அரியலூர்: அரியலூர் மாவட்டம், சோழமாதேவி கிராமத்திலுள்ள வேளாண் அறிவியல் மையத்தின் சேவைகளை பெற்று பயடையுமாறு, விவசாயிகளுக்கு அரியலூர் மாவட்ட கலெக்டர் வேண்டுகோள் விடுத்துள்ளார். இதுபற்றி அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் விடுத்த அறிக்கை: அரியலூர் மாவட்டம், தா.பழூர் பஞ்சாயத்து யூனியனுக்குட்பட்ட சோழமாதேவி கிராமத்தில், கீரீடு வேளாண் அறிவியல் மையம் துவக்கப்பட்டுள்ளது. டில்லியிலுள்ள இந்திய வேளாண் ஆராய்ச்சி கழகத்தின் நிதி உதவியுடன் துவக்கப்பட்டுள்ள இம்மையம் அடிப்படை கட்டமைப்புக்காகவும், பண்ணை செயல்பாட்டுக்காகவும், 50 ஏக்கர் நிலப்பரப்பில் செயல்படுகிறது. இம்மையத்தில் மண்வளப் பாதுகாப்பு, மண் மற்றும் நீர் பரிசோதனை, செயல் விளக்க பயிற்சி, உழவியல், தோட்டக்கலை, வேளாண் விரிவாக்கம், பயிர் பாதுகாப்பு, கால்நடை வளர்ப்பு மற்றும் பராமரிப்பு, கோழி வளர்ப்பு மற்றும் பராமரிப்பு, தேனீ வளர்ப்பு, மீன் வளர்ப்பு, செம்மை நெல் சாகுபடி, காடு வளர்ப்பு, ஒருங்கிணைந்த வேளாண், பாரம்பரிய இயற்கை விவசாய தொழில் நுட்பம், துல்லிய வேளாண், மண் புழு உரம் தயாரிப்பு, திடக்கழிவு மேலாண், பூச்சி மற்றும் த்நாய் மேலாண், தொழில் முனைவோர் மேம்பாட்டு பயிற்சி ஆகியவற்றில் பயிற்சி அளிக்கப்படுகிறது.
கிரீடு வேளாண் அறிவியல் மையத்தில், நிபுணத்துவம் பெற்ற விஞ்ஞானிகள் பலரும் பணியாற்றுகின்றனர். அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த விவசாயிகள், கல்வியில் தேர்ச்சி பெறாதோர், மகளிர் சுயஉதவிக்குழு உறுப்பினர்கள், வேலையற்ற ஊரக இளைஞர்கள், விவசாய நிலமற்ற ஏழைகள் மற்றும் தொழில் முனைவோர் இம்மையத்தின் மூலம் பயனடையலாம். விவசாயம் சம்பந்தபட்ட ஆலோசனைகள் பெற, திட்ட ஒருங்கிணைப்பாளர், கிரீடு வேளாண் அறிவியல் மையம், சோழமாதேவி (அஞ்சல்)- 612902. ஜெயங்கொண்டம் (வழி), உடையார்பாளையம் தாலுகா, அரியலூர் மாவட்டம் என்ற முகவரியில் தொடர்பு கொள்ளலாம். தொலைபேசி எண்: 04331-260335.
வலைப்பதிவு பத்தாயம்
-
▼
2009
(51)
-
▼
செப்டம்பர்
(7)
- தென்கச்சியார் நேர்காணல்:- இருப்பதை வைத்துக் கொண்டு...
- இன்று ஒரு தகவல்(துயர), தென்கச்சி, கோ. சுவாமிநாதன்
- பெண் குழந்தைகளுக்கு (ஒரு) இந்திராகாந்தி கல்வி உதவி...
- அண்ணாமலை பல்கலை மையத்தில் மாணவர் சேர்க்கை நாள் நீட...
- மணமக்கள்:வே.மணிகண்டன்+மு.வித்யா
- ஊனமுற்றோருக்கு கலெக்டர் அழைப்பு
- சோழமாதேவி:வேளாண் அறிவியல் உதவி மையம்
-
▼
செப்டம்பர்
(7)
ஓரெர்வுழவன்
- சோழன்
- வாரியங்காவல்,தமிழகம், சோழவள நாடு, India
- அரசியல் நமக்கு பிறப்புரிமை.ஆனால்,வாழ்வார் தோழிகள் விளக்கு பிடித்தெனும் எம்மை உறிஞ்சி அழித்தொழிக்க வருபவர்க்கெல்லாம் யாம் அறிவிப்பதெல்லாம். "அரசில் பிழைத்தோர்க்கு அறம் கூற்றமாகும்"
செவ்வாய், 1 செப்டம்பர், 2009
சோழமாதேவி:வேளாண் அறிவியல் உதவி மையம்
1.வேளாண் அறிவியல் மையம் அரியலூர் கலெக்டர் தகவல்
முத்திரை:
04331-260335,
612902,
கிரீடு வேளாண் அறிவியல் மையம்,
சோழமாதேவி,
ஜெயங்கொண்டம்
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக