வலைப்பதிவு பத்தாயம்

ஓரெர்வுழவன்

எனது படம்
வாரியங்காவல்,தமிழகம், சோழவள நாடு, India
அரசியல் நமக்கு பிறப்புரிமை.ஆனால்,வாழ்வார் தோழிகள் விளக்கு பிடித்தெனும் எம்மை உறிஞ்சி அழித்தொழிக்க வருபவர்க்கெல்லாம் யாம் அறிவிப்பதெல்லாம். "அரசில் பிழைத்தோர்க்கு அறம் கூற்றமாகும்"

சனி, 19 டிசம்பர், 2009

குறைதீர் நாள் சிறப்புக் கூட்டம் , அரசு வேளாண் நிதி உதவி மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு

ஏக்கருக்கு ரூ.6 லட்சம் மின்திட்டத்திற்காக நிலம் கொடுத்தவர்களுக்கு வழங்க குறைதீர் நாள் கூட்டத்தில் விவசாயிகள் வலியுறுத்தல்



அரியலூர்:ஜெயங்கொண்டம் மின் திட்டத்துக்கு நிலம் கொடுத்தவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.6 லட்சம் வழங்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். அரியலூரில் மாவட்ட விவசாயிகள் குறைதீர்க்கும் நாள் கூட்டம் நடந்தது.

கலெக்டர் ஆபிரகாம் தலைமை வகித்தார். கூட்டத்தில் கலந்து கொண்டு விவசாயிகள் பேசியது:ஒன்றிய கவுன்சிலர் உலகநாதன்: ஜெயங்கொண்டம் அனல் மின் நிலையத்திற்கு சுமார் 8 ஆயிரத்திற்கும் மேற்பட்ட விவசாயிகளிடமிருந்து ஏக்கர் ஒன்று ரூ.25 ஆயிரம் வீதம் வாங்கப்பட்டுள்ளது. அதன் விலையை உயர்த்தி தர கோரிக்கை விடுத்தும் ரூ.25 ஆயிரம் இறுதி தீர்ப்பாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் விவசாயிகள் மிகவும் அதிருப்தியில் உள்ளனர். அந்த பணத்தை கொண்டு மாற்று இடம் வாங்க முடியாத நிலையில் அவர்களது வாழ்வாதாரம் சீரழிந்துள்ளது.

அரசு ரூ.25 ஆயிரம் கொடுத்து வாங்கிய நிலத்திற்குள் பல லட்சம் மதிப்புள்ள "கருப்புத் தங்கம்' என கூறப்படும் நிலக்கரி உள்ளது. எனவே பாதிக்கப்பட்ட விவசாயிகளை கலெக்டர் தலைமையில் அழைத்துப் பேசி நிலம் கொடுத்தவர்களுக்கு ஏக்கருக்கு ரூ.6 லட்சம் முதல் ரூ.7 லட்சம் வரை விலை அளிக்க வேண்டும். மேலும் அவர்களது குடும்பத்தில் படித்த இளைஞருக்கு வேலைவாய்ப்பில் முன்னுரிமையும், குழந்தைகளுக்கு கல்வி உத்தரவாதமும், நிலம் கொடுத்த குடும்பத்தினருக்கு மாற்று இடத்தில் ஒரு வீடும் அளிக்க வேண்டும்.

அரியலூர் பிச்சைப்பிள்ளை: ஆயில் இன்ஜின் வாங்கினால் மானியம் வழங்கப்படுவது குறித்து விரிவாக விளக்க வேண்டும். விவசாயிகளின் பிள்ளைகளுக்கு கல்விக்கடன் வழங்கப்படவில்லை. எனவே வங்கி அதிகாரிகள், விவசாயிகளை அழைத்து கல்விக்கடன் கூட்டம் நடத்த வேண்டும். மழையால் பாதிக்கப்பட்டுள்ள சாலைகளை அரசிடம் நிதி பெற்று விரைவில் செப்பனிட வேண்டும்.

விளந்தை ஜெயச்சந்திரன்: ஆண்டிமடத்தில் வேளாண் அலுவலகம் கட்ட ரூ.25 லட்சம் ஒதுக்கீடு செய்து கட்டுவதற்கு இடம் இருந்தும் அது ஒதுக்கப்படாததால் அலுவலகம் கட்டும் பணி துவக்கப்படாமல் உள்ளது. எனவே விரைவில் இடத்தை ஒதுக்கி கட்டடம் கட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.கடந்த ஆண்டு வேளாண்துறை மற்றும் தோட்டக் கலைத்துறை மூலம் ரூ.20 லட்சத்தில் பணிகள் நடந்துள்ளதாக அறிவித்துள்ளனர். என்னென்ன பணிகள் நடந்தது என்பது குறித்து கலெக்டர் ஆய்வு நடத்த வேண்டும்.

ஜெயங்கொண்டம் அருகே அங்கராயநல்லூர் ஏரி பிளாட் போட்டு விற்கப்படுவதை உடனடியாக தடுத்து நிறுத்தி ஏரியை காப்பாற்ற வேண்டும்.வி.சி.அம்பேத்கர் வழியன் பேசுகையில், புதிதாக திருமணமானவர்களுக்கு புதிய ரேஷன் கார்டுகளை விரைவில் வழங்க வேண்டும் என்றார். செங்கமுத்து பேசுகையில், அரியலூரில் ஷேர் ஆட்டோக்கள் இயக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.

ஒவ்வொரு படிப்பிற்கும் எவ்வளவு கடன் வசதி என்பதை வங்கிகள் அறிவிக்க வேண்டும் என்றார். இந்த ஆண்டு விவசாயம் அதிகம்: பின்னர் கலெக்டர்ஆபிரகாம் பதில்அளித்து பேசியதாவது, மாவட்டத்தில் வேளாண்மையை இயந்திர மயமாக்கல் திட்டத்தின் கீழ் 55 பயனாளிகளுக்கு ரூ.45 ஆயிரம் மானியத்தில் பவர்டில்லர் வழங்கப்பட்டுள்ளது. மேலும் தேசிய வேளாண் வளர்ச்சித் திட்டத்தின் கீழ் வேளாண் கருவிகள் 50 சதவீதம் மானியத்தில் ஒரு வரிசை நெல் களை எடுக்கும் கருவி ரூ.12,500 மானியத்திலும், இயந்திரத்தின் மூலம் பல வரிசை நெல் களை எடுக்கும் கருவி ரூ.20 ஆயிரம் மானியத்திலும், சீனா மாடல் நெல் நடவு இயந்திரம் ரூ.75 ஆயிரம் மானியத்திலும், 10 எச்.பி.க்கு குறைவாக களை எடுக்கும் கருவி ரூ.50 ஆயிரம் மானியத்திலும், பழ மரங்களுக்கு விசை தெளிப்பான் ரூ.20 ஆயிரம் மானியத்திலும் வழங்கப்படுகின்றன.

விலை உயர்ந்த வேளாண் கருவிகளில் ரூ.4 லட்சம் மதிப்பிலான நெல் அறுவடை இயந்திரம் மற்றும் மக்காச்சோளம் அறுவடை இயந்திரம் ஆகியன 33 சதவீத மானியத்தில் வழங்கப்படுகின்றன. நீர்வள, நிலவளத் திட்டத்தில் ஆணைவாரி ஓடை உபவடிவ நிலப்பகுதியில் உள்ள ஏரியின் ஆயக்கட்டு பகுதியில் உள்ள விவசாயிகளின் நிலங்களில் அமைக்கப்படும் தெளிப்பு நீர் பாசன அமைப்பிற்கு 65 சதவீதம் மானியம் வழங்கப்படுகிறது.

சிறுபாசனத் திட்டத்தில் விசைத் துளைக்கருவி, நில பவுதீக ஆய்வு கருவி, கைத்துளைக் கருவி போன்றவை வாடகைக்கும் விடப்படுகின்றன. செயற்கை முறையில் நிலத்தடி நீரை செறிவூட்டும் திட்டம் செயல்படுத்த அரியலூர் மாவட்டத்திற்கு ரூ.19.20 லட்சம் வரப்பெற்று 36 பண்ணைக்குட்டைகள் ரூ.18 லட்சம் மதிப்பிலும், 4 ரீசார்ஜ் சாப்ட் ரூ.1.20 லட்சம் மதிப்பிலும் அரியலூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட பகுதிகளில் பணிகள் நடைபெற்று வருகின்றன.நடப்பாண்டில் அரியலூர் மாவட்டத்தில் நெல் சாகுபடி 21,227 எக்டர் பரப்பளவிலும், கரும்பு விவசாயம் 7,069 எக்டர் பரப்பளவிலும், எண்ணெய் வித்துக்கள் 6,900 எக்டர் பரப்பளவிலும் பயிறு வகைகள் 853 எக்டர் பரப்பளவிலும் என கடந்த ஆண்டைவிட நடப்பாண்டில் அதிக அளவில் விவசாயம் செய்யப் பட்டுள்ளது.

மேலும் 274.99 மெட்ரிக் டன் விதை நெல்லும், சிறுதானியங்கள் 9,548 மெட்ரிக் டன்னும்,பயிறு வகைகள் 5,537 மெட்ரிக் டன்னும், நிலக்கடலை 34,151 மெட்ரிக் டன்னும் விதை விநியோகம் செய்யப்பட்டு, போதுமான அளவிற்கு விநியோகம் செய்ய விதைகள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.சம்பா விவசாயத்திற்கு ஏற்ற உரங்கள் வேளாண் துறையில் விநியோகம் செய்ய இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அவற்றில் யூரியா 769 மெட்ரிக் டன்னும், டிஏபி 253 மெட்ரிக் டன்னும், பொட்டாஷ் 451மெட்ரிக் டன்னும், கலப்பு உரங்கள் 468 மெட்ரிக் டன்னும், சூப்பர் உரம் 73 மெட்ரிக் டன்னும் உள்ளன.

விவசாயிகளின் முதன்மை கோரிக்கையான மின்சார வாரிய செயற்பொறியாளர் அலுவலகம் அரியலூர் மாவட்டத்தில் உடனடியாக அமைக்கப்படும். பயிர் காப்பீடு குறித்து விவசாயிகளின் குறைகள் அடிப்படையில் சிறப்புக் கூட்டம் நடைபெறும். அதுபோல் வங்கியில் விவசாயிகளின் குறைகள் சம்பந்தமான சிறப்புக் கூட்டம் ஜனவரி மாதம் நடத்தப்படும் என்றார்.

கூட்டத்தில் மாவட்ட கலெக்டரின் நேர்முக உதவியாளர் (வேளாண்) ராதாகிருஷ்ணன், வேளாண் பொறியியல் துறை செயற்பொறியாளர் ராமசாமி, வேளாண் உதவி இயக்குனர்கள் சந்தானகிருஷ்ணன், முன்னோடி வங்கி மேலாளர் சங்கர், தனி துணை கலெக்டர் (சமூக பாதுகாப்புத் திட்டம்) சந்திரசேகரன் மற்றும் அரசு அலுவலர்கள், விவசாய சங்க பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.



சனி, 7 நவம்பர், 2009

இணைய விளம்பரம் அல்லது உளவாளிகளின் உலகம்.

மிஸ்டர் எக்ஸ் வழக்கம் போல இனையத்தில் உலாவிக்கொண்டிருந்தார்(browsing) அவர் ஒரு புத்தக பிரியர் புத்தகங்கள், இதழ்கள், பத்திரிக்கைகள் சார்ந்த இணைய தளங்களாக பார்வையிட்டுக்கொண்டிருந்தார்.தேடுபொறி (Search Engine) மூலமாக தன் தேடுதலை தொடந்து தேடிபிடித்து படித்துக் கொண்டிருந்தார் மிஸ்டர் எக்ஸ். பெரும்பாலும் அவரின் இணைய உலாவுதல் இவை சார்ந்தே நிகழும். இடையிடையே புத்தக வெளியீட்டாளர்களுக்கு மின் அஞ்சல் என தொடரும் அவரது உலா. ஆனால் மிஸ்டர் எக்ஸ்க்கு தெரியாது அவரை ஒரு உளவாளி தொடர்வது.........

மிஸ்டர் ஒய்யும் ஒரு இணைய விரும்பிதான் இவருக்கு சினிமா மோகம். நகரத்தில் உள்ள திரை அரங்ககுளில் இனையதளங்களுக்கு தினமும் செல்லாமல் இவருக்கு இரவில் நல்ல தூக்கம் வருவதில்லை. வார விடுமுறைகளில் சினிமா செல்லவில்லையென்றால் ஏதோ ஒன்றை இழந்தது போல இருக்கும் மிஸ்டர் ஒய்க்கு. முன்பதிவு செய்வதெல்லாம் இணையம் மூலமாகத்தான். ஆனால் மிஸ்டர் ஒய்க்கு தெரியாது அவரை ஒரு உளவாளி பின் தொடர்வது.........


மிஸ்டர் எக்ஸ் நியுசிலாந்து சென்றபோதும், மிஸ்டர் ஒய் ஜெர்மனிக்கு சென்றபோதும் இணையத்தில் உலாவிக்கொண்டிருந்த பொழுது மிஸ்டர் எக்ஸ் உலாவிய பக்கங்களில் உள்ளுரில் உள்ள புத்தக கடைகளின் விளம்பரங்களும், மிஸ்டர் ஒய் உலாவிய பக்கங்களில் உள்ளூர் திரை அரங்குகள் பற்றிய விளம்பரங்களும் வந்தன. எப்படி இது சாத்தியம்? அவரவர் விருப்பம், ரசனைகேற்ப எப்படி விளம்பரங்கள் வருகிறது?


மியூசிக் சேனலில் லீ ஜீன்ஸ் விளம்பரமும் , “தாலி பெண்ணின் வேலி” தொடருக்கு இடைவெளியில் ஆச்சி மசாலா விளம்பரமும் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை( இளஞர்களை/பெண்களை) இலக்கு வைத்து வரும் விளம்பரங்கள். இதே அடிப்படையில் இன்னும் இலக்கை துள்ளியமாக்கி தனி மனிதர்களை குறிவைத்து வருகின்றன இணைய விளம்பரங்கள். “நடத்தைசார் விளம்பரம்” (Behavioral Advertising) என்ற ஒரு விசயம் உலகம் தழுவி வளர்ந்து வருகிறது.



இந்த விசயம் உங்களுக்கும்,எனக்கும் நிகழும் அல்லது நிகழ்ந்துக்கொண்டிருக்கிறது. ஒரு தனி மனிதன் பழக்க வழக்கங்களின் தொகுதி. அவனின் பழக்க வழக்கங்கள் மூலமாக நாம் அவனை அடையாளப்படுத்திவிட முடியும். அவனின் ஈடுபாடுகளை, அவன் தேவைகளை, அவனின் ரசனையை நாம் கண்டெடுத்துவிட முடியும். இணையத்தில் ஒருவனின் நடத்தையை வைத்தே நாம் ஒருவரை பகுத்துவிட முடிகிறது. அவர் தேடுபொறியில் அவர் தேடும் விசயங்கள், அவர் பார்வையிடும் இணைய தளங்கள், அவர் பதிவிறக்கம் செய்யும் விசயங்கள், அவர் பார்வையிட்ட இணைய தளங்களின் வரலாறு இவைகள் மூலம் நாம் அவரின் ஆளுமையை , அவரின் பாலினத்தை,வயதை,அவரின் இருப்பிடத்தை,அவரின் தனிபட்ட விருப்பங்களை, அவரின் மத ஈடுபாடுகளை , மத சுவேஷங்களை, அவரின் ஆரோக்கியம் அல்லது உடல் நல குறைகளை, காமம் சார்ந்த அவரின் ஈடுபாடுகளை அல்லது காம பிறழ்வுகளை, சமூக,பொருளாதார,அரசியல் குறித்த அவரின் நிலைபாட்டை, பூமி வெப்பமடைவதை பற்றிய அவரின் புரிதலை, தென்இந்திய சமையல், இன்னும் சூரியனுக்கு கீழே உள்ள அனைத்திற்கும் அவருக்கும் உள்ள ஊடுபாவுகளை நாம் கணித்துவிடலாம்.


இதை தான் இணையத்தில் இயங்கும் விளம்பர வலையமைப்புக்கள்(AdvertisingNetworks)பயன்படுத்திக்கொள்கின்றன.நாம் ஒரு இணைய தளத்தை பார்வையிடும்பொழுது அந்த இணைய தளம் நம் கணணியில் குக்கீஸ்(cookies) என்ற சின்னசிறு கோப்பை (file)நிறுவி விடுகிறது. நம் இணைய நடவடிக்கைகளை இந்த சின்னசிறு கோப்பு ஒரு அடையாள எண்னோடு தன் இணைய தளத்திற்கோ அல்லது ஒரு விளம்பர வலையமைப்பு நிறுவனத்திற்கோ அனுப்பி வைக்கிறது. இவ்வாறு பெறப்படும் தகவல்களை கொண்டு உங்களை வகை படுத்துகிறது விளம்பர வலையமைப்பு நிறுவனம்.
பின் நமக்கு தகுந்த விளம்பரங்கள் நம்மை தொடர்கின்றன!! நம்மை பற்றிய தகவலை பெற web bugs, web beacons, Flash cookies. பல தொழில்நுட்பங்களை விளம்பர நிறுவனங்கள் பயன் படுத்துகின்றன.




இணைய பயணாளிகளின் தனிபட்ட வாழ்க்கையில் அனுமதியில்லாமல் வேற்று மனிதன் நுழைவு ஒரு வரம்புமீறல் என எதிர்ப்பு குரல்கள் ஒலிக்க தொடங்கியுள்ளன. விளம்பரங்களுக்காக மட்டுமே இந்த தகவல்கள் திரட்டபடுகின்றன என அந்த நிறுவனங்கள் சொன்னாலும் இது ஒரு தனிமனித அந்தரங்கத்தின் மீதான தாக்குதல் எனவும், தனிமனிதனின் தகவல் பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் என்றும் அமெரிக்க,ஐரோப்பிய நாடுகளில் எதிர்ப்பு கிளம்பியிருக்கிறது.


இங்கிலாந்தில் BT என்ற தொலைதொடர்பு நிறுவனத் திற்காக PHORM என்ற நிறுவனம் BTயின் 30,000 வாடிக்கையாளர்களின் இணைய நடவடிக்கையை தன் பிரத்யேக மென்பொருள் மூலம் கண்காணித்தது பெரிய சர்சையை எழுப்பியிருக்கிறது. அதை தொடந்து நடத்தைசார் விளம்பரங்கள் தனிமனித தகவல் குறித்த விவாதம் அங்கே நடந்துக்கொண்டிருக்கிறது. அமெரிக்காவின் FEDERAL TRADE COMMISSION இந்த விளம்பர தொழில் நுட்பத்தை தடைசெய்ய முடியாது என வெளிபடையாக சொல்லாமல் விளம்பர வலையமைப்பு நிறுவனங்கள் தங்களுக்கு தாங்களே சுய கட்டுப்பாடுகளை விதித்துக்கொள்ளவேண்டும் என்றது. அது முன் வைத்த யோசனைகளில் ஒன்று தங்கள் இணையதளங்களில் என்ன தகவல் திரட்டப்ப்டுகிறது ,எப்படி திரட்டப்படுகிறது என்பதை இணைய தளத்தை உபயோகிப்பவர் அறியும் வண்ணம் அறிவிப்புகள் இருக்க வேண்டும் என்பது.


YAHOO,GOOGLE போன்ற நிறுவனங்கள் தங்கள் வாடிக்கையாளர்கள் இந்த விளம்பர வலையிலிருந்து தங்களை விலக்கி வைத்துக்கொள்ள ஒரு வாய்ப்பை வழங்குகின்றன. கூகுளின் privacy policy பற்றி தெரிந்துக்கொள்ள: http://www.youtube.com/googleprivacy#p/a . yahooவில் privacy policy இணைப்பை தொடந்து செல்லுங்கள். ஆனால் இவையெல்லாம் எவ்வளவு தூரம் நம்பகதன்மை உடையது என்பது தெரியவில்லை





ஒரே கணணியை பல பேர் உபயோகபடுத்தும் சூழலில் ஒரு குறிப்பிட்ட மனிதரை இலக்காக்க முடியாது என்பது ஒரு வாதமாக இருந்தாலும் எதிர்காலத்தில் ஒரு மனிதன் எந்த கணணியில் அமர்ந்தாலும் அவனை பின் தொடர தொழில்நுட்பம் தயாராகிவிடும். தனிமனிதனின் தகவல்,அந்தரங்கம்,சமூக பாதுகாப்பு பற்றிய மிக முக்கியமான வாழ்வியல் ஆதாரங்களும் ,இணைய தொழில்நுட்பமும் எதிரெதிரே நிற்கின்றன. சந்தை பொருளாதார திமிங்கலங்கம் தன் பெரிய வாயை திறந்து காத்துக்கிடக்கின்றது


மேலும் புரிதலுக்கு:


http://www.cdt.org/privacy/targeting/

http://www.networkadvertising.org/

http://www.seochat.com/c/a/Website-Marketing-Help/Behavioral-Advertising-Wave-of-the-Future/


நன்றி : திருவாளர் . ஜெ.ஜெயமார்த்தாண்டன்.

வலைப்பூ:கூடுசாலை

திங்கள், 26 அக்டோபர், 2009

ஒரு ஆய்வு பதிவு இடவேண்டும் என்பது எமது விண்ணப்பம்

அன்புள்ள பதிவுலக தோழாமைக்கு www.iloveallaah.blogspot.com
வாழ்க வளமுடன்,உங்களது படைப்புகளின் சிறப்பு ஓங்குக ,யாம் ஒரு ஈழக்காதலன் .

உமது பணி தமிழ் கூறும் நல்லுலகிற்கு இன்றியமையாத தமிழ் பணி ,நீங்கள் எமக்காக ஒரு ஆய்வு பதிவு இடவேண்டும் என்பது எமது விண்ணப்பம் .

அரபி இலக்கங்கள்( எண்கள் :1,2,3,4 ,,,,, ) பயன்பாடு உலகெங்கும் ஏற்றுகொள்ளபட்டிருப்பதாக இந்தியாவில் கற்பிக்க படுகிறது .ஆனால் அரபியர்கள் தங்கள் இலக்க பயன்பாட்டை இந்தியர்களிடம் கற்றத்தாக கூறுகின்றனர் .

அரபியர்கள் எண்களை கற்றபோது இந்தியாவே இல்லை .ஆகவே இந்த இலக்கமுறைகள்
சமஸ்கிருதம் மற்றும் உருது அடங்கிய இந்திய மொழிகுடும்பதிலிருந்து வந்திருக்க வாய்ப்பில்லை .ஆனால் தமிழ் (திராவிட) மொழிக்குடும்பத்தில் எண்ணுருக்கள் வெவ்வேறாக இருப்பினும் ஏறத்தாழ ஒரே உச்சரிப்பை கொண்டிப்பதால்
படிமம்:Tamil Numbers.JPG

இந்திய தேசிய அடிமைக்கல்வியின் மேல் எமது ஐயத்தை தெளிவு படுத்துமாறு
ஒரு பதிவில் ஆவணப்படுத்த வேண்டுகிறோம் .
ஈழத்தில் சந்திப்போம்,சிந்திப்போம் .

நன்றியுள்ள
சோழன்

ஓ... கனடா-4

முன்னைய பாகங்கள் இங்கே.My Photo

முகவர்களுக்குக் காசு கொடுத்து பெரிய தொகை ஒன்றையும், என்னுடைய வாழ்க்கையையும் பணயம் வைக்க உறவுகள் விரும்பாததால், அவர்கள் தேர்ந்து எடுத்த முறை படிப்பதற்காக என்று சொல்லி என்னை இலங்கையை விட்டு அப்புறப்படுத்துவது. அதற்கான வழிமுறை இவ்வாறாக இருந்தது.

முதலில் கனடாவில் அங்கீகரிக்கப்பட்ட ஒரு கல்லூரி அல்லது பல்கலைக் கழகத்தில் அனுமதி பெறவேண்டி இருந்தது. என்னிடம் அதற்குரிய TOFEL, IELTS போன்ற ஆங்கிலத் தகைமகள் இருக்கவில்லை. ஆனால் என்னுடைய க.பொ.த. உயர்தர, சாதாரணதர பெறுபேற்று ஆவணங்களில் இருந்த ஆங்கிலத்துக்கான அதிவிசேட சித்தி அவர்களை ஏமாற்றிவிட்டது போலும், அனுமதி கிடைத்தது, ஷெரிடான் கல்லூரியில் மின் பொறியியல் (3 வருட டிப்ளோமா) படிக்க. அத்துடன் ஆறு மாதங்கள் ஆங்கிலமும் படிக்க வேண்டும். ஆக, அங்கீகரிக்கப்பட்ட ஒரு கல்லூரியில் அனுமதி என்கிற கனேடிய குடிவரவு, குடியகல்வு அமைச்சின் முதலாவதும், முக்கியமானதுமான நிபந்தனையைச் செவ்வனே நிறைவேற்றியாயிற்று. இது பற்றிய விபரங்களை இங்கே படித்துத் தெரிந்து கொள்ளலாம்.

அதன் பிறகுதான் கனேடிய தூதரகங்களில் போய் மேற்படி Student Visa பெறுவதற்கான செயல்முறை ஆரம்பமாகிறது. இதற்கான அனுமதி (கனடாவுக்கு வெளியே இருந்து) கோரும்போது பின்வரும் பத்து விடயங்களை நீங்கள் கவனிக்க வேண்டும் என்பதாக கனேடியக் குடிவரவு குடியகல்வு அமைச்சு அறிவுறுத்துகிறது.
  1. இந்த அனுமதி கிடைப்பதற்கான செயல்முறை எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை முதலில் அறிந்து கொள்ளவேண்டும். அதாவது, குறிப்பிட்ட ஒரு நாட்டில் இருக்கும் கனேடியத் தூதரகத்தில் மாணவர் அனுமதிப் பத்திரம் வழங்கும் நடைமுறைக்கு எவ்வளவு காலம் எடுக்கும் என்பதை முதலில் அறிந்து கொள்வது அவசியம். அதாவது, செப்ரெம்பரில் ஆரம்பமாகிற கற்கை நெறிக்கு ஒருவர் ஓகஸ்ற் 20ம் திகதிக்குப் பிறகு கொழும்பில் வைத்து விண்ணப்பித்தால், அவரது விண்ணப்பம் நிராகரிக்கப்பட அதிக வாய்ப்புகள் இருக்கின்றன. அதையே அவர் சண்டிகாரில் விண்ணப்பித்தால், இரண்டு நாளைக்குள்ளாகவே அவரது விண்ணப்பம் மீதான சாதகமான முடிவு கிடைக்கலாம். (மேலதிக விபரங்கள் இங்கே)
  2. விசாவுக்கு உரிய விண்ணப்பப் படிவத்தைத் இணையத்தில் தரவிறக்கிக் கொள்ளவேண்டும், இல்லாவிட்டால் கனேடியத் தூதரகங்களில் நேரடியாகப் போய்ப் பெற்றுக்கொள்ளலாம். இணையத்தில் உங்களுக்குத் தேவையான படிவங்களை pdf கோப்புகளாகத் தரவிறக்கும் வசதி கனடா குடிவரவு குடியகல்வு அமைச்சின் இணையத்தளத்தில் இருக்கிறது. படிவத்தைப் பூர்த்தி செய்வதற்குரிய அறிவுறுத்தல்களும் கூடவே இருக்கின்றன.
  3. அடுத்ததாக, எந்தக் கனேடியத் தூதரகத்தில் உங்களுடைய விண்ணப்பத்தை சமர்ப்பிக்கப் போகிறீர்கள் என்று முடிவு செய்யவேண்டும். உங்கள் நாட்டுக்கோ, அல்லது உங்கள் பிராந்தியத்துக்கோ பொறுப்பாக இருக்கிற ஒரு தூதரகத்தில் நீங்கள் இந்த விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பிக்கலாம். கனடாவுக்கு வெளியே தூதரகங்கள் இருக்கும் இடங்களை இங்கே காணலாம்.
  4. Student Visa விண்ணப்பத்துக்குத் என்னென்ன ஆவணங்கள் தேவை என அறிந்து, அவற்றைச் சேர்க்கவேண்டும்.
  5. நீங்கள் படிப்பதற்காக அனுமதி பெற்றிருக்கும் கல்வி நிலையம் கனடாவின் கியூபெக் மாகாணத்தில் இருக்கும் எனில், அதற்கென தனியான சில நடைமுறைகள் இருக்கின்றன. CAQ என்கிற ஒரு அனுமதிச் சான்றிதழை கியூபெக் மாநிலக் குடிவரவுத் திணைக்களத்தில் இருந்து பெறவேண்டி இருக்கும்.
  6. எல்லா ஆவணங்களையும் தயார்செய்து, விண்ணப்பப் படிவத்தையும் பெற்றுவிட்டீர்களா? இனிமேல் கவனமாக விண்ணப்பப் படிவத்தை நிரப்புங்கள். கறுத்த மையால் தெளிவாகவும், முழுமையாகவும், உண்மையாகவும் விண்ணப்பப் படிவத்தில் அவர்கள் கேட்டிருக்கும் விபரங்களை நிரப்புங்கள்.
  7. இந்த அனுமதிக் கோரிக்கைக்கு சில கட்டணங்கள் இருக்கின்றன. இணையம் மூலமாகவும் கட்டணம் செலுத்தப்படலாம். உறுதிப்படுத்திய காசோலை, வரைவோலை போன்ற முறைகள் பரவலாக ஏற்றுக்கொள்ளப்படுகின்றன. நீங்கள் எவ்வளவு பணம் செலுத்த வேண்டும் என்பதைக் கணித்து, அவர்கள் சொல்கிற ஏதாவது ஒரு முறையில், உங்களுடைய நாட்டின் பணத்தில் இந்தக் கட்டணம் செலுத்தப்படலாம்.
  8. விண்ணப்பப் படிவத்தைப் பூர்த்தி செய்த பின்னர், எல்லாம் சரியாக இருக்கிறதா என்பதை உறுதிசெய்வது அவசியமாகிறது. அதற்கும் ஒரு படிவம் இருக்கிறது. அதன் மூலம், நீங்கள் தேவையான படிவங்கள், மற்றும் ஆவணங்களை விண்ணப்பப் படிவத்துடன் இணைத்திருக்கிறீர்களா என உறுதிசெய்து கொள்ளலாம்.
  9. இதன் பின்னர் உங்களுடைய படிவத்தை உரிய தூதரகத்தில் சமர்ப்பிக்க வேண்டும். நீங்கள் அமெரிக்கா, கிரீன்லாந்து, Saint Pierre and Miquelon ஆகிய நாடுகளின் பிரஜாவுரிமை உடையவர் என்றால், கனடாவிற்குள் எந்த வழியாக நுழைகிறீர்களோ அந்த வழியில் உள்ள எல்லைகளில் இந்த விண்ணப்பப் படிவத்தைச் சமர்ப்பித்து உடனடியாகவே அனுமதி பெறலாம்.
  10. அதன் பின்னர், உங்கள் நாட்டுக் காவல்துறையினரிடம் பெறக்கூடிய சான்றிதழ் மற்றும் மருத்துவச் சான்றிதழ் ஒப்படைக்கப்பட வேண்டும். பெரும்பாலான நாடுகளில் காவல்துறைச் சான்றிதழ் கோரப்படுவது இல்லை. (இலங்கையில் என்னிடம் கோரப்படவில்லை. ஆயினும் ஒன்றைக் காவலுக்காக எடுத்தேன். அது ஒரு பெரிய கதை). மருத்துவச் சான்றிதழ் கிட்டத்தட்ட எல்லா நாடுகளில் இருக்கும் தூதரகங்களாலும் கோரப்படுகிறது. மருத்துவச் சான்றிதழ் பெறுவது பற்றிய முழுமையான விபரங்களை இங்கேயும், காவல்துறைச் சான்றிதழ் பெறுவதற்கான முழுமையான நடைமுறைகளை இங்கேயும் காணலாம்.
அனுமதிப் பத்திரத்துக்கு விண்ணப்பிக்க முன்னர் செய்ய வேண்டியவை இவ்வளவும். விண்ணப்பித்த பின் என்ன நடக்கும், எனக்கு என்ன நடந்தது போன்ற விபரங்கள், வரும் பதிவுகளில்.

நன்றி :கிருத்திகன் குமாரசாமி

ஞாயிறு, 25 அக்டோபர், 2009

கால்நடைகளுக்கான பசுந்தீவனங்கள்

கால்நடைகளுக்கான பசுந்தீவனங்கள்

நம்மில் பல விவசாயிகள் கால்நடைகள் வளர்ச்சி பற்றியான கவலையடைகின்றனர். அந்த கவலையை நீக்க கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கொடுக்க வேண்டும். கால்நடைகளுக்கு பசுந்தீவனம் கொடுப்பதால் என்னென்ன நன்மைகள் ஏற்படுகின்றன என்பதை பற்றி பார்ப்போம்.

* கால்நடைகள் உலர் தீவனங்களை விட பசுந்தீவனங்களையே அதிகம் விரும்பி உண்கின்றன. இதனால் தீவனம் உட்கொள்ளும் அளவு அதிகரிக்கிறது. மேலும் பசுந்தீவனங்கள் எளிதில் ஜீரணமாகும் தன்மையுடையவை. அதனால் சத்துக்கள் அதிக அளவில் உடலுக்கு கிடைக்கிறது.

* பசுந்தீவனங்களில் புரதம் மற்றும் தாது உப்புகள் அதிக அளவில் உள்ளன. இவைகள் கால்நடைகளின் வளர்ச்சிக்கும், அதிக பால் உற்பத்திக்கும் தேவைப்படுகின்றன.

* பசுந்தீவனங்களில் உயிர்சத்துகள் முக்கியமாக பீட்டாகரோட்டின் நிறைந்துள்ளது. இவைகள் விட்டமின் ஏ தேவையை நிவர்த்தி செய்வதோடு கால்நடைகளில் கருமுட்டை உற்பத்தி மற்றும் இனப்பெருக்கத்திற்குப் பெரிதும் உதவுகின்றன.

* பசுந்தீவனங்கள் கொடுப்பதால் கிடேரிகள் 15, 18 மாதங்களில் பருவமடைந்து 200, 250 உடல் எடையும் கூடி 28, 30 மாதங்களில் முதல் கன்றை ஈனவும் பின்னர் 12, 14 மாத இடைவெளியில் மீண்டும் கன்றுகளை பெறவும் ஏதுவாகிறது.

* பசுந்தீவனங்கள் உடலுக்கு குளிர்ச்சியை தருகின்றன. அதனால் உடல் ஆரோக்யம் மேம்படுவதோடு கால்நடைகளின் வாழ்நாளும் அதிகரிக்கிறது.

* உலர் தீவனங்களுடன் பசுந்தீவனங்களை சேர்த்துக் கொடுக்கும் போது உலர் தீவனம் உட்கொள்ளும் அளவு அதிகரிப்பதோடு செரிமான தன்மையும் கூடுகிறது.

* பசுந்தீவனங்கள் கொடுப்பதால் கால்நடைகளில் மலச்சிக்கல் தவிர்க்கப்படுகிறது. அடர் தீவன செலவை 20 விழுக்காடு குறைக்கிறது.

என்னென்ன பசுந்தீவனங்களை கால்நடைகளுக்கு கொடுக்கலாம்:

தானிய வகை:

மக்காச்சோளம், சோளம், கம்பு, ராகி, ஓட்ஸ், திணை, சாமை.

பயிறு வகை:

குதிரைசால், வேலிமசால், காராமணி, அவரை, கொத்தவரை, நரிபயறு, சணப்பு, கொள்ளு, சங்குபுஷ்பம், ஸ்டைலோ, சிராட்ரோ, செண்ட்ரோ, டெஸ்மோடியம்.

புல் வகைகள்:

நேப்பியர், கம்பு நேப்பியர், ஒட்டுப்புல், கினியாபுல், எருமைப்புல், நீரடிப்புல், பாராப்புல், ரோட்ஸ்புல், ஆஸ்திரேலியாபுல், கொழுக்கட்டைபுல், நீலக்கொழுக்கட்டைபுல், மார்வல்புல், ஊசிப்புல் மற்றும் தீனாநாத்புல்.

மர இலைகள்:

அகத்தி, சுபாபுல், கிளைரிசிடியா, கொடுக்காப்புளி, ஆச்சா, முருங்கை, கல்யாண முருங்கை, வாகை, வேம்பு, மலைவேம்பு, வெள்வேல், கருவேல், ஆல், அத்தி, பலா, இலுப்பை, உதியன், பிளாரி, புளி, இலந்தை, முசுக்கொட்டை, வங்கை, நாவல், மஞ்சக்கடம்பு, நெல்லி.

நன்றி :தமிழ் சிகரம்

மேலதிக தகவலுக்கு :http://www.tamilsigaram.com/Linkpages/agri/agriculture.php


குமிழ் மரத்தின் எதிர்காலம்?

குமிழ் மரத்தின் எதிர்காலம்?

விவசாயிகள் தொடர்ச்சியாக பலன்தரும் வெள்ளாமையை விட்டுவிட்டு, மரப்பயிர்களுக்கு மாறியபின், பலவிதமான மரங்கள் வந்து போயிருக்கின்றன. அவைகளுள் இன்றும் பேசப்படு பவை குறைவுதான். அவற்றை விரல்விட்டு எண்ணி விடலாம். விவசாயிகள் மத்தியில் குறுகிய காலத்தில் பிரபலமடைந்த பலவிதமான மரங்களில் முதல் இடம் பெறுவது குமிழ்தான் என்பதை யாரும் மறுக்க முடியாது.

குமிழைப் பற்றி பேசாத மர விவசாயிகள் தமிழகத்தில் இல்லை என்ற நிலை கிட்டத்தட்ட வந்து விட்டது. ஆனால், இந்த மரத்திற்கான எதிர் காலம்... இந்த மரத்தை பயிர் செய்திருக்கும் விவசாயிகளின் எதிர்காலம் குறித்த கேள்விகளோடு, குமிழ் மர வியாபாரி ஒருவரை தமிழகத்தின் மிகப் பெரிய பூச்சந்தை இருக்கும் நிலக்கோட்டையில் சந்தித்தோம். அவர் தமிழகத்தில் பல இடங்களில் இருந்து பலவித மரங்களை வாங்கும் வியாபாரி எம்.ஏ.ஜான்போஸ்கோ (அன்னை ஷா மில், அணைப்பட்டி ரோடு, நிலக்கோட்டை, திண்டுக்கல் மாவட்டம் 624208. தொலைபேசி: 04543 233723, 98946 21486).

“குமிழ் மரத்தை தமிழகத்தில் பரவலாக விவசாயிகள் பயிர் செய்து வந்தாலும், வெட்டி விற்கக்கூடிய அளவிலான மரங்கள் புதுக் கோட்டை மாவட்டத்தில் அறந்தாங்கி, ஆலங்குடி, கைகாட்டி, தஞ்சை மாவட்டத்தில் ஒரத்தநாடு ஆகிய பகுதிகளில்தான் உள்ளன. மற்ற மரங்களை விட குமிழ் குறுகிய காலத்தில் பிரபல மடைந்ததற்கு காரணம் குறுகிய காலத்தில் நல்ல வளர்ச்சி, முதிர்ச்சிதான்.

அதோடு இது இழைப்பிற்கு தேக்கைவிட நன்றாக இருப்பதால் அதிகமான தச்சு வேலையாட்களும், நீண்ட ஆயுள், உறுதியோடு வெண்மையான நிறத்திலும் இருப்பதால் வேண்டிய வண்ணங்களைக் கொடுத்து நினைத்த வண்ணத் தைப் பெற முடியும் என்பதால் வீடு கட்டுவோரும் இதை தேர்வு செய்கின்றனர்.

குமிழ் மரத்தைக் கொண்டு நிலை, கதவு, ஜன்னல் போன்றவை செய்யப்படுகின்றது. பலகை எடுக்க வேண்டுமெனில் நம்நாட்டு குமிழ் 15 ஆண்டு முதிர்ச்சியடைந்திருக்க வேண்டும். எனவே பலகைக்கு தேவையான குமிழ் மரங்களை வெளிநாடுகளி லிருந்து இறக்குமதி செய்கி றோம். இந்தக் குமிழ் மரங்கள் லேசானதா கவும், பலகை செய்ய ஏதுவானதாகவும் இருக்கிறது.

குமிழ் மரம் சாகுபடி செய்ய விரும்புவர்கள் அடர்நடவு முறையில் வைக்கலாம். ஏனெனில் குமிழ் ஆணிவேர் தாவரம். பக்க வேர்கள் மிகக்குறைவு. இம்முறையில் ஏக்கருக்கு 1000 மரங்கள் வரை வைக்கலாம். நடவு செய்து சிறப்பான முறையில் மண்ணிற்கேற்ப நீர்ப் பாசனத்தை செய்து வந்தால் 7 ஆண்டுகளில் விறகு நீங்கலாக ஒரு மரம் ஒரு டன் எடைவரும். 1 டன் மரத்தை ரூ.5 ஆயிரம் முதல் ரூ.7 ஆயிரம் வரை விலை கொடுத்து எடுத்துக் கொள்கிறேன். பலகை எடுக்கும் வகையில் இருந் தால் டன்னுக்கு ரூ.10 ஆயிரம் கொடுக்கக்கூட தயாராக உள்ளேன்.

மரம் வளர வளர பக்கக்கிளைகளை கவாத்து செய்து விடுவது மிகவும் முக்கியம். குமிழ் மரம் நேராகவும், அதிக எடையுடனும் வளரும். ஆண்டுக்கொருமுறை உரம் வைத்தால் இன்னும் நன்றாக வளரும். தமிழ்நாட்டில் எங்கு இருந்தாலும், மரத்தைப் பார்த்து விலைக்கு எடுத்துக் கொள்கிறேன். மர உரிமையாளர் கிராம அலுவலரிடமிருந்து சிட்டா அடங்கள் பெற்றுக் கொடுத்துவிட்டால் மர அறுவடை முடிந்தவுடனேயே முழுப்பணத்தை யும் கொடுத்துவிடுகிறேன்.

கடந்த சில ஆண்டுகளில் குமிழ் மரத்தின் தேவை மிகவும் உயர்ந்துள்ளது. வரும் ஆண்டு களில் இன்னும் தேவை உயரும். எனவே, விவசா யிகள் குமிழ் மரத்தை தன்னம்பிக்கையோடு பயிர் செய்யலாம். விற்பனைக்கு குறைவிருக்காது. வேம்பின் தேவையும் அதிகரிக்கும் வாய்ப்புள்ளது. ஏனெனில் தற்போது இருந்த வேப்பமரங்கள் பெரும்பாலும் வெட்டப்பட்டு விட்டன.

எனவே எதிர்காலத்தில் வேம்பு மிகக்குறைவாகவே கிடைக்கும். ஆக தேவை அதிகரிக்கும் போது, அதன் விலையும் உயர வாய்ப்புள்ளது. எனவே விவசாயிகள் வேம்பு சாகுபடியிலும் கவனம் செலுத்தினால் எதிர்காலத்தில் நிச்சயம் நல்ல வருமானம்தான்” என்கிறார் ஜான் போஸ்கோ.

நன்றி :தமிழ் சிகரம்

சனி, 24 அக்டோபர், 2009

ஆஸ்திரேலியா பல்கலைக்கழகங்கள் பற்றி...

ஆஸ்திரேலியா பல்கலைக்கழகங்கள் பற்றி...


ஆஸ்திரேலியாவில் மொத்தம் 55 பல்கலைக்கழகங்கள் எம்.பி.ஏ படிப்பைத் தருகின்றன. 16 மாதங்கள் முதல் 2 ஆண்டுகளுக்குள் எம்.பி.ஏவை ஒருவர் நிறைவு செய்ய முடியும். 2 ஆண்டுகள் பணம் கட்டி படிக்க முடியாதவர்களுக்கு 16 மாதங்களில் படிக்கும் வாய்ப்பை வழங்குகிறது.

ஆஸ்திரேலிய பல்கலைக்கழகங்களுக்கிடையே உள்ள கேம்ப்ஸ் ஏற்பாட்டின் மூலம் பல்கலைக்கழகங்களுக்குள் மாணவர்கள் மாறிச் சென்று படிக்கும் வசதி செய்து தரப்படுகிறது.ஆஸ்திரேலிய கல்விக்கட்டணம் பன்னாட்டு கல்வி கட்டணங்களோடு ஒப்பிடுகையில் குறைவு தான்.

ஐ.டி.பி என்பது இந்திய மாணவருக்கு ஆஸ்திரேலியாவில் கல்வி பயில உதவும் தனிப்பட்ட அமைப்பு. இது டில்லி, சென்னை, சண்டிகார்,பெங்களுர், அகமதாபாத் மற்றும் ஐதராபாத்தில் அலுவலகங்களை கொண்டிருக்கிறது. இதில் கீழ்கண்ட உதவிகள் கிடைக்கும்.

அனைத்து பல்கலைகழகங்கள் பற்றிய தகவல்கள், சேர்க்கை தேதிகள், சேர்க்கை முறைகள், உதவித் தொகைகள், வங்கிக் கடன்கள் பற்றிய தகவல்கள், மற்றும் பெறும் முறைகள், மாணவருக்கும் பெற்றோருக்கும் ஆலோசனை, விண்ணப்பிக்கும் முறை, கட்டணம் செலுத்துவது, தங்குமிடம், விமான பயணம் ஆகியவற்றை பற்றி தெரிந்து கொள்ள தொடர்பு கொள்ள வேண்டிய இன்டர்நெட் முகவரி: http://www.india.idp.com/
இவற்றுக்கு கட்டணம் ஏதும் கிடையாது.

பி.கு : இனவெறி பிடித்த இந்தியர்களை மட்டும்தாம் ஆஸ்திரேலியர்கள் தாக்குவார்கள் .

ஆகவே தயங்காமல் சென்று படிக்கலாம்.


சனி, 17 அக்டோபர், 2009

மகிழுந்தும் நானே விமானமும் நானே!!!

மகிழுந்தும் நானே விமானமும் நானே!!!




உலக வரலாற்றில் பல பல பிரமாண்ட வளர்ச்சிகளையும், கண்டுபிடிப்புகளையும் இந்த மனித சமுதாயம் கண்டு முதலில் ஆற்றாமையில் வெறுத்தும் பின்னர் வியந்தும் தான் ஏற்று கொண்டிருக்கிறது. விமானம் கண்டு பிடித்த ரைட் சகோதரர்களும் சரி, மகிழுந்தை நமக்கு கொடுத்த ஹென்றி போர்ட் ஆக இருந்தாலும் இதே நிலை தான்...
முதலில் வெறுத்து ஒதுக்கிய அதே சமுதாயம் மெல்ல மெல்ல அவர்களை அங்கீகரித்து அவர்களது கண்டுபிடிப்பை ஒத்து கொண்டது!

நல்லா வேலை இந்த நிலை TERRAFUGIA நிறுவனத்துக்கு வரவில்லை. வெற்றிகரமாக தங்கள் முதல் கட்ட சோதனையை செய்து முடித்துள்ளனர்.... எதை பற்றி பேசி கொண்டு இருக்கிறோம்? இந்த நிறுவனம் 2006 ஆம் ஆண்டு மசாசுசெட்ஸ் பல்கலைகழகத்தில் பயிற்சி பெற்ற விமான பொறியாளர்கள் மற்றும் வர்த்தக நிர்வாகத்தில் முதுகலை பட்டம் பெற்ற சில நண்பர்கள் கூடி இந்த நிறுவனத்தை துவக்கி வைத்தனர்..... இவர்கள் செய்து முடித்து இருக்கின்ற சோதனை முயற்சி, தரையிலும் வானத்திலும் ஓடக்கூடிய ஒரு விமானம் மற்றும் மகிழுந்து...

இதை இயக்க மேலும் 20 மணி நேரம் இவர்கள் விமானம் ஓட்டும் முறையை பயிற்று விக்கின்றனர். முன்பே விமானம் ஓட்ட தெரிந்திருந்தால் இந்த வண்டியை வாங்கும் பொழுது இதற்கான பயிற்சியை மட்டும் அளிக்கின்றனர்.... மேலும் இந்த வண்டியின் தொழில்நுட்ப விவரங்கள் அறிய கீழே கொடுக்கப்பட்டுள்ள இணைய தள முகவரியை சொடுக்கவும்!

இந்த வண்டியின் விலையை தான் தீபாவளி வானவேடிக்கை போல் தலை நிமிர்ந்து பார்க்க வேண்டியதாய் இருக்கிறது..... ம்ம்ம்ம் அறிமுக விலை ஒரு லட்சத்தி தொண்ணூற்று நான்காயிரம் அமெரிக்க டாலர்களாம்!!!

யோசித்து பார்த்தால் இந்த வண்டி அதிகமாய் புழக்கத்திற்கு வந்து விட்டால், 'சரக்கனு கதவ துறந்துட்டு போய் வானத்துல இருக்கறப்ப, 'ஏன்டா கண்ண எங்க வெச்சிக்கிட்டு ஓட்டற' அப்டின்னு ஏக வசனம்லாம் பேச முடியாது'.... கொஞ்சம் போக்கு வரத்து நெரிசல் தரயில குறையலாம்..... கொஞ்சம் வானத்துல அதிகம் ஆகலாம்.... மேலே பறக்கும் காவல் படை போட்டு கண்காணிக்கலாம்..... தரையில கார்னு சொல்லி ஓட்டுனர் உரிமம் கேக்கும் போது, இறக்கையை விரித்து பறந்து கொஞ்சம் ஜகா வாங்கலாம்.... சரி சரி இப்படி நிறைய விடயங்கள் யோசித்து பார்க்கலாம்..... இத்துடன் இந்த பதிவை முடித்தும் கொள்ள(ல்ல)லாம்!!!

நன்றி :

வயலுக்கு உரம் அடிக்கும் நாயகன் !


வயலுக்கு உரம் அடிக்கும்சினிமா ஹீரோ!

ஒரு லட்சம் கொடுத்தால் கூட இன்னைக்கு அந்த ஹீரோ வர மாட்டார் என்றார் டைரக்டர் சுந்தரன். இவர் சொன்ன அந்த ஹீரோவுக்கு இந்த பிரஸ் மீட்டை விட முக்கியமான வேலை ஒன்று இருந்தது. அது....?

வயலுக்கு உரம் அடிக்கிற வேலை!

கடலுருக்கு பக்கத்தில் இருக்கிறது திட்டக்குடி என்ற கிராமம். இங்கு பெரும்பாலானவர்களின் வேலை மழை வந்தால் விவசாயம். இல்லையென்றால் சென்னை போன்ற நகரங்களுக்கு போய் கொத்தனார் வேலை பார்ப்பது. சுந்தரன் இயக்கி வரும் திட்டக்குடி என்ற படத்தின் ஹீரோ, ஒரு விவசாயி. கதையில் இவர் ஒரு கட்டிட மேஸ்திரியாக நடித்திருக்கிறார். கிராமத்தில் நடக்கும் இந்த கதைக்கு தலைநகரத்தில் எதற்கு ஆபிஸ் போட வேண்டும்? அதனால் படப்பிடிப்பு நடக்கும் கடலுரிலேயே எங்கள் சினிமா அலுவலகத்தை அமைத்தோம். இதே ஊரை சேர்ந்த ரவி என்ற இளைஞரையே ஹீரோவாகவும் ஆக்கிவிட்டோம். ஆரம்பத்தில் தயங்கிய ரவி, பிறகு கதையில் லயித்துப் போய் அற்புதமாக நடிக்க ஆரம்பித்துவிட்டார். அவருக்கு ஹீரோ அந்தஸ்தை நாங்கள் கொடுத்தாலும் ஷட்டிங் இல்லையென்றால் அவர் வயல்வேலைக்கு போய்விடுவார்.

இப்போது கூட இந்த பிரஸ்மீட்டுக்கு வரும்படி அவரை அழைத்தோம். வயலுக்கு உரம் அடிச்சிட்டு இருக்கேன். நான் எங்கே வர்றது? என்று கூறிவிட்டார் என்று நமக்கு அதிர்ச்சியை ஊட்டுகிறார் சுந்தரன். இவர்தான் இப்படி என்றால் படத்தின் நாயகி அஸ்வதாவுக்கும் இந்த படத்தில்தான் பெரிய கேரக்டர். இதற்கு முன் ஒரு சில படங்களில் சின்ன சின்ன கேரக்டர்களில் நடித்திருக்கிறாராம்.

ஒரு சித்தாள், மேஸ்திரியின் கதையை இயல்பாக சொல்லியிருக்கேன். யதார்த்த படங்களை ரசிக்கிற ஜனங்கள் இந்த படத்திற்கும் பாஸ் மார்க் போடுவார்கள் என்றார் சுந்தரன்.

இவங்களோட புதிய சிந்தனைக்காகவே புல் மார்க் போடலாம்!

MBA படிக்க போறீங்களா?

ஏதோ நமக்கு தெரிஞ்சதை பகிர்ந்துக்கலாமேன்னு. இதுல நிறைய விஷயம் உங்களுக்கு ஏற்கெனெவே தெரிஞ்சிருக்கலாம், இருந்தாலும்:

MBA வை பொறுத்த வரைக்கும் இன்ன படிப்பு தான் படிச்சிருக்கனும்னு அவசியம் இல்லை. நீங்க UG எந்த துறைல செய்திருந்தாலும் MBA படிக்கலாம். ஆனா அக்கவுண்ட்ஸ், காமர்ஸ் படிச்சவங்களுக்கு தொடக்கத்துல கொஞ்சம் எளிதா இருக்கிற மாதிரி இருக்கும். அதெல்லாம் முதல் வருஷம் மட்டும் தான், இரண்டாவது வருஷத்துல எல்லாருமே சமமா தான் இருப்பாங்க.


எந்த கல்லூரியில படிக்கிறதுன்னு முடிவு பண்ண முன்ன, எப்படிப்பட்ட MBA பண்ண போரோம்கிறது முக்கியம். எனக்கு தெரிஞ்சு இந்த படிப்ப நாலு வகையா பிரிக்கலாம்:


  • CAT, XAT, RAT (ஹிஹி,,, இது சும்மா தமாசுக்கு) எழுதி B-Schools எனப்படும் பெரிய, பை நிறைய சம்பளம் கொடுக்கம் நிறுவனங்கள் வருகை தரும், பல முன்னணி ஏடுகள் தரவரிசை பட்டியலில் இடம்பெறும் IIM, XLRI, போன்ற கல்லூரிகள்
  • TANCET எழுதி அண்ணா பல்கலைக்கழகத்திற்கு கீழ் இயங்கும் கல்லூரிகளில் சேர்வது (பெரும்பாலும் இன்ஜினியரிங் கல்லூரிகளில்)
  • All India Management Association (AIMA) நடத்தும் MAT எழுதி அந்த தேர்வை ஏற்கும் சில கல்லூரிகளில் படிப்பது
  • IGNOU, பாரதிதாசன் பல்கலைக்கழகம் ஆகிய இடங்களில் தொலை தூர கல்வி பயில்வது
  • ஏற்கெனெவே வேலை செய்பவர்களுக்கு ஏற்ற வகையில் இருக்கும் ஒரு வருட Executive MBA வகுப்புகள். இதில் ISB- ஹைதராபாத் தான் இந்தியாவிலேயே முதலிடம். இன்னும் ஏன், உலகளவில் அங்கீகாரம் பெற்றதும் கூட. நம் சென்னையிலும் Great Lakes Institute of Management இத்தகைய பட்டத்தை வழங்குகிறது
மேற்கொண்டு செல்வதற்கு முன் ஒரு விஷயத்தை தெளிவு படுத்திக்கொள்கிறேன்: MBA விற்கும் IIM போன்ற கல்லூரிகள் கொடுக்கும் PGDBM, PGDBA போன்ற பட்டத்திற்கும் ஒரு வித்தியாசம் தான்; பல்கலைக்கழகங்கள் பட்டம் கொடுத்தால் அது MBA, தன்னிச்சையாக ஒரு institute பட்டம் கொடுத்தால் அது PGDBA/PGDBM அவ்வளவே.

முதலில் நீங்க எந்த மாதிரி MBA படிக்க போறீங்கன்னு முடிவு செஞ்சுக்கோங்க. MBA வை பொறுத்த வரை நீங்க எந்த கல்லூரியில படிக்கிறீங்கன்றது ரொம்ப ரொம்ப முக்கியம். எப்பவும் B School Ranking என்று பல முன்னணி இதழ்கள், AC Nielsen போன்ற சர்வே நிறுவனங்கள் வெளியிடும். அதுல எப்பவும் முதல் இருபது-முப்பது கல்லூரிகளுக்கு நல்ல மதிப்பிருக்கிறது. இருந்தாலும் ஒரு விஷயத்த ஞாபகத்துல வெச்சுக்கோங்க, இது போன்ற தர வரிசையில் கூட நிறைய சர்ச்சைகள் இருக்கு. அதனால எப்பவும் நம்மால முடிஞ்சா நல்ல ஆராய்ச்சி பண்ணின பிறகு தான் எந்த கல்லூரின்னு தேர்ந்தெடுக்கணும்.

ஒரு வேளை நீங்க CAT, XAT போன்ற தேர்வுகளை எழுதிட்டு, IIMs ல இருந்து அழைப்பு வர காத்துகிட்டு இருக்கலாம். அல்லது நீங்க தேர்ந்தெடுத்த கல்லூரிகள்ல இருந்து அழைப்பு வர காத்துகிட்டு இருக்கலாம். நீங்க இந்த தேர்வு எழுதினத வெச்சிட்டு உங்களுக்கு நிறைய உப்புமா கல்லூரிகள்ல இருந்து தானாகவே அழைப்பு வரலாம். எந்தெந்த கல்லூரிகள்ல சேர ஐடியா இருக்கோ, அதை பத்தி நம்மாலான ஆராய்ச்சிய தொடங்கணும். அது ரொம்ப ரொம்ப முக்கியம். அங்க படிச்ச மாணவர்களிடம் இது போன்ற கேள்விகளை கேட்கலாம்:

  • Specialization: MBA வில் கண்டிப்பா நமக்கென்ன துறை பிடிக்குதோ, அந்த துறையில் அந்த கல்லூரி பெயர் பெற்றிருக்கான்னு பார்க்கும். சில கல்லூரிகள்ல சில துறைகளுக்கு மதிப்பே இருக்காது. அங்க நீங்க அந்த துறை எடுத்த, கரை செற்றது கஷ்டமா போய்டும்.
  • Placements: எனக்கு தெரிஞ்சு யாரும் அறிவை வளர்க்குரதுக்கு MBA படிக்கலை. முக்கால்வாசி பேர் தங்களுடைய சம்பள அளவு உயரனும்னு தான் படிக்கிறாங்க. அதனால நீங்க படிக்கச் போற இடத்துல நூறு சதம் placemens இருக்கான்னு பாக்கணும். அதே போல மாணவர்கள் கட்டாயம் எதுவும் இல்லாம தங்களுக்கு பிடித்த நிறுவனங்களுக்கு மட்டும் apply பண்ணும் வசதி இருகான்னும் பாக்கணும்
  • Faculty: எத்தனை பேர் நிரந்தர விரிவுரையாளர்கள், எத்தனை பேர் அப்பப்போ வரும் visiting faculty என்று பாக்கணும். பொதுவா பெரிய பெரிய பொறுப்புகளள இருக்குற சில பேர் தங்களுடைய ஆர்வம் காரணமாக வந்து சொல்லி கொடுப்பாங்க, அது நம்மளுக்கு ரொம்ப பயனுள்ளதா இருக்கும். எந்தெந்த நிறுவனங்கள்ல இருந்து வாரங்கன்றத நாம கண்டிப்பா தெரிஞ்சிகிட்டா நல்லது
  • Infrastructure: எல்லாம் ஒழுங்க இருந்தா தான் நமக்கும் படிக்கச் வசதியா இருக்கும். விடுதியில இன்டர்நெட் வசதி தங்கு தடையில்லாம வருதா, நாம ஆராய்ச்சி பண்ண வசதியா database களுக்கு சந்தா செளுதியிருகா, போன்றவைகளை கவனிச்சிக்கணும்
சரி, எல்லாத்தையும் சொல்லி இதையும் சொல்லிடறேன். B School களில் படிச்சா ஒரு பாஸ்போர்ட் மாதிரி, அவ்வளவு தான். அதுக்கப்புறம் ஒவ்வொருதர் உயர்வை அடையறதும் அவரவர் திறமையை பொறுத்தே. எங்களுக்கு சொல்லி கொடுத்தவர்கள்ள, IIM-A ல படிச்சிட்டு வந்து கேவலமா சொல்லி கொடுத்தவங்களும் இருந்தாங்க, நம்ம Madras University ல படிச்சிட்டு சூப்பரா சொல்லி கொடுத்தவங்களும் இருக்காங்க.

அடுத்த பதிவில் தமிழ் நாட்டில் உள்ள நல்ல கல்லூரிகள், எந்தெந்த துறைய தேர்ந்தெடுப்பதுன்னு பாப்போம்.

நன்றி :நாஸியா உங்கள் சகோதரி! :)

செவ்வாய், 13 அக்டோபர், 2009

உலக தொலைக்காட்சிகள் வரலாற்றில் முதல் முறையாக ராவின்(கிலி) "தமிழ் கிலி DANGER டிவி"

+
உலக தொ லைக் காட்சிகள் வரலாற்றில் முதல் முறையாக ராவின்(கிலி) (அயல்நாட்டு|(இலங்கை) இந்திய ஓலவுத்துர்ரை) பெருமையுடன் வயங்கும் .இலங்கையிலிருந்து நடாத்தும் ஒரே சுயாதினமான தமிழ் தொல்லைக்காட்சி.

தொலைக்காட்சி முயக்கம் :("திரைகடல் ஓடியும் தமிழினம் அழிப்போம் ").

முழு நேர தமிழ் கிலி செய்மதி தொலைக்கா ட்சி கொயிம்பிலிருந்து .வாங்கிய காசுக்கு வாந்திஎடுக்கிறது ,உளவாளிகளும் ,கயவாளிகளும் எம்பட சனங்களின் வரலாற்று பிழைகளை கதைக்கினம் ,தொடர்களும் புத்தம் புதுசாய் பொதிகையிலிருந்து எப்படி கிடக்கினம் .
இந்த தொலைக்காட்சி சன் டிவி ,நம் சொந்தக்கார டிவிக்கேல்லாம் அல்வா கொடுத்துவிட்டு ரொம்ப புதிய புதிய அந்தாக்சரி ,சீரியலேல்லாம் .பொதிகையிலிருந்து போடுவினம் (ரொம்ப கவனமாக பொதிகை இலசினனைகளை வெட்டி ஒட்டினாலும்
கூலிக்கு மாரடிக்கும் கும்பல் செய்யும் தொழிலை சிறப்பாக செய்யாததால் .நமது உளவுப்படை கிலியின் கைவண்ணத்தை உறுதிபடுதிகொண்டது.

நம்ப நாராப்பயல் ஒரு விமானம் முயுக்க புதிய பொதிகை சூப்பர் ஹிடையேல்லாம் எல்லாம் கொடுத்து உதவியதாக நோந்திய முகவர் தெரிவித்துள்ள போதிலும் .கொயும்புவில் உள்ள ,
நமது கூலிக்கு குறைக்கும் டக்லஸ் பிரமேனந்த மற்றும் நம் உயவினர்கலேல்லாம்
காசு பார்ப்பதாக ,வரலாற்றை திரிப்பதாகவும் உலகெங்கும் உள்ள இரும்பொறைகள்
உறுதி செய்கின்றனர்

ஆகவே புலம்பெயர்ந்த தமிழர்களே ! உயிரை இழந்தாலும் ,உரிமையை ,,,,,,,,,,,,,,,,

நன்றி :உளவு களம் .

அறிஞ்சொர்ப்பொருள் வயன்குவர்களுக்கு அறிவாளிப்படையில் சேர்த்துக்கொள்வோம் :
கொயும்பு -
டக்லஸ் பிரமேனந்த-
நம்பநாராப்பயல்-
நோந்திய-
தமிழ் கிலி-
இந்திய ஓலவுத்துர்ரை-
ராவின்(கிலி) -
பி.கு :கிலியாடிக்கும் முன்னே புலியடிக்கும்

சனி, 10 அக்டோபர், 2009

கடவுச்சீட்டு விண்ணப்ப பதிவில் புதிய வசதி

ஆன்லைன் பாஸ்போர்ட் விண்ணப்ப பதிவில் புதிய வசதி சென்னை அலுவலகத்தில் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.

இதுகுறித்து சென்னை பிராந்திய துணை பாஸ்போர்ட் அதிகாரி கே.எஸ்.தவ்லத் தமீம் கூறியிருப்பதாவது,

தட்கல் முறையிலும், சாதாரண முறையிலும் பாஸ்போர்ட் பெறுவதற்கான ஏராளமான விண்ணப்பங்கள் வந்த வண்ணம் இருப்பதால், சென்னை பாஸ்போர்ட் அலுவலகம் விண்ணப்பங்களை ஆன்லைன் முறையில், பாஸ்போர்ட் அலுவலகத்தின் இணையதளத்தில் பதிவு செய்வதற்கான வசதிகளை சீரமைத்துள்ளது.

ஆன்லைனில் பதிவு செய்யும் போது கம்ப்ழூட்டர் ஒதுக்கும் தேதியில் மட்டுமே விண்ணப்பங்களை சென்னை பாஸ்போர்ட் அலுவலகத்தில் சமர்ப்பிக்குமாறு விண்ணப்பதாரர்கள் கேட்டுக் கொள்ளப்படுகிறார்கள். இத்தேதிக்கு முன்பாக விண்ணப்பங்கள் அளிக்கப்பட்டால் ஏற்றுக் கொள்ளப்பட மாட்டாது.

குறிப்பிட்ட தேதியில் விண்ணப்பங்களை பாஸ்போர்ட் அலுவலகத்தில் சமர்ப்பிக்கத் தவறினால், திரும்பவும் இணையதளத்தில் பதிவு செய்ய வேண்டும். கம்ப்யூட்டர் புதிதாக ஒதுக்கும் தேதியில் விண்ணப்பங்களை அளிக்க வேண்டும்.

ஆன்லைனில் பதிவு செய்யும் முறையில் விண்ணப்பதாரர்களுக்கு புதுமையான வசதி ஒன்று செய்யப்பட்டுள்ளது. இதன்படி, விண்ணப்பதாரர் கம்ப்ழூட்டர் ஒதுக்கும் தேதி தனக்கு சரிப்படவில்லை என்றால், தனக்கு வசதியான ஒரு தேதியை தேர்ந்தெடுத்துக் கொள்ளமுடியும்.

பாஸ்போர்ட் விண்ணப்பங்களை அலுவலகத்தில் சமர்ப்பிக்கும் போது ஏற்படும் நெருக்கடியை தவிர்க்க, முதலில் வருபவர்களுக்கு முதலில் என்ற முறையில் தட்கல் மற்றும் சாதாரண விண்ணப்பங்களுக்கு டோக்கன்கள் அளிக்கப்படுகின்றன. இந்த முறையில் கம்ப்யூட்டர் ஒதுக்கும் நேரம் பொருந்தாது.

பாஸ்போர்ட்டை விரைவாக பெற்றுத் தருவதாகச் சொல்லி தவறான வாக்குறுதிகளை அளிக்கும் இடைத்தரகர்களை நம்பி ஏமாற வேண்டாம் என்றார்.

ஞாயிறு, 4 அக்டோபர், 2009

மக்களின் தலைவர் சாமிக்கண்ணு!!நன்றி: இரத்தினபுகழேந்தி

[samikanu.JPG]


தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட மக்களுக்கு வேலை வாய்ப்பில் இட ஒதுக்கீடு வழங்குவதற்காக போராடிய தலைவர்கள் மத்தியில் தனது பதவி அதிகாரத்தைப் பயன்படுத்தி இட ஒதுக்கீட்டை நடைமுறைப் படுத்திக்காட்டியவர் கானூர் சாமிக்கண்ணு படையாட்சி. 1891 ஆம் ஆண்டு சின்னத்தம்பி-சிவகாமி இணையருக்கு மகனாகப் பிறந்தவர்.இவரின் சொந்த ஊர் உடையார்பாளையம் அருகிலுள்ள வாரியங்காவல் ஆகும். இவரது தந்தை காலத்தில் கடலூர் மாவட்டம் சேத்தியாத்தோப்புக்கு அருகிலுள்ள கானூர் கிராமத்திற்கு இடம் பெயர்ந்தனர்.சாமிக்கண்ணு தேவங்குடியிலுள்ள தன் தாய் மாமன் வீட்டில் தங்கி விளாகம் பள்ளியில் தொடக்கக்கல்வி பயின்றார்.அப்போது அங்கு காலரா நோய் பரவியதனால் படிப்பைப் பாதியில் நிறுத்திவிட்டு கானூருக்கு வந்துவிட்டார்.அதன் பிறகு அவர் படிக்கவே இல்லை.மூன்றாம் வகுப்போடு அவர் கல்வி முடிந்து போனது. கானூரில் மணியக்காரராகப் பொது வாழ்வைத் தொடங்கிய சாமிக்கண்ணு 1946 இல் சிதம்பரம் தாலுக்கா போர்டு தலைவரானார். 1952 இல் சென்னை சட்டமன்றத் தேர்தலில் உழைப்பாளர் கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 1953 இல் விருத்தாசலம் தொகுதியில் நடைபெற்ற இடைத்தேர்தலில் அதே கட்சியின் சார்பில் போட்டியிட்டு வெற்றிபெற்று சட்டமன்ற உறுப்பினரான பிறகு அவரது புகழ் பரவத்தொடங்கியது. 1955 இல் தென்னார்க்காடு மாவட்ட நாட்டாண்மைக்கழகத் தலைவராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப் பெற்றார். அவரது பதவிக்காலத்தில் தாழ்த்தப்பட்ட பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் பலருக்கு வேலைவாய்யபை வழங்கினார். இவரது பதவிக்காலத்தில் ஒரு முறை ஆசிரியர் பணிக்கு நேர்காணல் நடத்தவேண்டிய சூழல்.மாவட்டத் தலைநகருக்கு நேர்காணலுக்கு வந்தவர்களை கானூருக்கு வரும்படி கூறிச் சென்றுவிட்டார். பணிநாடுநர்களும் அங்கு சென்றுள்ளனர். களத்துமேட்டிற்கு அழைத்துச் சென்று வயலில் இறங்கி நாற்றரிக்கச் சொன்னாராம். தாழ்த்தப்பட்ட, பிற்படுத்தப்பட்ட இளைஞர்கள் வயலில் இறங்கி நாற்று அரிக்கத் தொடங்கவிட்டனர் உயர்சாதி இளைஞர்கள் வரப்பிலேயே நின்றுகொண்டிருந்தனராம்.அவர்களைப் பார்த்து சாமிக்கண்ணு கூறினாராம்," இவ்வளவு நாளா நீங்க நாற்காலியில உக்காந்திருந்தீங்க இவனுவோ நாத்தரிச்சிகிட்டு கெடந்தானுவோ, இவன்லாம் இப்படியே கெடக்க வேண்டியதுதானா? இவனும் கொஞ்சம் நாளைக்கு நாற்காலியில உக்காந்து பார்க்கட்டும் நீங்க வீட்டுக்கு போங்க" என்று அனுப்பி வைத்தாராம். இவரது பதவிக்காலத்தில்தான் இம்மாவட்டத்தில் பல பள்ளிகள் திறக்கப்பட்டன. கிராமங்களில் தொடங்கப்பள்ளி, நகரங்களில் உயர்நிலைப்பள்ளி என்பது இவரது இலக்காக இருந்தது. பழமையான பல பள்ளிக் கட்டடங்களின் கல்வெட்டுகளில் இவர் பெயர் இடம்பெற்றிருப்பதை இன்றும் காணலாம். சாலை வசதிகள், குடிநீர் வசதி, மருத்துவ வசதி என ஏழை எளிய மக்களுக்குத் தேவையான அடிப்படை வசதிகளைச் செய்து கொடுத்தார். இவர் பதவிக்காலத்தில்தான் விருத்தாசலத்திலிருந்து கும்பகோணம் செல்லும் சாலையில் வெள்ளாற்றின் குறுக்கே தரைப்பாலம் கட்டப்பட்டது. அப்பாலம் இன்றுவரை மக்களுக்கு பயன்பட்டது. தற்போதுதான் அது மேம்பாலமாக மாற்றப்பட்டு வருகிறது. 1957 இல் திருமுட்டம் பேரூராட்சித் தலைவராக மூன்றரை ஆண்டுகள் பதவி வகித்தார்.உடையார்பாளையம் ஜமீன்தார் காலத்திற்குப் பிறகு ஓடாத திருமுட்டம் கோயில் தேரை இவரது பதவிக்காலத்தில்தான் ஓட வைத்தார். 1962 இல் செயங்கொண்டம் சட்டமன்றத் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார். 1967 இல் கானூர் ஊராட்சிமன்றத் தலைவராகப் பதவி வகித்தார். வாழ்நாள் முழுதும் மக்களுக்கு தொண்டு செய்தாலும் விவசாயப் பணியைக் கைவிட்டதில்லை. அரசியலில் ஈடுபடுபவர்கள் சொந்தமாக ஏதேனும் தொழில் செய்தால்தான் பொதுவாழ்வில் தூய்மையைக் கடைபிடிக்க முடியும் என்பது அவரின் கொள்கை. அதிகாரிகளுக்கு அஞ்சாமல் ஒன்றுக்கும் உதவாத விதிமுறைகளை மீறி ஏழை எளிய மக்களுக்கு உதவுவதில் அவருக்கு நிகர் அவரே. படித்த பலரைத் தேடி வேலைவாய்ப்பை வழங்கி விட்டு பின்னர் நியமன ஆணையை அனுப்பி வைப்பாராம். இத்தகைய பல சிறப்புகளைப் பெற்ற மக்கள் தலைவர் சாமிக்கண்ணு 1984 இல் இயர்கை எய்தினார். கடலூர் மாவட்டத்தில் இன்று ஓய்வூதியம் பெறும் பல ஆசிரியர்கள் கானூர் சாமிக்கண்ணு படையாட்சியால் பணியமர்த்தப் பட்டவர்கள் என்பதை அவர்களே கூறக் கேட்டிருக்கிறேன். இது போன்ற தலைவர்கள் நமக்கு இப்போது கிடைப்பார்களா என்ற ஏக்கம் மனதுக்குள் எழுகிறது.

நன்றி: சாவடிகுப்பம் திரு. ந.இராமலிங்கம்.எம்.ஏ.எட்.,

வியாழன், 17 செப்டம்பர், 2009

தென்கச்சியார் நேர்காணல்:- இருப்பதை வைத்துக் கொண்டு இல்லாததைப் பயன்படுத்துங்கள்!

தென்கச்சியார் என்று வாசகர் களாலும், வானொலி நேயர்களாலும் வாஞ்சையுடன் அழைக்கப்படும் தென்கச்சி கோ. சுவாமிநாதன், தமிழ்நாடு அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கை யைத் தொடங்கி, பின்னர் 24 ஆண்டுகள் சென்னை வானொலியின் உதவி நிலைய இயக்குனராகப் பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். தென்கச்சியார் தற்போது வசிப்பது சென்னை மடிப்பாக்கத்தில்.

விவசாய நிகழ்ச்சிகளை மக்கள் பேசும் பேச்சு வழக்கு மொழி யில், கொச்சை நீக்கி இவர் வழங்கி யதால், விவசாய நிகழ்ச்சிகள் மாபெரும் வெற்றி அடைந்த தோடு, கி. ராஜநாராயணனால் "இதுவே மக்கள் தமிழ்' என்று பாராட்டப் பெற்று, இன்று அரசு வானொலி, தனியார் பண்பலை வானொலி என அனைத்து வானொலி நிலையங்களுக்கும் இலக்கணமாகவும் அமைந்து விட்டது. விவசாய நிகழ்ச்சிகளுக்கு அப்பால், சமூக வாழ்வில் ஒழுக்கம், மனிதநேயம் போன்றவற்றைத் தனது வாழ்க்கை முறையாகக் கடைப் பிடித்துவரும் தென்கச்சியார், இத்தகைய நற்பண்புகளை வானொலி மூலம் மனித மனங்களில் நடவு செய்ய விரும்பியவர். இதனால் அறிவுரையாக வலியுறுத்தித் திணிக்காமல், எளிய குட்டிக்கதைகள் மூலம், சக மனிதனின் தோள்மீது கைபோட்டுப் பேசும் உரையாடல் தன்மையைத் துணையாக வைத்துக் கொண்டு இவர் தொடங்கிய வானொலி நிகழ்ச்சிதான் "இன்று ஒரு தகவல்'.

உலக வானொலி வரலாற்றில் மாபெரும் சாதனையாக மட்டுமின்றி, முன்னுதாரணமாகவும் அமைந்த இந்த நிகழ்ச்சியை பதினான்கு ஆண்டுகள் தொடர்ந்து வழங்கியவர். பிறகு தொலைக்காட்சிகளின் காலை நிகழ்ச்சிகளிலும் மாபெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது இந்த நிகழ்ச்சி.

இவர் 17 வயதில் எழுதிய முதல் கவிதை, பாவேந்தர் பாரதிதாசனின் "குயில்' இதழில் (14. 07. 1959) வெளிவந்தது. அப்போது தொடங்கிய எழுத்துப் பயணம் இன்றும் தொடர்கிறது இவரிடம். தமிழ் குட்டிக்கதை இலக்கியத்தின் தந்தையாக உயர்ந்து நிற்கும் இவரை "இனிய உதயம்' இதழுக்காகச் சந்தித்தோம்...

உங்கள் பெயரோடு ஒட்டிக் கொண்டிருக் கும் "தென்கச்சி'யின் தாத்பரியம் என்ன? உங்கள் சொந்த ஊர், பால்யம், நீங்கள் சென்னைக்கு வந்த காலம், அன்றைய சென்னையின் வாழ்க்கை பற்றிச் சொல்லுங்கள்?

""தென்கச்சி என்பது இன் றைய அரியலூர் மாவட்டத்தில் கொள்ளிடக்கரை ஓரத்தில் இருக் கிற சிற்றூர். தென்காஞ்சிபுரம் என்பது பழைய பெயர். அது தான் காலப்போக்கில் தென்கச்சி ஆயிற்று. காஞ்சி என்பது கச்சி என்று ஆகும். "கச்சி ஏகம்பனே' என்பது காஞ்சிபுரம் ஏகாம்ப ரேஸ்வரரைக் குறிக்கும்.

எங்கள் முன்னோர்கள் காஞ்சிபுரத்திலிருந்து இங்கே வந்தவர்கள். காஞ்சியில் பல்லவ மன்னர்களின் படைவீரர்களாக இருந்தவர்கள் கொள்ளிடக்கரை யில் குடியேறி தென்காஞ்சிபுரம் என்று பெயர் சூட்டியிருக்கிறார் கள். அதுதான் இன்றைய தென்கச்சி.

எங்கள் முன்னோர்கள் பயன்படுத்திய கத்தி, கேடயங்கள் இப்போதும் எங்களிடம் உண்டு. ஆயுத பூஜை சமயத்தில் அதை யெல்லாம் எடுத்து வைத்து வழிபாடு செய்வது வழக்கம். குழந்தைப் பருவத்திலிருந்தே ஒவ்வோர் ஆண்டும் அந்த ஆயுதங்களைத் தொட்டு வணங்கச் சொல்வார்கள். அப்படியே செய்திருக்கி றேன்.

இப்போதெல்லாம் அந்தக் கத்திகளை எடுத்துக் கொண்டு யாரும் சண்டைக்குப் போவதில்லை. கொள்ளிடத்தில் மீன் வெட்டுவதற்குப் போவ துண்டு. வலை இல்லாமல் மீன் பிடிக்கிற கலையில் நாங்கள் வல்லவர்கள்.

இரவு பத்துமணிக்கு மேல் புறப்படுவார்கள். ஒருவர் கையில் கத்தி இருக்கும். ஒரு சிறுவன் தலையில் பெட்ரோமாக்ஸ் விளக்கு இருக்கும். ஆற்றில் இறங்கி நடக்க வேண்டும். விளக்கு வெளிச்சத்தில் எதிரே வருகிற மீன்கள் கண்கள் பூத்துப் போய் அப்படியே நின்றுவிடும். வாள் வைத்திருப்பவர் அதை வெட்டுவார். கூடை வைத்திருப் பவர் அதன்மேல் கவிழ்ப்பார். மேல்புறம் இருக்கிற வளையம் வழியாக கையை உள்ளேவிட்டு மீன் துண்டுகளை வெளியே எடுப்பார். தன் தோளில் இருக்கிற சாக்குப் பையில் போட்டுக் கொள்வார். அவ்வளவுதான்.

இதில் வாள் வைத்திருப்பவர் மிகவும் புத்திசாலியாக இருப் பார். குறிபார்த்து வெட்ட வேண்டியவர் அவர். கூடை வைத்திருப்பவர் அவ்வளவு புத்திசாலியாக இருக்க வேண்டும் என்கிற அவசியமில்லை. துண்டு மீனை எடுத்துத் தோளில் கிடக் கிற சாக்கில் போடத் தெரிந்தால் போதும். பெட்ரோமாக்ஸ் விளக்கைத் தலையில் சுமக்கிறவர் சுத்த மக்காக இருக்க வேண்டும். அவர் சுயமாகச் சிந்திக்கக்கூடாது. மற்றவர்கள் பின்னாடியே போகவேண்டும். அவ்வளவுதான். இதில் எனக்கு பெட்ரோமாக்ஸ் விளக்கு சுமக்கிற வேலைதான் கொடுப்பார்கள். அதில் புரமோ ஷன் கிடைப்பதற்குள் நான் பள்ளிக்கூடம் போக ஆரம்பித்து விட்டேன். இவையெல்லாம் பழைய ஞாபகங்கள்.

எங்கள் ஊர்ப்பக்கம் சுவாமி நாதன் என்கிற பெயர் அதிகம். அதனால் பள்ளியில் படிக்கிறபோதே ஆசிரியர் ஊர் பெயரை யும் சேர்த்து அழைப்பது வழக்கம். நீ கும்பகோணம் சுவாமிநாதன், நீ ஆடுதுறை சுவாமிநாதன், நீ தென்கச்சி சுவாமிநாதன் என்ப தாகக் குறிப்பிடுவார். என்னோடு தென்கச்சி ஒட்டிக் கொண்ட கதை இதுதான்.

ஆரம்பப்பள்ளி தென்கச்சியில். அப்புறம் ஆடுதுறை குமரகுருபர சுவாமிகள் உயர்நிலைப் பள்ளியில் 6, 7, 8-ஆம் வகுப்புகள். பிறகு கும்பகோணம் பாணாதுறை உயர்நிலைப்பள்ளி யில் 9, 10, 11-ஆம் வகுப்புகள். அதன் பிறகு கும்பகோணம் அரசினர் கல்லூரியில் புகுமுக வகுப்பு. அப்புறம் கோவை விவசாயக் கல்லூரியில் பி.எஸ்.சி. (விவசாயம்) பட்டப் படிப்பு.

1965-ல் படித்து முடித்து விட்டு வெளியே வந்தேன். பரீட்சை ரிசல்ட் வருவதற்குள் வேலைக்கான உத்தரவு வந்து விட்டது. பாளையங்கோட்டை பஞ்சாயத்து யூனியனில் விவசாய அதிகாரியாக வேலைக்குச் சேர்ந்தேன். அதற்குப் பிறகுதான் ரிசல்ட் வந்தது. இரண்டு பாடங் களில் நான் பெயில்! வேலைக்கு லீவு போட்டுவிட்டு கோவைக்கு வந்து மறுபடியும் அந்த இரண்டு பாடங்களையும் எழுதி "பாஸ்' ஆனேன்.

பாளையங்கோட்டையில் ஒருவருடம் வேலை. அங்கிருந்து கடையம் பஞ்சாயத்து யூனிய னுக்கு மாற்றல் ஆனேன். அங்கே ஒரு வருடம். பாரதியாரின் மனைவி செல்லம்மாள் பிறந்த ஊர் அது. அதே தெருவில் ஒரு வாடகை வீட்டில் குடியிருந்தேன். அப்பு றம் அங்கிருந்து தஞ்சை மாவட்டம் பேராவூரணி பஞ்சா யத்து யூனியனுக்கு வந்தேன். அங்கே ஒரு வருடம். அப்புறம் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தென்கச் சிக்கு வந்துவிட்டேன். அங்கே பத்து வருடம் சொந்த விவசாயம் பண்ணினேன். டிராக்டர் எல்லாம் நன்றாக ஓட்டுவேன். ஊராட்சி மன்றத் தேர்தல் வந்தது. அதில் நின்றேன். வெற்றி கிடைத்தது. ஊராட்சி மன்றத் தலைவர் ஆனேன். ஏழு வருடங் கள் அப்படியே நீடித்தேன். அதன்பிறகுதான் வானொலிக்கு வந்தேன்.''

வானொலியோடு உங்களுக்கு எப்படி தொடர்பு ஏற்பட்டது?

""ஊரில் விவசாயம் செய்து கொண்டிருந்தபோது ஒருநாள் தற்செயலாக செய்தித் தாளில் ஒரு விளம்பரம் பார்த்தேன். திருநெல்வேலி விவசாய ஒலிபரப் புக்கு ஓர் ஆள் தேவை. விவசாயம் படித்தவராக இருக்க வேண்டும். விவசாயத்தில் அனுபவம் உள்ளவராக இருக்க வேண்டும். வயது 35-க்குள் இருக்க வேண்டும். இப்படியாக இருந்தது அந்த விளம்பரம். அப்போது எனக்கு 34 ணீ வயது. வெள்ளைத்தாளில் விவரங்களோடு விண்ணப்பிக்கச் சொல்லியிருந்தார்கள். விண்ணப் பித்தேன். அதிகச் சிரமம் இன்றி அந்த வேலை எனக்குக் கிடைத்தது. அதற்கு என்ன காரணம் என்றால் போட்டிக்கு அதிகமாக யாரும் வரவில்லை. விவசாயம் படித்தவர்கள் வேலையில்லாமல் அப்போது யாரும் இல்லை. அது எனக்கு வசதியாகப் போனது.

1977-லிருந்து 1984 முடிய திருநெல்வேலி வானொலி நிலையத்தின் பண்ணை இல்ல ஒலிபரப்புப் பிரிவில் உதவி ஆசிரியர் பணி. அப்புறம் ஒரு பதவி உயர்வு. ஆசிரியர் என்று ஆகி சென்னை வானொலிக்கு வந்து சேர்ந்தேன்.

சென்னை வானொலியில் 2-1-1985 அன்று சேர்ந்தேன். அப்புறம் ஒரு பதவி உயர்வு- உதவி நிலைய இயக்குனர். 2002, ஜூன்- 30 அன்று பணி நிறைவு.''

"இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சியை எப்போது தொடங்கினீர்கள்? அந்த நிகழ்ச்சி இவ்வளவு பெரிய வெற்றி பெறும் என்று ஆரம்பத் திலேயே எதிர்பார்த்தீர்களா?

""சென்னை வானொலியில் "இன்று ஒரு தகவல்' என்கிற நிகழ்ச்சி 1988-ஆம் வருடம், ஜூலை மாதம், முதல் தேதி தொடங்கியது. அப்போது இயக் குனராக இருந்த கோ. செல்வம் அவர்கள் ஒருநாள் என்னைக் கூப்பிட்டு, "நாளைமுதல் இன்று ஒரு தகவல் என்கிற நிகழ்ச்சியை ஆரம்பிக்கிறோம். அதில் மக்களுக்குப் பயன்படக்கூடிய செய்திகளை நீங்கள் சொல்ல வேண்டும்' என்றார்.

"சார்... நான் ஒருவனே இதைத் தொடர்ந்து வழங்குவது கொஞ்சம் சிரமமாக இருக்கும் என்று தோன்றுகிறது' என்றேன். "நீங்க ஒரு மாசம் இதை வழங்கி னால் போதும். அடுத்த மாசம் வேறொருவரிடம் இதை ஒப்ப டைக்கலாம்!' என்றார். "அப்படியானால் சரி!' என்று ஆரம்பித்தேன். அதற்கப்புறம் வேறு யாரும் அந்தப் பொறுப்பை ஏற்க முன்வரவில்லை. இயக்குனருக்கும் அதை வேறு யாருக்கும் மாற்ற விருப்பமில்லை. பணி நிறைவு பெறும் வரையில் 14 ஆண்டுகள் நாள்தோறும் தொடர்ந்து அதை நானே வழங்கும்படி ஆயிற்று. பல தரப் பினரும் விரும்பிக் கேட்டார்கள். அது நான் எதிர்பாராத ஒன்று தான்.''

ஒரு நடமாடும் பேரகராதி யைப் போல நீங்கள் தரும் விஷயங்கள், குட்டிக் கதைகள் உங்களிடம் கொட்டிக் கிடக்கும் ரகசியம் என்ன? உங்கள் வாசிப்புத் தளம், கடைசியாகப் படித்த புத்தகம் பற்றி...

""இதில் ரகசியம் எதுவும் இல்லை. ஏனென்றால் எதுவும் என் சொந்த சிந்தனை இல்லை. மற்றவர்களின் சிந்தனைகளைப் படித்துப் புரிந்து கொண்டு, அதைக் கொஞ்சம் எளிமைப் படுத்தி, வேடிக்கை சேர்த்து சொல்கிறேன்; அவ்வளவுதான்.

நீங்கள் சொல்வதுபோல குட்டிக்கதைகள் என்னிடம் எதுவும் கொட்டிக் கிடக்க வில்லை. உலகம் முழுவதும் கொட்டிக் கிடக்கின்றன. அதை எடுத்து ஊடகங்கள் வழியே மறுபடியும் உலகத்துக்கு வழங்கு கிறேன்; அவ்வளவுதான். என்னுடைய வாசிப்புத் தளம் பற்றிக் கேட்கிறீர்கள். எனக்குப் பிடித்தவை துப்பறியும் கதைகள் தாம்! சின்ன வயதிலிருந்து இன்றுவரை அவற்றைத்தான் விரும்பிப் படிக்கிறேன்.

மற்றபடி ஊடகத்தேவை- மக்கள் சேவை இவற்றிற்காக ஆன்மிகம், இலக்கியம், விஞ்ஞா னம், தத்துவம் இப்படி எல்லாவற் றையும் தேவைக்கு ஏற்ப படிப்ப துண்டு. கடைசியாக படித்த புத்தகம் "ஆகாய ஆசை கள்.' ஆசிரியர் ஜேம்ஸ் ஹாட்லிசேஸ். 'வர்ன்'ஸ்ங் ஞ்ர்ற் ண்ற் ஸ்ரீர்ம்ண்ய்ஞ்' என்ற ஆங்கில நாவலின் தமிழாக்கம்.''

ஒரு சின்னஞ்சிறு குட்டிக்கதையை ஒரு சிறுகதைபோல விரித்துச் சொன்னா லும், உங்களது ரசிகர்கள் பொறுமை யாக ரசிக்கிறார்கள். இந்த வெற்றிக்குக் காரணம் உங்களுக்குள் இருக்கும் கதை சொல்லியா? உங்களது வசீகரமான கனிவான குரலா?

""பொதுவாக கதை கேட்கிற ஆர்வம் எல்லாருக்குமே உண்டு. ஆகவே எதைச் சொன்னாலும் அதை ஒரு கதை மாதிரி சொன் னால் ஆர்வத்துடன் கேட்க ஆரம்பிக்கிறார்கள். சிறிய கதை யைப் பெரிய கதை மாதிரி சொன்னாலும் பொறுமையாகக் கேட்பதற்குக் காரணம், கடைசி யில் ஒரு நகைச்சுவை வரும் என் கிற எதிர்பார்ப்பாக இருக்கலாம். மற்றபடி குரலில் வசீகரம்- கனிவு என்பதெல்லாம் கேட்கிறவர் களின் மனதைப் பொறுத்தது. அழகாய் இருக்கிற பொருளை நீங்கள் விரும்புவதில்லை. நீங்கள் விரும்புகிற பொருள் அழகாய் இருக்கிறது. அவ்வளவுதான் விஷயம்.

கேட்கிறவர்கள் அல்லது வாசிக்கிறவர்களை ஒன்றை எதிர்பார்க்கச் செய்துவிட்டு, அதற்கு நேர்மாறாக ஒன்றைச் சொல்கிறபோது சுவாரசியம் வந்துவிடுகிறது. உதாரணத் துக்கு ஒன்றைச் சொல்ல லாம். "விபத்து' என்ற தலைப்பைக் கொடுத்து பத்து வரிகளில் ஒரு கட்டுரை எழுதச் சொன் னார் வகுப்பு ஆசிரியர்.

ஒரு மாணவன் எழுதிய கட்டுரை இது:

"ஒரு முப்பது மாடிக் கட்டிடத் தின் மேல் மாடியில் வெளிப்புறமாக நின்றுகொண்டு ஒருவன் வெள்ளையடித்துக் கொண்டிருந் தான். துரதிருஷ்டவசமாக அவன் கால் நழுவிக் கீழே விழுந் தான். அதிர்ஷ்டவசமாக அப் போது தெருவில் ஒரு வைக்கோல் லாரி வந்து கொண்டிருந்தது. துரதிருஷ்டவசமாக அந்த வைக்கோலின் நடுவில் ஒரு கடப்பாறை செருகப்பட் டிருந்தது. அதிர்ஷ்டவசமாக அவன் அந்தக் கடப்பாறையில் விழவில்லை. துரதிருஷ்டவசமாக அவன் அந்த வைக்கோலிலும் விழாமல், தெருவில் விழுந்து செத்துப் போனான்.'

இதுதான் சுவாரசியம் என்பது.''

குழந்தைகளுக்கு வாய்வழி கதை சொல்லும் மரபை நாம் தொலைத்து விட்டதால் இன்றைய தலைமுறை எதை யேனும் இழந்துவிட்டதாக நினைக்கிறீர்களா?

""அப்படி நினைக்கத் தேவையில்லை. ஊடகங்கள் இல்லாத காலத்தில் வாயின் தேவை அதிகமாக இருந்தது. இப்போது தாத்தா, பாட்டி களுக்குப் பதிலாக ஊடகங்கள் கதை சொல்லுகின்றன. அவற்றை நன்றாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். காலம் தோறும் சிலவற்றை இழப்போம். சிலவற்றைப் பெறுவோம். இது உலக மரபு. இதில் வருந்துவதற்கு ஏதும் இல்லை.''

வானொலி ஊடகம் நம்மைப் போன்ற ஒரு வளரும் சமுதாயத்தில் எவ்வாறு கடமையாற்ற வேண்டும் என்று நினைக்கிறீர்கள்?

""உதாரணத்துக்கு ஓர் உண்மை நிகழ்ச்சியைச் சொல்கிறேன்; கேளுங்கள்.

நான் திருநெல்வேலி வானொலி நிலையத்தில் பணியாற்றிக் கொண்டிருந்த நேரம். ஒரு நாள் மாலை வேளையில் ஒரு தொலைபேசி அழைப்பு.

"ஹலோ... ரேடியோ ஸ்டேஷனா?'

"ஆமாங்க.'

"நான் டீன் பேசறேன். ஹைகிரவுண்ட் ஆஸ்பத்தி ரியிலிருந்து... ஒரு முக்கிய மான விஷயம்.'

"சொல்லுங்க டாக்டர்.'

"கொஞ்ச நேரத்துக்கு முன் னாடி ஒரு ஆக்சிடெண்ட் நடந்துபோச்சி!'

"எங்கே டாக்டர்?'

"பாளையங்கோட்டை ரயில்வே கிராசிங் தாண்டி... கொஞ்ச தூரத்துலே...'

"பெரிய விபத்தா டாக்டர்?'

"ஆமாம்... வடநாட்டு சுற்றுலா பஸ் ஒன்றும் ஒரு லாரியும் மோதிக்கிட்டதுலே, டிரைவர் உள்பட கொஞ்ச பேர் அந்த இடத்துலேயே இறந்துட்டாங்க. அடிபட்டு உயிருக்குப் போராடிக் கிட்டிருக்கிறவங்களையெல்லாம் இங்கே கொண்டு வந்து சேர்த் திருக்காங்க. இந்த நேரத்துலே உங்களாலே ஒரு உதவி!'

"சொல்லுங்க டாக்டர்... எங்களாலே முடிஞ்சது எதுவா இருந்தாலும் செய்யிறோம்.'

"வேறே ஒண்ணுமில்லே. இப்ப இங்கே எங்ககிட்டே வந்து சேர்ந்திருக்கறவங்களுக்கெல் லாம் உடனடியா ரத்தம் செலுத் தியாகணும். அப்படி செஞ்சா அவங்களையெல்லாம் காப்பாத்திப்புடலாம்.'

"சரி.'

"ஆனா போதுமான ரத்தம் இப்ப பிளட் பாங்க்ல இல்லே. பொதுமக்கள் யாராவது வந்து ரத்தம் கொடுத்தா இவங்கள்லாம் பிழைச் சுக்குவாங்க. இப்ப நான் உங்ககிட்டே கேட்டுக்கறது என் னன்னா, உடனடியா இது சம்பந்தமா நீங்க ரேடியோவுல ஒரு அறிவிப்பு கொடுக்க முடியுமா?'

"இப்பவே நாங்க அதுக்கு ஏற்பாடு செய்யறோம். நீங்க மற்ற வேலைகளைக் கவனிங்க.'

வானொலி நண்பர்கள் உடனே செயலில் இறங்கினார் கள். அந்த சமயத்தில் திரைப்பட இசை ஒலிபரப்பாகிக் கொண் டிருந்தது. அவசரம் அவசரமாக அறிவிப்பு ஒன்று எழுதப்பட்டது நாலு வரிகளில்.

"நேயர்களே! ஒரு முக்கிய அறிவிப்பு. சற்று முன் நேர்ந்த ஒரு விபத்தினால் பாதிக்கப் பட்டவர்களைக் காப்பாற்ற ரத்தம் தேவைப்படுகிறது. ரத்த தானம் செய்ய விரும்புகிறவர்கள் உடனடியாக பாளையங் கோட்டை மருத்துவமனைக்கு விரைந்து செல்லுமாறு கேட்டுக்கொள்கிறோம்.'

அறிவிப்பாளர் தூத்துக்குடி ராஜசேகரன், ஒலிபரப்பாகிக் கொண்டிருக்கும் பாடலை நிறுத்தி இடையே அந்த அறிவிப்பை வாசிக்கிறார். ஒரு முறைக்கு இருமுறையாக இந்த அறிவிப்பு வாசிக்கப்படுகிறது. மறுபடியும் படப்பாடல் கள் தொடர்கின்றன. ஒரு இருபது நிமிடங்கள் கடந்திருக்கும். இன்னும் இரண்டு பாடல்களை ஒலிபரப்ப நேரம் இருந்தது. அந்த சமயத்தில் மறுபடியும் தொலைபேசி அழைப்பு.

"ஹலோ!'

""சார்... மறுபடியும் ஹை கிரவுண்ட் ஆஸ்பத்திரியில் இருந்துதான் பேசறோம். நீங்க உடனே இன்னொரு அறிவிப்பு செய்யணும்.'

"என்ன சொல்லணும்... சொல்லுங்க டாக்டர்.'

"தயவு செய்து மேற்கொண்டு யாரும் ஹைகிரவுண்ட் ஆஸ்பத் திரிக்கு ரத்ததானம் செய்ய வர வேண்டாம்னு சொல்லணும்.'

"என்ன ஆச்சு டாக்டர்?'

"ஏகப்பட்ட பேர் ரேடியோ அறிவிப்பைக் கேட்டுட்டு ரத்தம் கொடுக்க இங்கே வந்துட்டாங்க... கூட்டத்தை எங்களாலே சமாளிக்க முடியலே. அவ்வளவு பேர்கிட்டே ரத்தம் கலெக்ட் பண்ணவும் இப்ப இங்கே வசதி இல்லே. ப்ளீஸ்...!' மறுபடியும் வானொலி அறிவிக்கிறது.

"இனி யாரும் அங்கே செல்லத் தேவையில்லை என்பதை நன்றி யோடு தெரிவித்துக் கொள்கி றோம்.'

மறுநாள் மருத்துவமனைக் குப் போகிறோம். படுக்கையில் இருந்தவர்கள் பாசத்தோடு எங்க ளைப் பார்க்கிறார்கள். பாஷை ஒரு தடையாக இல்லை.

ஊடகங்கள் சமுதாயத்திற்கு எப்படிக் கடமையாற்ற வேண்டும் என்று கேட்டீர்கள். இந்த உண்மை நிகழ்ச்சி அதற்கு ஓர் எடுத்துக்காட்டு.''

ஹாரிபாட்டர், ஐரோப்பிய ஆங்கில காமிக்ஸ் கதைகள் என்று நம் கலாச்சாரத்தோடு ஒட்டாத கதைகளை இன்றைய வளரும் தலைமுறை வாசிக்கத் தலைப்பட்டிருக்கிறது. ஹாரி பாட்டர் போல தமிழ்க் கதை வழி மரபுகள், நாட்டார் வழக் காறுகளைக் கதைக்கூறுகளா கவும் நம்முடைய மரபார்ந்த வரலாற்றிலிருந்து பாத்திரங் களையும் அமைத்து கதை யெழுதும் ஆற்றல் நம்மில் ஒருவருக்குக்கூட இல்லையா? அல்லது முடியாதா?

""எது நல்லது, எது கெட்டது என்பதைக் காலம்தான் முடிவு செய் கிறது. எனவே மனிதர்கள் அதைப் பற்றிக் கவலைப் பட்டு ஆகப்போவது ஒன்று மில்லை. ஊடகங்கள் போகிற வேகத்தைப் பார்த்தால் உலகக் கலாச்சாரம் என்ற ஒன்றே விரைவில் உருவாகிவிடும் என்று தோன்றுகிறது. "உலகத்தோடு ஒட்ட ஒழுகல்' என்ற வள்ளுவரின் வார்த்தைகளைச் சரியாகப் புரிந்துகொண்டால் போதும். காலம் என்பது மாறிக்கொண்டே இருக்கிறது. இந்த மாற்றம் பிடிக் காதவர்கள் "காலம் கெட்டுப் போச்சு' என்று சொல்லிக் கவலைப்படுகிறார்கள். அவ்வளவுதான்.''

இன்றைய யுவன்- யுவதி களுக்கு முதலில் நட்பு பிறகு காதல் என்ற கண்ணோட் டமும், வாழ்க்கை முறையும் வந்துவிட்டது. இன்றைய இளைஞர்கள் காதலின் உண்மையான ஜீவனைப் புரிந்து கொண்டதாகத் தெரியவில்லையே? குடும்ப நல நீதிமன்றத்திலும் கூட்டம் அலைமோதுகிறது. கூட்டுக் குடும்பமாக வாழ்ந்த தமிழன் காலப்போக்கில் குடும்ப அமைப்பை இழந்து விடுவான் என்று நம்புகிறீர்களா?

""முந்தைய கேள்விக் கான பதிலை மறுபடி யும் ஒருமுறை படித் துக் கொள்ளுங்கள்.

"இனவிருத்திக்காக இயற்கை செய்கிற தூண்டுதல் உணர்வின் தொடக்கம்தான் காதல் என்பது.'

காதலைவிட்டு விலகி நின்று பார்த்தால் தான் இந்த உண்மை புரியும். காதலில் தோற்றுப்போனவர்களைத்தான் தெய்வீகக் காதலர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். குடும்ப அமைப்பைப் பற்றிக் கவலைப் படத் தேவையில்லை.

நேற்றைய மனிதர்கள் எப்படி விரும்பினார்களோ அப்படி வாழ்ந்தார்கள். இன்றைய மனிதர்கள் எப்படி விரும்புகிறார் களோ அப்படி வாழ்கிறார்கள். நாளைய மனிதர்கள் எப்படி விரும்புவார்களோ அப்படி வாழ்வார்கள். உங்கள் ஆட்டத்தை நீங்கள் சரியாக ஆடி முடியுங்கள்; அது போதும். அடுத்த காட்சி யைப் பற்றி நீங்கள் கவலைப்பட வேண்டாம். அதை அவர்கள் பார்த்துக்கொள்வார்கள்.''

உங்கள் பயண அனுபவங் களிலிருந்து "இனிய உதயம்' வாசகர்களோடு பகிர்ந்து கொள்ள நினைப்பது?

""பணிநிறைவுக்குப் பிறகுதான் பாஸ்போர்ட்டே வாங்கினேன். சிங்கப்பூர், லண்டன், குவைத், தாய்லாந்து, இலங்கை இவை யெல்லாம் நண்பர்களுடன் போய் நான் பார்த்துவிட்டு வந்த நாடுகள். அந்த மானுக்கும் ஒரு முறை போய்விட்டு வந்தேன். சும்மா போய் பார்த்துவிட்டு வந்தேன். ஒரு சில கூட்டங் களில் பேசினேன். அவ்வளவு தான். சுவையான செய்திகள் என்று ஏதும் இல்லை.

என்னுடைய நீண்ட கால நண்பர் ச.ஆ. கேசவன் (இனாம் மணியாச்சி) அமெரிக்கா போய் விட்டு வந்தபிறகு சொன்ன வார்த்தைகள் சுவையானவை. "எப்படி இருக்கிறது அமெரிக்கா?' என்ற கேள்விக்கு அவர் சொன்ன பதில்:

"அமெரிக்கா பணக்காரர் களின் நரகம். இந்தியா ஏழைகளின் சொர்க்கம்.' ''

தானத்தில் சிறந்ததாக உங்கள் பார்வையில் உயர்ந்து நிற்பது?

""ஆந்திராவில் புயல்... அத னால் பாதிக்கப்பட்டவர்கள் அநேகம் பேர். அதற்காகப் புயல் நிவாரண நிதி தமிழ்நாட்டில் திரட்டப்படுகிறது.

கல்லூரி மாணவர்கள் கையில் உண்டியலுடன் நிதி திரட்டி னார்கள்.

சிவகாசி பக்கத்தில் ஒரு பேருந்து நிலையம். மாணவர்கள் உண்டியலை நீட்டுகிறார்கள். மக்கள் காசு போடுகிறார்கள். அங்கே பிச்சையெடுத்துக் கொண்டிருந்த ஒருத்தர், "என்ன விஷயம்?' என்று விசாரித்தார்.

"ஆந்திராவில் வீடிழந்தவர் களுக்கு வீடு கட்டிக் கொடுக்கவும், பசியால் வாடுகிறவர்களுக்கு சாப்பாடு போடவும், ஆடை இல்லாதவர்களுக்கு ஆடை கொடுக்கவும் இந்தப் பணம் உதவும்' என்று சொன்னார்கள். அந்தப் பிச்சைக்காரர் யோசித் தார். "கொஞ்சம் இருங்க' என்று சொல்லிவிட்டு தமது பழைய துணியைப் பிரித்தார். தம்மிடம் அதுவரை சேர்ந்திருந்த அவ்வ ளவு காசையும் மாணவர்களிடம் கொட்டிவிட்டுத் திரும்பிக்கூட பார்க்காமல் அவர் பாட்டுக்கு நடந்து போனார்.

இது சில ஆண்டுகளுக்கு முன்னால் பத்திரிகைகளில் வந்த ஓர் உண்மைச் செய்தி.''

இரண்டாயிரமாண்டு தமிழர் இலக்கியத்தில் உங்கள் இதயம் நிறைந்த படைப்பு?

""இதற்குப் பதில் சொல்கிற அளவுக்கு நான் நல்ல படைப்புகள் அனைத் தையும் படித்ததில்லை. இரண்டாயிரமாண்டு படைப்பு என்பதைவிட இரண்டாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக இதயங்களில் நிறைந்து நின்று கொண்டிருக்கிற ஒரு படைப்பு திருக்குறள்.''

"காமத்தைக் கைவிட காமத் தில் மூழ்கு' என்ற ஓஷோ- "அறிந்த தினின்றும் விடுதலை பெறு' என்ற அறிஞர் கிருஷ்ண மூர்த்தி- இவர்கள் இருவரில் உங்கள் சாய்ஸ்?

""காமத்தில் மூழ்கினால் அதை அறிந்துகொள்ளலாம். அறிந்து கொண்டபின் அது தேவை இல்லை; விட்டுவிடலாம். விடுதலை பெறலாம். இருவர் கருத்திலும் முரண்பாடு தெரியவில்லையே?

விடுதலை பெற்ற குரு ஒருவரி டம் சீடன் கேட்கிறான்: உங்களு டைய தெளிவான அமைதி நிலை யின் ரகசியம் என்ன?

குரு சொல்கிறார்: தவிர்க்க முடியாததோடு மனசார ஒத்துப் போதல்தான்!''

வாழ்வின் தலைசிறந்த தத்து வம் என்று நீங்கள் நினைப்பது?

"" "இருப்பதை வைத்துக் கொண்டு இல்லாததைப் பயன் படுத்து!' சீன ஞானி லாலோட்சு சொல்லியிருக்கிற இந்த தத்துவம் என்னை யோசிக்க வைத்தது.

களிமண்ணால் பானை செய்கிறோம். பால் பொங்குவது வெற்றிடத்தில். பானை உடைந்தால் சோறு பொங்க முடியாது. ஆகவே பானை தேவை. "இருக்கிற பானையை வைத்துக் கொண்டு இல்லாத வெற்றிடத்தைப் பயன் படுத்து' என்கிறார் அந்த ஞானி.

கொஞ்சம் யோசித்துப் பாருங்கள். கதவு, ஜன்னல் வைத்து வீடு கட்டினாலும் நாம் வாழ்வது உள்ளே இருக்கிற வெற்றிடத்தில்தான்! இன்னும் சொல்லப்போனால் கடவுள் என்பதே ஆற்றல் மிகுந்த ஒரு வெற்றுத் தன்மைதான்!''

நம்மிடமிருந்து சென்ற சிலம்பம், களரி போன்றவை கராத்தே, குங்ஃபூ என்று நமக்கே திரும்பி வருகிறது. யோகக்கலையும் தியானமும் பணக்காரர்களுக்கு மட்டுமே வசமாகும் விலை உயர்ந்த விஷயங்கள் ஆகிவிட்டன. தமிழன் தனது அடையாளங் களை, மொழி உட்பட இழந்து வருவது பற்றி?

""இதுபற்றிக் கவலை கொள்ளத் தேவையில்லை. காலம் மாறிக்கொண்டிருக்கிறது. இன்றைக்கு உலகம் பூராவும் தமிழர்கள் பரவியிருக்கிறார்கள். அவர்கள் கையில் "தமிழ்' பத்திர மாக இருக்கிறது.''

ஈ.வே.ரா. பெரியார் உலகம் முழுவதும் சென்ற டைந்திருக்க வேண்டிய தமிழர்களின் புரட்சிப் பெட்டகம். அவரது கருத்துகளை இத்தனை காலமாக முடக்கிவிட் டோம். இப்போது அவரது படைப்புகளை நாட்டுடைமை ஆக்க வேண்டும் என்கிற விவாதம் சூடுபிடித்துள்ளது பற்றி...

""பெரியார் நாட்டுடைமை ஆகி விட்டார். பெரியாரின் கொள்கை கள் நாட்டுடைமை ஆகிவிட்டன. பெரியாரின் படைப்புகள் நாட்டுடைமை ஆகவேண்டும். அதில் தவறில்லை. அவருடைய கருத்துகள் உருமாறி விடக்கூடாது என்று அவர்கள் கவலைப்படுகி றார்கள். இரு தரப்புமே பெரியா ரின்மீது மதிப்பும் மரியாதையும் வைத்திருப்பவர்கள்தாம். இதில் கருத்து சொல்லும் அளவுக்கு எனக்குத் தகுதியில்லை.''

சிரிக்கச் சிரிக்க கதை சொல் கிறீர்கள்? ஒரு குட்டிக்கதை மூலம் வாசகர்களைக் கண் கலங்கச் செய்ய முடியுமா?

""நல்ல இதயமுள்ள வாசகர் களைக் கண்கலங்கச் செய்ய இன்றைக்குக் குட்டிக்கதை கூடத் தேவையில்லை. ஒரு வார்த்தை போதும்.

"ஈழத்தமிழர்கள்!''

நேர்காணல்: ஆர்.சி. ஜெயந்தன்

நன்றி :நக்கீரன்

புதன், 16 செப்டம்பர், 2009

இன்று ஒரு தகவல்(துயர), தென்கச்சி, கோ. சுவாமிநாதன்

இன்று ஒரு தகவல்(துயர) , தென்கச்சி, கோ. சுவாமிநாதன்

http://www.vikatan.com/vc/pubsales/wrapper/144_1.jpg

சென்னை: பிரபல எழுத்தாளரும் ரேடியோ-தொலைக்காட்சி பேச்சாளருமான தென்கச்சி கோ. சுவாமிநாதன் காலமானார்.

சில காலமாக உடல் நலம் பாதிக்கப்பட்டிருந்த அவர்சென்னைில் தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந் நிலையில் இன்று அவர் காலமானார்.

அரியலூர் மாவட்டம் தென்கச்சிப்பெருமாள் நத்தம் என்ற ஊரில் பிறந்த கோ.சுவாமிநாதன் வேளாண்மைப் பட்டதாரி ஆவார்.

தென்கச்சியார் என்று வாசகர்களாலும், வானொலி நேயர்களாலும் அன்புடன் அழைக்கப்பட்ட இவர் தமிழ்நாடு [^] அரசுப் பணியில் விவசாய அலுவலராக வாழ்க்கையைத் தொடங்கி, பின்னர் 1977ம் ஆண்டு முதல் 1984ம் ஆண்டு வரை திருநெல்வேலி [^] வானொலி நிலையத்தின் பண்ணை இல்ல ஒலிபரப்புப் பிரிவில் உதவி ஆசிரியர் பணியாற்றினார்.

பின்னர் அதே பிரிவின் ஆசிரியராகிசென்னைவானொலிக்கு வந்து, அதன் உதவி இயக்குனராக பதவி உயர்வு பெற்று பணிபுரிந்து ஓய்வு பெற்றவர்.

எளிய குட்டிக்கதைகள் மூலம், வானொலியிலும் தொலைக்காட்சியிலும் இவர் வழங்கிய 'இன்று ஒரு தகவல்' நிகழ்ச்சி தமிழர்களிடையே மிகப் பிரபலம்.

இந்த நிகழ்ச்சியை இவர் நாள் தவறாமல் 14 ஆண்டுகள் தொடர்ந்து வழங்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

தனது ஊரில் ஊராட்சி மன்றத் தலைவராகவும் இருந்தவர். செல்வ வளம் கொண்ட இவர் எளிமையாக வாழந்தார். மனைவியுடன் சென்னை [^]யில் வாழ்ந்து வந்த இவருக்கு ஒரு மகள் உள்ளார்.

சில வாரங்களுக்கு முன் இனிய உதயம் இதழுக்கு பேட்டியளித்த இவரிடம், சிரிக்கச் சிரிக்க கதை சொல்கிறீர்கள்? ஒரு குட்டிக்கதை மூலம் வாசகர்களைக் கண் கலங்கச் செய்ய முடியுமா? என்று நிருபர் கேட்டதற்கு தென்கச்சி சொன்ன பதில்:

நல்ல இதயமுள்ள வாசகர்களைக் கண்கலங்கச் செய்ய இன்றைக்குக் குட்டிக்கதை கூடத் தேவையில்லை. ஒரு வார்த்தை போதும்.


''ஈழத் தமிழர்கள்!''

நன்றி :தட்ஸ் தமிழ்
Thenkachi Ko.Swaminathan

ஞாயிறு, 6 செப்டம்பர், 2009

பெண் குழந்தைகளுக்கு (ஒரு) இந்திராகாந்தி கல்வி உதவித் தொகை

பெண் குழந்தைகளுக்கு இந்திராகாந்தி கல்வி உதவித் தொகை


புதுடெல்லி: ஒரு பெண் குழந்தை மட்டுமே உள்ள குடும்பத்தில உள்ள பெண், முதுநிலை பட்டப் படிப்பு படிக்க இந்திராகாந்தி கல்வி உதவித் தொகை வழங்கப்படுகிறது.

நாடு முழுவதும் 1200 மாணவிகளுக்கு இந்தக் கல்வி உதவித் தொகை வழங்கப்படும். மாதம் ரூ.2 ஆயிரம் வீதம் 20 மாதங்களுக்கு இந்தக் கல்வி உதவித் தொகை கிடைக்கும்.

முதுநிலை பட்டப்படிப்பில் தொழில் படிப்புகள் நீங்கலாக மற்றமுதுநிலை பட்டப்படிப்பில் சேரும் முதலாண்டு மாணவிகள் இந்தக் கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பிக்கலாம். தொலைநிலைக் கல்வி மூலம் படிக்கும் மாணவிகள் இந்தக் கல்வி உதவித் தொகை கோரி விண்ணப்பிக்க முடியாது.

விவரங்களுக்கு: www.ugc.ac.in

சனி, 5 செப்டம்பர், 2009

அண்ணாமலை பல்கலை மையத்தில் மாணவர் சேர்க்கை நாள் நீட்டிப்பு

அரியலூர் அண்ணாமலை பல்கலை படிப்பு மையத்தில் மாணவர் சேர்க்கைக்கான தேதி நீட்டிக்கப்பட்டுள்ளது.

இதுபற்றி படிப்பு மையத்தின் முதுநிலை விரிவுரையாளர் முனைவர் வேலாயுதம் விடுத்த அறிக்கை: அண்ணாமலை பல்கலை தொலைதூர கல்வி இயக்ககத்தில், இளங்கலை, முதுகலை பட்டப்படிப்புகள், வணிக மேலாண்மையியல் படிப்புகள், கம்யூட்டர், இசை, யோகா மற்றும் வேளாண்மை உள்ளிட்ட 500க்கும் மேற்பட்ட படிப்புகள் கற்பிக்கப்பட்டு வருகிறது. இவை அனைத்தும் டில்லியிலுள்ள தொலைதூர கல்வி கவுன்சிலின் அங்கீகாரம் பெற்றுள்ளது. நடப்பு கல்வி ஆண்டில் பட்டப்படிப்பு பயிலுவோர் இதே கல்வி ஆண்டில் குறிப்பிட்ட சில பட்டய வகுப்புகள் பயில, ஐம்பது சதவீத கட்டண சலுகை வழங்கப்படுகிறது. மேலும் நடப்பு கல்வி ஆண்டில் இளங்கலை, முதுகலை மற்றும் பட்டயப்படிப்பில் ஜூவல்லரி மேலாண், இளங்கலை மற்றும் பட்டயப்படிப்பில் 3டி அனிமேஷன், முதுகலையில் ஊரக மேலாண்மை, இசை மற்றும் யோகா, முதுகலை பட்டயப்படிப்பில் விழுமியன் கல்வி மற்றும் ஆன்மீகம், மெடிக்கல் டிரான்ஸ்கிரிப்ஷன், நீரழிவு நோய் மருத்துவம், பட்டய படிப்பில் வெல்டிங் இன்ஜினியரிங், பரதநாட்டியம், ஜோதிடம் ஆகிய பாடப்பிரிவுகள் புதிதாக தொடங்கப்பட்டுள்ளன.

தொலைதூர கல்வியியல் பட்டம் மற்றும் பட்ட மேற்படிப்பு பயிலும் எஸ்.சி., மற்றும் எஸ்.டி., மாணவ, மாணவிகளுக்கு, கல்வி உதவி தொகை வழங்கப்படுகிறது. நடப்பு கல்வியாண்டில் சேர்க்கைக்கான காலக்கெடு, வருகிற அக்டோபர் 5ம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த அரிய வாய்ப்பை அரியலூர் மாவட்டத்தை சேர்ந்த திருமானூர், அரியலூர், உடையார்பாளையம், ஜெயங்கொண்டம், ஆண்டிமடம், செந்துறை மற்றும் தா.பழூர் சுற்றுவட்டாரத்தை சேர்ந்தவர்கள் பயன்படுத்தி கொள்ள வேண்டும். இவ்வாறு அண்ணாமலை பல்கலை தொலைதூர கல்வி இயக்ககம் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

செவ்வாய், 1 செப்டம்பர், 2009

மணமக்கள்:வே.மணிகண்டன்+மு.வித்யா




நாளை மணவிழா காணப்போகும் எனது அருமை நண்பர்களுக்கு வாழ்த்துகள்

மணநாள் :02/09/2009

மணப்பந்தல் :மங்களம் ,செயங்கொண்ட சோழபுரம்.

மணமக்கள் :வே .மணிகண்டன். எந்திரவியலர்., புது தில்லி (செங்குந்தபுரம்) +மு . வித்யா, கணினி வல்லுநர் ,.

வாரியங்காவல்
.

வாழ்த்தும் உடன்பிறப்புகள் (தோழர்கள்) ,,,,,,,


திரு .தணிகாசலம் என்கிற தணிகா ,
வீர
.மா.மானவீரன் என்கிற மானா,
மு .அருள் ராஜ் என்கிற தலைவர் ,
வா
.ரா. சரவணன் . அன்னை குழுமம் .
வாரியங்காவல்.
இனமான பேராசிரியர் .V.P. கொளஞ்சிநாதன்,
இயக்குனர் கார்த்தி (e) ஸ்ரீதர் என்கிற தக்காளி ,
சிங்கப்பூர்
பொட்டுகடலை என்கிற கார்த்திகேயன் ,
வேளாண்
பேராசிரியர் . பழனி என்கிற பழனிச்சாமி
மருதூர்.

மற்றும் செங்குந்தபுரம் நட்பும் சுற்றமும் ,,,
வாழ்க வெல்க