மகிழுந்தும் நானே விமானமும் நானே!!!
நன்றி :
வாரியங்காவல் எனும் இனிய சிற்றூர் சோழர்களின் தலை நகரான ஜெயங்கொண்டத்தை அடுத்து ஏழு கல் தொலைவில் அமைந்துள்ளது .இந்த சிற்றூர் சோழர்களின் வாரியங்களை பாதுகாத்த காவலர்களுக்காக வடிவமைக்கப்பட்டது. இங்கு வாழும் விளிம்பு நிலை மக்களினையும்,வாழ்க்கை மேம்பாட்டிற்கு வழிகாண்பதே இவ்விணைய வலைப்பதிவு,,
எழுத்தும் ஆக்கமும் - MJV
இதுகுறித்து சென்னை பிராந்திய துணை பாஸ்போர்ட் அதிகாரி கே.எஸ்.தவ்லத் தமீம் கூறியிருப்பதாவது,
தட்கல் முறையிலும், சாதாரண முறையிலும் பாஸ்போர்ட் பெறுவதற்கான ஏராளமான விண்ணப்பங்கள் வந்த வண்ணம் இருப்பதால், சென்னை பாஸ்போர்ட் அலுவலகம் விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில், பாஸ்போர்ட் அலுவலகத்தின் இணையதளத்தில் பதிவு செய்வதற்கான வசதிகளை சீரமைத்துள்ளது.
ஆன்லைனில் பதிவு செய்யும் போது கம்ப்ழூட்டர் ஒதுக்கும் தேதியில் மட்டுமே விண்ணப்பங்களை சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்தேதிக்கு முன்பாக விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.
குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பங்களை பாஸ்போர்ட் அலுவலகத்தில் சமர்ப்பிக்கத் தவறினால், திரும்பவும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கம்ப்யூட்டர் புதிதாக ஒதுக்கும் தேதியில் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்.
ஆன்லைனில் பதிவு செய்யும் முறையில் விண்ணப்பதாரர்களுக்கு புதுமையான வசதி ஒன்று செய்யப்பட்டுள்ளது. இதன்படி, விண்ணப்பதாரர் கம்ப்ழூட்டர் ஒதுக்கும் தேதி தனக்கு சரிப்படவில்லை என்றால், தனக்கு வசதியான ஒரு தேதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளமுடியும்.
பாஸ்போர்ட் விண்ணப்பங்களை அலுவலகத்தில் சமர்ப்பிக்கும் போது ஏற்படும் நெருக்கடியை தவிர்க்க, முதலில் வருபவர்களுக்கு முதலில் என்ற முறையில் தட்கல் மற்றும் சாதாரண விண்ணப்பங்களுக்கு டோக்கன்கள் அளிக்கப்படுகின்றன. இந்த முறையில் கம்ப்யூட்டர் ஒதுக்கும் நேரம் பொருந்தாது.
பாஸ்போர்ட்டை விரைவாக பெற்றுத் தருவதாகச் சொல்லி தவறான வாக்குறுதிகளை அளிக்கும் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றார்.
பெண் குழந்தைகளுக்கு இந்திராகாந்தி கல்வி உதவித் தொகை |
| புதுடெல்லி: ஒரு பெண் குழந்தை மட்டுமே உள்ள குடும்பத்தில உள்ள பெண், முதுநிலை பட்டப் படிப்பு படிக்க இந்திராகாந்தி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது. நாடு முழுவதும் 1200 மாணவிகளுக்கு இந்தக் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். மாதம் ரூ.2 ஆயிரம் வீதம் 20 மாதங்களுக்கு இந்தக் கல்வி உதவித் தொகை கிடைக்கும். முதுநிலை பட்டப்படிப்பில் தொழில் படிப்புகள் நீங்கலாக மற்றமுதுநிலை பட்டப்படிப்பில் சேரும் முதலாண்டு மாணவிகள் இந்தக் கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். தொலைநிலைக் கல்வி மூலம் படிக்கும் மாணவிகள் இந்தக் கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பிக்க முடியாது. விவரங்களுக்கு: |
இதுபற்றி படிப்பு மையத்தின் முதுநிலை விரிவுரையாளர் முனைவர் வேலாயுதம் விடுத்த அறிக்கை: அண்ணாமலை பல்கலை தொலைதூர கல்வி இயக்ககத்தில், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள், வணிக மேலாண்மையியல் படிப்புகள், கம்யூட்டர், இசை, யோகா மற்றும் வேளாண்மை உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் டில்லியிலுள்ள தொலைதூர கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் பெற்றுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் பட்டப்படிப்பு பயிலுவோர் இதே கல்வி ஆண்டில் குறிப்பிட்ட சில பட்டய வகுப்புகள் பயில, ஐம்பது சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறது. மேலும் நடப்பு கல்வி ஆண்டில் இளங்கலை, முதுகலை மற்றும் பட்டயப்படிப்பில் ஜூவல்லரி மேலாண், இளங்கலை மற்றும் பட்டயப்படிப்பில் 3டி அனிமேஷன், முதுகலையில் ஊரக மேலாண்மை, இசை மற்றும் யோகா, முதுகலை பட்டயப்படிப்பில் விழுமியன் கல்வி மற்றும் ஆன்மீகம், மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன், நீரழிவு நோய் மருத்துவம், பட்டய படிப்பில் வெல்டிங் இன்ஜினியரிங், பரதநாட்டியம், ஜோதிடம் ஆகிய பாடப்பிரிவுகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.
தொலைதூர கல்வியியல் பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மாணவ, மாணவிகளுக்கு, கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில் சேர்க்கைக்கான காலக்கெடு, வருகிற அக்டோபர் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த திருமானூர், அரியலூர், உடையார்பாளையம், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை மற்றும் தா.பழூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பல்கலை தொலைதூர கல்வி இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.





அரியலூர்: அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் வெளியிட்ட அறிக்கை: அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பணிக்கு செல்லும் அல்லது பள்ளி கல்லூரியில் படிக்கும் கடும் ஊனமுற்றோர்களுக்கு, மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற தகுதியுள்ள ஊனமுற்றோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரியில் படிக்கும் கடும் ஊனமுற்றோர் மோட்டார் பொருத்திய, மூன்று சக்கர மோட்டார் பொருத்திய வண்டி இலவசமாக பெற விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட தகுதி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் பள்ளி, கல்லூரியில் படிப்பவராக இருக்க வேண்டும். இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு, இரண்டு கைகளும் நன்கு செயல்படும் நிலையில் உள்ள கடும் ஊனமுற்றவராக இருக்க வேண்டும். பயனாளியின் வயது 18க்கும் மேல் இருப்பதுடன், டிரைவிங் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். உடல் ஊனமுற்றோருக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருப்பதுடன், ஆண்டு வருமானம் ரூ. 30 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். பணிக்கு செல்லும் கடும் ஊனமுற்றோர், மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வண்டி வாங்க விரும்பினால், வண்டியின் விலையில் மூன்றில் ஒரு பங்கு அல்லது 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படவுள்ளது.
அதற்கான தகுதிகள்: விண்ணப்பதாரர் பணிக்கு செல்பவராகவும், இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு, இரண்டு கைகளும் நன்கு சயல்படும் நிலையில் உள்ள கடும் ஊனமுற்றவராகவும் இருக்க வேண்டும். பயனாளியின் வயது 18க்கு மேல் இருப்பதுடன், டிரைவிங் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். உடல் ஊனமுற்றோருக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருத்தல் அவசியம். மானியம் கோரும் விண்ணப்பதாரர், மோட்டார் பொருத்திய மோட்டார் வண்டி வாங்க இருக்கும் நிறுவனத்திடமிருந்து உரிய விலைப்புள்ளி பெற்று சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
அரியலூர்: அரியலூர் மாவட்டம், சோழமாதேவி கிராமத்திலுள்ள வேளாண் அறிவியல் மையத்தின் சேவைகளை பெற்று பயடையுமாறு, விவசாயிகளுக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுபற்றி அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் விடுத்த அறிக்கை: அரியலூர் மாவட்டம், தா.பழூர் பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட சோழமாதேவி கிராமத்தில், கீரீடு வேளாண் அறிவியல் மையம் துவக்கப்பட்டுள்ளது. டில்லியிலுள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதி உதவியுடன் துவக்கப்பட்டுள்ள இம்மையம் அடிப்படை கட்டமைப்புக்காகவும், பண்ணை செயல்பாட்டுக்காகவும், 50 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்படுகிறது. இம்மையத்தில் மண்வளப் பாதுகாப்பு, மண் மற்றும் நீர் பரிசோதனை, செயல் விளக்க பயிற்சி, உழவியல், தோட்டக்கலை, வேளாண் விரிவாக்கம், பயிர் பாதுகாப்பு, கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு, கோழி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு, தேனீ வளர்ப்பு, மீன் வளர்ப்பு, செம்மை நெல் சாகுபடி, காடு வளர்ப்பு, ஒருங்கிணைந்த வேளாண், பாரம்பரிய இயற்கை விவசாய தொழில் நுட்பம், துல்லிய வேளாண், மண் புழு உரம் தயாரிப்பு, திடக்கழிவு மேலாண், பூச்சி மற்றும் த்நாய் மேலாண், தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில், நிபுணத்துவம் பெற்ற விஞ்ஞானிகள் பலரும் பணியாற்றுகின்றனர். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், கல்வியில் தேர்ச்சி பெறாதோர், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், வேலையற்ற ஊரக இளைஞர்கள், விவசாய நிலமற்ற ஏழைகள் மற்றும் தொழில் முனைவோர் இம்மையத்தின் மூலம் பயனடையலாம். விவசாயம் சம்பந்தபட்ட ஆலோசனைகள் பெற, திட்ட ஒருங்கிணைப்பாளர், கிரீடு வேளாண் அறிவியல் மையம், சோழமாதேவி (அஞ்சல்)- 612902. ஜெயங்கொண்டம் (வழி), உடையார்பாளையம் தாலுகா, அரியலூர் மாவட்டம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: 04331-260335.

வேலைவாய்ப்புக்கு உதவும் வெளிநாட்டு மொழிகள் - 34 ஹைதராபாத்திலுள்ள வெளிநாட்டு மொழிகள் பயிற்சி நிறுவனம் Central Institute of English and Foreign Languages ஹைதராபாத்தில் அமைந்துள்ள சென்ட்ரல் இன்ஸ்டிட்யூட் ஆப் இங்கிலீஷ் அண்ட் பாரின் லாங்கேவேஜ்சசைச் சேர்ந்த தி ஸ்கூல் ஆப் பாரின் லாங்வேஜ்சில் அரபிக், பிரெஞ்சு, ஜெர்மென், ஜப்பானிஸ், ரஷ்யன் மற்றும் ஸ்பானிஸ் மொழிகளை ஆரம்ப கட்டத்தில் இருந்து பி.எச்.டி., முனைவர் பட்டம் வரையிலான வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இதன் முக்கிய நோக்கம், இந்த ஐந்து மொழிகளின் ஆசிரியர்களுக்கு பயிற்சி அளிப்பது, ஆராய்ச்சி, பாடத்திட்டத்தை தயாரிப்பது, இந்த மொழிகளை கற்றுத் தரும் பல்கலைக்கழகங்கள் மற்றும் மற்ற நிறுவனங்கள் பாடத் திட்டத்தை தயாரிப்பதற்கு உதவுவது மற்றும் மொழி தொடர்பான ஆய்வரங்கம், பயிற்சி பட்டறை நடத்துவது ஆகியனவாகும். இந்த மொழிகளில் உயர்நிலை தேர்ச்சி மற்றும் திறன் பெறுவதற்கான பல பாடத்திட்டங்களின் கீழ் வகுப்புகளை நடத்துகிறது. இதன் துணை நிறுவனம், மேகாலயா மாநிலத்தின் தலைநகரான சில்லாங்கில் அமைந்துள்ளது. இங்கு தற்போது ஆங்கிலம், பிரெஞ்சு, ஜெர்மென் ஆகிய மொழிகள் கற்றுத் தரப்படுகின்றன.
லெவல் 1.1 முதல் லெவல் 1.6 வரை. லெவல் 1.1 - புதிதாக ரஷ்ய மொழியை படிப்பவர்களுக்காக நடத்தப்படுகிறது. லெவல் 1.6 - ரஷ்ய மொழியை ஏற்கனவே கற்றவர்களுக்காக நடத்தப்படுகிறது. ரஷ்ய மொழியை படிக்க விரும்புபவர்கள், அவர்கள் ஏற்கனவே அம்மொழி படித்திருக்கும் தகுதியைப் பொறுத்து எந்த லெவலிலும் சேரலாம். *** Diploma in Scientific and Technical Translation in Russian (Part-Time) ரஷ்ய மொழியில் விஞ்ஞான மற்றும் தொழில்நுட்ப மொழிபெயர்ப்பு பட்டயம் (பகுதி நேரம்) *** Master of Arts (M.A) in Russian (Distance Mode) எம்.ஏ. ரஷியன் (தொலைதூரக் கல்வி) *** Master of Arts (M.A) in Russian ( Full Time ) எம்.ஏ., ரஷியன் (முழு நேரம்) ***
ரஷ்ய மொழி ஆசிரியருக்கான பட்டமேற்படிப்பு சான்றிதழ் *** Post-Graduate Diploma in the Teaching of Russian (PGDTR) ரஷ்ய மொழி ஆசிரியருக்கான பட்டமேற்படிப்பு பட்டயம் *** Master of Philosophy (M.Phil.) in Russian (Distance Mode) ரஷ்ய மொழியில் மாஸ்டர் ஆப் ப்ளாசபி (தொலைதூர கல்வி) *** Doctor of Philosophy (Ph.D) in Russian (Distance Mode) ரஷ்ய மொழியில் பிஹெச்.டி., (முனைவர் பட்டம்) (தொலைதூர கல்வி) *** Doctor of Philosophy (Ph.D) in Russian ரஷ்ய மொழியில் பிஹெச்.டி., (முனைவர் பட்டம்) ******* Diploma in Translation மொழிபெயர்ப்பில் டிப்ளமோ சேர்க்கைக்கான தகுதி. 1. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் / முதுகலை பட்டம். *** Advanced Diploma in Professional Translation தொழில் ரீதியான மொழிபெயர்ப்பில் அட்வான்ஸ்ட் டிப்ளமோ கால அளவு - 2 செமஸ்டர்கள். சேர்க்கைக்கான தகுதி: 1. அங்கீகரிக்கப்பட்ட பல்கலைக்கழகத்தில் இருந்து பட்டம் / முதுகலை பட்டம். *** Post-Graduate Diploma in Translation Studies (PGDTS) போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ இன் டிரான்ஸ்லேசன் ஸ்டடிஸ். கால அளவு- 2 செமஸ்டர்கள் சேர்க்கைக்கான தகுதி: ****** அரபி மொழி Part-Time Language Proficiency Programme in Arabic அரபி மொழியில் தேர்ச்சி பெறுவதற்கான பகுதி நேர வகுப்பு கால அளவு - 100 மணி நேரம் *** Part-Time Diploma in Translation (Arabic/English, English/Arabic) பகுதி நேர மொழிபெயர்ப்பு டிப்ளமோ (அரபி மொழியில் இருந்து ஆங்கிலத்திற்கு, ஆங்கிலத்தில் இருந்து அரபி மொழிக்கு) கால அளவு - 100 மணி நேரம் சேர்க்கைக்கான தகுதி - பத்தாம் வகுப்பு அல்லது அதற்கு சமமானது. இது பல நிலைகளிலானது. இதில் சேர விரும்புபவர்கள் அரபி மொழியில், அவர்களுக்குள்ள தேர்ச்சியை/ தகுதியைப் பொறுத்து எந்த நிலையிலும் சேரலாம். இந்த மொழிபெயர்ப்பு டிப்ளமோ முடித்தவர்கள், ஏதாவது ஒரு பாடத்தில் பட்டம் பெற்றிருந்தால், அரபு மொழி எம்.ஏ படிப்பில் சேரலாம். *** M.A. in Arabic (Distance Mode) அரபியில் எம்.ஏ., (தொலைதூர கல்வி) *** M.A. in Arabic (Full Time) அரபியில் எம்.ஏ., ( முழு நேரம் ) *** Post-Graduate Diploma in the Teaching of Arabic (PGDTA) அரபி மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ *** M.Phil. in Arabic அரபியில் எம்,பிஎல்., சேர்க்கைக்கான தகுதி - அரபியில் எம்.ஏ., அல்லது எம்.ஓ.எல். குறைந்தபட்சம் இரண்டாவது நிலையில் தேர்ச்சி. *** Ph.D. in Arabic அரபியில் பிஎச்.டி., *** Certificate of Proficiency in French பிரெஞ்சு மொழியில் சான்றிதழ் *** Diploma in French பிரெஞ்சு மொழியில் பட்டயம் (டிப்ளமோ) *** Advanced Diploma in French அட்வான்ஸ்ட் டிப்ளமோ இன் பிரெஞ்சு. (இந்தியன் கவுன்சில் ஆப் கல்ச்சுரல் ரிலேஷன் உதவித் திட்டத்தின் கீழ் பிரெஞ்சு மொழி பயிலும் வெளிநாட்டவர்களுக்கு கட்டணச் சலுகை உண்டு.) *** M.A. in French (Distance Mode) பிரஞ்சு மொழியில் எம்.ஏ., (அஞ்சல் வழி ) *** M.A. in French (Full Time) *** பிரெஞ்சு மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜிவேட் சான்றிதழ். **** பிரெஞ்சு மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ *** பிரஞ்சு மொழியில் எம்.பில்., *** Ph.D. பி.எச்.டி *** e-Master in French (online, MA plus MPhil) பிரஞ்சு மொழியில் இ-மாஸ்டர் (ஆன்லைன், எம்,ஏ மற்றும் எம்.பில்.) ****** Part-Time Language Proficiency Programmes in German ஜெர்மென் மொழியில் திறன் பாடத்திட்டம் பகுதி-நேரம். *** Part-Time Diploma in Translation ஜெர்மென் மொழி பெயர்ப்பில் பட்டயம் (டிப்ளமோ) இந்த இன்ஸ்டிட்யூட்டால் நடத்தப்படும் ஜெர்மென் மொழியில் 1.5 நிலையில் கிரேட் சி-யில் தேர்வு பெற்று இருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இதற்கு சமமான தகுதி. *** Diploma in Interpretation இன்டர்பிரட்டேஷனில் பட்டயம் (டிப்ளமோ) *** M.A. in German (Distance Mode) ஜெர்மென் மொழியில் எம்.ஏ., ( தொலைதூர கல்வி ) *** M.A. in German (Full time) ஜெர்மென் மொழியில் எம். ஏ., ( முழு நேரம் ) Post-Graduate Certificate in the Teaching of German (PGCTG) ஜெர்மென் மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜுவேட் சான்றிதழ். *** Post-Graduate Diploma in the Teaching of German (PGDTG) ஜெர்மென் மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ *** M.Phil. in German ஜெர்மென் மொழியில் எம்.பில்., கால அளவு - 2 செமஸ்டர் *** Ph.D. in German ஜெர்மென் மொழியில் பி.எச்.டி கால அளவு - 6 செமஸ்டர்கள் ****** Part-Time Language Proficiency Programmes in Spanish ஸ்பானிஷ் மொழியில் திறன் பாடத்திட்டம் பகுதி-நேரம் *** Part-Time Diploma in Translation ஸ்பானிஷ் மொழிபெயர்ப்பில் பட்டயம் (டிப்ளமோ) பகுதி நேரம். இந்த இன்ஸ்டிட்யூட்டால் நடத்தப்படும் ஸ்பானிஷ் மொழியில் 1.5 நிலையில், கிரேட் சி-யில் தேர்வு பெற்று இருக்க வேண்டும் அல்லது அங்கீகரிக்கப்பட்ட நிறுவனத்தில் இதற்கு சமமான தகுதி. *** M.A. in Spanish (Distance Mode) ஸ்பானிஷ் மொழியில் எம்.ஏ., ( தொலைதூர கல்வி ) *** M.A. in Spanish (Full Time) ஸ்பானிஷ் மொழியில் எம். ஏ., ( முழு நேரம் ) *** Post-Graduate Certificate in the Teaching of Spanish (PGCTS) ஸ்பானிஷ் மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜுவேட் சான்றிதழ். *** Post-Graduate Diploma in the Teaching of Spanish (PGDTS) ஸ்பானிஷ் மொழி ஆசிரியருக்கான போஸ்ட் கிராஜுவேட் டிப்ளமோ *** M.Phil. in Spanish (Distance Mode) ஸ்பானிஷ் மொழியில் எம்.பில்., (தொலை நிலைக் கல்வி ) M.Phil. in Spanish ஸ்பானிஷ் மொழியில் எம். பில்., கால அளவு - 2 செமஸ்டர் *** Ph.D. in Spanish ஸ்பானிஷ் மொழியில் பி.எச்.டி கால அளவு - 6 செமஸ்டர்கள். The Head, Centre for Hispanic Studies, Central Institute of English and Foreign Languages, Hyderabad-500 007 ****** Central Institute of English and Foreign Languages, Hyderabad குறித்து முழுமையாக அறிய... |