“வீட்டைக் கட்டிப் பார், கல்யாணம் பண்ணிப் பார்!” என்று கூறுவார்கள். இரண்டும் சாதாரண விஷயமல்ல என்பதே அதன் தொனி. வீடு, நிலம் போன்ற அசையா சொத்துக்கள் வாங்கும் போது, அதற்கு சட்ட ரீதியில், முறையான வழிமுறை என்ன என்பதைப் பலரும் அறிந்திருப்பதில்லை. அரைகுறையாகக் கேள்விப்படும் விபரங்களை வைத்தும், பழக்கமானவர்கள் சொல்கிறார்களே என்பதைக் கருத்தில் கொண்டும் சொத்துக்களை வாங்கி விடுகின்றனர். சொத்து சரியான முறையில் பதிவு செய்யப்படாதபோது உரிமையாளர்கள் பல இன்னல்களுக்கு ஆளாக நேரிடுகிறது; சில சமயம் தமது சொத்துக்களைக் கூட இழக்கும்படி ஆகி விடுகிறது.
சென்னை தி.நகரில் இயங்கும் ட்ரைஸ்டார் ஹௌஸிங் பி லிட்(Tristar Housing Pvt Ltd) என்ற நிறுவனம் சொத்துக்கள் குறித்து ஆலோசனைகள் வழங்குவதோடு, அவற்றைப் பராமரிப்பதிலும் வாடிக்கையாளர்களுக்கு உறுதுணையாக இருந்து வருகிறது. இந்நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் திரு. பீட்டர் அவர்களை சந்தித்தோம்.
“நாம் வாங்குகிற சொத்துக்களை உரிய வகையில் பதிவு செய்தல் மிகவும் அவசியம். பொதுமக்களில் பலருக்கு அந்த விழிப்புணர்வு இருப்பதில்லை. பல சொத்துப்பிரச்சினைகளுக்கு இது மூலகாரணமாக அமைந்துவிடுகிறது” என்கிறார் பீட்டர்.
இது குறித்து பல நுணுக்கமான தகவல்களை நம்முடன் பகிர்ந்து கொண்டார். அவருடனான ஒரு பயனுள்ள நேர்காணல் இதோ:
சொத்து வாங்கும்போதோ அல்லது விற்கும்போதோ அரசாங்கத்தின் எந்தெந்தத் துறைகளை நாம் அணுக வேண்டும்?
மாநில அரசின் பதிவுத் துறை (Registration Department)யும், வருவாய்த் துறை (Revenue Department)யும், சொத்துப் பரிமாற்றத்தில் சம்பந்தப்படும். சொத்து வாங்கியபின் இவ்விரு துறைகளிலும் உரிமையாளரின் பெயர் மாற்றம் செய்யப்பட வேண்டும்.
பதிவுத் துறையில் நாம் செய்ய வேண்டிய கடமைகள் என்ன? சொத்து சம்பந்தமாக அந்தத் துறை பராமரிக்கும் விவரங்களைப் பற்றிக் கூறுங்களேன்.
நாம் கிரையப் பத்திரம் (Sale Deed) செய்யும் சார்பதிவாளர் அலுவலகம் (Sub-Registration Office), பதிவுத் துறை (Registration Department)யின் கீழ் வருகிறது. இங்கு நாம் மற்றவரிடம் இருந்து இடம் வாங்கும்போது அதற்காக அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட விலையில் 8% முத்திரை தீர்வையாகவும் மற்றும் 1% பதிவுக் கட்டணமாகவும் செலுத்துகிறோம். ஆகவே, நாம் இடம் வாங்குவதற்கு அரசாங்கத்திற்கு செலுத்த வேண்டிய தொகையைச் செலுத்தவும் மற்றும் நிலம் விற்பவரும் வாங்குபவரும் சார்பதிவாளர் முன்னிலையில் கிரையப் பத்திரத்தில் கையொப்பம் இடவும் சார் பதிவாளர் அலுவலகம் செல்ல வேண்டி இருக்கிறது.
இந்தத் துறையின் பதிவேட்டில் ஒருவரிடம் இருந்து மற்றவர் இந்த இடத்தை வாங்கி இருக்கிறார்; அதற்கான பத்திர எண் இது என்ற விபரம் மட்டுமே இருக்கும். நிலத்தின் உண்மையான உரிமையாளர் யார் என்பது பற்றி இந்தத் துறை அக்கறை கொள்வதில்லை என்பது குறிப்பிடத்தகுந்த விஷயம். இதை முக்கியமாக மனதில் கொள்ள வேண்டும்.
அப்படியானால் உரிமையாளர் பெயரை எங்கே மாற்றம் செய்ய வேண்டும்?
வருவாய்த் துறை (Revenue Department)யில்தான் நிலத்திற்கான விவரங்கள் அனைத்தும் இருக்கும். பட்டா (Patta), சிட்டா (Chitta), அடங்கல் (Adangal), 'அ' பதிவேடு (‘A' Register), நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) என ஐந்து வகையான பதிவேடுகளை இந்தத் துறை பராமரிக்கிறது.
நிலத்தின் உரிமை நமக்குத்தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம்தான் பட்டா என்பது. ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை முடிவு செய்வதே பட்டாவை வைத்துத்தான். அதில் மாவட்டத்தின் பெயர் மற்றும் ஊரின் பெயர், பட்டா எண், உரிமையாளர் பெயர் போன்ற விவரங்களுடன், புல எண்ணும், உட்பிரிவும், (Survey Number and Subdivision), நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா என்னும் விவரமும், நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வையின் விவரங்களும் இருக்கும்.
ஒரு தனி நபருக்கு குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடுதான் சிட்டா என்பது. இதில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய் பயன்பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.
ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடுதான் ‘அடங்கல்' என்பது. இதில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்ன போன்ற விவரங்கள் இதில் இருக்கும்.
'அ' பதிவேட்டில் (‘A' Register) கீழ்க்கண்ட விபரங்கள் இருக்கும்:
1. பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
2. ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ),
3. நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு,
4. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,
5. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற அனைத்து விவரங்களும் இருக்கும்.
நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) இடம் எவ்வாறு பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டிருக்கிறது என்பதைக் காட்டுகிறது. நிலங்கள் ஏதாவது ஒரு கிராமத்தின் கீழ் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒவ்வொரு எண் கொடுக்கப்படும். அதுவே சர்வே எண் என்பது. நம் கிரையப் பத்திரத்தில் சொத்து விவரம் (Schedule) பகுதியில் நம்முடைய இடம் எந்த சர்வே எண்ணில் வருகிறது என குறிக்கப்பட்டிருக்கும்.
இவை அனைத்திலுமே உரிமையாளர் பெயர் மாற்றப்பட வேண்டும் என்பது மனதில் கொள்வது மிகவும் அவசியம்.
இதில் இவ்வளவு விஷயங்கள் இருக்கின்றனவா! சரி.. வருவாய்த் துறையில் நம்முடைய ஆவணங்களைப் பெயர் மாற்றம் செய்யத் தவறிவிட்டால் என்னவாகும் என்பதைப் பற்றியும் கொஞ்சம் விளக்கமாகக் கூறுங்களேன்.
பட்டா பெயர் மாற்றம் செய்யாவிட்டால் வருவாய்த் துறையின் ஆவணங்களின் படி நீங்கள் உரிமையாளர் அல்ல. பட்டா யார் பெயரில் இருக்கிறதோ அவர்தான் உரிமையாளர். ஒரு வேளை அரசாங்கம் நம்முடைய நிலத்தை கையகப்படுத்தினால், அதற்கான இழப்பீட்டுத் தொகை பட்டா யார் பெயரில் இருக்கிறதோ அவர்களுக்கு வழங்கப்படும்.
நீங்கள் பட்டா பெயர் மாற்றம் செய்யவில்லை என்பதை உங்களுக்கு இடத்தை விற்றவர் தொரிந்து கொண்டால் அவர் பெயரில்
வரி செலுத்தி விடுவார். மேலும் அடங்கல் அவர் பெயருக்கு ஒவ்வொரு வருடமும் வாங்கி வைத்துக் கொள்வார். அடங்கல் அவர் பெயரில் இருந்தாலே அவர்தான் அதனைப் பயன்படுத்திக் கொண்டிருக்கிறார் என்பது உறுதியாகி விடும். நாம் வேறொருவருக்கு விற்பனை செய்யும்போது இது பிரச்சினையைக் கொடுக்கும். எனவே, நம் இடத்தை கிரையப் பத்திர மூலம் பதிவு செய்து வாங்கி விட்டோம், எல்லாம் முடிந்துவிட்டது என இருக்கக் கூடாது. உடனே பட்டா பெயர் மாற்றம் செய்து வருவாய்த் துறையின் அனைத்து பதிவேடுகளையும் நமது பெயருக்கு மாற்றம் செய்ய வேண்டும்.
பலரது கனவான சொத்துக்கள் வாங்குவது சம்பந்தமான பல உபயோகமான தகவல்களை மிக விளக்கமாகக் கூறினீர்கள். மிக்க நன்றி!
பீட்டர் அவர்களின் ஆலோசனை பெற விரும்புவர்கள் தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம்:
0091 44 2431 243
நன்றி :நிலாச்சாரல்
ஓரெர்வுழவன்
- சோழன்
- வாரியங்காவல்,தமிழகம், சோழவள நாடு, India
- அரசியல் நமக்கு பிறப்புரிமை.ஆனால்,வாழ்வார் தோழிகள் விளக்கு பிடித்தெனும் எம்மை உறிஞ்சி அழித்தொழிக்க வருபவர்க்கெல்லாம் யாம் அறிவிப்பதெல்லாம். "அரசில் பிழைத்தோர்க்கு அறம் கூற்றமாகும்"
செவ்வாய், 30 ஜூன், 2009
திங்கள், 22 ஜூன், 2009
தினேஷ்குமார் IPS பேட்டி
தினேஷ்குமார் IPS பேட்டி
சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்திய அளவில் 345-வது ரேங்க் பெற்று ஐபிஎஸ் ஆனவர் தினேஷ்குமார். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகிலுள்ள சின்னதண்டா கிராமத்தை சேர்ந்தவர். இவர் பொது அறிவு உலகம் இதழுக்காக பேட்டியளித்தார்.
சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிப் பெற்றதற்காக "பொது அறிவு உலகம் இதழ்' சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
""ரொம்ப நன்றிங்க. பொது அறிவு உலகம் இதழை நானும் வாங்கி படித்துள்ளேன். மிகவும் அருமையான இதழ். அனைத்து போட்டித் தேர்வுகளையும் எழுதுவோருக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது.
உங்களை பற்றி சொல்லுங்கள்?
நான் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவன். சின்னதண்ட என்ற கிராமம் தான் எனது சொந்த ஊர். விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவன். பள்ளி படிப்பை மேட்டூர் செயின்ட் மேரீஸ் பள்ளியில் படித்தேன். அதன் பின் கோவை வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பி.எஸ்.சி அக்ரி படித்து முடித் தேன். அப்போது கல்லூரி சீனியரான சங்கர் ஐ.ஏ.எஸ் அகா டமியை நடத்தி வரும் சங்கர் சார் தான் எனக்கு சிவில் சர்வீசஸ் தேர்வை எழுத சொல்லி பயிற்சியும், ஊக்க மும் கொடுத்தார். அவரால்தான் இத்தேர்வில் என் னால் வெற்றி பெற முடிந்தது.
என்னென்ன விருப்பப்பாடத்தை தேர்ந்தெடுத்தீர் கள்?
பிரிலிமனரி தேர்வில் புவியியல் பாடத்தை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்தேன். மெயின் தேர்வுக்கு புவியியல் பாடத்தை ஒரு விருப்பப்பாடமாகவும், வேளாண்மை பாடத்தை இன்னொரு விருப்பப் பாடமாகவும் தேர்ந்தெடுத்தேன்.
தேர்வுக்கு எப்படி தயார் செய்தீர்கள்?
பிரிலிமனரி, மெயின் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் உள்ளது. அவற்றை குறிப்பெடுத்து படிக்க மிகவும் உதவியாக இருந்தது. சங்கர் சார் சிலபஸில் வரும் அனைத்து பாடப் பிரிவு களுக்கும் தக்கவாறு நோட்டீஸ் கொடுப்பார். அவற்றை கவனமுடன் படித்தேன். வாரந் தோறும் தேர்வு நடத்தப்படும். அதனை சங்கர் சார் மதிப்பீடு செய்து உரிய ஆலோசனை கூறுவார். குழுவிவாதம் செய்து படித்தோம். இவையெல்லாம் இத்தேர்வை நல்லமுறையில் எழுத உதவி புரிந்தது.
நேர்முகத் தேர்வு எப்படி இருந்தது?
நான் ஆங்கிலத்திலேயே மெயின் தேர்வை எழுதியதால், நேர்முகத் தேர்வையும் ஆங்கிலத்திலேயே எதிர்கொண்டேன். எங்கள் பயிற்சி நிறுவனத்தில் மாதிரி இன்டர்வியூ நடத்தப்பட்டது. அதுதான் பெரும் உதவியாக இருந்தது. நேர்முகத்தேர்வில் சமீபத்தில் நடப்பு நிகழ்வுகள், தமிழகம் எதிர்நோக்கும் நதிநீர் பிரச்சினைகள் போன்றவற்றில் அதிகம் கேள்வி கேட்டனர். அவை அனைத்துக்கும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையாக பதில் தந்தேன். யுபிஎஸ்சி குழுவினரும் நல்ல அணுகுமுறையுடன் கேள்வி கேட்டதால் பதட்டப்படாமல் பதில் தர முடிந்தது.
"பொது அறிவு உலகம்' இதழைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
"பொது அறிவு உலகம் இதழ் மேட்டூரில் கிடைப்பதால் தவறாமல் வாங்கி படிப்பேன். அதில் வரும் கட்டுரைகள், நடப்பு நிகழ்வுகள் இந்த தேர்வுக்கான தயாரிப்பில் உதவியாக இருந்தது. இறையன்பு ஐஏஎஸ் சிவில் சர்வீசஸ் பற்றி கூறிய பதில்கள் தேர்வை பற்றி புரிந்துகொள்ள உதவியாக இருந்தது. நக்கீரன் பதிப்பகம் வெளியிட்ட டாக்டர் அகிலன் இராம்நாதன் அவர்கள் எழுதிய " ஐஏஎஸ் யாரும் ஆகலாம்!' என்ற நூல் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுவோருக்கு சிறப்பாக வழிகாட்டும் நூல். அது எனக்கு உதவிகரமாக இருந்தது.
முத்திரை:
தினேஷ்குமார்,
CIVIL SERVICES,
IAS RESULT 2008,
IPS
ஆட்சிப்பணி தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை!
IAS தேர்வில் தமிழக மாணவர்கள் சாதனை!
அயராத உழைப்பும், அசைக்க முடியாத நம்பிக்கையும் இருந்தால் யார் வேண்டுமானா லும் கலெக்டராக முடியும்! என்கிறார்கள் இந்த ஆண்டு ஐஏஎஸ் தேர்வில் சாதித்துக் காட்டிய சமகால இளைஞர்கள்.
சென்ற ஆண்டில் இந்திய ஆட்சிப் பணி (IAS), இந்திய காவல் பணி (IPS), வெளியுறவுப் பணி (IFS), இந்திய வருவாய் பணி (IRS) உள்ளிட்ட இந்திய அரசின் உயர் பதவிகளுக்கு தேர்ந்தெடுக்கப்படுவதற்கான தேர்வு நடத்தப் பட்டது. இத்தேர்விற்கு மூன்று இலட்சத்து 18 ஆயிரத்து 843 பேர் விண்ணப்பித்தனர். முதன்மை தேர்வெழுதிய (Preliminary Exam) ஒரு லட்சத்து 67 ஆயிரத்து 35 பேரில், 11 ஆயிரத்து 849 பேர் பிரதானத் தேர்வுக்கு (Main Exam) தேர்வு செய்யப்பட்டனர். அவர்களில் அதிக ரேங்க் எடுத்தவர்களை கொண்டு நேர்முகத் தேர்வு நடத்தி 791 பேர் சிவில் சர்வீசஸ் பணிக்குத் தேர்ந்தெடுக்கப்பட்டனர். அதில் 625 பேர் ஆண்கள், 166 பேர் பெண்கள். இதில் 364 பேர் பொதுப்பிரிவு (13 பேர் உடல் ஊனமுற்றோர்), 236 பேர் இதர பிற்படுத்தப் பட்டோர் (7 பேர் உடல் ஊனமுற்றோர்), 130 பேர் அட்டவணை வகுப்பினர், 61 பேர் அட்ட வணை பழங்குடியினர் ஆவர்.
வழக்கம் போல இந்த வருடமும் ஐஐடியில் படிக்கும் மாணவர்களே முதலிடத்தில் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் ரூர்க்கி ஐஐடியில் பொறியியல் படித்த சுப்ரா சக்சேனா முதலிடத்தை பெற்றுள்ளார். அவரைத் தொடர்ந்து பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் முதுகலைப் பட்டம் பெற்ற சரண்தீப் கவுர் பிரார் இரண் டாம் இடம் பெற்றார்.
அவ்வகையில் நம் தமிழக மாணவர்களும் எவ்வகையிலும் சளைத்தவர்கலல்ல என்பதை நிரூபித்துள்ளனர். 96 பேர் தேர்வு செய்யப் பட்டுள்ளனர். அதில் அகில இந்திய அளவில் முதல் 25 இடங்களைப் பெற்றவர்களில் மூவர் சென்னையைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. இதில் கிராமப்புறங்களை சேர்ந்தவர்களும் முதல் முயற்சியிலேயே வென்றவர்களும் ஏராளம். மெட்ரி குலேஷன் பள்ளிதான் சிறந்த கல்வியை தருகிறது என ஆங்கில மோகத்துடன் உள்ள தமிழகத்தில், அரசு பள்ளிகளில் படித்த பலபேர் ஐஏஎஸ் தேர்வில் வென்றிருப்பது சாதனையிலும் சாதனை.
தமிழகத்தில் முதலிடம்
ஐஏஎஸ் தேர்வில் இந்தியா அளவில் ஓன்பதாவது ரேங்கையும், தமிழ்நாடு அளவில் முதலிடத்தையும் பெற்றவர் சசிகாந்த் செந்தில். சொந்த ஊர் செங்கல்பட்டு. தந்தை சண்முகம் ஓய்வுப் பெற்ற மாவட்ட நீதிபதி தாயார் ஓய்வு பெற்ற மத்திய அரசு ஊழியர். தமது கடின உழைப்பின் மூலம் ஐஏஎஸ் ஆகியுள் ளார். இதைப்பற்றி சசிகாந்த் செந்தில் ""இந்த ரேங்க் கிடைக்கும் என எதிர்பார்க்கவில்லை. கணேஷ் என்பவர் மூலமாகவும், தமிழ்நாடு அரசு கோச்சிங் சென்டரிலும் பயிற்சிப் பெற்றேன். இதன் மூலம் வெற்றிப் பெற்றேன். இந்தத் தேர்வை எதிர்கொள்ள
விரும்பும் மாணவர்கள், மனதளவில் முதலில் தயாராகிவிட வேண்டும். பின்னர் விரிவாக பயில வேண்டும'' என்றார்.
பரோட்டா கடையில் வேலை செய்து கொண்டு, படித்தேன் ஐஏஎஸ் ஆனேன்!
சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்தியா அளவில் 53-வது ரேங்க் பெற்றவர் வீரபாண்டியன். மதுரையில் உள்ள அருந்தமிழர் குடியிருப்பைச் சேர்ந்தவர். தந்தை கணேசன் தலையில் சுமந்து பித்தளை வியாபாரம் செய்து வருகிறார். தாயார் மதுரை அரவிந்த் கண் மருத்துவமனையில் துப் புரவு தொழிலாளியாக பணிபுரிந்து வருகிறார்.
பொருளாதாரத்தில் பின்தங்கியிருந்தாலும் தனது தளராத முயற்சியாளும் கடின உழைப்பினாலும் இத்தேர்வில் வெற்றிப்பெற்று ஐஏஎஸ் ஆகியுள்ளார். அதுப்பற்றி வீரபாண்டியன் குறிப்பிடும்போது
""நான் தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவன். பொருளாதார வசதி கிடையாது. ஆனாலும் படிக்க வேண் டும் என்ற எண்ணம் மட்டும் இருந்தது. மதுரை மாநகராட்சி பள்ளியில் பனிரெண் டாம் வகுப்புவரை படித்தேன். படிப்பு செலவுக்கு பணமில்லாத தால் பரோட்டா கடையில் பகுதிநேர வேலை செய்துக் கொண்டே படித்தேன். பிளஸ் டூ தேர்வில் புவியியல் பாடத்தில் மாநில அளவில் முதல் இடம் பெற்றேன். இதற்காக முதல்வர் கருணாநிதியிடம் ஒரு இலட்சம் ரூபாய் பரிசு பெற்றேன். பின்னர் சென்னை லயோலா கல்லூரியில் பி.ஏ. சமூகவியல் சேர்ந்தேன். அங்கும் இலவசமாகத்தான் படித்தேன். இதையடுத்து சென்னை சட்டக்கல்லூரியில் சேர்ந்து இரண்டாமாண்டு பி.எல். படித்துக் கொண்டே சிவில் சர்வீசஸ் தேர்வெழுதி வெற்றிப் பெற்றேன். எனது முயற்சியும், உழைப்பும் வீண்போகவில்லை. அதன் பரிசாக ஐ.ஏ.எஸ் கிடைத்தள்ளது. இதன் மூலம் ஏழை மக்களுக்கு உண்மையாக பணிபுரிவேன்'' என்றார். எந்த இலட்சியத்தையும் அடைய பொருளாதாரம் ஒரு தடையாக இருக்க முடியாது என்பதை வீரப்பாண்டியன் நிரூபித்து உள்ளார்.
முதல் முயற்சியிலேயே வெற்றி!
அகில இந்திய அளவில் 95-வது இடத்தைப் பிடித்துள்ளார் சென்னையைச் சேர்ந்த சுப்ரஜா, என்ஜினியரிங் பட்டதாரியான இவர், தமது முதல் முயற்சியிலேயே சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றி பெற்றுள்ளார். இதைப் பற்றி இவர் கூறுகையில், ""கல்லூரி இறுதியாண்டு படித்தபோது ஐ.ஏ.எஸ் படிப்பு மீது ஆர்வம் ஏற்பட்டது. நான் புரபஷனல் கோர்ஸ் படித்திருந்தாலும் என் விருப்பத்திற்கு பெற்றோர் தடைவிதிக்கவில்லை. அதனால் சிவில் சர்வீசஸ் தேர்வுக்கு தயார் செய்தேன். அதற்கு முதல்நிலைத் தேர்வில் புவியியல் விருப்பப்பாடமாகவும், பிரதானத் தேர்வில் புவியியல் மற்றும் உள வியல் பாடங்களை தேர்ந்தெடுத்து படித் தேன். சங்கர் ஐ.ஏ.எஸ் அகாடமி சங்கர் சார் எனக்கு வழிகாட்டினார். அதனால் எளிதாக வெற்றிப் பெற்றேன். ஐ.ஏ.எஸ் தான் முதல் விருப்பம். அது இல்லா விட்டால் ஐஆர்எஸ் கிடைக்குமென எதிர்பார்க்கிறேன். இந்த தேர்வு கடினமாக நடத்தப்பட்டாலும் தங்களுக்கு விருப்பமான பாடத்தைத் தேர்ந்தெடுத்து, மனதை ஒருநிலைப்படுத்தி படித்தால், யார் வேண்டுமா னாலும் வெற்றி பெறலாம்'' என்றார். முதல் முயற்சியில் வெற்றிப் பெற்றது மிகவும் பாராட்டுக்குரியது. சரியான திட்டமிடலும் கடின உழைப்பும் இருந்தால்தான் முதல் முயற்சியில் வெற்றிப் பெற முடியும்.
சிவில் சர்வீசஸ் தேர்வில் இந்திய அளவில் 345-வது ரேங்க் பெற்று ஐபிஎஸ் ஆனவர் தினேஷ்குமார். சேலம் மாவட்டம் மேட்டூர் அருகிலுள்ள சின்னதண்டா கிராமத்தை சேர்ந்தவர். இவர் பொது அறிவு உலகம் இதழுக்காக பேட்டியளித்தார்.
சிவில் சர்வீசஸ் தேர்வில் வெற்றிப் பெற்றதற்காக "பொது அறிவு உலகம் இதழ்' சார்பாக வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறோம்.
""ரொம்ப நன்றிங்க. பொது அறிவு உலகம் இதழை நானும் வாங்கி படித்துள்ளேன். மிகவும் அருமையான இதழ். அனைத்து போட்டித் தேர்வுகளையும் எழுதுவோருக்கு சிறந்த வழிகாட்டியாக இருக்கிறது.
உங்களை பற்றி சொல்லுங்கள்?
நான் சேலம் மாவட்டத்தை சேர்ந்தவன். சின்னதண்ட என்ற கிராமம் தான் எனது சொந்த ஊர். விவசாயக் குடும்பத்தை சேர்ந்தவன். பள்ளி படிப்பை மேட்டூர் செயின்ட் மேரீஸ் பள்ளியில் படித்தேன். அதன் பின் கோவை வேளாண்மை பல்கலைக் கழகத்தில் பி.எஸ்.சி அக்ரி படித்து முடித் தேன். அப்போது கல்லூரி சீனியரான சங்கர் ஐ.ஏ.எஸ் அகா டமியை நடத்தி வரும் சங்கர் சார் தான் எனக்கு சிவில் சர்வீசஸ் தேர்வை எழுத சொல்லி பயிற்சியும், ஊக்க மும் கொடுத்தார். அவரால்தான் இத்தேர்வில் என் னால் வெற்றி பெற முடிந்தது.
என்னென்ன விருப்பப்பாடத்தை தேர்ந்தெடுத்தீர் கள்?
பிரிலிமனரி தேர்வில் புவியியல் பாடத்தை விருப்பப்பாடமாக தேர்ந்தெடுத்தேன். மெயின் தேர்வுக்கு புவியியல் பாடத்தை ஒரு விருப்பப்பாடமாகவும், வேளாண்மை பாடத்தை இன்னொரு விருப்பப் பாடமாகவும் தேர்ந்தெடுத்தேன்.
தேர்வுக்கு எப்படி தயார் செய்தீர்கள்?
பிரிலிமனரி, மெயின் தேர்வுக்கு தேவையான அனைத்து புத்தகங்களும் சங்கர் ஐஏஎஸ் அகாடமியில் உள்ளது. அவற்றை குறிப்பெடுத்து படிக்க மிகவும் உதவியாக இருந்தது. சங்கர் சார் சிலபஸில் வரும் அனைத்து பாடப் பிரிவு களுக்கும் தக்கவாறு நோட்டீஸ் கொடுப்பார். அவற்றை கவனமுடன் படித்தேன். வாரந் தோறும் தேர்வு நடத்தப்படும். அதனை சங்கர் சார் மதிப்பீடு செய்து உரிய ஆலோசனை கூறுவார். குழுவிவாதம் செய்து படித்தோம். இவையெல்லாம் இத்தேர்வை நல்லமுறையில் எழுத உதவி புரிந்தது.
நேர்முகத் தேர்வு எப்படி இருந்தது?
நான் ஆங்கிலத்திலேயே மெயின் தேர்வை எழுதியதால், நேர்முகத் தேர்வையும் ஆங்கிலத்திலேயே எதிர்கொண்டேன். எங்கள் பயிற்சி நிறுவனத்தில் மாதிரி இன்டர்வியூ நடத்தப்பட்டது. அதுதான் பெரும் உதவியாக இருந்தது. நேர்முகத்தேர்வில் சமீபத்தில் நடப்பு நிகழ்வுகள், தமிழகம் எதிர்நோக்கும் நதிநீர் பிரச்சினைகள் போன்றவற்றில் அதிகம் கேள்வி கேட்டனர். அவை அனைத்துக்கும் உணர்ச்சி வசப்படாமல் பொறுமையாக பதில் தந்தேன். யுபிஎஸ்சி குழுவினரும் நல்ல அணுகுமுறையுடன் கேள்வி கேட்டதால் பதட்டப்படாமல் பதில் தர முடிந்தது.
"பொது அறிவு உலகம்' இதழைப் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
"பொது அறிவு உலகம் இதழ் மேட்டூரில் கிடைப்பதால் தவறாமல் வாங்கி படிப்பேன். அதில் வரும் கட்டுரைகள், நடப்பு நிகழ்வுகள் இந்த தேர்வுக்கான தயாரிப்பில் உதவியாக இருந்தது. இறையன்பு ஐஏஎஸ் சிவில் சர்வீசஸ் பற்றி கூறிய பதில்கள் தேர்வை பற்றி புரிந்துகொள்ள உதவியாக இருந்தது. நக்கீரன் பதிப்பகம் வெளியிட்ட டாக்டர் அகிலன் இராம்நாதன் அவர்கள் எழுதிய " ஐஏஎஸ் யாரும் ஆகலாம்!' என்ற நூல் சிவில் சர்வீசஸ் தேர்வு எழுதுவோருக்கு சிறப்பாக வழிகாட்டும் நூல். அது எனக்கு உதவிகரமாக இருந்தது.
முத்திரை:
ஆட்சிப்பணி,
குடிமைப்பணி,
CIVIL SERVICES,
IAS,
IAS RESULT 2008,
IFS,
IPS
சனி, 20 ஜூன், 2009
வெளிநாடுகளில் வேலை வாய்ப்பு பெற வாய்ப்பு: அரியலூர் கலெக்டர் தகவல்
அரியலூர்: வெளிநாடுகளில் வேலைவாய்ப்பு பெற, தஞ்சாவூரில் பதிவு செய்யலாம். இதுபற்றி அரியலூர் மாவட்ட கலெக்டர் அனில்மேஷராம் விடுத்த அறிக்கை: தமிழக அரசு நிறுவனமான அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் தன் மனுதாரர்களை, பல்வேறு வெளிநாடுகளுக்கும் பெருமளவில் பணியமர்த்தி வருகிறது. தற்போது பல்வேறு வெளிநாட்டு வேலையளிப்போரிடமிருந்து பெறப்படும் வேலை வாய்ப்புகளுக்கு, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவன கம்ப்யூட்டர் பேங்க் மூலம், மனுதாரர்களின் விண்ணப்பங்கள் பரிசீலிக்கப்பட்டு, வெளிநாட்டு வேலையளிப்போருக்கு, நேர்முக தேர்வுக்காக பரிந்துரைக்கப்பட்டு, பரிசீலிக்கப்பட்டு வருகின்றன. வருங்காலத்தில் வெளிநாட்டு வேலையளிப்போருக்கு பெரும் எண்ணிக்கையில் தேவைப்படும் பணியாளர்களை கருத்தில் கொண்டும், வெளிநாட்டு வேலை வாய்ப்பிற்காக, சென்னை சென்று பதிவு செய்வதன் மூலம், தங்களது பயண நேரம் மற்றும் செலவை குறைக்க வேண்டும் என்ற நோக்கத்துடன், நமது பக்கத்திலுள்ள தஞ்சை மாவட்டத்திலேயே, நேரிடியாக பதிவு செய்து கொள்ளும் முறையை நடைமுறைபடுத்த, தமிழக அரசு நிறுவனமான, அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம் முடிவு செய்துள்ளது. அதன்படி அரியலூர் மாவட்ட மக்கள் பயன்பெறும் வகையில், வருகிற 21ம் தேதி ஞாயிற்றுகிழமை, காலை 9 மணி முதல், மாலை 5மணி வரை, தஞ்சாவூர் மணிமண்டபம் அருகில் உள்ள அரசினர் தொழிற் பயிற்சி நிலையத்தில் நடக்கும், வெளிநாட்டு வேலைவாய்ப்புக்கான பதிவு முகாமில், தங்களது கல்வி, அனுபவம், பாஸ்போர்ட் ஆகியவற்றின் மூன்று நகல்கள் மற்றும் நான்கு பாஸ்போர்ட் ஃபோட்டோக்களுடன், கலந்து கொள்ளுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
பாஸ்போர்ட் இல்லாதவர்களும் பதிவு செய்து கொள்ளலாம். பதிவு கட்டணமாக லேபர் முதல் ஐ.டி.ஐ., டிப்ளமோ, தொழில் அனுபவம் பெற்றவர்கள், கேட்டரிங் பணியாளர்கள் உட்பட, கலை மற்றும் அறிவியல் பட்டப்படிப்பு வரையிலான பணியிடங்களுக்கு, ரூ.422/-ம், இன்ஜினியரிங் பட்டபடிப்பு, முதுநிலை இன்ஜினியரிங், முதுநிலை கணக்காளர், கம்ப்யூட்டர் மற்றும் நர்ஸ் மேலும் பாராமெடிக்கல் வரை ரூ.722/-ம், டாக்டர்கள் ரூ.995/-ம், செலுத்தி, விண்ணப்ப படிவத்தை பெற்று பதிவு செய்து கொள்ளலாம்.
மேலும் விபரங்களுக்கு 9444690026, 9381800181, 044-24464268, 044-24464269 ஆகிய தொலைபேசி எண்கள் மற்றும்
இணையதள முகவரியிலும் தொடர்பு கொள்ளலாம்.
http://www.omcmanpower.com/services.htm
முத்திரை:
21.06.2009,
அயல்நாட்டு வேலைவாய்ப்பு நிறுவனம்,
தஞ்சாவூர்
இதற்கு குழுசேர்:
இடுகைகள் (Atom)