய னுக்கு மாற்றல் ஆனேன். அங்கே ஒரு வருடம். பாரதியாரின் மனைவி செல்லம்மாள் பிறந்த ஊர் அது. அதே தெருவில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தேன். அப்பு றம் அங்கிருந்து தஞ்சை மாவட்டம் பேராவூரணி பஞ்சா யத்து யூனியனுக்கு வந்தேன். அங்கே ஒரு வருடம். அப்புறம் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தென்கச் சிக்கு வந்துவிட்டேன். அங்கே பத்து வருடம் சொந்த விவசாயம் பண்ணினேன். டிராக்டர் எல்லாம் நன்றாக ஓட்டுவேன். ஊராட்சி மன்றத் தேர்தல் வந்தது. அதில் நின்றேன். வெற்றி கிடைத்தது. ஊராட்சி மன்றத் தலைவர் ஆனேன். ஏழு வருடங் கள் அப்படியே நீடித்தேன். அதன்பிறகுதான் வானொலிக்கு வந்தேன்.''

வானொலியோடு உங்களுக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது?

""ஊரில் விவசாயம் செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் தற்செயலாக செய்தித் தாளில் ஒரு விளம்பரம் பார்த்தேன். திருநெல்வேலி விவசாய ஒலிபரப் புக்கு ஓர் ஆள் தேவை. விவசாயம் படித்தவராக இருக்க வேண்டும். விவசாயத்தில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். வயது 35-க்குள் இருக்க வேண்டும். இப்படியாக இருந்தது அந்த விளம்பரம். அப்போது எனக்கு 34 ணீ வயது. வெள்ளைத்தாளில் விவரங்களோடு விண்ணப்பிக்கச் சொல்லியிருந்தார்கள். விண்ணப் பித்தேன். அதிகச் சிரமம் இன்றி அந்த வேலை எனக்குக் கிடைத்தது. அதற்கு என்ன காரணம் என்றால் போட்டிக்கு அதிகமாக யாரும் வரவில்லை. விவசாயம் படித்தவர்கள் வேலையில்லாமல் அப்போது யாரும் இல்லை. அது எனக்கு வசதியாகப் போனது.

1977-லிருந்து 1984 முடிய திருநெல்வேலி வானொலி நிலையத்தின் பண்ணை இல்ல ஒலிபரப்புப் பிரிவில் உதவி ஆசிரியர் பணி. அப்புறம் ஒரு பதவி உயர்வு. ஆசிரியர் என்று ஆகி சென்னை வானொலிக்கு வந்து சேர்ந்தேன்.

சென்னை வானொலியில் 2-1-1985 அன்று சேர்ந்தேன். அப்புறம் ஒரு பதவி உயர்வு- உதவி நிலைய இயக்குனர். 2002, ஜூன்- 30 அன்று பணி நிறைவு.''

"இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சியை எப்போது தொடங்கினீர்கள்? அந்த நிகழ்ச்சி இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என்று ஆரம்பத் திலேயே எதிர்பார்த்தீர்களா?

""சென்னை வானொலியில் "இன்று ஒரு தகவல்' என்கிற நிகழ்ச்சி 1988-ஆம் வருடம், ஜூலை மாதம், முதல் தேதி தொடங்கியது. அப்போது இயக் குனராக இருந்த கோ. செல்வம் அவர்கள் ஒருநாள் என்னைக் கூப்பிட்டு, "நாளைமுதல் இன்று ஒரு தகவல் என்கிற நிகழ்ச்சியை ஆரம்பிக்கிறோம். அதில் மக்களுக்குப் பயன்படக்கூடிய செய்திகளை நீங்கள் சொல்ல வேண்டும்' என்றார்.

"சார்... நான் ஒருவனே இதைத் தொடர்ந்து வழங்குவது கொஞ்சம் சிரமமாக இருக்கும் என்று தோன்றுகிறது' என்றேன். "நீங்க ஒரு மாசம் இதை வழங்கி னால் போதும். அடுத்த மாசம் வேறொருவரிடம் இதை ஒப்ப டைக்கலாம்!' என்றார். "அப்படியானால் சரி!' என்று ஆரம்பித்தேன். அதற்கப்புறம் வேறு யாரும் அந்தப் பொறுப்பை ஏற்க முன்வரவில்லை. இயக்குனருக்கும் அதை வேறு யாருக்கும் மாற்ற விருப்பமில்லை. பணி நிறைவு பெறும் வரையில் 14 ஆண்டுகள் நாள்தோறும் தொடர்ந்து அதை நானே வழங்கும்படி ஆயிற்று. பல தரப் பினரும் விரும்பிக் கேட்டார்கள். அது நான் எதிர்பாராத ஒன்று தான்.''

ஒரு நடமாடும் பேரகராதி யைப் போல நீங்கள் தரும் விஷயங்கள், குட்டிக் கதைகள் உங்களிடம் கொட்டிக் கிடக்கும் ரகசியம் என்ன? உங்கள் வாசிப்புத் தளம், கடைசியாகப் படித்த புத்தகம் பற்றி...

""இதில் ரகசியம் எதுவும் இல்லை. ஏனென்றால் எதுவும் என் சொந்த சிந்தனை இல்லை. மற்றவர்களின் சிந்தனைகளைப் படித்துப் புரிந்து கொண்டு, அதைக் கொஞ்சம் எளிமைப் படுத்தி, வேடிக்கை சேர்த்து சொல்கிறேன்; அவ்வளவுதான்.

நீங்கள் சொல்வதுபோல குட்டிக்கதைகள் என்னிடம் எதுவும் கொட்டிக் கிடக்க வில்லை. உலகம் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன. அதை எடுத்து ஊடகங்கள் வழியே மறுபடியும் உலகத்துக்கு வழங்கு கிறேன்; அவ்வளவுதான். என்னுடைய வாசிப்புத் தளம் பற்றிக் கேட்கிறீர்கள். எனக்குப் பிடித்தவை துப்பறியும் கதைகள் தாம்! சின்ன வயதிலிருந்து இன்றுவரை அவற்றைத்தான் விரும்பிப் படிக்கிறேன்.

மற்றபடி ஊடகத்தேவை- மக்கள் சேவை இவற்றிற்காக ஆன்மிகம், இலக்கியம், விஞ்ஞா னம், தத்துவம் இப்படி எல்லாவற் றையும் தேவைக்கு ஏற்ப படிப்ப துண்டு. கடைசியாக படித்த புத்தகம் "ஆகாய ஆசை கள்.' ஆசிரியர் ஜேம்ஸ் ஹாட்லிசேஸ். 'வர்ன்'ஸ்ங் ஞ்ர்ற் ண்ற் ஸ்ரீர்ம்ண்ய்ஞ்' என்ற ஆங்கில நாவலின் தமிழாக்கம்.''

ஒரு சின்னஞ்சிறு குட்டிக்கதையை ஒரு சிறுகதைபோல விரித்துச் சொன்னா லும், உங்களது ரசிகர்கள் பொறுமை யாக ரசிக்கிறார்கள். இந்த வெற்றிக்குக் காரணம் உங்களுக்குள் இருக்கும் கதை சொல்லியா? உங்களது வசீகரமான கனிவான குரலா?

""பொதுவாக கதை கேட்கிற ஆர்வம் எல்லாருக்குமே உண்டு. ஆகவே எதைச் சொன்னாலும் அதை ஒரு கதை மாதிரி சொன் னால் ஆர்வத்துடன் கேட்க ஆரம்பிக்கிறார்கள். சிறிய கதை யைப் பெரிய கதை மாதிரி சொன்னாலும் பொறுமையாகக் கேட்பதற்குக் காரணம், கடைசி யில் ஒரு நகைச்சுவை வரும் என் கிற எதிர்பார்ப்பாக இருக்கலாம். மற்றபடி குரலில் வசீகரம்- கனிவு என்பதெல்லாம் கேட்கிறவர் களின் மனதைப் பொறுத்தது. அழகாய் இருக்கிற பொருளை நீங்கள் விரும்புவதில்லை. நீங்கள் விரும்புகிற பொருள் அழகாய் இருக்கிறது. அவ்வளவுதான் விஷயம்.

கேட்கிறவர்கள் அல்லது வாசிக்கிறவர்களை ஒன்றை எதிர்பார்க்கச் செய்துவிட்டு, அதற்கு நேர்மாறாக ஒன்றைச் சொல்கிறபோது சுவாரசியம் வந்துவிடுகிறது. உதாரணத் துக்கு ஒன்றைச் சொல்ல லாம். "விபத்து' என்ற தலைப்பைக் கொடுத்து பத்து வரிகளில் ஒரு கட்டுரை எழுதச் சொன் னார் வகுப்பு ஆசிரியர்.

ஒரு மாணவன் எழுதிய கட்டுரை இது:

"ஒரு முப்பது மாடிக் கட்டிடத் தின் மேல் மாடியில் வெளிப்புறமாக நின்றுகொண்டு ஒருவன் வெள்ளையடித்துக் கொண்டிருந் தான். துரதிருஷ்டவசமாக அவன் கால் நழுவிக் கீழே விழுந் தான். அதிர்ஷ்டவசமாக அப் போது தெருவில் ஒரு வைக்கோல் லாரி வந்து கொண்டிருந்தது. துரதிருஷ்டவசமாக அந்த வைக்கோலின் நடுவில் ஒரு கடப்பாறை செருகப்பட் டிருந்தது. அதிர்ஷ்டவசமாக அவன் அந்தக் கடப்பாறையில் விழவில்லை. துரதிருஷ்டவசமாக அவன் அந்த வைக்கோலிலும் விழாமல், தெருவில் விழுந்து செத்துப் போனான்.'

இதுதான் சுவாரசியம் என்பது.''

குழந்தைகளுக்கு வாய்வழி கதை சொல்லும் மரபை நாம் தொலைத்து விட்டதால் இன்றைய தலைமுறை எதை யேனும் இழந்துவிட்டதாக நினைக்கிறீர்களா?

""அப்படி நினைக்கத் தேவையில்லை. ஊடகங்கள் இல்லாத காலத்தில் வாயின் தேவை அதிகமாக இருந்தது. இப்போது தாத்தா, பாட்டி களுக்குப் பதிலாக ஊடகங்கள் கதை சொல்லுகின்றன. அவற்றை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். காலம் தோறும் சிலவற்றை இழப்போம். சிலவற்றைப் பெறுவோம். இது உலக மரபு. இதில் வருந்துவதற்கு ஏதும் இல்லை.''

வானொலி ஊடகம் நம்மைப் போன்ற ஒரு வளரும் சமுதாயத்தில் எவ்வாறு கடமையாற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

""உதாரணத்துக்கு ஓர் உண்மை நிகழ்ச்சியைச் சொல்கிறேன்; கேளுங்கள்.

நான் திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். ஒரு நாள் மாலை வேளையில் ஒரு தொலைபேசி அழைப்பு.

"ஹலோ... ரேடியோ ஸ்டேஷனா?'

"ஆமாங்க.'

"நான் டீன் பேசறேன். ஹைகிரவுண்ட் ஆஸ்பத்தி ரியிலிருந்து... ஒரு முக்கிய மான விஷயம்.'

"சொல்லுங்க டாக்டர்.'

"கொஞ்ச நேரத்துக்கு முன் னாடி ஒரு ஆக்சிடெண்ட் நடந்துபோச்சி!'

"எங்கே டாக்டர்?'

"பாளையங்கோட்டை ரயில்வே கிராசிங் தாண்டி... கொஞ்ச தூரத்துலே...'

"பெரிய விபத்தா டாக்டர்?'

"ஆமாம்... வடநாட்டு சுற்றுலா பஸ் ஒன்றும் ஒரு லாரியும் மோதிக்கிட்டதுலே, டிரைவர் உள்பட கொஞ்ச பேர் அந்த இடத்துலேயே இறந்துட்டாங்க. அடிபட்டு உயிருக்குப் போராடிக் கிட்டிருக்கிறவங்களையெல்லாம் இங்கே கொண்டு வந்து சேர்த் திருக்காங்க. இந்த நேரத்துலே உங்களாலே ஒரு உதவி!'

"சொல்லுங்க டாக்டர்... எங்களாலே முடிஞ்சது எதுவா இருந்தாலும் செய்யிறோம்.'

"வேறே ஒண்ணுமில்லே. இப்ப இங்கே எங்ககிட்டே வந்து சேர்ந்திருக்கறவங்களுக்கெல் லாம் உடனடியா ரத்தம் செலுத் தியாகணும். அப்படி செஞ்சா அவங்களையெல்லாம் காப்பாத்திப்புடலாம்.'

"சரி.'

"ஆனா போதுமான ரத்தம் இப்ப பிளட் பாங்க்ல இல்லே. பொதுமக்கள் யாராவது வந்து ரத்தம் கொடுத்தா இவங்கள்லாம் பிழைச் சுக்குவாங்க. இப்ப நான் உங்ககிட்டே கேட்டுக்கறது என் னன்னா, உடனடியா இது சம்பந்தமா நீங்க ரேடியோவுல ஒரு அறிவிப்பு கொடுக்க முடியுமா?'

"இப்பவே நாங்க அதுக்கு ஏற்பாடு செய்யறோம். நீங்க மற்ற வேலைகளைக் கவனிங்க.'

வானொலி நண்பர்கள் உடனே செயலில் இறங்கினார் கள். அந்த சமயத்தில் திரைப்பட இசை ஒலிபரப்பாகிக் கொண் டிருந்தது. அவசரம் அவசரமாக அறிவிப்பு ஒன்று எழுதப்பட்டது நாலு வரிகளில்.

"நேயர்களே! ஒரு முக்கிய அறிவிப்பு. சற்று முன் நேர்ந்த ஒரு விபத்தினால் பாதிக்கப் பட்டவர்களைக் காப்பாற்ற ரத்தம் தேவைப்படுகிறது. ரத்த தானம் செய்ய விரும்புகிறவர்கள் உடனடியாக பாளையங் கோட்டை மருத்துவமனைக்கு விரைந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.'

அறிவிப்பாளர் தூத்துக்குடி ராஜசேகரன், ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாடலை நிறுத்தி இடையே அந்த அறிவிப்பை வாசிக்கிறார். ஒரு முறைக்கு இருமுறையாக இந்த அறிவிப்பு வாசிக்கப்படுகிறது. மறுபடியும் படப்பாடல் கள் தொடர்கின்றன. ஒரு இருபது நிமிடங்கள் கடந்திருக்கும். இன்னும் இரண்டு பாடல்களை ஒலிபரப்ப நேரம் இருந்தது. அந்த சமயத்தில் மறுபடியும் தொலைபேசி அழைப்பு.

"ஹலோ!'

""சார்... மறுபடியும் ஹை கிரவுண்ட் ஆஸ்பத்திரியில் இருந்துதான் பேசறோம். நீங்க உடனே இன்னொரு அறிவிப்பு செய்யணும்.'

"என்ன சொல்லணும்... சொல்லுங்க டாக்டர்.'

"தயவு செய்து மேற்கொண்டு யாரும் ஹைகிரவுண்ட் ஆஸ்பத் திரிக்கு ரத்ததானம் செய்ய வர வேண்டாம்னு சொல்லணும்.'

"என்ன ஆச்சு டாக்டர்?'

"ஏகப்பட்ட பேர் ரேடியோ அறிவிப்பைக் கேட்டுட்டு ரத்தம் கொடுக்க இங்கே வந்துட்டாங்க... கூட்டத்தை எங்களாலே சமாளிக்க முடியலே. அவ்வளவு பேர்கிட்டே ரத்தம் கலெக்ட் பண்ணவும் இப்ப இங்கே வசதி இல்லே. ப்ளீஸ்...!' மறுபடியும் வானொலி அறிவிக்கிறது.

"இனி யாரும் அங்கே செல்லத் தேவையில்லை என்பதை நன்றி யோடு தெரிவித்துக் கொள்கி றோம்.'

மறுநாள் மருத்துவமனைக் குப் போகிறோம். படுக்கையில் இருந்தவர்கள் பாசத்தோடு எங்க ளைப் பார்க்கிறார்கள். பாஷை ஒரு தடையாக இல்லை.

ஊடகங்கள் சமுதாயத்திற்கு எப்படிக் கடமையாற்ற வேண்டும் என்று கேட்டீர்கள். இந்த உண்மை நிகழ்ச்சி அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.''

ஹாரிபாட்டர், ஐரோப்பிய ஆங்கில காமிக்ஸ் கதைகள் என்று நம் கலாச்சாரத்தோடு ஒட்டாத கதைகளை இன்றைய வளரும் தலைமுறை வாசிக்கத் தலைப்பட்டிருக்கிறது. ஹாரி பாட்டர் போல தமிழ்க் கதை வழி மரபுகள், நாட்டார் வழக் காறுகளைக் கதைக்கூறுகளா கவும் நம்முடைய மரபார்ந்த வரலாற்றிலிருந்து பாத்திரங் களையும் அமைத்து கதை யெழுதும் ஆற்றல் நம்மில் ஒருவருக்குக்கூட இல்லையா? அல்லது முடியாதா?

""எது நல்லது, எது கெட்டது என்பதைக் காலம்தான் முடிவு செய் கிறது. எனவே மனிதர்கள் அதைப் பற்றிக் கவலைப் பட்டு ஆகப்போவது ஒன்று மில்லை. ஊடகங்கள் போகிற வேகத்தைப் பார்த்தால் உலகக் கலாச்சாரம் என்ற ஒன்றே விரைவில் உருவாகிவிடும் என்று தோன்றுகிறது. "உலகத்தோடு ஒட்ட ஒழுகல்' என்ற வள்ளுவரின் வார்த்தைகளைச் சரியாகப் புரிந்துகொண்டால் போதும். காலம் என்பது மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த மாற்றம் பிடிக் காதவர்கள் "காலம் கெட்டுப் போச்சு' என்று சொல்லிக் கவலைப்படுகிறார்கள். அவ்வளவுதான்.''

இன்றைய யுவன்- யுவதி களுக்கு முதலில் நட்பு பிறகு காதல் என்ற கண்ணோட் டமும், வாழ்க்கை முறையும் வந்துவிட்டது. இன்றைய இளைஞர்கள் காதலின் உண்மையான ஜீவனைப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லையே? குடும்ப நல நீதிமன்றத்திலும் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த தமிழன் காலப்போக்கில் குடும்ப அமைப்பை இழந்து விடுவான் என்று நம்புகிறீர்களா?

""முந்தைய கேள்விக் கான பதிலை மறுபடி யும் ஒருமுறை படித் துக் கொள்ளுங்கள்.

"இனவிருத்திக்காக இயற்கை செய்கிற தூண்டுதல் உணர்வின் தொடக்கம்தான் காதல் என்பது.'

காதலைவிட்டு விலகி நின்று பார்த்தால் தான் இந்த உண்மை புரியும். காதலில் தோற்றுப்போனவர்களைத்தான் தெய்வீகக் காதலர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். குடும்ப அமைப்பைப் பற்றிக் கவலைப் படத் தேவையில்லை.

நேற்றைய மனிதர்கள் எப்படி விரும்பினார்களோ அப்படி வாழ்ந்தார்கள். இன்றைய மனிதர்கள் எப்படி விரும்புகிறார் களோ அப்படி வாழ்கிறார்கள். நாளைய மனிதர்கள் எப்படி விரும்புவார்களோ அப்படி வாழ்வார்கள். உங்கள் ஆட்டத்தை நீங்கள் சரியாக ஆடி முடியுங்கள்; அது போதும். அடுத்த காட்சி யைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.''

உங்கள் பயண அனுபவங் களிலிருந்து "இனிய உதயம்' வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள நினைப்பது?

""பணிநிறைவுக்குப் பிறகுதான் பாஸ்போர்ட்டே வாங்கினேன். சிங்கப்பூர், லண்டன், குவைத், தாய்லாந்து, இலங்கை இவை யெல்லாம் நண்பர்களுடன் போய் நான் பார்த்துவிட்டு வந்த நாடுகள். அந்த மானுக்கும் ஒரு முறை போய்விட்டு வந்தேன். சும்மா போய் பார்த்துவிட்டு வந்தேன். ஒரு சில கூட்டங் களில் பேசினேன். அவ்வளவு தான். சுவையான செய்திகள் என்று ஏதும் இல்லை.

என்னுடைய நீண்ட கால நண்பர் ச.ஆ. கேசவன் (இனாம் மணியாச்சி) அமெரிக்கா போய் விட்டு வந்தபிறகு சொன்ன வார்த்தைகள் சுவையானவை. "எப்படி இருக்கிறது அமெரிக்கா?' என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில்:

"அமெரிக்கா பணக்காரர் களின் நரகம். இந்தியா ஏழைகளின் சொர்க்கம்.' ''

தானத்தில் சிறந்ததாக உங்கள் பார்வையில் உயர்ந்து நிற்பது?

""ஆந்திராவில் புயல்... அத னால் பாதிக்கப்பட்டவர்கள் அநேகம் பேர். அதற்காகப் புயல் நிவாரண நிதி தமிழ்நாட்டில் திரட்டப்படுகிறது.

கல்லூரி மாணவர்கள் கையில் உண்டியலுடன் நிதி திரட்டி னார்கள்.

சிவகாசி பக்கத்தில் ஒரு பேருந்து நிலையம். மாணவர்கள் உண்டியலை நீட்டுகிறார்கள். மக்கள் காசு போடுகிறார்கள். அங்கே பிச்சையெடுத்துக் கொண்டிருந்த ஒருத்தர், "என்ன விஷயம்?' என்று விசாரித்தார்.

"ஆந்திராவில் வீடிழந்தவர் களுக்கு வீடு கட்டிக் கொடுக்கவும், பசியால் வாடுகிறவர்களுக்கு சாப்பாடு போடவும், ஆடை இல்லாதவர்களுக்கு ஆடை கொடுக்கவும் இந்தப் பணம் உதவும்' என்று சொன்னார்கள். அந்தப் பிச்சைக்காரர் யோசித் தார். "கொஞ்சம் இருங்க' என்று சொல்லிவிட்டு தமது பழைய துணியைப் பிரித்தார். தம்மிடம் அதுவரை சேர்ந்திருந்த அவ்வ ளவு காசையும் மாணவர்களிடம் கொட்டிவிட்டுத் திரும்பிக்கூட பார்க்காமல் அவர் பாட்டுக்கு நடந்து போனார்.

இது சில ஆண்டுகளுக்கு முன்னால் பத்திரிகைகளில் வந்த ஓர் உண்மைச் செய்தி.''

இரண்டாயிரமாண்டு தமிழர் இலக்கியத்தில் உங்கள் இதயம் நிறைந்த படைப்பு?

""இதற்குப் பதில் சொல்கிற அளவுக்கு நான் நல்ல படைப்புகள் அனைத் தையும் படித்ததில்லை. இரண்டாயிரமாண்டு படைப்பு என்பதைவிட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இதயங்களில் நிறைந்து நின்று கொண்டிருக்கிற ஒரு படைப்பு திருக்குறள்.''

"காமத்தைக் கைவிட காமத் தில் மூழ்கு' என்ற ஓஷோ- "அறிந்த தினின்றும் விடுதலை பெறு' என்ற அறிஞர் கிருஷ்ண மூர்த்தி- இவர்கள் இருவரில் உங்கள் சாய்ஸ்?

""காமத்தில் மூழ்கினால் அதை அறிந்துகொள்ளலாம். அறிந்து கொண்டபின் அது தேவை இல்லை; விட்டுவிடலாம். விடுதலை பெறலாம். இருவர் கருத்திலும் முரண்பாடு தெரியவில்லையே?

விடுதலை பெற்ற குரு ஒருவரி டம் சீடன் கேட்கிறான்: உங்களு டைய தெளிவான அமைதி நிலை யின் ரகசியம் என்ன?

குரு சொல்கிறார்: தவிர்க்க முடியாததோடு மனசார ஒத்துப் போதல்தான்!''

வாழ்வின் தலைசிறந்த தத்து வம் என்று நீங்கள் நினைப்பது?

"" "இருப்பதை வைத்துக் கொண்டு இல்லாததைப் பயன் படுத்து!' சீன ஞானி லாலோட்சு சொல்லியிருக்கிற இந்த தத்துவம் என்னை யோசிக்க வைத்தது.

களிமண்ணால் பானை செய்கிறோம். பால் பொங்குவது வெற்றிடத்தில். பானை உடைந்தால் சோறு பொங்க முடியாது. ஆகவே பானை தேவை. "இருக்கிற பானையை வைத்துக் கொண்டு இல்லாத வெற்றிடத்தைப் பயன் படுத்து' என்கிறார் அந்த ஞானி.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். கதவு, ஜன்னல் வைத்து வீடு கட்டினாலும் நாம் வாழ்வது உள்ளே இருக்கிற வெற்றிடத்தில்தான்! இன்னும் சொல்லப்போனால் கடவுள் என்பதே ஆற்றல் மிகுந்த ஒரு வெற்றுத் தன்மைதான்!''

நம்மிடமிருந்து சென்ற சிலம்பம், களரி போன்றவை கராத்தே, குங்ஃபூ என்று நமக்கே திரும்பி வருகிறது. யோகக்கலையும் தியானமும் பணக்காரர்களுக்கு மட்டுமே வசமாகும் விலை உயர்ந்த விஷயங்கள் ஆகிவிட்டன. தமிழன் தனது அடையாளங் களை, மொழி உட்பட இழந்து வருவது பற்றி?

""இதுபற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை. காலம் மாறிக்கொண்டிருக்கிறது. இன்றைக்கு உலகம் பூராவும் தமிழர்கள் பரவியிருக்கிறார்கள். அவர்கள் கையில் "தமிழ்' பத்திர மாக இருக்கிறது.''

ஈ.வே.ரா. பெரியார் உலகம் முழுவதும் சென்ற டைந்திருக்க வேண்டிய தமிழர்களின் புரட்சிப் பெட்டகம். அவரது கருத்துகளை இத்தனை காலமாக முடக்கிவிட் டோம். இப்போது அவரது படைப்புகளை நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்கிற விவாதம் சூடுபிடித்துள்ளது பற்றி...

""பெரியார் நாட்டுடைமை ஆகி விட்டார். பெரியாரின் கொள்கை கள் நாட்டுடைமை ஆகிவிட்டன. பெரியாரின் படைப்புகள் நாட்டுடைமை ஆகவேண்டும். அதில் தவறில்லை. அவருடைய கருத்துகள் உருமாறி விடக்கூடாது என்று அவர்கள் கவலைப்படுகி றார்கள். இரு தரப்புமே பெரியா ரின்மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர்கள்தாம். இதில் கருத்து சொல்லும் அளவுக்கு எனக்குத் தகுதியில்லை.''

சிரிக்கச் சிரிக்க கதை சொல் கிறீர்கள்? ஒரு குட்டிக்கதை மூலம் வாசகர்களைக் கண் கலங்கச் செய்ய முடியுமா?

""நல்ல இதயமுள்ள வாசகர் களைக் கண்கலங்கச் செய்ய இன்றைக்குக் குட்டிக்கதை கூடத் தேவையில்லை. ஒரு வார்த்தை போதும்.

"ஈழத்தமிழர்கள்!''

நேர்காணல்: ஆர்.சி. ஜெயந்தன்

நன்றி :நக்கீரன்

புதன், 16 செப்டம்பர், 2009

இன்று ஒரு தகவல்(துயர), தென்கச்சி, கோ. சுவாமிநாதன்

இன்று ஒரு தகவல்(துயர) , தென்கச்சி, கோ. சுவாமிநாதன்

http://www.vikatan.com/vc/pubsales/wrapper/144_1.jpg

சென்னை: பிரபல எழுத்தாளரும் ரேடியோ-தொலைக்காட்சி பேச்சாளருமான தென்கச்சி கோ. சுவாமிநாதன் காலமானார்.

சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர்சென்னைில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் இன்று அவர் காலமானார்.

அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த கோ.சுவாமிநாதன் வேளாண்மைப் பட்டதாரி ஆவார்.

தென்கச்சியார் என்று வாசகர்களாலும், வானொலி நேயர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட இவர் தமிழ்நாடு [^] அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் 1977ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு வரை திருநெல்வேலி [^] வானொலி நிலையத்தின் பண்ணை இல்ல ஒலிபரப்புப் பிரிவில் உதவி ஆசிரியர் பணியாற்றினார்.

பின்னர் அதே பிரிவின் ஆசிரியராகிசென்னைவானொலிக்கு வந்து, அதன் உதவி இயக்குனராக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

எளிய குட்டிக்கதைகள் மூலம், வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இவர் வழங்கிய 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி தமிழர்களிடையே மிகப் பிரபலம்.

இந்த நிகழ்ச்சியை இவர் நாள் தவறாமல் 14 ஆண்டுகள் தொடர்ந்து வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது ஊரில் ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்தவர். செல்வ வளம் கொண்ட இவர் எளிமையாக வாழந்தார். மனைவியுடன் சென்னை [^]யில் வாழ்ந்து வந்த இவருக்கு ஒரு மகள் உள்ளார்.

சில வாரங்களுக்கு முன் இனிய உதயம் இதழுக்கு பேட்டியளித்த இவரிடம், சிரிக்கச் சிரிக்க கதை சொல்கிறீர்கள்? ஒரு குட்டிக்கதை மூலம் வாசகர்களைக் கண் கலங்கச் செய்ய முடியுமா? என்று நிருபர் கேட்டதற்கு தென்கச்சி சொன்ன பதில்:

நல்ல இதயமுள்ள வாசகர்களைக் கண்கலங்கச் செய்ய இன்றைக்குக் குட்டிக்கதை கூடத் தேவையில்லை. ஒரு வார்த்தை போதும்.


''ஈழத் தமிழர்கள்!''

நன்றி :தட்ஸ் தமிழ்
Thenkachi Ko.Swaminathan

ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

பெண் குழந்தைகளுக்கு (ஒரு) இந்திராகாந்தி கல்வி உதவித் தொகை

பெண் குழந்தைகளுக்கு இந்திராகாந்தி கல்வி உதவித் தொகை


புதுடெல்லி: ஒரு பெண் குழந்தை மட்டுமே உள்ள குடும்பத்தில உள்ள பெண், முதுநிலை பட்டப் படிப்பு படிக்க இந்திராகாந்தி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

நாடு முழுவதும் 1200 மாணவிகளுக்கு இந்தக் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். மாதம் ரூ.2 ஆயிரம் வீதம் 20 மாதங்களுக்கு இந்தக் கல்வி உதவித் தொகை கிடைக்கும்.

முதுநிலை பட்டப்படிப்பில் தொழில் படிப்புகள் நீங்கலாக மற்றமுதுநிலை பட்டப்படிப்பில் சேரும் முதலாண்டு மாணவிகள் இந்தக் கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். தொலைநிலைக் கல்வி மூலம் படிக்கும் மாணவிகள் இந்தக் கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பிக்க முடியாது.

விவரங்களுக்கு: www.ugc.ac.in

சனி, 5 செப்டம்பர், 2009

அண்ணாமலை பல்கலை மையத்தில் மாணவர் சேர்க்கை நாள் நீட்டிப்பு

அரியலூர் அண்ணாமலை பல்கலை படிப்பு மையத்தில் மாணவர் சேர்க்கைக்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி படிப்பு மையத்தின் முதுநிலை விரிவுரையாளர் முனைவர் வேலாயுதம் விடுத்த அறிக்கை: அண்ணாமலை பல்கலை தொலைதூர கல்வி இயக்ககத்தில், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள், வணிக மேலாண்மையியல் படிப்புகள், கம்யூட்டர், இசை, யோகா மற்றும் வேளாண்மை உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் டில்லியிலுள்ள தொலைதூர கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் பெற்றுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் பட்டப்படிப்பு பயிலுவோர் இதே கல்வி ஆண்டில் குறிப்பிட்ட சில பட்டய வகுப்புகள் பயில, ஐம்பது சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறது. மேலும் நடப்பு கல்வி ஆண்டில் இளங்கலை, முதுகலை மற்றும் பட்டயப்படிப்பில் ஜூவல்லரி மேலாண், இளங்கலை மற்றும் பட்டயப்படிப்பில் 3டி அனிமேஷன், முதுகலையில் ஊரக மேலாண்மை, இசை மற்றும் யோகா, முதுகலை பட்டயப்படிப்பில் விழுமியன் கல்வி மற்றும் ஆன்மீகம், மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன், நீரழிவு நோய் மருத்துவம், பட்டய படிப்பில் வெல்டிங் இன்ஜினியரிங், பரதநாட்டியம், ஜோதிடம் ஆகிய பாடப்பிரிவுகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.

தொலைதூர கல்வியியல் பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மாணவ, மாணவிகளுக்கு, கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில் சேர்க்கைக்கான காலக்கெடு, வருகிற அக்டோபர் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த திருமானூர், அரியலூர், உடையார்பாளையம், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை மற்றும் தா.பழூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பல்கலை தொலைதூர கல்வி இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 1 செப்டம்பர், 2009

மணமக்கள்:வே.மணிகண்டன்+மு.வித்யா




நாளை மணவிழா காணப்போகும் எனது அருமை நண்பர்களுக்கு வாழ்த்துகள்

மணநாள் :02/09/2009

மணப்பந்தல் :மங்களம் ,செயங்கொண்ட சோழபுரம்.

மணமக்கள் :வே .மணிகண்டன். எந்திரவியலர்., புது தில்லி (செங்குந்தபுரம்) +மு . வித்யா, கணினி வல்லுநர் ,.

வாரியங்காவல்
.

வாழ்த்தும் உடன்பிறப்புகள் (தோழர்கள்) ,,,,,,,


திரு .தணிகாசலம் என்கிற தணிகா ,
வீர
.மா.மானவீரன் என்கிற மானா,
மு .அருள் ராஜ் என்கிற தலைவர் ,
வா
.ரா. சரவணன் . அன்னை குழுமம் .
வாரியங்காவல்.
இனமான பேராசிரியர் .V.P. கொளஞ்சிநாதன்,
இயக்குனர் கார்த்தி (e) ஸ்ரீதர் என்கிற தக்காளி ,
சிங்கப்பூர்
பொட்டுகடலை என்கிற கார்த்திகேயன் ,
வேளாண்
பேராசிரியர் . பழனி என்கிற பழனிச்சாமி
மருதூர்.

மற்றும் செங்குந்தபுரம் நட்பும் சுற்றமும் ,,,
வாழ்க வெல்க









ஊனமுற்றோருக்கு கலெக்டர் அழைப்பு

1.மூன்று சக்கர மோட்டார் சைக்கிள் பெற ஊனமுற்றோருக்கு கலெக்டர் அழைப்பு
http://www.wheelchairindia.com/images/moped-fix-attachment2.gifhttp://www.wheelchairindia.com/images/moped-fix-attachment1.gifhttp://www.made-in-china.com/image/2f0j00oBTtIvJMAWbkM/Handicap-Scooter-JJS-106-.jpg

அரியலூர்: அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் வெளியிட்ட அறிக்கை: அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பணிக்கு செல்லும் அல்லது பள்ளி கல்லூரியில் படிக்கும் கடும் ஊனமுற்றோர்களுக்கு, மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற தகுதியுள்ள ஊனமுற்றோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரியில் படிக்கும் கடும் ஊனமுற்றோர் மோட்டார் பொருத்திய, மூன்று சக்கர மோட்டார் பொருத்திய வண்டி இலவசமாக பெற விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட தகுதி பெற்றிருக்க வேண்டும்.



விண்ணப்பதாரர் பள்ளி, கல்லூரியில் படிப்பவராக இருக்க வேண்டும். இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு, இரண்டு கைகளும் நன்கு செயல்படும் நிலையில் உள்ள கடும் ஊனமுற்றவராக இருக்க வேண்டும். பயனாளியின் வயது 18க்கும் மேல் இருப்பதுடன், டிரைவிங் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். உடல் ஊனமுற்றோருக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருப்பதுடன், ஆண்டு வருமானம் ரூ. 30 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். பணிக்கு செல்லும் கடும் ஊனமுற்றோர், மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வண்டி வாங்க விரும்பினால், வண்டியின் விலையில் மூன்றில் ஒரு பங்கு அல்லது 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படவுள்ளது.

அதற்கான தகுதிகள்: விண்ணப்பதாரர் பணிக்கு செல்பவராகவும், இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு, இரண்டு கைகளும் நன்கு சயல்படும் நிலையில் உள்ள கடும் ஊனமுற்றவராகவும் இருக்க வேண்டும். பயனாளியின் வயது 18க்கு மேல் இருப்பதுடன், டிரைவிங் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். உடல் ஊனமுற்றோருக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருத்தல் அவசியம். மானியம் கோரும் விண்ணப்பதாரர், மோட்டார் பொருத்திய மோட்டார் வண்டி வாங்க இருக்கும் நிறுவனத்திடமிருந்து உரிய விலைப்புள்ளி பெற்று சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.

சோழமாதேவி:வேளாண் அறிவியல் உதவி மையம்

1.வேளாண் அறிவியல் மையம் அரியலூர் கலெக்டர் தகவல்

http://www.istockphoto.com/file_thumbview_approve/2769754/2/istockphoto_2769754-cashew-nut-tree.jpg

அரியலூர்: அரியலூர் மாவட்டம், சோழமாதேவி கிராமத்திலுள்ள வேளாண் அறிவியல் மையத்தின் சேவைகளை பெற்று பயடையுமாறு, விவசாயிகளுக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுபற்றி அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் விடுத்த அறிக்கை: அரியலூர் மாவட்டம், தா.பழூர் பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட சோழமாதேவி கிராமத்தில், கீரீடு வேளாண் அறிவியல் மையம் துவக்கப்பட்டுள்ளது. டில்லியிலுள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதி உதவியுடன் துவக்கப்பட்டுள்ள இம்மையம் அடிப்படை கட்டமைப்புக்காகவும், பண்ணை செயல்பாட்டுக்காகவும், 50 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்படுகிறது. இம்மையத்தில் மண்வளப் பாதுகாப்பு, மண் மற்றும் நீர் பரிசோதனை, செயல் விளக்க பயிற்சி, உழவியல், தோட்டக்கலை, வேளாண் விரிவாக்கம், பயிர் பாதுகாப்பு, கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு, கோழி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு, தேனீ வளர்ப்பு, மீன் வளர்ப்பு, செம்மை நெல் சாகுபடி, காடு வளர்ப்பு, ஒருங்கிணைந்த வேளாண், பாரம்பரிய இயற்கை விவசாய தொழில் நுட்பம், துல்லிய வேளாண், மண் புழு உரம் தயாரிப்பு, திடக்கழிவு மேலாண், பூச்சி மற்றும் த்நாய் மேலாண், தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில், நிபுணத்துவம் பெற்ற விஞ்ஞானிகள் பலரும் பணியாற்றுகின்றனர். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், கல்வியில் தேர்ச்சி பெறாதோர், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், வேலையற்ற ஊரக இளைஞர்கள், விவசாய நிலமற்ற ஏழைகள் மற்றும் தொழில் முனைவோர் இம்மையத்தின் மூலம் பயனடையலாம். விவசாயம் சம்பந்தபட்ட ஆலோசனைகள் பெற, திட்ட ஒருங்கிணைப்பாளர், கிரீடு வேளாண் அறிவியல் மையம், சோழமாதேவி (அஞ்சல்)- 612902. ஜெயங்கொண்டம் (வழி), உடையார்பாளையம் தாலுகா, அரியலூர் மாவட்டம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: 04331-260335.http://www.banana-tree.com/catalog%20images/image310.jpg

வியாழன், 13 ஆகஸ்ட், 2009

'புவன்' எர்த் 3டி மேப் : இஸ்ரோ தொடங்கியது

முப்பரிமாண செய்மதி நோக்கு புவி காட்சி (வரைபடம்)


கூகிள் எர்த்-ன் ஒரு பகுதியாக 'புவன்' என்ற பெயரில் இந்தியாவின் எந்தவொரு சிறு பகுதியையும் கணினியில் அமர்ந்து கொண்டே தெளிவாகப் பார்க்கக்கூடிய வகையிலான முப்பரிமாண (3D) வரைபடத்தை உள்ளடக்கிய இணைய தளத்தை இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் - இஸ்ரோ தொடங்கியுள்ளது.

இந்த இணைய தளம் மூலம் செயற்கைக்கோளில் இருந்து சம்பந்தப்பட்ட பகுதியின் வரைபடத்தை கண்டுணர முடியும்.

இதற்கான இணையதளமான http://bhuvan.nrsc.gov.in -ன் பீட்டா வடிவத்தை பிரதமர் அலுவலக இணையமைச்சர் பிரிதிவிராஜ் சவான் இன்று புதுடெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் தொடங்கி வைத்தார்.

இந்திய வானவியல் சங்கம் சார்பில், 21ஆம் நூற்றாண்டில் இந்திய விண்வெளித் துறை எதிர்கொள்ளும் சவால் என்ற தலைப்பில் கருத்தரங்கும் நடைபெற்றது.

ராணுவப் பகுதி மற்றும் அணு சக்தி நிலையம் நீங்கலாக இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் இந்த இணைய தளம் மூலம் துல்லியமாக காணலாம் என்று இஸ்ரோ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நன்றி : வெப்துனியா
Source : http://tamil.webdunia.com/newsworld/news/national/0908/12/1090812088_1.htm

புதன், 12 ஆகஸ்ட், 2009

பன்றி காய்ச்சல் - ஒரு தடுப்பு நடவடிக்கை

வெளி நாடுகளில் மட்டுமே பரவி வந்த பன்றி காய்ச்சல் நோய் தற்போது இந்தியாவிலும் அதிலும் சென்னையிலும் வேகமாக பரவத் துவங்கி உள்ளது. பன்றி காய்ச்சல் நோய் பற்றி மக்கள் அதிகம் பீதி அடைய தேவை இல்லை.



பன்றி காய்ச்சல் என்றல் என்ன ?

பன்றி காய்ச்சல் எனபது “சுவைன் புளூ” என்ற வைரசால் பரவுகிறது இது ஒரு “ஆர் தோமைசோ வெரிடேட்” என்கின்ற வைரஸ் குடும்பத்தை சேர்ந்தது. “சுவைன் புளூ” வைரசிலேயே ஐந்து வகை உள்ளன. அதில் இப்போது பரவியுள்ள வைரசை “எச்-1, என்-1” என்று பட்டியலிட்டு உள்ளனர்.


பன்றி காய்ச்சலின் நோயின் அறிகுறிகள் என்ன ?

தொண்டையில் வலி ஏற்படுதல், மூக்கில் நீர்வடிதல், இடைவிடாத காய்ச்சல், மயக்கம், பசியின்மை, வயிற்றுப்போக்கு, வாந்தி போன்றவை இக்காய்ச்சலின் அறிகுறிகள் ஆகும் இம்மாதிரியான நோய்களால் பாதிக்கப்பட்டால் அதற்கான மருந்து முறைகளை மேற்கொண்டும் குணமாகவில்லை என்றல் அதற்கு காரணம் பன்றி காய்ச்சல்தான் என்று தெரிந்துக்கொள்ளலாம்.




பன்றி காய்ச்சல்
நோய் பரவாமல் தடுப்பது எப்படி ?

1. மருத்துவமனைகளுக்கு சென்று வந்தால் ஒரு முறை குளித்து விடுவது நல்லது.

2. பன்றிக் காய்ச்சல் நோய் பாதிப்பு இருக்கும் நாடுகளுக்கு செல்வதைத் சிறிது காலங்களுக்கு தவிர்க்க வேண்டும்.

3. இந்நோய் பாதிக்கப்பட்டவர்களிடம் நேருக்கு நேர் உட்கார்ந்து பேச வேண்டாம். (அதே நேரத்தில் அவர்களிடம் வெறுப்பை காட்டாமல் அவர்களிடம் அன்பாக நடந்துக்கொள்ள வேண்டும்.)

4. வீட்டை சுற்றி தூய்மையாக வைத்துக்கொள்ளுங்கள், நீங்கள் வசிக்கும் பகுதியில் பன்றிகள் நடமாற்றம் இருந்தால் மாநகராட்சியிடம் கூறி உரிய நடவடிக்கை எடுக்க சொல்லவும்.

5. இந்நோயால் பாதிக்கப்பட்டது போன்ற அறிகுறிகள் தென்பட்டால் உடனடியாக பன்றி காய்ச்சல் தடுப்பு மருத்துவமனைக்கு செல்லவும்.


ஜீன் 11 அன்று உலக சுகாதார நிறுவனம் பன்றிக் காய்ச்சலை கொள்ளை நோயாக அறிவித்துள்ளது

ஆனால் ,வேப்பிலை காப்பு,தோரணம் முலமாக வைரஸ் பரவலை தடுக்கலாம் .நிலவேம்பு குடிநீர் ,ஆமுக்கிராசூரணம் ,பிரமானந்த பைரவம் ,மற்றும் துளசி செடி அதன் ரசம் நல்ல பலனைக்கொடுக்கும்.


இதுவும் ,காமாலை ,அம்மை மற்றும் சிக்கன் குன்னியா போன்ற ஒரு வைரஸ் கிருமி தொற்று அனுபவம் உள்ளவர்கள் எளிதில் மீளலாம் தன்னபிக்கையுடன் எதிர் கொள்ளுங்கள்



சனி, 1 ஆகஸ்ட், 2009

ஆஸ்கார் இசை விருதும் ,தங்க தமிழ் மகனின் இன உணர்வும் !!!

அவன் பாரறிந்த இசைவாணன் ,தமிழ்ப்பாணன் .
உலகறியா தங்கதமிழிசை மூலம் முடிதரித்தவன்
மானிடர் மனந்துள்ளும் மட்சியரிந்தவன் !!!
ஓர் முடி அது என் தமிழ்க்கொடி (புலிக்கொடி)
தீவினை (ஊழ்வினை) காலமாடும்போது
ஒருசொல்லில் பாருக்கு சொல்லவான் என்றிருந்தேன் ?
சொன்னானா? இல்லையே ?
புலையன் எனக்கு புத்தி பேதலித்து
பித்தனாகி வெதும்பும்,முடியா கோடையில் ,
மறந்திலேன் மறந்திலேன் என மார்தட்டி நிற்கின்றான் !!!

வீழ்ந்த ஈழக் கதை ,
கதை இல்லை , விதை
பட்டம் பார்த்து விதைக்க
மறந்திலேன் மறந்திலேன் என மார்தட்டி நிற்கின்றான் !!!

ஈழவிதை ஆழ்மனதில் வை
ஆடிப்பட்டம் தேடி விதை ,,,,,,,,,,,,,,


இலங்கையில் போர் நடந்து கொண்டு இருந்ததால் பாராட்டு விழாக்களை தவிர்த்தேன்: ஏ.ஆர்.ரகுமான்

இலங்கையில் போர் நடந்து கொண்டு இருந்ததால் தமிழ்நாட்டில் தமக்கு பல்வேறு அமைப்புகள் ஏற்பாடு செய்திருந்த பாராட்டு விழாக்களை தவிர்த்துவிட்டதாக இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் உருக்கமுடன் கூறினார்.

சென்னை அண்ணா பல்கலைக்கழகம் சார்பில் துணை முதல் அமைச்சர் மு.க.ஸ்டாலின், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான், இஸ்ரோ விஞ்ஞானி மயில்சாமி அண்ணாதுரை ஆகியோருக்கு நேற்று கவுரவ டாக்டர் பட்டம் வழங்கப்பட்டது.

இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் ஏற்புரையாற்றிப் பேசும்போது கூறியதாவது:

2 மாதங்கள் அமெரிக்காவில் இசை அமைத்துவிட்டு இந்தியா திரும்பி வந்து நான் கலந்துகொள்ளும் 2 வது விழா இது. இங்கு தமிழ்த்தாய் வாழ்த்தை கேட்டபோது முத்துமழை பெய்தது போல் இருந்தது. ஆஸ்கார் விருதுக்கு பிறகு ஏராளமான பாராட்டுகள் இந்தியாவில் உள்ள பல மாநிலங்கள் மற்றும் இங்கிலாந்து, அமெரிக்கா போன்ற நாடுகளில் இருந்து வருகின்றன.

ஆனால், அந்த நேரத்தில் தமிழ்நாட்டில் இருந்த சூழ்நிலை, தமிழ் நெஞ்சங்களுக்கு இலங்கையில் நடந்த போர் பெரிய பாதிப்பை ஏற்படுத்தியது. இதனால், தமிழகத்தில் பாராட்டு விழாக்களை தவிர்த்துக்கொண்டேன். இதனால் யாருக்கும் மனக்கஷ்டம் இருந்தால் என்னை மன்னித்துக்கொள்ளுங்கள் என்றார்.

புதன், 15 ஜூலை, 2009

வேலைவாய்ப்புக்கு உதவும் வெளிநாட்டு மொழிகள் - 34 ஹைதராபாத்திலுள்ள வெளிநாட்டு மொழிகள் பயிற்சி நிறுவனம் Central Institute of English and Foreign Lang

ஹைதராபாத்திலுள்ள வெளிநாட்டு மொழிகள் பயிற்சி நிறுவனம்

வேலைவாய்ப்புக்கு உதவும் வெளிநாட்டு மொழிகள் - 34

ஹைதராபாத்திலுள்ள வெளிநாட்டு மொழிகள் பயிற்சி நிறுவனம்

Central Institute of English and Foreign Languages
Hyderabad - 500 007,
Andhra Pradesh.
INDIA.

ஹைதராபாத்தில் அமைந்துள்ள சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆப் இங்கிலீஷ் அண்ட் பாரின் லாங்கேவேஜ்சசைச் சேர்ந்த தி ஸ்கூல் ஆப் பாரின் லாங்வேஜ்சில் அரபிக், பிரெஞ்சு, ஜெர்மென், ஜப்பானிஸ், ரஷ்யன் மற்றும் ஸ்பானிஸ் மொழிகளை ஆரம்ப கட்டத்தில் இருந்து பி.எச்.டி., முனைவர் பட்டம் வரையிலான வகுப்புகள் நடத்தப்படுகின்றன.

இதன் முக்கிய நோக்கம், இந்த ஐந்து மொழிகளின் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது, ஆராய்ச்சி, பாடத்திட்டத்தை தயாரிப்பது, இந்த மொழிகளை கற்றுத் தரும் பல்கலைக்கழகங்கள் மற்றும் மற்ற நிறுவனங்கள் பாடத் திட்டத்தை தயாரிப்பதற்கு உதவுவது மற்றும் மொழி தொடர்பான ஆய்வரங்கம், பயிற்சி பட்டறை நடத்துவது ஆகியனவாகும். இந்த மொழிகளில் உயர்நிலை தேர்ச்சி மற்றும் திறன் பெறுவதற்கான பல பாடத்திட்டங்களின் கீழ் வகுப்புகளை நடத்துகிறது.

இதன் துணை நிறுவனம், மேகாலயா மாநிலத்தின் தலைநகரான சில்லாங்கில் அமைந்துள்ளது. இங்கு தற்போது ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மென் ஆகிய மொழிகள் கற்றுத் தரப்படுகின்றன.

ரஷ்ய மொழி

லெவல் 1.1 முதல் லெவல் 1.6 வரை.

லெவல் 1.1 - புதிதாக ரஷ்ய மொழியை படிப்பவர்களுக்காக நடத்தப்படுகிறது. லெவல் 1.6 - ரஷ்ய மொழியை ஏற்கனவே கற்றவர்களுக்காக நடத்தப்படுகிறது. ரஷ்ய மொழியை படிக்க விரும்புபவர்கள், அவர்கள் ஏற்கனவே அம்மொழி படித்திருக்கும் தகுதியைப் பொறுத்து எந்த லெவலிலும் சேரலாம்.
கல்வித் தகுதி - பத்தாம் வகுப்பு தேர்ச்சி
இதில் முழு நேரமாகவும் அல்லது பகுதி நேரமாகவும் படிக்கும் வசதி உள்ளது.

***

Diploma in Scientific and Technical Translation in Russian (Part-Time)

ரஷ்ய மொழியில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப மொழிபெயர்ப்பு பட்டயம் (பகுதி நேரம்)
சேர்வதற்கான தகுதி - இந்த இன்ஸ்டிட்யூட்டால் நடத்தப்படும் லெவல் 1.3 சி கிரேடில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். அல்லது, அதற்கு சமமான தகுதி.

***

Master of Arts (M.A) in Russian (Distance Mode)

எம்.ஏ. ரஷியன் (தொலைதூரக் கல்வி)
தகுதி - ரஷ்ய மொழியை விருப்பப் பாடமாகவோ அல்லது இரண்டாவது மொழியாகவோ படித்த பட்டப்படிப்பு அல்லது ஏதாவது பட்டப்படிப்புடன் ரஷ்ய மொழியில் இரண்டு வருட பட்டய வகுப்பிற்கு சமமானது.
கால அளவு - மூன்று வருடம்

***

Master of Arts (M.A) in Russian ( Full Time )

எம்.ஏ., ரஷியன் (முழு நேரம்)
தகுதி - ரஷ்ய மொழியை விருப்பப் பாடமாகவோ அல்லது இரண்டாவது மொழியாகவோ படித்த பட்டப்படிப்பு அல்லது ஏதாவது பட்டப்படிப்புடன் ரஷ்ய மொழியில் இரண்டு வருட பட்டய வகுப்பிற்கு சமமானது.

கால அளவு - நான்கு செமஸ்டர்கள்.

***

Post-Graduate Certificate in the Teaching of Russian (PGCTR)

ரஷ்ய மொழி ஆசிரியருக்கான பட்டமேற்படிப்பு சான்றிதழ்
சேர்வதற்கான தகுதி - ரஷ்ய மொழியில் எம்.ஏ. பட்டம்.
கால அளவு - ஒரு செமஸ்டர்.

***

Post-Graduate Diploma in the Teaching of Russian (PGDTR)

ரஷ்ய மொழி ஆசிரியருக்கான பட்டமேற்படிப்பு பட்டயம்

சேர்வதற்கான தகுதி:
முதல் செமஸ்டர் - ரஷ்ய மொழியில் எம். ஏ.
இரண்டாவது செமஸ்டர் - ரஷ்ய மொழி ஆசிரியருக்கான பட்டமேற்படிப்பு சான்றிதழ்.
கால அளவு - இரண்டு செமஸ்டர்.

***

Master of Philosophy (M.Phil.) in Russian (Distance Mode)

ரஷ்ய மொழியில் மாஸ்டர் ஆப் ப்ளாசபி (தொலைதூர கல்வி)
சேர்வதற்கான தகுதி - ரஷ்ய மொழியில் எம்.ஏ., முதல் வகுப்பில் தேர்ச்சி. அல்லது, ரஷ்ய மொழியில் எம்.ஏ., இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி, அத்துடன் ரஷ்ய மொழி ஆசிரியருக்கான சான்றிதழ் அல்லது பட்டயம். அல்லது, ரஷ்ய மொழியில் எம்.ஏ., பட்டம் பெற்று, ஏழு ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரிந்திருக்க வேண்டும்.
கால அளவு - இருபது மாதங்கள்.

***

Doctor of Philosophy (Ph.D) in Russian (Distance Mode)

ரஷ்ய மொழியில் பிஹெச்.டி., (முனைவர் பட்டம்) (தொலைதூர கல்வி)
கால அளவு - நான்கு வருடங்கள்

***

Doctor of Philosophy (Ph.D) in Russian

ரஷ்ய மொழியில் பிஹெச்.டி., (முனைவர் பட்டம்)
கால அளவு - மூன்று வருடங்கள்

இரண்டிற்கும் சேர்வதற்கான தகுதி : ரஷ்ய மொழியில் எம்.ஏ., முதல் வகுப்பில் தேர்ச்சி. அல்லது, ரஷ்ய மொழியில் எம்.ஏ இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி, அத்துடன் ரஷ்ய மொழி ஆசிரியருக்கான சான்றிதழ் அல்லது பட்டயம். அல்லது, ரஷ்ய மொழியில் எம்.லிட்/ எம்.பில் அல்லது ரஷ்ய மொழியில் எம்.ஏ., பட்டம் பெற்று, ஏழு ஆண்டுகள் ஆசிரியராக பணிபுரிந்திருக்க வேண்டும்.

*******

Diploma in Translation

மொழிபெயர்ப்பில் டிப்ளமோ
கால அளவு - ஒரு செமஸ்டர்.

சேர்க்கைக்கான தகுதி.

1. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் / முதுகலை பட்டம்.
2. வெளிநாட்டு மொழி கற்றவர்களாக இருந்தால், சென்ட்ரல் இன்ஸ்டியூட் ஆப் இங்கிலிஷ் அண்ட் பாரின் லாங்வேஜ்-ல் இருந்து குறிப்பிட்ட வெளிநாட்டு மொழியில் அட்வான்ஸ்ட் டிப்ளமோ (லெவல் 1.6) அல்லது அங்கீரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / இன்ஸ்டியூட்டில் இருந்து இதற்கு சமமான தகுதி. அத்துடன், ஆங்கிலத்தில் தேவையான தேர்ச்சி.
3. இந்திய மொழி கற்றவர்களாக இருந்தால், குறிப்பிட்ட இந்திய மொழியில் மேற்கண்ட சமமான தகுதி மற்றும் அத்துடன் ஆங்கிலத்தில் தேவையான தேர்ச்சி.

***

Advanced Diploma in Professional Translation

தொழில் ரீதியான மொழிபெயர்ப்பில் அட்வான்ஸ்ட் டிப்ளமோ

கால அளவு - 2 செமஸ்டர்கள்.

சேர்க்கைக்கான தகுதி:

1. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் / முதுகலை பட்டம்.
2. வெளிநாட்டு மொழி கற்றவர்களாக இருந்தால், சென்ட்ரல் இன்ஸ்டியூட் ஆப் இங்கிலிஷ் அன்ட் பாரின் லாங்வேஜ்-ல் இருந்து குறிப்பிட்ட வெளிநாட்டு மொழியில் அட்வான்ஸ்ட் டிப்ளமோ (லெவல் 1.6) அல்லது அங்கீரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / இன்ஸ்டியூட்டில் இருந்து இதற்கு சமமான தகுதி. அத்துடன், ஆங்கிலத்தில் தேவையான தேர்ச்சி.
3. இந்திய மொழி கற்றவர்களாக இருந்தால், குறிப்பிட்ட இந்திய மொழியில் மேற்கண்ட சமமான தகுதி மற்றும் அத்துடன், ஆங்கிலத்தில் தேவையான தேர்ச்சி.

***

Post-Graduate Diploma in Translation Studies (PGDTS)

போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் டிரான்ஸ்லேசன் ஸ்டடிஸ்.

கால அளவு- 2 செமஸ்டர்கள்

சேர்க்கைக்கான தகுதி:
1. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் / முதுகலை பட்டம்.
2. வெளிநாட்டு மொழி கற்றவர்களாக இருந்தால், சென்ட்ரல் இன்ஸ்டியூட் ஆப் இங்கிலிஷ் அன்ட் பாரின் லாங்வேஜ்-ல் இருந்து குறிப்பிட்ட வெளிநாட்டு மொழியில் அட்வான்ஸ்ட் டிப்ளமோ (லெவல் 1.6) அல்லது அங்கீரிக்கப்பட்ட பல்கலைக்கழகம் / இன்ஸ்டியூட்டில் இருந்து இதற்கு சமமான தகுதி. அத்துடன், ஆங்கிலத்தில் தேவையான தேர்ச்சி.
3. இந்திய மொழி கற்றவர்களாக இருந்தால், குறிப்பிட்ட இந்திய மொழியில் மேற்கண்ட சமமான தகுதி மற்றும் அத்துடன் ஆங்கிலத்தில் தேவையான தேர்ச்சி.

******

அரபி மொழி

Part-Time Language Proficiency Programme in Arabic

அரபி மொழியில் தேர்ச்சி பெறுவதற்கான பகுதி நேர வகுப்பு

கால அளவு - 100 மணி நேரம்
சேர்க்கைக்கான தகுதி - பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமானது.
இதன் பாடத்திட்டம் லெவல் 1.0 முதல் 1.6 வரை உள்ளது. இதில் லெவல் 1.5 முடித்தவர்கள் எம்.ஏ. வகுப்பில் சேர தகுதி படைத்தவர்களாவர்கள். இதில் சேர விரும்புபவர்கள் அரபி மொழியில், அவர்களுக்குள்ள தேர்ச்சியை/ தகுதியைப் பொறுத்து எந்த நிலையிலும் சேரலாம்.

***

Part-Time Diploma in Translation (Arabic/English, English/Arabic)

பகுதி நேர மொழிபெயர்ப்பு டிப்ளமோ (அரபி மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு, ஆங்கிலத்தில் இருந்து அரபி மொழிக்கு)

கால அளவு - 100 மணி நேரம்

சேர்க்கைக்கான தகுதி - பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமானது.

இது பல நிலைகளிலானது. இதில் சேர விரும்புபவர்கள் அரபி மொழியில், அவர்களுக்குள்ள தேர்ச்சியை/ தகுதியைப் பொறுத்து எந்த நிலையிலும் சேரலாம். இந்த மொழிபெயர்ப்பு டிப்ளமோ முடித்தவர்கள், ஏதாவது ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருந்தால், அரபு மொழி எம்.ஏ படிப்பில் சேரலாம்.

***

M.A. in Arabic (Distance Mode)

அரபியில் எம்.ஏ., (தொலைதூர கல்வி)
கால அளவு - 3 வருடங்கள்
சேர்க்கைக்கான தகுதி - அரபியில் பட்டப்படிப்பு. அல்லது அரபியை விருப்ப பாடமாகக் கொண்ட பட்டப்படிப்பு அல்லது
ஏதேனும் பட்டப்படிப்பு, அத்துடன், அரபி மொழியில் இரண்டு வருட பட்டய படிப்பிற்கு சமமான படிப்பு.

***

M.A. in Arabic (Full Time)

அரபியில் எம்.ஏ., ( முழு நேரம் )
கால அளவு - 4 செமஸ்டர்கள்.
சேர்க்கைக்கான தகுதி - அரபியில் பட்டப்படிப்பு. அல்லது அரபியை விருப்ப பாடமாகக் கொண்ட பட்டப்படிப்பு அல்லது
ஏதேனும் பட்டப் படிப்பு, அத்துடன் அரபிக் மொழியில் இரண்டு வருட பட்டய படிப்பிற்கு சமமான படிப்பு.

***

Post-Graduate Diploma in the Teaching of Arabic (PGDTA)

அரபி மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ
கால அளவு - 2 செமஸ்டர்கள்.
சேர்க்கைக்கான தகுதி - அரபியில் எம்.ஏ., குறைந்தபட்சம் இரண்டாவது நிலையில் தேர்ச்சி.

***

M.Phil. in Arabic

அரபியில் எம்,பிஎல்.,
கால அளவு - 2 செமஸ்டர்கள்.

சேர்க்கைக்கான தகுதி - அரபியில் எம்.ஏ., அல்லது எம்.ஓ.எல். குறைந்தபட்சம் இரண்டாவது நிலையில் தேர்ச்சி.
அல்லது அரபியில் எம்.ஏ பட்டம் பெற்று, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 5 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி இருக்க வேண்டும்.

***

Ph.D. in Arabic

அரபியில் பிஎச்.டி.,
கால அளவு - 6 செமஸ்டர்கள்.
சேர்க்கைக்கான தகுதி - அரபியில் எம்.ஏ., முதல்நிலை தேர்ச்சி அல்லது அரபியில் எம்.ஏ., அல்லது எம்.ஓ.எல். குறைந்தபட்சம் இரண்டாவது நிலையில் தேர்ச்சி மற்றும் அரபி மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ அல்லது அரபியில் எம்.லிட்/ எம்.பில்., அல்லது சமமான தகுதி. அல்லது அரபியில் எம்.ஏ., அல்லது எம்.ஓ.எல். பட்டம் பெற்று, அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 7 ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றி இருக்க வேண்டும்.

***

Certificate of Proficiency in French

பிரெஞ்சு மொழியில் சான்றிதழ்
சேர்க்கைக்கான தகுதி - பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமம்.
காலம் அளவு :
நான் இன்டென்ஸிவ் - 2 செமஸ்டரில் 160 மணிநேரம்
இன்டென்ஸிவ் - 1 செமஸ்டரில் 160 மணிநேரம்

***

Diploma in French

பிரெஞ்சு மொழியில் பட்டயம் (டிப்ளமோ)
இன்ஸ்டியூட் ஆப் இங்கிலீஷ் அண்ட் பாரின் லாங்கேவேஜ் நிறுவனத்தில் சான்றிதழ் படிப்பில் குறைந்தபட்சம் 'சி' கிரேடில் தேர்ச்சி மற்றவர்கள் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
கால அளவு :
நான் இன்டென்ஸிவ் - 2 செமஸ்டரில் 160 மணிநேரம்
இன்டென்ஸிவ் - 1 செமஸ்டரில் 160 மணிநேரம்

***

Advanced Diploma in French

அட்வான்ஸ்ட் டிப்ளமோ இன் பிரெஞ்சு.
இன்ஸ்டியூட் ஆப் இங்கிலீஷ் அண்ட் பாரின் லாங்கேவேஜ் நிறுவனத்தில் பட்டயப் படிப்பில் குறைந்தபட்சம் 'சி' கிரேடில் தேர்ச்சி. மற்றவர்கள் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும்.
கால அளவு :
நான் இன்டென்ஸிவ் - 2 செமஸ்டரில் 160 மணிநேரம்
இன்டென்ஸிவ் - 1 செமஸ்டரில் 160 மணிநேரம்

(இந்தியன் கவுன்சில் ஆப் கல்ச்சுரல் ரிலேஷன் உதவித் திட்டத்தின் கீழ் பிரெஞ்சு மொழி பயிலும் வெளிநாட்டவர்களுக்கு கட்டணச் சலுகை உண்டு.)

***

M.A. in French (Distance Mode)

பிரஞ்சு மொழியில் எம்.ஏ., (அஞ்சல் வழி )
கால அளவு - 3 வருடங்கள்
சேர்க்கைக்கான தகுதி -
பிரெஞ்சு மொழியில் பட்டப்படிப்பு அல்லது பிரெஞ்சு மொழியை விருப்ப பாடமாகக் கொண்டு பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் பட்டப்படிப்புடன், பிரெஞ்சு மொழியில் இரண்டு வருட பட்டயப் (டிப்ளமோ) படிப்பிற்கு இணையான படிப்பில் தேர்ச்சி.

***

M.A. in French (Full Time)

பிரெஞ்சு மொழியில் எம்.ஏ., (முழு நேரம்)
காலம் - 4 செமஸ்டர்கள்
சேர்க்கைக்கான தகுதி -
பிரெஞ்சு மொழியில் பட்டப்படிப்பு அல்லது பிரெஞ்சு மொழியை விருப்ப பாடமாகக் கொண்ட பட்டப்படிப்பு அல்லது ஏதேனும் பட்டப்படிப்புடன், பிரெஞ்சு மொழியில் இரண்டு வருட பட்டயப் (டிப்ளமோ) படிப்பிற்கு இணையான படிப்பில் தேர்ச்சி.

***

Post Graduate Certificate in the Teaching of French (PGCTF)

பிரெஞ்சு மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜிவேட் சான்றிதழ்.
கால அளவு - 4 மாதங்கள் மற்றும் 1 வருடம்
சேர்க்கைக்கான தகுதி -
பிரெஞ்சு மொழியில் குறைந்த பட்சம் எம்.ஏ.,வில் தேர்ச்சி.

****

Post Graduate Diploma in the Teaching of French (PGCTF)

பிரெஞ்சு மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ
கால அளவு - 1 வருடம்.
பிரெஞ்சு மொழியில் குறைந்த பட்சம் எம்.ஏ.,வில் தேர்ச்சி.
கல்வி நிறுவனங்களால் அனுப்பபடுபவர்களைத் தவிர மற்றவர்கள் நுழைவுத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

***

M. Phil

பிரஞ்சு மொழியில் எம்.பில்.,
கால அளவு - 1 வருடம்.
சேர்க்கைக்கான தகுதி - பிரெஞ்சு மொழியில் எம்.ஏ., உயர் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது பி கிரேட் தேர்ச்சி. அல்லது பிரெஞ்சு மொழியில் எம்.ஏ., சி கிரேடில் தேர்ச்சி அத்துடன் பிரெஞ்சு மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜிவேட் சான்றிதழ்./ டிப்ளமோ அல்லது பிரெஞ்சு மொழியில் எம்.ஏ., அத்துடன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 5 ஆண்டுகள் பிரெஞ்சு மொழி ஆசிரியராக இருந்த அனுபவம்.

***

Ph.D.

பி.எச்.டி
கால அளவு - 3 வருடங்கள்.
சேர்க்கைக்கான தகுதி - பிரெஞ்சு மொழியில் எம்.ஏ., முதல் வகுப்பில் தேர்ச்சி அல்லது பிரெஞ்சு மொழியில் எம்.ஏ., இரண்டம் வகுப்பில் தேர்ச்சி அத்துடன் பிரெஞ்சு மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜிவேட் சான்றிதழ்./ டிப்ளமோ அல்லது பிரெஞ்சு மொழியில் எம்.பிஎல்., எம்.லிட் அல்லது சமமான தகுதி அல்லது பிரெஞ்சு மொழியில் எம்.ஏ., அத்துடன் அங்கிகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 7 ஆண்டுகள் பிரெஞ்சு மொழி ஆசிரியராக இருந்த அனுபவம்.

***

e-Master in French (online, MA plus MPhil)

பிரஞ்சு மொழியில் இ-மாஸ்டர் (ஆன்லைன், எம்,ஏ மற்றும் எம்.பில்.)
கால அளவு - 6 செமஸ்டர்கள்
சேர்க்கைக்கான தகுதி - பட்டப்படிப்பில் பிரெஞ்சு மொழியை விருப்பப் பாடமாக அல்லது இரண்டாவது மொழியாக கொண்டு தேர்ச்சி. அல்லது ஏதேனும் பட்டப்படிப்பு அத்துடன் பிரெஞ்சு மொழியில் டிப்ளமோ. (இரண்டு வருட மொழிப் பாடம் )

******

Part-Time Language Proficiency Programmes in German

ஜெர்மென் மொழியில் திறன் பாடத்திட்டம் பகுதி-நேரம்.
கால அளவு - 100 மணி நேரங்கள்
சேர்க்கைக்கான தகுதி - பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமம்.
பாடத்திட்ட நிலை - 1.0 முதல் 1.6 வரை
நிலை - 1.0 நவீன ஜெர்மென் மொழியில் ஆரம்ப கட்டம்.
நிலை- 1.1 ஜெர்மென் மொழியில் முன் தேர்ச்சி இல்லாதவர்களுக்கானது.
நிலை- 1.6 ஜெர்மென் மொழியில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கானது.
இதில் சேருபவர்கள் ஜெர்மென் மொழியில் உள்ள தகுதி, திறனை பொருத்து எந்த நிலையிலும் சேரலாம்.
நிலை- 1.5 இல் தேர்ச்சி பெற்றவர்கள் ஜெர்மென் மொழியில் எம்.ஏ.,வில் சேர விண்ணப்பிக்கலாம்.
நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

***

Part-Time Diploma in Translation

ஜெர்மென் மொழி பெயர்ப்பில் பட்டயம் (டிப்ளமோ)

இந்த இன்ஸ்டிட்யூட்டால் நடத்தப்படும் ஜெர்மென் மொழியில் 1.5 நிலையில் கிரேட் சி-யில் தேர்வு பெற்று இருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இதற்கு சமமான தகுதி.
இதில் நுழைவுத் தேர்வு மூலமே சேர்க்கப்படுவார்கள்.
இதில் ஆய்வு இதழ்கள், இலக்கியம், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப தகவல்களை ஆங்கிலத்தில் இருந்து ஜெர்மென் மொழிக்கும், ஜெர்மென் மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்க பயிற்சி அளிக்கப்படும்.

***

Diploma in Interpretation

இன்டர்பிரட்டேஷனில் பட்டயம் (டிப்ளமோ)
சேர்க்கைக்கான தகுதி - பி.ஏ பட்டப்படிப்பில் ஜெர்மென் மொழி முக்கிய பாடமாகவோ அல்லது விருப்பப் பாடமாகவோ இருக்க வேண்டும் அல்லது ஏதேனும் பட்டப்படிப்பு; அத்துடன், ஜெர்மென் மொழியில் 2-3 வருட படிப்பு.
இதில் நுழைவுத் தேர்வு மூலமே சேர்க்கப்படுவார்கள்.

***

M.A. in German (Distance Mode)

ஜெர்மென் மொழியில் எம்.ஏ., ( தொலைதூர கல்வி )
கால அளவு - 3 வருடங்கள்.
ஜெர்மென் மொழியை விருப்ப பாடமாகவோ அல்லது இரண்டாவது மொழி பாடமாகவோ கொண்டு படித்த பட்டப்படிப்பு.
அல்லது, ஏதேனும் பட்டப்படிப்பு அத்துடன் இரண்டு வருட ஜெர்மென் மொழி பட்டயப் படிப்பிற்கு சமமான படிப்பில் தேர்ச்சி.
இதில் நுழைவுத் தேர்வு மூலமே சேர்க்கப்படுவார்கள்.

***

M.A. in German (Full time)

ஜெர்மென் மொழியில் எம். ஏ., ( முழு நேரம் )
கால அளவு- 4 செமஸ்டர்கள்.
சேர்க்கைக்கான தகுதி - ஜெர்மென் மொழியை விருப்ப பாடமாகவோ அல்லது இரண்டாவது மொழி பாடமாகவோ கொண்டு படித்த பட்டப்படிப்பு. அல்லது ஏதேனும் பட்டப்படிப்பு; அத்துடன், இரண்டு வருட ஜெர்மென் மொழி பட்டயப் படிப்பிற்கு சமமான படிப்பில் தேர்ச்சி. இதில் நுழைவுத் தேர்வு மூலமே சேர்க்கப்படுவார்கள்.

***

Post-Graduate Certificate in the Teaching of German (PGCTG)

ஜெர்மென் மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜுவேட் சான்றிதழ்.
கால அளவு- 1 செமஸ்டர்.
சேர்க்கைக்கான தகுதி - ஜெர்மென் மொழி எம்.ஏ.,வில் குறைந்தபட்சம் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும்.
கல்வி நிறுவனங்களால் அனுப்பப்படுபவர்களைத் தவிர மற்றவர்கள் நுழைவுத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

***

Post-Graduate Diploma in the Teaching of German (PGDTG)

ஜெர்மென் மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ
கால அளவு- 2 செமஸ்டர்.
சேர்க்கைக்கான தகுதி - முதல் செமஸ்டரில் சேர ஜெர்மென் மொழி எம்.ஏ.,வில் குறைந்தபட்சம் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இரண்டாவது செமஸ்டரில் நேரடியாக சேர ஜெர்மென் மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜிவேட் சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்களால் அனுப்பப்படுபவர்களைத் தவிர மற்றவர்கள் நுழைவுத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

***

M.Phil. in German

ஜெர்மென் மொழியில் எம்.பில்.,

கால அளவு - 2 செமஸ்டர்
சேர்க்கைக்கான தகுதி - ஜெர்மென் மொழியில் எம்.ஏ., முதல் வகுப்பில் தேர்ச்சி அல்லது ஏ கிரேட் தேர்ச்சி.
அல்லது ஜெர்மென் மொழியில் எம்.ஏ., இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது பி கிரேட்டில் தேர்ச்சி; அத்துடன், ஜெர்மென் மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜிவேட் சான்றிதழ்/ டிப்ளமோ. அல்லது ஜெர்மென் மொழியில் எம்.ஏ., உடன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 7 ஆண்டுகள் ஜெர்மென் மொழி ஆசிரியராக பணியாற்றிய அனுபவம்.

***

Ph.D. in German

ஜெர்மென் மொழியில் பி.எச்.டி

கால அளவு - 6 செமஸ்டர்கள்
சேர்க்கைக்கான தகுதி- ஜெர்மென் மொழியில் எம்.ஏ., முதல் வகுப்பில் தேர்ச்சி அல்லது ஏ கிரேட் அல்லது ஜெர்மென் மொழியில் எம்.ஏ., இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி; அத்துடன், ஜெர்மென் மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜிவேட் சான்றிதழ்/ டிப்ளமோ
அல்லது ஜெர்மென் மொழியில் எம்.பிஎல்., எம்.லிட் அல்லது சமமான தகுதி அல்லது ஜெர்மென் மொழியில் எம்.ஏ., உடன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 7 ஆண்டுகள் ஜெர்மென் மொழி ஆசிரியராக இருந்த அனுபவம்.

******

Part-Time Language Proficiency Programmes in Spanish

ஸ்பானிஷ் மொழியில் திறன் பாடத்திட்டம் பகுதி-நேரம்
கால அளவு - 100 மணி நேரங்கள்
சேர்க்கைக்கான தகுதி - பத்தாம் வகுப்பு தேர்ச்சி அல்லது அதற்கு சமம்.
பாடத்திட்ட நிலை - 1.0 முதல் 1.6 வரை.
நிலை - 1.0 நவீன ஸ்பானிஷ் மொழியில் ஆரம்ப கட்டம்.
நிலை- 1.1 ஸ்பானிஷ் மொழியில் முன் தேர்ச்சி இல்லாதவர்களுக்கானது.
நிலை- 1.6 ஸ்பானிஷ் மொழியில் நன்கு தேர்ச்சி பெற்றவர்களுக்கானது.
இதில் சேருபவர்கள், ஸ்பானிஷ் மொழியில் உள்ள தகுதி, திறனை பொருத்து எந்த நிலையிலும் சேரலாம்.
நிலை- 1.5ல் தேர்ச்சி பெற்றவர்கள் ஸ்பானிஷ் மொழியில் எம்.ஏ.,வில் சேர விண்ணப்பிக்கலாம்.
நுழைவுத் தேர்வு மூலம் மாணவர்கள் சேர்க்கப்படுவார்கள்.

***

Part-Time Diploma in Translation

ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பில் பட்டயம் (டிப்ளமோ) பகுதி நேரம்.

இந்த இன்ஸ்டிட்யூட்டால் நடத்தப்படும் ஸ்பானிஷ் மொழியில் 1.5 நிலையில், கிரேட் சி-யில் தேர்வு பெற்று இருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இதற்கு சமமான தகுதி.
இதில் நுழைவுத் தேர்வு மூலமே சேர்க்கப்படுவார்கள். இதில் ஆய்வு இதழ்கள், இலக்கியம், விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப தகவல்களை ஆங்கிலத்தில் இருந்து ஸ்பானிஷ் மொழிக்கும், ஸ்பானிஷ் மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு மொழிபெயர்க்க பயிற்சி அளிக்கப்படும்.

***

M.A. in Spanish (Distance Mode)

ஸ்பானிஷ் மொழியில் எம்.ஏ., ( தொலைதூர கல்வி )
கால அளவு - 3 வருடங்கள்.
ஸ்பானிஷ் மொழியை விருப்ப பாடமாகவோ அல்லது இரண்டாவது மொழி பாடமாகவோ கொண்டு படித்த பட்டப்படிப்பு.
அல்லது ஏதேனும் பட்டப்படிப்பு அத்துடன் இரண்டு வருட ஸ்பானிஷ் மொழி பட்டயப் படிப்பிற்கு சமமான படிப்பில் தேர்ச்சி.
இதில் நுழைவுத் தேர்வு மூலமே சேர்க்கப்படுவார்கள்.

***

M.A. in Spanish (Full Time)

ஸ்பானிஷ் மொழியில் எம். ஏ., ( முழு நேரம் )
கால அளவு - 4 செமஸ்டர்கள்.
சேர்க்கைக்கான தகுதி : ஸ்பானிஷ் மொழியை விருப்ப பாடமாகவோ அல்லது இரண்டாவது மொழி பாடமாகவோ கொண்டு படித்த பட்டப்படிப்பு. அல்லது ஏதேனும் பட்டப்படிப்பு அத்துடன் இரண்டு வருட ஸ்பானிஷ் மொழி பட்டயப் படிப்பிற்கு சமமான படிப்பில் தேர்ச்சி. இதில் நுழைவுத் தேர்வு மூலமே சேர்க்கப்படுவார்கள்.

***

Post-Graduate Certificate in the Teaching of Spanish (PGCTS)

ஸ்பானிஷ் மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜுவேட் சான்றிதழ்.
கால அளவு- 1 செமஸ்டர்.
சேர்க்கைக்கான தகுதி : ஸ்பானிஷ் மொழி எம்.ஏ., முதுநிலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். கல்வி நிறுவனங்களால் அனுப்பப்படுபவர்களைத் தவிர மற்றவர்கள் நுழைவுத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.

***

Post-Graduate Diploma in the Teaching of Spanish (PGDTS)

ஸ்பானிஷ் மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ
கால அளவு - 2 செமஸ்டர்.
சேர்க்கைக்கான தகுதி : முதல் செமஸ்டரில் சேர ஸ்பானிஷ் மொழி எம்.ஏ., முதுநிலை பட்டப்படிப்பில் குறைந்தபட்சம் இரண்டாம் வகுப்பு அல்லது சி கிரேடில் தேர்ச்சி பெற்று இருக்க வேண்டும். இரண்டாவது செமஸ்டரில் நேரடியாக சேர ஸ்பானிஷ் மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜிவேட் சான்றிதழ் பெற்று இருக்க வேண்டும்.

கல்வி நிறுவனங்களால் அனுப்பப்படுபவர்களைத் தவிர மற்றவர்கள் நுழைவுத் தேர்வின் மூலம் தேர்ந்தெடுக்கப் படுவார்கள்.

***

M.Phil. in Spanish (Distance Mode)

ஸ்பானிஷ் மொழியில் எம்.பில்., (தொலை நிலைக் கல்வி )
கால அளவு - 20 மாதங்கள்
சேர்க்கைக்கான தகுதி : ஸ்பானிஷ் மொழியில் எம்.ஏ., முதல் வகுப்பில் தேர்ச்சி அல்லது ஏ கிரேட் தேர்ச்சி. அல்லது
ஸ்பானிஷ் மொழியில் எம்.ஏ., இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது பி கிரேட்டில் தேர்ச்சி; அத்துடன், ஸ்பானிஷ் மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜிவேட் சான்றிதழ்/ டிப்ளமோ அல்லது ஸ்பானிஷ் மொழியில் எம்.ஏ., உடன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 7 ஆண்டுகள் ஸ்பானிஷ் மொழி ஆசிரியராக பணியாற்றிய அனுபவம்.

M.Phil. in Spanish

ஸ்பானிஷ் மொழியில் எம். பில்.,

கால அளவு - 2 செமஸ்டர்
சேர்க்கைக்கான தகுதி : ஸ்பானிஷ் மொழியில் எம்.ஏ., முதல் வகுப்பில் தேர்ச்சி அல்லது ஏ கிரேட் தேர்ச்சி. அல்லது, ஸ்பானிஷ் மொழியில் எம்.ஏ., இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி அல்லது பி கிரேட்டில் தேர்ச்சி; அத்துடன், ஸ்பானிஷ் மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜிவேட் சான்றிதழ்./ டிப்ளமோ அல்லது ஸ்பானிஷ் மொழியில் எம்.ஏ., உடன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 7 ஆண்டுகள் ஸ்பானிஷ் மொழி ஆசிரியராக பணியாற்றிய அனுபவம்.

***

Ph.D. in Spanish

ஸ்பானிஷ் மொழியில் பி.எச்.டி

கால அளவு - 6 செமஸ்டர்கள்.
சேர்க்கைக்கான தகுதி : ஸ்பானிஷ் மொழியில் எம்.ஏ., முதல் வகுப்பில் தேர்ச்சி அல்லது ஏ கிரேட் தேர்ச்சி. அல்லது, ஸ்பானிஷ் மொழியில் எம்.ஏ., இரண்டாம் வகுப்பில் தேர்ச்சி; அத்துடன், ஸ்பானிஷ் மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜிவேட் சான்றிதழ்./ டிப்ளமோ அல்லது ஸ்பானிஷ் மொழியில் எம்.பிஎல்., எம்.லிட் அல்லது சமமான தகுதி அல்லது ஸ்பானிஷ் மொழியில் எம்.ஏ., உடன் அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் 7 ஆண்டுகள் ஸ்பானிஷ் மொழி ஆசிரியராக இருந்த அனுபவம்.

மேலும் விபரங்களுக்கு தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:

The Head,

Centre for Hispanic Studies,

Central Institute of English and Foreign Languages,

Hyderabad-500 007

******

Central Institute of English and Foreign Languages, Hyderabad குறித்து முழுமையாக அறிய...
http://www.efluniversity.ac.in/

செவ்வாய், 30 ஜூன், 2009

”கிரையப் பத்திரத்தின் மூலம் சொத்து சொந்தமாகிவிடுவதில்லை” - ‘சொத்து ஆலோசகர்' திரு. பீட்டருட‎ன் ஒரு நேர்காணல்

“வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்!” எ‎ன்று கூறுவார்கள். இரண்டும் சாதாரண விஷயமல்ல எ‎ன்பதே அதன் தொனி. வீடு, நிலம் போ‎‎ன்ற அசையா சொத்துக்கள் வாங்கும் போது, அதற்கு சட்ட ரீதியில், முறையான வழிமுறை எ‎ன்ன என்பதைப் பலரும் அறிந்திருப்பதில்லை. அரைகுறையாகக் கேள்விப்படும் விபரங்களை வைத்தும், பழக்கமானவர்கள் சொல்கிறார்களே எ‎ன்பதைக் கருத்தில் கொண்டும் சொத்துக்களை வாங்கி விடுகி‎‎ன்றனர். சொத்து சரியான முறையில் பதிவு செய்யப்படாதபோது உரிமையாளர்கள் பல ‏ இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது; சில சமயம் தமது சொத்துக்களைக் கூட இழக்கும்படி ஆகி விடுகிறது.

செ‎ன்னை தி.நகரில் இயங்கும் ட்ரைஸ்டார் ஹௌஸிங் பி லிட்(Tristar Housing Pvt Ltd) என்ற நிறுவனம் சொத்துக்கள் குறித்து ஆலோசனைகள் வழங்குவதோடு, அவற்றைப் பராமரிப்பதிலும் வாடிக்கையாளர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. இந்நிறுவனத்தி‎ன் நிர்வாக இயக்குனர் திரு. பீட்டர் அவர்களை சந்தித்தோம்.

George Peter“நாம் வாங்குகிற சொத்துக்களை உரிய வகையில் பதிவு செய்தல் மிகவும் அவசியம். பொதுமக்களில் பலருக்கு அந்த விழிப்புணர்வு இருப்பதில்லை. பல சொத்துப்பிரச்சினைகளுக்கு இது மூலகாரணமாக அமைந்துவிடுகிறது” எ‎ன்கிறார் பீட்டர்.

இது குறித்து பல நுணுக்கமான தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொ‎ண்டார். அவருட‎னான ஒரு பயனுள்ள நேர்காணல் இதோ:

சொத்து வாங்கும்போதோ அல்லது விற்கும்போதோ அரசாங்கத்தி‎ன் எந்தெந்தத் துறைகளை நா‎ம் அணுக வேண்டும்?

மாநில அரசி‎ன் பதிவுத் துறை (Registration Department)யும், வருவாய்த் துறை (Revenue Department)யும், சொத்துப் பரிமாற்றத்தில் சம்பந்தப்படும். சொத்து வாங்கியபி‎ன்‏ இவ்விரு துறைகளிலும் உரிமையாளரின் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்.

பதிவுத் துறையில் நாம் செய்ய வேண்டிய கடமைகள் எ‎ன்ன? சொத்து சம்பந்தமாக அந்தத் துறை பராமரிக்கும் விவரங்களைப் பற்றிக் கூறுங்களே‎ன்.

நாம் கிரையப் பத்திரம் (Sale Deed) செய்யும் சார்பதிவாளர் அலுவலகம் (Sub-Registration Office), பதிவுத் துறை (Registration Department)யின் கீழ் வருகிறது. இங்கு நாம் மற்றவரிடம் இருந்து இடம் வாங்கும்போது அதற்காக அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் 8% முத்திரை தீர்வையாகவும் மற்றும் 1% பதிவுக் கட்டணமாகவும் செலுத்துகிறோம். ஆகவே, நாம் இடம் வாங்குவதற்கு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தவும் மற்றும் நிலம் விற்பவரும் வாங்குபவரும் சார்பதிவாளர் முன்னிலையில் கிரையப் பத்திரத்தில் கையொப்பம் இடவும் சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டி இருக்கிறது.

இந்தத் துறையின் பதிவேட்டில் ஒருவரிடம் இருந்து மற்றவர் இந்த இடத்தை வாங்கி இருக்கிறார்; அதற்கான பத்திர எண் இது என்ற விபரம் மட்டுமே இருக்கும். நிலத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்பது பற்றி இந்தத் துறை அக்கறை கொள்வதில்லை எ‎ன்பது குறிப்பிடத்தகுந்த விஷயம். ‏ இ‏தை முக்கியமாக மனதில் கொள்ள வேண்டும்.

அப்படியானால் உரிமையாளர் பெயரை எங்கே மாற்றம் செய்ய வேண்டும்?

வருவாய்த் துறை (Revenue Department)யில்தான் நிலத்திற்கான விவரங்கள் அ‎னைத்தும் இருக்கும். பட்டா (Patta), சிட்டா (Chitta), அடங்கல் (Adangal), 'அ' பதிவேடு (‘A' Register), நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) என ஐந்து வகையான பதிவேடுகளை‏ இந்தத் துறை பராமரிக்கிறது.

நிலத்தின் உரிமை நமக்குத்தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம்தா‎ன் பட்டா என்பது. ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை முடிவு செய்வதே பட்டாவை வைத்துத்தான். அதில் மாவட்டத்தின் பெயர் மற்றும் ஊரின் பெயர், பட்டா எண், உரிமையாளர் பெயர் போ‎ன்ற விவரங்களுட‎ன், புல எண்ணும், உட்பிரிவும், (Survey Number and Subdivision), நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா எ‎ன்னும் விவரமும், நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வையி‎ன் விவரங்களும் இருக்கும்.

ஒரு தனி நபருக்கு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடுதான் சிட்டா என்பது. இதில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய் பயன்பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.

ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடுதா‎ன் ‘அடங்கல்' என்பது. இதில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்ன போன்ற விவரங்கள் இதில் இருக்கும்.

'அ' பதிவேட்டில் (‘A' Register) கீழ்க்கண்ட விபரங்கள் இருக்கும்:

1. பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
2. ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ),
3. நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு,
4. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,
5. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும்.

நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) இடம் எவ்வாறு பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. நிலங்கள் ஏதாவது ஒரு கிராமத்தின் கீழ் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு எ‎ண் கொடுக்கப்படும். அதுவே சர்வே எண் எ‎ன்பது. நம் கிரையப் பத்திரத்தில் சொத்து விவரம் (Schedule) பகுதியில் நம்முடைய இடம் எந்த சர்வே எண்ணில் வருகிறது என குறிக்கப்பட்டிருக்கும்.

இவை அனைத்திலுமே உரிமையாளர் பெயர் மாற்றப்பட வேண்டும் என்பது மனதில் கொள்வது மிகவும் அவசியம்.

இதில் இவ்வளவு விஷயங்கள் ‏இருக்கி‎ன்றனவா! சரி.. வருவாய்த் துறையில் நம்முடைய ஆவணங்களைப் பெயர் மாற்றம் செய்யத் தவறிவிட்டால் எ‎ன்னவாகும் எ‎ன்பதைப் பற்றியும் கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்களே‎ன்.

பட்டா பெயர் மாற்றம் செய்யாவிட்டால் வருவாய்த் துறையின் ஆவணங்களின் படி நீங்கள் உரிமையாளர் அல்ல. பட்டா யார் பெயரில் இருக்கிறதோ அவர்தான் உரிமையாளர். ஒரு வேளை அரசாங்கம் நம்முடைய நிலத்தை கையகப்படுத்தினால், அதற்கான இழப்பீட்டுத் தொகை பட்டா யார் பெயரில் இருக்கிறதோ அவர்களுக்கு வழங்கப்படும்.

நீங்கள் பட்டா பெயர் மாற்றம் செய்யவில்லை என்பதை உங்களுக்கு இடத்தை விற்றவர் தொரிந்து கொண்டால் அவர் பெயரில்
வரி செலுத்தி விடுவார். மேலும் அடங்கல் அவர் பெயருக்கு ஒவ்வொரு வருடமும் வாங்கி வைத்துக் கொள்வார். அடங்கல் அவர் பெயரில் இருந்தாலே அவர்தான் அதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது உறுதியாகி விடும். நாம் வேறொருவருக்கு விற்பனை செய்யும்போது இது பிரச்சினையைக் கொடுக்கும். எனவே, நம் இடத்தை கிரையப் பத்திர மூலம் பதிவு செய்து வாங்கி விட்டோம், எல்லாம் முடிந்துவிட்டது என இருக்கக் கூடாது. உடனே பட்டா பெயர் மாற்றம் செய்து வருவாய்த் துறையின் அனைத்து பதிவேடுகளையும் நமது பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும்.

பலரது கனவான சொத்துக்கள் வாங்குவது சம்பந்தமான பல உபயோகமான தகவல்களை மிக விளக்கமாகக் கூறினீர்கள். மிக்க ந‎ன்றி!

பீட்டர் அவர்களின் ஆலோசனை பெற விரும்புவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்:
0091 44 2431 243
நன்றி :நிலாச்சாரல்

திங்கள், 22 ஜூன், 2009

தினேஷ்குமார் IPS பேட்டி

தினேஷ்குமார் IPS பேட்டி

சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்திய அளவில் 345-வது ரேங்க் பெற்று ஐபிஎஸ் ஆனவர் தினேஷ்குமார். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகிலுள்ள சின்னதண்டா கிராமத்தை சேர்ந்தவர். இவர் பொது அறிவு உலகம் இதழுக்காக பேட்டியளித்தார்.

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிப் பெற்றதற்காக "பொது அறிவு உலகம் இதழ்' சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

""ரொம்ப நன்றிங்க. பொது அறிவு உலகம் இதழை நானும் வாங்கி படித்துள்ளேன். மிகவும் அருமையான இதழ். அனைத்து போட்டித் தேர்வுகளையும் எழுதுவோருக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது.

உங்களை பற்றி சொல்லுங்கள்?

நான் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவன். சின்னதண்ட என்ற கிராமம் தான் எனது சொந்த ஊர். விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவன். பள்ளி படிப்பை மேட்டூர் செயின்ட் மேரீஸ் பள்ளியில் படித்தேன். அதன் பின் கோவை வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பி.எஸ்.சி அக்ரி படித்து முடித் தேன். அப்போது கல்லூரி சீனியரான சங்கர் ஐ.ஏ.எஸ் அகா டமியை நடத்தி வரும் சங்கர் சார் தான் எனக்கு சிவில் சர்வீசஸ் தேர்வை எழுத சொல்லி பயிற்சியும், ஊக்க மும் கொடுத்தார். அவரால்தான் இத்தேர்வில் என் னால் வெற்றி பெற முடிந்தது.

என்னென்ன விருப்பப்பாடத்தை தேர்ந்தெடுத்தீர் கள்?

பிரிலிமனரி தேர்வில் புவியியல் பாடத்தை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்தேன். மெயின் தேர்வுக்கு புவியியல் பாடத்தை ஒரு விருப்பப்பாடமாகவும், வேளாண்மை பாடத்தை இன்னொரு விருப்பப் பாடமாகவும் தேர்ந்தெடுத்தேன்.

தேர்வுக்கு எப்படி தயார் செய்தீர்கள்?

பிரிலிமனரி, மெயின் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் உள்ளது. அவற்றை குறிப்பெடுத்து படிக்க மிகவும் உதவியாக இருந்தது. சங்கர் சார் சிலபஸில் வரும் அனைத்து பாடப் பிரிவு களுக்கும் தக்கவாறு நோட்டீஸ் கொடுப்பார். அவற்றை கவனமுடன் படித்தேன். வாரந் தோறும் தேர்வு நடத்தப்படும். அதனை சங்கர் சார் மதிப்பீடு செய்து உரிய ஆலோசனை கூறுவார். குழுவிவாதம் செய்து படித்தோம். இவையெல்லாம் இத்தேர்வை நல்லமுறையில் எழுத உதவி புரிந்தது.

நேர்முகத் தேர்வு எப்படி இருந்தது?

நான் ஆங்கிலத்திலேயே மெயின் தேர்வை எழுதியதால், நேர்முகத் தேர்வையும் ஆங்கிலத்திலேயே எதிர்கொண்டேன். எங்கள் பயிற்சி நிறுவனத்தில் மாதிரி இன்டர்வியூ நடத்தப்பட்டது. அதுதான் பெரும் உதவியாக இருந்தது. நேர்முகத்தேர்வில் சமீபத்தில் நடப்பு நிகழ்வுகள், தமிழகம் எதிர்நோக்கும் நதிநீர் பிரச்சினைகள் போன்றவற்றில் அதிகம் கேள்வி கேட்டனர். அவை அனைத்துக்கும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையாக பதில் தந்தேன். யுபிஎஸ்சி குழுவினரும் நல்ல அணுகுமுறையுடன் கேள்வி கேட்டதால் பதட்டப்படாமல் பதில் தர முடிந்தது.

"பொது அறிவு உலகம்' இதழைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

"பொது அறிவு உலகம் இதழ் மேட்டூரில் கிடைப்பதால் தவறாமல் வாங்கி படிப்பேன். அதில் வரும் கட்டுரைகள், நடப்பு நிகழ்வுகள் இந்த தேர்வுக்கான தயாரிப்பில் உதவியாக இருந்தது. இறையன்பு ஐஏஎஸ் சிவில் சர்வீசஸ் பற்றி கூறிய பதில்கள் தேர்வை பற்றி புரிந்துகொள்ள உதவியாக இருந்தது. நக்கீரன் பதிப்பகம் வெளியிட்ட டாக்டர் அகிலன் இராம்நாதன் அவர்கள் எழுதிய " ஐஏஎஸ் யாரும் ஆகலாம்!' என்ற நூல் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுவோருக்கு சிறப்பாக வழிகாட்டும் நூல். அது எனக்கு உதவிகரமாக இருந்தது.

ஆட்சிப்பணி தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை!

IAS தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை!



அயராத உழைப்பும், அசைக்க முடியாத நம்பிக்கையும் இருந்தால் யார் வேண்டுமானா லும் கலெக்டராக முடியும்! என்கிறார்கள் இந்த ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் சாதித்துக் காட்டிய சமகால இளைஞர்கள்.

சென்ற ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்திய காவல் பணி (IPS), வெளியுறவுப் பணி (IFS), இந்திய வருவாய் பணி (IRS) உள்ளிட்ட இந்திய அரசின் உயர் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தேர்வு நடத்தப் பட்டது. இத்தேர்விற்கு மூன்று இலட்சத்து 18 ஆயிரத்து 843 பேர் விண்ணப்பித்தனர். முதன்மை தேர்வெழுதிய (Preliminary Exam) ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 35 பேரில், 11 ஆயிரத்து 849 பேர் பிரதானத் தேர்வுக்கு (Main Exam) தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் அதிக ரேங்க் எடுத்தவர்களை கொண்டு நேர்முகத் தேர்வு நடத்தி 791 பேர் சிவில் சர்வீசஸ் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் 625 பேர் ஆண்கள், 166 பேர் பெண்கள். இதில் 364 பேர் பொதுப்பிரிவு (13 பேர் உடல் ஊனமுற்றோர்), 236 பேர் இதர பிற்படுத்தப் பட்டோர் (7 பேர் உடல் ஊனமுற்றோர்), 130 பேர் அட்டவணை வகுப்பினர், 61 பேர் அட்ட வணை பழங்குடியினர் ஆவர்.

வழக்கம் போல இந்த வருடமும் ஐஐடியில் படிக்கும் மாணவர்களே முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் ரூர்க்கி ஐஐடியில் பொறியியல் படித்த சுப்ரா சக்சேனா முதலிடத்தை பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற சரண்தீப் கவுர் பிரார் இரண் டாம் இடம் பெற்றார்.

அவ்வகையில் நம் தமிழக மாணவர்களும் எவ்வகையிலும் சளைத்தவர்கலல்ல என்பதை நிரூபித்துள்ளனர். 96 பேர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். அதில் அகில இந்திய அளவில் முதல் 25 இடங்களைப் பெற்றவர்களில் மூவர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கிராமப்புறங்களை சேர்ந்தவர்களும் முதல் முயற்சியிலேயே வென்றவர்களும் ஏராளம். மெட்ரி குலேஷன் பள்ளிதான் சிறந்த கல்வியை தருகிறது என ஆங்கில மோகத்துடன் உள்ள தமிழகத்தில், அரசு பள்ளிகளில் படித்த பலபேர் ஐஏஎஸ் தேர்வில் வென்றிருப்பது சாதனையிலும் சாதனை.

தமிழகத்தில் முதலிடம்

ஐஏஎஸ் தேர்வில் இந்தியா அளவில் ஓன்பதாவது ரேங்கையும், தமிழ்நாடு அளவில் முதலிடத்தையும் பெற்றவர் சசிகாந்த் செந்தில். சொந்த ஊர் செங்கல்பட்டு. தந்தை சண்முகம் ஓய்வுப் பெற்ற மாவட்ட நீதிபதி தாயார் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். தமது கடின உழைப்பின் மூலம் ஐஏஎஸ் ஆகியுள் ளார். இதைப்பற்றி சசிகாந்த் செந்தில் ""இந்த ரேங்க் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. கணேஷ் என்பவர் மூலமாகவும், தமிழ்நாடு அரசு கோச்சிங் சென்டரிலும் பயிற்சிப் பெற்றேன். இதன் மூலம் வெற்றிப் பெற்றேன். இந்தத் தேர்வை எதிர்கொள்ள

விரும்பும் மாணவர்கள், மனதளவில் முதலில் தயாராகிவிட வேண்டும். பின்னர் விரிவாக பயில வேண்டும'' என்றார்.

பரோட்டா கடையில் வேலை செய்து கொண்டு, படித்தேன் ஐஏஎஸ் ஆனேன்!

சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்தியா அளவில் 53-வது ரேங்க் பெற்றவர் வீரபாண்டியன். மதுரையில் உள்ள அருந்தமிழர் குடியிருப்பைச் சேர்ந்தவர். தந்தை கணேசன் தலையில் சுமந்து பித்தளை வியாபாரம் செய்து வருகிறார். தாயார் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் துப் புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.

பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்தாலும் தனது தளராத முயற்சியாளும் கடின உழைப்பினாலும் இத்தேர்வில் வெற்றிப்பெற்று ஐஏஎஸ் ஆகியுள்ளார். அதுப்பற்றி வீரபாண்டியன் குறிப்பிடும்போது

""நான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன். பொருளாதார வசதி கிடையாது. ஆனாலும் படிக்க வேண் டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தது. மதுரை மாநகராட்சி பள்ளியில் பனிரெண் டாம் வகுப்புவரை படித்தேன். படிப்பு செலவுக்கு பணமில்லாத தால் பரோட்டா கடையில் பகுதிநேர வேலை செய்துக் கொண்டே படித்தேன். பிளஸ் டூ தேர்வில் புவியியல் பாடத்தில் மாநில அளவில் முதல் இடம் பெற்றேன். இதற்காக முதல்வர் கருணாநிதியிடம் ஒரு இலட்சம் ரூபாய் பரிசு பெற்றேன். பின்னர் சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. சமூகவியல் சேர்ந்தேன். அங்கும் இலவசமாகத்தான் படித்தேன். இதையடுத்து சென்னை சட்டக்கல்லூரியில் சேர்ந்து இரண்டாமாண்டு பி.எல். படித்துக் கொண்டே சிவில் சர்வீசஸ் தேர்வெழுதி வெற்றிப் பெற்றேன். எனது முயற்சியும், உழைப்பும் வீண்போகவில்லை. அதன் பரிசாக ஐ.ஏ.எஸ் கிடைத்தள்ளது. இதன் மூலம் ஏழை மக்களுக்கு உண்மையாக பணிபுரிவேன்'' என்றார். எந்த இலட்சியத்தையும் அடைய பொருளாதாரம் ஒரு தடையாக இருக்க முடியாது என்பதை வீரப்பாண்டியன் நிரூபித்து உள்ளார்.

முதல் முயற்சியிலேயே வெற்றி!

அகில இந்திய அளவில் 95-வது இடத்தைப் பிடித்துள்ளார் சென்னையைச் சேர்ந்த சுப்ரஜா, என்ஜினியரிங் பட்டதாரியான இவர், தமது முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதைப் பற்றி இவர் கூறுகையில், ""கல்லூரி இறுதியாண்டு படித்தபோது ஐ.ஏ.எஸ் படிப்பு மீது ஆர்வம் ஏற்பட்டது. நான் புரபஷனல் கோர்ஸ் படித்திருந்தாலும் என் விருப்பத்திற்கு பெற்றோர் தடைவிதிக்கவில்லை. அதனால் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயார் செய்தேன். அதற்கு முதல்நிலைத் தேர்வில் புவியியல் விருப்பப்பாடமாகவும், பிரதானத் தேர்வில் புவியியல் மற்றும் உள வியல் பாடங்களை தேர்ந்தெடுத்து படித் தேன். சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி சங்கர் சார் எனக்கு வழிகாட்டினார். அதனால் எளிதாக வெற்றிப் பெற்றேன். ஐ.ஏ.எஸ் தான் முதல் விருப்பம். அது இல்லா விட்டால் ஐஆர்எஸ் கிடைக்குமென எதிர்பார்க்கிறேன். இந்த தேர்வு கடினமாக நடத்தப்பட்டாலும் தங்களுக்கு விருப்பமான பாடத்தைத் தேர்ந்தெடுத்து, மனதை ஒருநிலைப்படுத்தி படித்தால், யார் வேண்டுமா னாலும் வெற்றி பெறலாம்'' என்றார். முதல் முயற்சியில் வெற்றிப் பெற்றது மிகவும் பாராட்டுக்குரியது. சரியான திட்டமிடலும் கடின உழைப்பும் இருந்தால்தான் முதல் முயற்சியில் வெற்றிப் பெற முடியும்.

சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்திய அளவில் 345-வது ரேங்க் பெற்று ஐபிஎஸ் ஆனவர் தினேஷ்குமார். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகிலுள்ள சின்னதண்டா கிராமத்தை சேர்ந்தவர். இவர் பொது அறிவு உலகம் இதழுக்காக பேட்டியளித்தார்.

சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிப் பெற்றதற்காக "பொது அறிவு உலகம் இதழ்' சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.

""ரொம்ப நன்றிங்க. பொது அறிவு உலகம் இதழை நானும் வாங்கி படித்துள்ளேன். மிகவும் அருமையான இதழ். அனைத்து போட்டித் தேர்வுகளையும் எழுதுவோருக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது.

உங்களை பற்றி சொல்லுங்கள்?

நான் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவன். சின்னதண்ட என்ற கிராமம் தான் எனது சொந்த ஊர். விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவன். பள்ளி படிப்பை மேட்டூர் செயின்ட் மேரீஸ் பள்ளியில் படித்தேன். அதன் பின் கோவை வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பி.எஸ்.சி அக்ரி படித்து முடித் தேன். அப்போது கல்லூரி சீனியரான சங்கர் ஐ.ஏ.எஸ் அகா டமியை நடத்தி வரும் சங்கர் சார் தான் எனக்கு சிவில் சர்வீசஸ் தேர்வை எழுத சொல்லி பயிற்சியும், ஊக்க மும் கொடுத்தார். அவரால்தான் இத்தேர்வில் என் னால் வெற்றி பெற முடிந்தது.

என்னென்ன விருப்பப்பாடத்தை தேர்ந்தெடுத்தீர் கள்?

பிரிலிமனரி தேர்வில் புவியியல் பாடத்தை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்தேன். மெயின் தேர்வுக்கு புவியியல் பாடத்தை ஒரு விருப்பப்பாடமாகவும், வேளாண்மை பாடத்தை இன்னொரு விருப்பப் பாடமாகவும் தேர்ந்தெடுத்தேன்.

தேர்வுக்கு எப்படி தயார் செய்தீர்கள்?

பிரிலிமனரி, மெயின் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் உள்ளது. அவற்றை குறிப்பெடுத்து படிக்க மிகவும் உதவியாக இருந்தது. சங்கர் சார் சிலபஸில் வரும் அனைத்து பாடப் பிரிவு களுக்கும் தக்கவாறு நோட்டீஸ் கொடுப்பார். அவற்றை கவனமுடன் படித்தேன். வாரந் தோறும் தேர்வு நடத்தப்படும். அதனை சங்கர் சார் மதிப்பீடு செய்து உரிய ஆலோசனை கூறுவார். குழுவிவாதம் செய்து படித்தோம். இவையெல்லாம் இத்தேர்வை நல்லமுறையில் எழுத உதவி புரிந்தது.

நேர்முகத் தேர்வு எப்படி இருந்தது?

நான் ஆங்கிலத்திலேயே மெயின் தேர்வை எழுதியதால், நேர்முகத் தேர்வையும் ஆங்கிலத்திலேயே எதிர்கொண்டேன். எங்கள் பயிற்சி நிறுவனத்தில் மாதிரி இன்டர்வியூ நடத்தப்பட்டது. அதுதான் பெரும் உதவியாக இருந்தது. நேர்முகத்தேர்வில் சமீபத்தில் நடப்பு நிகழ்வுகள், தமிழகம் எதிர்நோக்கும் நதிநீர் பிரச்சினைகள் போன்றவற்றில் அதிகம் கேள்வி கேட்டனர். அவை அனைத்துக்கும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையாக பதில் தந்தேன். யுபிஎஸ்சி குழுவினரும் நல்ல அணுகுமுறையுடன் கேள்வி கேட்டதால் பதட்டப்படாமல் பதில் தர முடிந்தது.

"பொது அறிவு உலகம்' இதழைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?

"பொது அறிவு உலகம் இதழ் மேட்டூரில் கிடைப்பதால் தவறாமல் வாங்கி படிப்பேன். அதில் வரும் கட்டுரைகள், நடப்பு நிகழ்வுகள் இந்த தேர்வுக்கான தயாரிப்பில் உதவியாக இருந்தது. இறையன்பு ஐஏஎஸ் சிவில் சர்வீசஸ் பற்றி கூறிய பதில்கள் தேர்வை பற்றி புரிந்துகொள்ள உதவியாக இருந்தது. நக்கீரன் பதிப்பகம் வெளியிட்ட டாக்டர் அகிலன் இராம்நாதன் அவர்கள் எழுதிய " ஐஏஎஸ் யாரும் ஆகலாம்!' என்ற நூல் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுவோருக்கு சிறப்பாக வழிகாட்டும் நூல். அது எனக்கு உதவிகரமாக இருந்தது.

சனி, 20 ஜூன், 2009

வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற வாய்ப்பு: அரியலூர் கலெக்டர் தகவல்

The image “http://www.omcmanpower.com/ani2.gif” cannot be displayed, because it contains errors.


அரியலூர்: வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற, தஞ்சாவூரில் பதிவு செய்யலாம். இதுபற்றி அரியலூர் மாவட்ட கலெக்டர் அனில்மேஷராம் விடுத்த அறிக்கை: தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தன் மனுதாரர்களை, பல்வேறு வெளிநாடுகளுக்கும் பெருமளவில் பணியமர்த்தி வருகிறது. தற்போது பல்வேறு வெளிநாட்டு வேலையளிப்போரிடமிருந்து பெறப்படும் வேலை வாய்ப்புகளுக்கு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன கம்ப்யூட்டர் பேங்க் மூலம், மனுதாரர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, வெளிநாட்டு வேலையளிப்போருக்கு, நேர்முக தேர்வுக்காக பரிந்துரைக்கப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. வருங்காலத்தில் வெளிநாட்டு வேலையளிப்போருக்கு பெரும் எண்ணிக்கையில் தேவைப்படும் பணியாளர்களை கருத்தில் கொண்டும், வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக, சென்னை சென்று பதிவு செய்வதன் மூலம், தங்களது பயண நேரம் மற்றும் செலவை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், நமது பக்கத்திலுள்ள தஞ்சை மாவட்டத்திலேயே, நேரிடியாக பதிவு செய்து கொள்ளும் முறையை நடைமுறைபடுத்த, தமிழக அரசு நிறுவனமான, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி அரியலூர் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், வருகிற 21ம் தேதி ஞாயிற்றுகிழமை, காலை 9 மணி முதல், மாலை 5மணி வரை, தஞ்சாவூர் மணிமண்டபம் அருகில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடக்கும், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பதிவு முகாமில், தங்களது கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் மூன்று நகல்கள் மற்றும் நான்கு பாஸ்போர்ட் ஃபோட்டோக்களுடன், கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.

பாஸ்போர்ட் இல்லாதவர்களும் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு கட்டணமாக லேபர் முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ, தொழில் அனுபவம் பெற்றவர்கள், கேட்டரிங் பணியாளர்கள் உட்பட, கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு வரையிலான பணியிடங்களுக்கு, ரூ.422/-ம், இன்ஜினியரிங் பட்டபடிப்பு, முதுநிலை இன்ஜினியரிங், முதுநிலை கணக்காளர், கம்ப்யூட்டர் மற்றும் நர்ஸ் மேலும் பாராமெடிக்கல் வரை ரூ.722/-ம், டாக்டர்கள் ரூ.995/-ம், செலுத்தி, விண்ணப்ப படிவத்தை பெற்று பதிவு செய்து கொள்ளலாம்.

மேலும் விபரங்களுக்கு 9444690026, 9381800181, 044-24464268, 044-24464269 ஆகிய தொலைபேசி எண்கள் மற்றும்
இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
http://www.omcmanpower.com/services.htm