ஓரெர்வுழவன்

எனது படம்
வாரியங்காவல்,தமிழகம், சோழவள நாடு, India
அரசியல் நமக்கு பிறப்புரிமை.ஆனால்,வாழ்வார் தோழிகள் விளக்கு பிடித்தெனும் எம்மை உறிஞ்சி அழித்தொழிக்க வருபவர்க்கெல்லாம் யாம் அறிவிப்பதெல்லாம். "அரசில் பிழைத்தோர்க்கு அறம் கூற்றமாகும்"

ஞாயிறு, 28 நவம்பர், 2010

ரேஷன்(கார்டு) கடை சிக்கலா?! ,ஆட்சியரை அழைக்கலாமே

ரேஷன் பொருட்கள் பெறுவதில் சிரமமா?: புகார் தெரிவிக்கலாம் : கலெக்டர் அழைப்பு

அரியலூர்: "ரேஷன் பொருள் பெறுவதில் சிரமம் இருந்தால் புகார் தெரிவிக்கலாம்' என, அரியலூர் கலெக்டர் பொன்னுசாமி கூறியுள்ளார்.

அரியலூர் மாவட்ட கலெக்டர் பொன்னுசாமி விடுத்த அறிக்கை: தமிழ்நாட்டில் மனுதாரரின் விருப்பத்தின் அடிப்படையில், ரேஷன் கார்டுகளுக்கு அரிசி அட்டை, சர்க்கரை அட்டை, எந்த பொருளும் தேவையில்லை என்கிற அட்டை என பொதுமக்களுக்கு ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த ரேஷன் கார்டுகள் வருமானத்தின் அடிப்படையில் வழங்கப்படுவதில்லை.

அரிசி தேவை என விருப்பம் தெரிவித்தவர்களுக்கு இளம் பச்சை வண்ணத்தில் ரேஷன் கார்டுகள் வழங்கப்படுகின்றன. இந்த ரேஷன் கார்டுகளுக்கு அரிசியுடன் மற்ற அனைத்து பொருட்களும் வழங்கப்படுகின்றன. அரிசிக்கு பதிலாக கூடுதல் சர்க்கரை தேவை என விருப்பம் தெரிவித்தவர்களுக்கு வெள்ளை நிறத்தில் ரேஷன் கார்டு வழங்கப்படுகிறது. இந்த வெள்ளை நிற ரேஷன் கார்டுகளுக்கு, அரிசி தவிர கோதுமை, மண்ணெண்ணெய் மற்றும் சிறப்பு பொதுவிநியோக திட்ட பொருட்களான செறிவூட்டப்பட்ட கோதுமை மாவு, பாமாயில், துவரம் பருப்பு, உளுத்தம் பருப்பு உள்ளிட்ட அனைத்து பொருட்களும் மானிய விலையில் வழங்கப்படுகிறது.

ரேஷன் கார்டுதாரர்கள் ரேஷன் கடைகளில் அரிசி மற்றும் அனைத்து பொருட்களும் பெறுவதில் ஏதேனும் சிரமங்கள் இருந்தாலும், விற்பனையாளர்கள் மீது புகார்கள் ஏதும் இருந்தாலும் அது குறித்து, கீழ்கண்ட டெலிஃபோன் எண்களுக்கு புகார் தெரிவிக்கலாம்.

கலெக்டர்: 04329-223351, டி.ஆர்.ஓ., 04329-223321, டி.எஸ்.ஓ., 04329-223351, கூட்டுறவு சங்கங்களின் இணை பதிவாளர், பெரம்பலூர்: 04328-278329, பொதுவிநியோக திட்ட துணைப்பதிவாளர், அரியலூர்: 04329-222131, தாலுகா வழங்கல் அலுவலர், அரியலூர்: 04329-222062, தாலுகா வழங்கல் அலுவலர், ஜெயங்கொண்டம்: 04331-250220, தாலுகா வழங்கல் அலுவலர், செந்துறை: 04329-242320.

பதிவு செய்த நாள் : நவம்பர் 28,2010,01:24 IST
 
நன்றி :தினமலர்