முப்பரிமாண செய்மதி நோக்கு புவி காட்சி (வரைபடம்)
கூகிள் எர்த்-ன் ஒரு பகுதியாக 'புவன்' என்ற பெயரில் இந்தியாவின் எந்தவொரு சிறு பகுதியையும் கணினியில் அமர்ந்து கொண்டே தெளிவாகப் பார்க்கக்கூடிய வகையிலான முப்பரிமாண (3D) வரைபடத்தை உள்ளடக்கிய இணைய தளத்தை இந்திய விண்வெளி ஆய்வுக் கழகம் - இஸ்ரோ தொடங்கியுள்ளது.
இந்த இணைய தளம் மூலம் செயற்கைக்கோளில் இருந்து சம்பந்தப்பட்ட பகுதியின் வரைபடத்தை கண்டுணர முடியும்.
இதற்கான இணையதளமான http://bhuvan.nrsc.gov.in -ன் பீட்டா வடிவத்தை பிரதமர் அலுவலக இணையமைச்சர் பிரிதிவிராஜ் சவான் இன்று புதுடெல்லியில் நடைபெற்ற கருத்தரங்கில் தொடங்கி வைத்தார்.
இந்திய வானவியல் சங்கம் சார்பில், 21ஆம் நூற்றாண்டில் இந்திய விண்வெளித் துறை எதிர்கொள்ளும் சவால் என்ற தலைப்பில் கருத்தரங்கும் நடைபெற்றது.
ராணுவப் பகுதி மற்றும் அணு சக்தி நிலையம் நீங்கலாக இந்தியாவின் எந்தவொரு பகுதியையும் இந்த இணைய தளம் மூலம் துல்லியமாக காணலாம் என்று இஸ்ரோ உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
நன்றி : வெப்துனியா
Source : http://tamil.webdunia.com/newsworld/news/national/0908/12/1090812088_1.htm