பா.ம.க.வை தோற்கடிக்க தீவிரமாக களமிறங்கி விட்டதாக பேச்சு அடிபடுகிறதே? என்றோம் சுபா.இளவரசனிடம்
பா.ம.க. தோல்வி எப்போதோ உறுதி செய்யப்பட்டு விட்டது. அ.தி.மு.க. அணியில் ஸ்ரீபெரும்புதூர் அரக்கோணம், திருவண்ணாமலை, கள்ளக்குறிச்சி, சிதம்பரம் (தனி), தர்மபுரி, புதுச்சேரி ஆகிய ஏழு தொகுதிகளை ஒதுக்கும்போதே வடபகுதி மக்களுக்கு நன்றாக தெரியும். இதில் ஒரு தொகுதியில் கூட பா.ம.க. வெற்றி பெறபோவதில்லை என்பது அந்தளவுக்கு சாதிக்குளம், பொதுவானமக்கள் மத்தியிலும் பெரம் அதிருப்தியை சம்பாதித்திருக்கிறார்கள். குறிப்பாக திருவண்ணாமலையில் குரு மண்ணைக் கவ்வப்போவது நிஜம். தான் செய்த தவறை உணராதவன் மனிதனே கிடையாது. முன்னேறவும் முடியாது. பா.ம.க. நிறுவனர் ராமதாஸும் தனது தவறை உணரவில்லை. திருவண்ணாமலை மக்களே குருவின் வெற்றியை முறியடிப்பார்கள் என்பது தான் நிஜ நிலவரம்.சுயமரியாதையை இழந்த இனம். இனத்தோடு சேருவது போலத்தான் அ.தி.மு.க.வோடு ராமதாஸ் கூட்டணி வைத்திருக்கிறார். அவரது கூட்டணியும் சரியில்லை. கூட்டணி தலைமையும் சரியில்லை. அரசு ஊழியர்களைவீட்டுக்கு அனுப்பியது, டெஸ்மா, எஸ்மா சட்டங்களை கொண்டு வந்தது, கோயில்களில் பலியிடத் தடை கொண்டு வந்தது என ஜெயலலிதாவின் பல காரியங்களுக்கு மக்கள் பதிலடி கொடுத்தார்கள். இந்ததவறுகளை தோல்விக்கு பின்னர் தான் ஜெயலலிதா உணர்ந்தார்.
ஐந்தாண்டுகள் மத்திய அரசில் பதவி சுகத்தை நன்றாக அனுபவித்து முடித்து விட்டு அடுத்த பதவி சுகத்திற்காக கூட்டணி மாறுவதை மக்கள் ரசிக்கவில்லை.
அ.தி.மு.க.வில் சேர்ந்ததன் மூலம் தன் தலையில் தானே மண் அள்ளிப்போட்டு கொண்டார் ராமதாஸ். கடந்த அ.தி.மு.க. ஆட்சியில் கல்வி அமைச்சராக இருந்த சி.வி.சண்முகத்தின் உறவினர் படுகொலை வழக்கில் முதல் குற்றவாளியாக சேர்க்கப்பட்டவர்தான் ராமதாஸ் மற்றும் அவரது மகன் அன்புமணி ஆகியோர். இவர்கள் எந்த கோர்ட்டுக்கும் போகாமல் கலைஞர் ஆட்சி வந்ததும், முதல் தகவல் அறிக்கையில் இருந்து பெயரை நீக்கி கொண்டார்கள். இந்த ஒரு காரியத்திற்காகவே அவர்கள் காலம் முழுவதும் கலைஞர் காலடியில் விழுந்துகிடக்க வேண்டும். தனது மகனுக்காக சுகாதாரத்துறையை கலைஞர் முயற்சியால் வாங்கினார். இந்த நன்றிக்கடனையும் வசதியாக மறந்து விட்டார். இவர்களுக்கு சுயமரியாதை என்ற ஒன்று இருந்தால் தனித்து போட்டியிட்டிருக்கலாம். ஆரம்பத்தில் வைகோ மீது மக்கள் மிகுந்த மரியாதை வைத்திருந்தார்கள். அதையும் வைகோ கெடுத்துக்கொண்டார். இப்போது அவரையும் ஜெயலலிதா தொங்கலில் விட்டு விட்டார். நான் யாரையும் குறை சொல்ல விரும்பவில்லை. யார் செய்வது சரி? தவறு? என்று தமிழக மக்கள் நன்கு புரிந்து வைத்திருக்கிறார்கள். அவர்களே எல்லாவற்றையும் தீர்மானிப்பார்கள்.
பா.ம.க.விற்கு எதிராக அமைச்சர்கள் எ.வ.வேலு, பொன்முடிஆகியோர் தீவிரமாக களமிறங்குவதாக தகவல் வருகிறது.அதே போல் நீங்கள் உங்கள் ஆட்களோடு பா.ம.க.விற்கு எதிராக தீவிர பிரசாரம் செய்ய போதிய உதவிகள் செய்யப்படுவதாக தகவல்கள் உலா வருகிறதே?
அப்படியெல்லாம் எதுவும் இல்லை. எங்கள் கட்சி குழந்தை பருவத்தில் இருக்கிறது. பொருளாதார நெருக்கடியில் இருக்கிறோம். ஆளுங்கட்சி பிரமுகர்கள் யாரையும் நாங்கள் சந்திக்கவில்லை. தமிழக மக்களுக்கான அர்ப்பணிப்பு உணர்வில் முதல்வர் அளவிற்கு யாராலும் ஈடுபட முடியாது. அதே நேரம் பா.ம.க.வின் போலி பிரசாரத்தை முறியடிக்க நாங்களும் தீவிரமாக களமிறங்குவோம். இதை பற்றி வரும் 7ம் தேதி கூடும் எங்கள் கட்சியின் பொதுக்குழுவில் கூடி அறிவிப்போம்.
தேர்தலில் பா.ம.க.விற்கு எதிராக என்ன மாதிரியான பிரசாரங்களை முன்னெடுக்க போகிறீர்கள்?
பா.ம.க.வின் குடும்ப அரசியல், சாதிக்கு தொடர்ந்து செய்துவரும் துரோகம், தமிழ் பற்றி பேசி பேசியே உண்மையான தமிழர் அமைப்புக்களை தடைசெய்ய நினைப்பது, எங்களை அழிக்க கூலிப்படையை ஏவிவிடுவது, பா.ம.க.வின் குற்றச்செயல்கள் குருவால் பாதிக்கப்பட்டவர்களின்நிலை ஆகியவை பிரசாரத்தில் முக்கிய பங்கு வகிக்கும் குருவால் பாதிக்கப்பட்டவர்களும், பிரசாரத்தில் பங்கெடுக்கும் வாய்ப்புகள் அதிகம். குறிப்பாக எங்கள் இயக்கத்தின் வல்லம் அறிவழகன், குறிஞ்சிபாடிஅண்ணாத்துரை ஆகியோர் படுகொலை பற்றி மக்களிடம் விரிவாக எடுத்துரைப்போம். குருவின்குற்றப் பின்னணியை திருவண்ணாமலை மக்களும் நன்றாக உணர்ந்துவைத்திருக்கிறார்கள்.
மேலும், பா.ம.க.விற்கு பாதிப்பு வரும்போதெல்லாம் எங்கள் இயக்கத்தின் மீது குற்றம் சுமத்துவதை வாடிக்கையாக வைத்திருக்கிறார்கள். முன்பு ஆற்காடு வீராசாமியோடு சேர்ந்து குருவை கொல்ல நாங்கள் திட்டம் போடுவதாக புரளி கிளப்பினார்கள். இப்போதும், ரவுடிகளை அனுப்பி எங்களை படுகொலை செய்ய பா.ம.க.வினர் திட்டம் போட்டு வருகிறார்கள். இதையெல்லாம் மக்களின் பார்வைக்கு கொண்டு செல்வோம். ஈழத்தமிழர் விவகாரத்தில் பா.ம.க.வின் இரட்டை வேஷத்தையும்மக்கள் தெரிந்துவைத்திருக்கிறார்கள். ஏழு தொகுதிகளிலும் பா.ம.க.தோல்வியை தழுவப்போவது நிஜம்.
காவிரி பிரச்னைக்காக மறைந்த வாழப்பாடியார் தனதுஅமைச்சர் பதவியையே ராஜினாமா செய்தார். தமிழினப்போராளியாக தன்னை காட்டிக்கொள்ளும் ராமதாஸ் ஏன் இலங்கை தமிழர் பிரச்னைக்காக அன்புமணி ராஜினாமா என்ற முடிவ எடுக்கவில்லை? அதே போல் ஈழத்தமிழர்களுக்குவிரோதமாக இருக்கும் எந்த கட்சியையும் வரலாறு மன்னிக்காது. தமிழக மக்களும் மன்னிக்க மாட்டார்கள். 56ம் ஆண்டு இந்தி எதிர்ப்பு போராட்டம் என்பது காங்கிரஸ் ஆட்சியையே மாற்றிகாட்டியது. காரணம் மக்கள் எதிர்ப்பு. கடந்த நாடாளுமன்ற தேர்தலில் நாளை நமதே, நாற்பதும் நமதே என்று கோஷம் போட்ட அ.தி.மு.வை மக்கள் தோற்கடித்தார்கள். ஏனென்றால் மக்கள் விரோத செயலில் ஈடுபட்டது தான். இந்த முறையும் அவர்களுக்கு அந்த கதி தான் ஏற்பட போகிறது என்பதை பார்க்கத்தான் போகிறீர்கள் என சீறலாய் சொல்லி முடித்தார் சுபா.இளவரசன்.
நன்றி -குமுதம் ரிப்போர்ட்டர் ( 09- 04- 2009)
வடமாவட்ட தமிழக மக்கள் மற்றும் வாழ்வார் தோழிகளின் விமர்சனம் அல்லது பட்டறிவு கேள்விகள் :
தமிழ் கூறும் நல்லுலகில் ,வாழும் வாக்காலப்பெருங்குடி மக்களே ,உங்களை இந்த பதிவில் பின்னுட்டம் மூலமாக உரமிட வேண்டுகிறோம் .
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக