சிதம்பரம் பாரளுமன்ற தொகுதியில் தேர்தல் அலுவலரும், அரியலூர் மாவட்ட ஆட்சியராகம்
அனில்மேஷராம் வெளியிட்ட அறிக்கை: சிதம்பரம் பாரளுமன்ற தொகுதிக்கு உட்பட்ட வாக்காளர் மற்றும் அரசியல் கட்சிகள், தேர்தல் தொடர்பான புகார் மற்றும் தங்களுக்கு ஏற்படும் சந்தேகங்களுக்கு, உடனடி தீர்வு காண ஏதுவாக, அரியலூர் ஆட்சியர் நேர்முக உதவியாளரிடம் (தேர்தல்), தொலைப்பேசி எண் 04329-221905. கைப்பேசி 9443853727 எண்ணில் தொடர்பு கொண்டு பயனடையுமாறு கேட்டு கொள்ளப்படுகிறார்கள்.
சிதம்பரம் பாரளுமன்ற தொகுதி வேட்பு மனு பெற தயார் நிலையில் அரியலூர் ஆட்சியர்
அரியலூர்: சிதம்பரம்(தனி)பாரளுமன்ற தொகுதியில் தேர்தல் அலுவலராக அரியலூர் மாவட்ட ஆட்சியர்ரை நியமித்து, தேர்தல் கமிஷன் உத்தரவிட்டுள்ளது. குன்னம், அரியலூர், ஜெயங்கொண்டம், காட்டுமன்னார்கோயில், புவனகிரி மற்றும் சிதம்பரம் சட்டசபை தொகுதிகளை உள்ளடக்கிய, சிதம்பரம் பாரளுமன்ற தொகுதியில் தேர்தல் அலுவலராக அரியலூர் மாவட்ட கலெக்டர் அனில்மேஷராம் நியமிக்கப்பட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, அரியலூர் கலெக்டர் அலுவலகத்தில், சிதம்பரம் லோக்சபா தொகுதிக்கான வேட்புமனு தாக்கல் செய்யலாம் என, நேற்று அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
அரியலூர் ஆட்சியர் அனில்மேஷராம் வெளியிட்ட அறிவிப்பு: சிதம்பரம் பாரளுமன்ற தொகுதியிலிருந்து, பாரளுமன்ற ஓர் உறுப்பினரை தேர்ந்தெடுக்க தேர்தல் நடக்கவிருக்கிறது. வேட்பாளர் அல்லது அவர்களை முன்மொழிபவர் ஒருவர், தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் மாவட்ட ஆட்சியர் அரியலூர். அல்லது முதன்மை உதவி தேர்தல் நடத்தும் அதிகாரி மற்றும் அரியலூர் ஆர்.டி.ஓ., அவர்களிடத்திலாவது, 17ம் தேதி நேற்று முதல், ஏப்., 24ம் தேதி வெள்ளி வரை, அலுவலக வேலை நாட்களில், காலை 11 மணி முதல் மாலை 3 மணி வரை,வேப்பு மனு தாக்கல் செய்யலாம். இதற்கான வேட்பு மனு மேற்கண்ட இடங்களில் கிடைக்கும். வேட்புமனு பரிசீலனை ஏப்., 25ம் தேதி சனிக்கிழமை காலை 11 மணிக்கு நடக்கும். வேட்புமனுக்களை வாபஸ் பெற கடைசிநாள்: ஏப்., 27ம் தேதி திங்கள் கிழமை மாலை 3 மணி. தேர்தலில் போட்டியிருந்தால் 2009 மே 13ம் தேதி புதன்கிழமை காலை 7மணி முதல், மாலை 5மணி வரை தேர்தல் நடக்கும் என கூறப்பட்டுள்ளது. சிதம்பரம் பாரளுமன்ற தொகுதிக்கான வேட்புமனு தாக்கலுக்கான பணி துவங்கியதை தொடர்ந்து, அரியலூர் ஆட்சியர் அலுவலகம் மற்றும் அரியலூர் வட்டாட்சியர் அலுவலகங்களில் வாகனங்கள் அனுமதிக்கப்படும் 100 மீட்டர் தூர எல்லையை குறிக்கும் வகையில் கோடு போடப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக