அரியலூர்: அரியலூர் மாவட்ட கலெக்டர் ஆபிரகாம் வெளியிட்ட அறிக்கை: அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த பணிக்கு செல்லும் அல்லது பள்ளி கல்லூரியில் படிக்கும் கடும் ஊனமுற்றோர்களுக்கு, மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வண்டி வழங்கும் திட்டம் செயல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டத்தின்கீழ் பயன்பெற தகுதியுள்ள ஊனமுற்றோரிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன. பள்ளி, கல்லூரியில் படிக்கும் கடும் ஊனமுற்றோர் மோட்டார் பொருத்திய, மூன்று சக்கர மோட்டார் பொருத்திய வண்டி இலவசமாக பெற விருப்பமுள்ளவர்கள் கீழ்க்கண்ட தகுதி பெற்றிருக்க வேண்டும்.
விண்ணப்பதாரர் பள்ளி, கல்லூரியில் படிப்பவராக இருக்க வேண்டும். இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு, இரண்டு கைகளும் நன்கு செயல்படும் நிலையில் உள்ள கடும் ஊனமுற்றவராக இருக்க வேண்டும். பயனாளியின் வயது 18க்கும் மேல் இருப்பதுடன், டிரைவிங் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். உடல் ஊனமுற்றோருக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருப்பதுடன், ஆண்டு வருமானம் ரூ. 30 ஆயிரத்துக்கு மிகாமல் இருக்க வேண்டும். பணிக்கு செல்லும் கடும் ஊனமுற்றோர், மோட்டார் பொருத்திய மூன்று சக்கர வண்டி வாங்க விரும்பினால், வண்டியின் விலையில் மூன்றில் ஒரு பங்கு அல்லது 10 ஆயிரம் ரூபாய் மானியம் வழங்கப்படவுள்ளது.
அதற்கான தகுதிகள்: விண்ணப்பதாரர் பணிக்கு செல்பவராகவும், இரண்டு கால்களும் பாதிக்கப்பட்டு, இரண்டு கைகளும் நன்கு சயல்படும் நிலையில் உள்ள கடும் ஊனமுற்றவராகவும் இருக்க வேண்டும். பயனாளியின் வயது 18க்கு மேல் இருப்பதுடன், டிரைவிங் லைசென்ஸ் பெற்றிருக்க வேண்டும். உடல் ஊனமுற்றோருக்கான தேசிய அடையாள அட்டை பெற்றிருத்தல் அவசியம். மானியம் கோரும் விண்ணப்பதாரர், மோட்டார் பொருத்திய மோட்டார் வண்டி வாங்க இருக்கும் நிறுவனத்திடமிருந்து உரிய விலைப்புள்ளி பெற்று சமர்ப்பிக்க வேண்டும். இவ்வாறு அவர் அறிக்கையில் தெரிவித்துள்ளார்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக